உரசலாவது கேட்கட்டும்.
எதிர்வினை/நேர்வினை, பக்கவினை/தொலைவினை, இணைவினை/செங்குத்துவினை, ஆக்கவினை/அழிவுவினை மற்றும் ஈகோவினை, வசைவினை இவைகளினூடாக வாதம், விவாதம், வாந்தி, பேதி, தர்க்கம், குதர்க்கம், ஆராய்சிக்கான முயற்சியாய்...
இணையத்தில் பிறர் பதிவுகளில் எழுதும் பின்னூட்டங்களை சேமித்து வைப்பதை முதன்மை நோக்கமாய் கொண்டு இந்த பதிவை தொடங்கியிருக்கிறேன். கடைசி பதிவில் பின்னூட்டங்களாக சேமிக்கத் திட்டம். குறிப்பிட்ட சில பின்னூட்டங்களை, காலத்தின் போக்கில் விளையும் தெளிவில், எழுதியதை விரிவாக மீண்டும் எழுதவும், பதில்கள் எதிர்வினைகளை எதிர்கொள்ளவும், இயன்ற அளவில் எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு தனிப்பதிவாய் எழுதவும் திட்டம் உள்ளது. உடனடியாய் மறுமொழியாத முதிர்ச்சியை பெற்று, ஈகோவை முடிந்தவரை கழற்றி வைத்து, காலம் கடந்து எதிர்கொள்ளும் ஒரு முயற்சியாகவும், கடந்து போன பழைய விவாதங்களையும் தூசி தட்டி எடுத்து புதிதாய் பார்க்கவும், மறுபடி எழுதவும் இந்த வலைப்பதிவை தொடங்கியுள்ளேன். அறிதலை நோக்கமாய் கொண்ட விவாதமாய் எவையெல்லாம் தேறும் என்பது குறித்து எந்த முன்நம்பிக்கையும் கொள்ளாமல், சாத்தியமான எல்லாவற்றை பற்றியும் முடிந்தவரை விரிவாய் (காலம்தாழ்த்தியேனும்) கணக்கில் கொள்ள விழைகிறேன். குறைந்த பட்சம் வெட்டி விவாதங்களை மெயின் பதிவில் தவிர்த்து உருப்படியானதாய் கருதுபவற்றை மட்டும் அங்கே எழுத இது உதவும் என்று தோன்றுகிறது.
(இங்கே தமிழ்மணம் கருத்துப்பட்டை இடப்போவதில்லை என்பதால், இந்த பதிவின் மறுமொழி நிலவரம் தமிழ்மணத்தில் தோன்றாது.)
இணையத்தில் பிறர் பதிவுகளில் எழுதும் பின்னூட்டங்களை சேமித்து வைப்பதை முதன்மை நோக்கமாய் கொண்டு இந்த பதிவை தொடங்கியிருக்கிறேன். கடைசி பதிவில் பின்னூட்டங்களாக சேமிக்கத் திட்டம். குறிப்பிட்ட சில பின்னூட்டங்களை, காலத்தின் போக்கில் விளையும் தெளிவில், எழுதியதை விரிவாக மீண்டும் எழுதவும், பதில்கள் எதிர்வினைகளை எதிர்கொள்ளவும், இயன்ற அளவில் எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு தனிப்பதிவாய் எழுதவும் திட்டம் உள்ளது. உடனடியாய் மறுமொழியாத முதிர்ச்சியை பெற்று, ஈகோவை முடிந்தவரை கழற்றி வைத்து, காலம் கடந்து எதிர்கொள்ளும் ஒரு முயற்சியாகவும், கடந்து போன பழைய விவாதங்களையும் தூசி தட்டி எடுத்து புதிதாய் பார்க்கவும், மறுபடி எழுதவும் இந்த வலைப்பதிவை தொடங்கியுள்ளேன். அறிதலை நோக்கமாய் கொண்ட விவாதமாய் எவையெல்லாம் தேறும் என்பது குறித்து எந்த முன்நம்பிக்கையும் கொள்ளாமல், சாத்தியமான எல்லாவற்றை பற்றியும் முடிந்தவரை விரிவாய் (காலம்தாழ்த்தியேனும்) கணக்கில் கொள்ள விழைகிறேன். குறைந்த பட்சம் வெட்டி விவாதங்களை மெயின் பதிவில் தவிர்த்து உருப்படியானதாய் கருதுபவற்றை மட்டும் அங்கே எழுத இது உதவும் என்று தோன்றுகிறது.
(இங்கே தமிழ்மணம் கருத்துப்பட்டை இடப்போவதில்லை என்பதால், இந்த பதிவின் மறுமொழி நிலவரம் தமிழ்மணத்தில் தோன்றாது.)
7 Comments:
http://valavu.blogspot.com/2006/03/blog-post_08.html
//இந்த இரண்டிலும் கலக்காது, மூன்றாவதாய் இடைநின்று, ஒர் இடது சாரிக் கூட்டம் குட்டி முதலாளியத் தன்மையொடு அவ்வப்பொழுது கருத்துச் சொல்வதும் உண்டு. அப்படிச் சொல்லும் போது, இடதுசாரிகள் குமுகாயப் புரட்சி, வர்க்கம், முரண்பாடு என்ற பல்வேறு தேற்றுக்களை(theory)யும், கொள்கைகளையும் பற்றி உரக்க விதந்து பேசுவார்கள்; ஆனால் நடைமுறை என்று வரும் போது "தமிழகக் குமுகாயத்தின் வெளிப்பாடுகளை, தமிழக வரலாற்றை, இவர்கள் என்றாவது ஆழ்ந்து புரிந்து கொண்டார்களா?" என்ற அய்யம் எழும்; இந்த அய்யம் தெலிங்கானாப் புரட்சிக்குப் பின் இடதுசாரிகள் நடந்து கொண்ட முறையில் இருந்தே தமிழ்நாட்டில் பலருக்கும் உண்டு. இடது சாரிகளின் நிலைப்பாடு பல நேரம் நீரின் மேல் கிடக்கும் எண்ணெய் போல தமிழ்க் குமுகாயத்தை ஓட்டியும் ஒட்டாமலும் இருக்கிறது. //
மதிப்பிற்குரிய இராம்.கி. ஐயா இங்கே 'குட்டி முதலாளி' என்று யாரை சொல்கிறார் என்பது தெளிவாக இல்லை என்றாலும், இதற்கு முன்னர் குழலி பதிவில் எழுதிய பின்னூட்டத்தில் என்னைத்தான் குறிப்பிடுகிறார் என்பதில் ஐயமில்லை. இப்போது சொன்னாலும், சொல்லாவிட்டாலும், என்னை குறிக்கும் நோக்கம் என் கருத்துக்களை எதிர்கொள்ளும் நோக்கம் அவருக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும், எனக்கு இது பொருந்தி வரும் (அதாவது பொருந்தி வருவது போல பலருக்கு தோன்றக்கூடும்) என்பதால் இந்த விளக்கம். இதற்கு முன் குழலி பதிவில் இராம.கி எழுதியதும் அதற்கான என் பதிலும்.
இராம.கி எழுதியது: //படித்து முடித்தபின் பெருமூச்சு வருகிறது. நாட்டுப்புறங்களில் அங்கங்கே தென்படும் முரண்பாடுகளை, குமுகாயத்தின் சீரழிவுகளை, ஒரு பதம் எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள். இதைப் புரிந்து கொள்ளுவதில் நகரத்தாருக்கும் நாட்டுப்புறத்தாருக்கும் இடையே ஓர் இடைவெளி இருக்கத்தான் செய்யும். நம்முடைய நோயையே இன்னும் விளங்கிக் கொள்ளாதவர்களாய்ப் பலர் இருக்கிறார்கள்.
இதில் முற்போக்கு (progressive), எழுவரல் (liberal), புரட்சியாளர் (revolutionist) என்ற அடையாளங்களின் ஒளிவட்டத்தோடு பலரும் வலம் வருகிறார்கள்.
நம் மாநிலத்தில் இருக்கும் கிழாரியக் குமுகாயத்தின் (feudal society) முரண்பாடுகளைத் தீர்க்க எத்தனிக்காமல், முதலாளியக் குமுகாயத்தின் (capaitalist society) முரண்பாடுகளைக் களைவதையும், ஆண் ஆதிக்க முரண்பாடுகளைக் களைவதையும் முன்பின்னாகப் பேசிக் குழப்பி, பட்டிமன்ற வாதங்களில் வென்றி கொள்ள முயன்று கொண்டிருக்கும் குட்டிமுதலாளியரை (petty bourgeoisie), உங்களுடைய இந்தப் பதிவு சற்றே மெய்நிலைக்குக் கொண்டுவரட்டும்.
நாம் போக வேண்டிய தொலைவு அதிகம் தான்.
மேலே சொன்ன எல்லா முரண்பாடுகளும் தீர்க்கப் படத்தான் வேண்டும் என்பதில் பெரும்பாலோருக்கு வேறுபாடு இல்லை; ஆனால் "எது தடவழி (strategy)? எது அடைவழி (tactics)?" என்பதில் தெளிவு வேண்டும். அது இல்லை என்றால் அப்புறம் வெறும் தேற்று(theoty)களைப் பேசிக்கொண்டு, விவாத மன்றங்களில் பொழுதைக் கழிக்கலாம். குட்டிமுதலாளியர் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அன்புடன்,
இராம.கி.
ஒரு தமிழ்ப் பொதுக்கையன் (Tamil facist) :-)//
நான் அளித்த பதில்://மதிப்பிற்குரிய இராம.கி ஐயா அவர்களுக்கு,
நீங்கள் மறைமுகமாக என்னை பற்றி எழுதிய கருத்துக்களுக்கு மிகவும் நன்றி. என் கருத்தை நேரடியாக எதிர்கொண்டு எழுதப்படும் தர்க்கத்தையோ, விமர்சனத்தையோதான் என்னால் எதிர்கொள்ள முடியும். உங்களின் இந்த பின்னூட்டம் அந்த வரிசையில் சேராதது மட்டுமில்லாது, நான் உங்களிடம் இருபதாக நினைத்துகொண்டிருந்த சில வெளிப்படையான குணங்களுக்கு நேர்மாறாகவும் இருப்பது வருத்தமளிக்கிறது.
ஆனால் நான் ஒரு போதும் உங்களை தமிழ் பாசிஸ்ட் என்று கருதியதில்லை. இப்போதும் கருதவில்லை. 'தமிழ் எனது மூச்சு, ஆனால் அதை பிறர் மீது விடமாட்டேன்' என்ற வரிகளுக்கு உண்மையான உதாராணமாக உங்களை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். நீங்கள் இந்த அளவு இறங்கியதில் ஏற்பட்ட வருத்தத்தில் இதை எழுதுகிறேனே ஒழிய, பதில் சொல்லும் அளவிற்கு இதில் எந்த பொருட்படுத்தும்படியான கருத்தும் இல்லை என்பது என் எண்ணம். நன்றி!//
மீண்டும் சொல்வதானால், நான் மிகவும் மாறுபடும், எதிர்க்கும், நேர்மையாய் (நடுநிலமை அல்ல) எழுதப்படவில்லை என்று நினைக்கும் இந்த பதிவை படித்த பின்பும் கூட இராம.கியை 'ஃபாசிஸ்ட்' என்று நினைக்கவில்லை. இன்னமும் 'தமிழ் எனது மூச்சு, ஆனால் அதை பிறர் மீது விடமாட்டேன்' என்ற வரிகளுக்கு பொருத்தமான உதாரணமாகவே அவரை நினைக்கிறேன். ஒரு பெண்ணை,அவர் தெரிவித்த கருத்திற்காக'ஓடிப்போகும் படி' நெருக்கடி அளித்த கூட்டத்தை மட்டுமே அவ்வாறு குறிப்பிட்டேன். மற்றபடி இராம.கியின் இந்த பதிவில், ஏற்கனவே அறிவுமதி, தொடங்கி பலர் சொல்லிவிட்டதை தாண்டி, புதிதாய் எதுவுமில்லை. வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அது குறித்து நான் பேசக்கூடும். என் மீதான தனிப்பட்ட தாக்குதலுக்கு மட்டும் பதில்.
இராம.கி ஐயாவிற்கு இத்தனை நகைச்சுவை உணர்வு உண்டு என்பது குழலி பதிவில் என்னை பற்றி(பெயர் குறிப்பிடாமல்) எழுதிய போதுதான் எனக்கு தெரிந்தது. தமிழ் குமுகாய மரபின் அடிப்படையில் 'குட்டி முதலாளி' என்பதற்கு அவர் எதாவது 'தமிழ் விளக்கம்' வைத்திருந்தால் நான் சொல்ல எதுவும் இருக்காது. அது அவருக்கு மட்டும்தான் தெரியும். ஆனால் ஒருவேளை பேராசான் காரல் மார்க்ஸின் கருத்தாக்கத்தை பாவித்திருக்க கூடுமெனில், என்னைவிட மிக தெளிவான குட்டி பூர்ஷ்வா குழலிதான். ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் சிங்கை நகரில் ப்ரோக்ராமர் வேலை பார்பது, மிக நேரடியான பொருளில், அண்ணல் மார்க்சின் வரையரைப்படி குட்டி பூர்ஷ்வா. ஆனால் நாம் சற்று மாற்றி, நேரடியான பொருளில் இல்லாமல் ஒரு விரிந்த தளத்தில் பொருள்கொண்டால் ஒழிய, அண்ணலின் (குட்டி பூர்ஷ்வா பற்றிய) விளக்கம் எனக்கு பொருந்தாது.
இராமகி, குழலியைவிட இயற்கையாகவே நேர்மையை அதிகமாய் கொண்டிருக்கும் நான், என்னை குட்டி முதலாளி என்று நானே அழைத்து என் வலைப்பதிவின் பெயரில் சேர்திருக்கிறேன். (மீண்டும் சொல்கிறேன், மார்க்சின் வரையரைப்படி என் வேலை குட்டி முதலாளி வேலை அல்லவென்று சொல்ல வாதங்களை அடுக்க இயலும்.) ஆனால் நேரடியான குட்டிமுதலாளியான குழலி இவர் பார்வையில் கிராமத்தான் ஆகிறார். நானே சொல்லிகொள்ளும் ஒன்றை வைத்து என்னை குட்டி முதலாளி என்று தாக்குகிறார். பெரியாரே நேர்மையாய் தன்னை பற்றி எழுதிவைத்தவற்றை எடுத்துக்காட்டி இன்று அவரை காலிபண்ணும் செயல்பாட்டை ஒத்ததுதானே இது. (சரியாய் வாசிக்கவும், நான் என்னை பெரியாருடன் ஒப்பிடவில்லை. பெரியாரை தாக்க சிலர் பயன்ப்டுத்தும் உத்தியுடன், என்னை தாக்கும் உத்தியை ஒப்பிடுகிறேன்.)
குழலியை விட்டுதள்ளுவோம். அடுத்தவரை சொல்லும் முன் இராமகி ஐயா தன்னை பற்றி கொஞ்சம் கூட சிந்திக்கவில்லை. தொழில் வகையில் நான் குட்டி முதலாளி என்றால் இராம.கி ஐயாவும் அப்படியே அச்சாக ஒரு குட்டி முதாலாளிதான். திருநெல்வேலியை தாண்டி 20 வயது கடந்த பிறகே சென்றிருக்கிறேன். இராமகி பார்க்கும் அதே (போன்ற) வேலையைத்தான் நானும் செய்கிறேன். அவரை போலவே ஆராய்சிக்காக வெளிநாடு சென்றேன். தாய் தமிழகத்திற்கு திரும்பி வந்து நிலைகொண்டேன். எனக்கு எதுவெல்லாம் பொருந்துமோ அத்தனையும் ஐயாவிற்கும் அப்படியே அச்சாக பொருந்தும். எனது நல்லூழ், குஷ்பு பிரச்சனையில் கருத்து சொல்லி, திருமா பாமக கூட்டத்தை (அதுவரை தீவிரமாய் ஆதரித்துவிட்டு) எதிர்க்கும் வரை, நான் குட்டி முதலாளிதான் என்ற விஷயம் யார் கண்ணுக்கும் தெரியவில்லை.
கடைசியாக நான் இடது சாரி என்று எந்த இடத்திலும் சொன்னது கிடையாது. பெரியாரிஸ்ட் என்ற தெரியும் வகையிலேயே (மற்றவர்களால்) அடையாளப்படுத்தப் பட்டிருக்கிறேன். இராமகியை விட மிக தீவிரமாய் இடதுசாரிப் போலித்தனத்தை எதிர்ப்பவன். அவர் எழுதியதைவிட இது குறித்து பலமுறை எழுதியுள்ளவன். 'இந்துத்வாவைவிட இந்திய இடது சாரித்தனம் ஆபத்தானது' என்று ஒரு கருத்து வைத்திருந்ததை (பின்பு அதை மாற்றிக்கொண்டதை) அனாதையின் பதிவில் சொல்லியிருக்கிறேன்.
இது தவிர பல தேர்ந்தெடுத்தல்கள், திரித்தல்கள் இந்த பதிவில் உள்ளன. நிச்சயமாய் எடுத்துகாட்டி என்னால் விளக்க முடியும். இராம.கி பதில் தந்தால் பிறகு பார்போம்.
Karunaa said...
//நம் மாநிலத்தில் இருக்கும் கிழாரியக் குமுகாயத்தின் (feudal society) முரண்பாடுகளைத் தீர்க்க எத்தனிக்காமல், முதலாளியக் குமுகாயத்தின் (capaitalist society) முரண்பாடுகளைக் களைவதையும், ஆண் ஆதிக்க முரண்பாடுகளைக் களைவதையும் முன்பின்னாகப் பேசிக் குழப்பி, பட்டிமன்ற வாதங்களில் வென்றி கொள்ள முயன்று கொண்டிருக்கும் குட்டிமுதலாளியரை (petty bourgeoisie), உங்களுடைய இந்தப் பதிவு சற்றே மெய்நிலைக்குக் கொண்டுவரட்டும்.//
தம்பி ரோசா வசந்,மேலே குறிப்பிட்ட கருத்தை மீளவும் ஒரு முறைபடியுங்கள்!கிழாரியச் சமுதாயத்தின் முரண்பாடுகளை யார் தீர்ப்பது?இக்கருத்தில் எவருடன்படுகிறாரோ அவருக்கு"முரண்பாடுகள்"குறித்த புரிதல் தெளிவில்லை என்பதுதான் உண்மை!இந்தியச் சமுதாய வளர்ச்சியானது ஒழுங்கமைந்த முதலாளிய வளர்ச்சியோடு உருப்பெறவில்லை.காலனித்துவ ஆட்சியாளகளினாலேயேதான் எமது முதலாளியம் தோற்றுவிக்கப்பட்டது.இதுதான் இன்றைய பிரச்சனை.இந்திய சமுதாயத்தின் உள் முரண்பாடுகளால் தோற்றுவிக்கப்பட்ட சமூக வளர்ச்சியேதான் கிழாரியத்தின் முரண்பாடுகளைக் கடாசி அதனிடத்தில் முதலாளிய முற்போக்கான கூறுகளை(கிழாரியத்துக்கு,முதலாளியம் முற்போக்கானது)தோற்றுவித்திருக்கும்.இங்கே சுயமுரண்பாடுகளால் தோன்றாதவொரு பொருளாதார அமைப்பு அந்தச் சமுதாயத்தின் பழைமையான முரண்பாடுகளால் மீளவும் சிதலமடைகிறது.இந்த முரண்பாடுகளைக் குறைந்த பட்சமாவது தேசிய முதலாளியத்தின் ஊக்குவிப்பில்-அதன் படிமுறை வளர்சியில்தான் களைய முடியுமேயொழிய வெறும் கருத்துக்களாலோ ,தனிநபர்,குழுவினாலோ அல்லது சட்டங்களாலோ அல்ல.
சமூக வளர்ச்சியானது எப்பவும் முரண்பாடுகளாலேயேதான் தீர்மானிக்கப்படுகிறது.இத்தகைய முரண்பாடுகள் மனிதர்களின் உழைப்பினாலும் அதன் பங்கீட்டினாலுமே ஆரம்பமாகிறது.இந்திய மக்களினங்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காலனித்துவத்தின் அதீத பாச்சலே காரணமாகிறது.இதனால் சமுதாயம் படிமுறையான வளர்ச்சியை இழந்து,திடீர்ப்பாச்சலுக்குள் வீழ்ந்தபோது பழைய எச்சங்கள்"அரை நிலப்பிரபுத்துவ அரை முதலாளித்துவ-உள்ளகக்காலனிதுவ(சாதிய ஒடுக்குமுறை) அமைப்பாகத் தோன்றி புதிய ரகப் பொருளாதாரச் சிக்கல்களை உருவாக்கிறது.இன்றை ஏகாதிபத்திய மூலதனமானது இன்னும் ஒருபடி மேலே போய் இந்தியா போன்ற அபிவிருத்தியடையும் நாடுகளைத் தரகு முதலாளியமாச் சீரழித்தபின் இந்த நாடுகளின் முரண்பாடுகள் மழங்கடிக்கப்பட்டு-எச்சங்களாகக் காக்கப்படுகிறது.
அடுத்து குட்டிப் ப+ர்ச்சுவா,குட்டி முதலாளி என்பதெல்லாம் வெறும் பொருளாதார உறுவுகளால் தீர்மானிக்கப் படுவதில்லை.அவற்றை நீங்கள் குழலிக்குப் பொருத்துவதும் பின்பு உங்களுக்குப் பொருத்துவதும் எந்த அர்த்தத்திலென்பதை சற்றுத் தெளிவு படுத்தித் தீர்த்துக் கொள்ளுங்கள்.உற்பத்திச் சக்திகளோடு இணைந்துள்ள உற்பத்தியுறவுகள்(உடல்,மூளையுழைப்பாளர்கள்)எவ்வளவுதான் முதலாளிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டாலும் அவர்கள் ப+ர்ச்சுவாக்களோ அல்லது குட்டி முதலாளியளோ கிடையாது.நாமெல்லோருமே முதலாளியக் கருத்துடையோராய் இருக்கலாம்,அதற்காக நாம் ப+ர்ச்சுவா வர்க்கமாக முடியாது.
பதிலுக்கு நான் எழுதியது,
ROSAVASANTH said...
தம்பியாக என்னை கேட்காமலேயே தத்து எடுத்துகொண்ட அண்ணன் கருணா,
நான் கிழாரிய சமுதாயத்தின் முரண்பாடுகளை தீர்ப்பதை பற்றியோ,அதன் அவசியம் பற்றியோ அல்லது அது குறித்த இராமகியின் கருத்தை பற்றியோ எதுவுமே சொல்லவில்லை. மிகவும் அற்பமான பிரச்சனையை பற்றிதான் எழுதியுள்ளேன். தனக்கு உவப்பில்லாத காரணத்தால் திடீரென ஒருவர் குட்டி முதலாளி ஆவதும், உண்மையான குட்டி முதலாளி கிராமத்தான் ஆவதும் பற்றிதான்.
என்ன பொருளில் 'குட்டி முதலாளி' என்ற பதத்தை பயன்படுத்தினார் என்பதை இராமகிதான் விளக்கவேண்டும். நான் என்னை எந்த பொருளில் குட்டி பூர்ஷ்வா என்று சொல்லிகொள்கிறேன் என்பது என் பதிவில் விளக்கப்பட்டுள்ளது. பொதுவுடமை அறிஞரான நீர் 'கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை'யை படித்திருப்பீர்தானே? "உற்பத்திச் சக்திகளோடு இணைந்துள்ள உற்பத்தியுறவுகள்(உடல்,மூளையுழைப்பாளர்கள்)எவ்வளவுதான் முதலாளிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டாலும் அவர்கள் ப+ர்ச்சுவாக்களோ அல்லது குட்டி முதலாளியளோ கிடையாது" என்று சொல்வதை பார்தால் படித்ததாக தோன்றவில்லை. குட்டி பூர்ஷ்வா ஒருபோதும் மூலத்தனத்திற்கு சொந்தமானவரோ, லாபத்தில் பங்கு பெறுபவரோ அல்ல. பாட்டாளிகள், கலக பாட்டாளிகள் என்பவற்றிலிருந்து வேறுபட்டு, ஆனால் அவர்கள் தளத்திலிருந்துகொண்டே, கூலியுழைப்பை வாங்ககூடியவரும், அதனால் பயன்பெறக்கூடியவரும்தான். குட்டி முதலாளி என்பதை வரையருத்து மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுதியதன் பொருளில்தான் குழலியை குட்டி பூர்ஷ்வா என்கிறேன்.
ஆனால் இங்கே பிரச்சனை அதுவல்ல. ஒரே ஒரு பதிவில், ஒரு நிகழ்வை மற்றவர்களூக்கு (விமர்சனமற்ற) நெகிழ்வை ஏற்படுத்திய காரணத்தால் ஒருவர் கிரமத்தான் ஆவதும், அதுவரை தீவிரமாய் ஆதரித்த திருமா ராமதாசை விமர்சித்ததால் இன்னொருவர் நகர்புரத்து குட்டி பூர்ஷ்வா ஆவதன் பிண்ணணி polemics மட்டுமே. தொடர்பில்லாத வேறு விஷயங்கள் பற்றி எழுதுவது உங்கள் விருப்பம்.
http://mugamoodi.blogspot.com/2006/03/blog-post_04.html
இந்த விவாதத்தை ஓரமாய் நின்று ஓரளவு கவனித்தவன் என்ற முறையில் வழிப்போக்கன் அவர்களுக்கு சில குறிப்புகள்,
ஈழநாதன், பெயரிலி சில விளக்கங்கள் தர தேவையுள்ளதாக, சில விஷயங்கள் நெருடலாக உள்ளதாகவும் நினைக்கும் நான், அது குறித்து (எனக்கான சில காரணக்களினால்) என் பதிவில் பிறகு எழுதும் நோக்கம் உள்ளது. இந்த குறிப்புகள், ஈழநாதன் மீது (வாய்ப்பை பயன்படுத்தி) அதிகப்படியாய் வரும் குற்றச்சாட்டுகள் பற்றி மட்டுமே.
//1. முகமூடி வை கோவின் அணித் தாவல்களைக் கிண்டலடித்து வை கோ ஒரு சாதாரண அரசியல்வாதிதான் இலட்சியவாதியெல்லாம் அல்லர் என்பதை சுட்டிக் காட்டும் விதமாக ஒரு பதிவு போடுகிறார். வை கோ என்ற அரசியல்வாதியை இங்கு பலரும் ஒரு பீடத்தில் வைத்திருந்து பூஜித்துக் கொண்டிருந்த வேளையிலே வை கோ என்பவரும் பதவி, கட்சி, அதிகார வேட்கையுள்ள ஒரு நாலம் தர அரசியல்வாதிதான் என்பதை குறிப்பால் உணர்த்தினார். //
வைகோவை யாரும் பூஜித்ததாக தெரியவில்லை. யாரும் அவரை கொள்கைவீரராக அரசியலில் சமரசம் செய்பவராக சொல்லியதாக தெரியவில்லை. வைகோ அரசியலில் எல்லோரையும் போல ஒரு சந்தர்ப்பவாதி என்றுதான், அவரை வேறு காரணங்களுக்காக ஆதரிப்பவர்களும் கூறியிருக்கிறார்கள். வலைப்பதிவை ஒழுங்காய் படிக்கும் எவரும் இதை உணரமுடியும். தேவையானால் உதாரணங்களை வரைசைப்படுத்த முடியும். வைகோவிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து எழுதிய சுமு பதிவில் கூட அவரை நம்பமுடியாதவராகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
//2. அதைப் பாராட்டிய பி கே எஸ் வை கோ, திருமா போன்ற அரசியல்வாதிகளின் யோக்கிதையை அவர்கள் நடவடிக்கைகளே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன, அவர்களது நடவடிக்கைகள் மட்டுமே அவர்களின் மீது கட்டி எழுப்பப் பட்டிருக்கும் பொய்யான பிம்பத்தை உடைக்கப் போதுமானவை என்று சொல்லி முகமூடியின் பதிவுகளுக்கு இனி அவசியமில்லை என்று ஒரு அங்கதத் தொனியில் பின்னூட்டம் போடுகிறார்.//
வழிபோக்கன் பாதியை மட்டும் தேர்ந்தெடுத்து கூறியுள்ளார். சிவக்குமார் கூறியது அதுவல்ல. வலைப்பதிவுகளில் ஒரு சிலரை(பெயர்களை சொல்லாமல், பெயரிலி தவிர வேறு யாரையும் சூசகமாவும் குறிப்பிடாமல, அதே நேரம் வாசிப்பவர்களுக்கு (நான் உட்பட) பலர் அதில் இடம்பெறும்படி எல்லோரையும்) 'நசிவு சக்திகள்' என்று குறிப்பிட்டு, அவர்கள் எல்லாம் இதனால் வாயடைத்து போவார்கள் என்றார். திருமா, வைகோ அதிமுக பக்கம் சென்ற, ஏற்கனவே வாய்ப்பு மிகவும் இருப்பதாக எதிர்பார்த்திருக்க கூடிய ஒரு நிகழ்வு, வலைப்பதிவுகளின் 'நசிவு சக்திகளை' வாயடைக்க வைக்கும் என்ற அற்புத லாஜிக் ஒருபுறமிருக்க, சிவக்குமாரால் அதிகம் குறிப்பிடப்பட்ட, ரொம்ப நாடகளாகவே காணாமல் போய் போய் படம் மட்டும் போடும், தமிழக அரசியலில் பெரிதாக ஆர்வம் காட்டாத, அதுகுறித்து எதுவும் எழுதாமல் ஏற்கனவே மௌனமாய் இருக்கும் பெயரிலியை இது எப்படி வாயடைக்க வைக்கும் என்பது தலைகால் புரியவில்லை. ராம்வாட்சர் என்பது பத்திரிகைகள் எப்படி ஈழபிரச்சனை தொடர்பாக செய்திகளை திரிக்கின்றன, தங்கள் அரசியல் நலங்களை முன்வைத்து அதற்கு சாதகமாய் முன்வைக்கிறது என்பதை பற்றிய ஒரு விமர்சனம். திருமா வைகோ அதிமுக பக்கம் செல்வது, ஒரு அரசியல்ரீதியான சந்தர்பவாதம். மேலும் தேர்தல் முடிந்தவுடன் அவர்கள் பழையபடி ஈழபிரச்சனை பற்றி பேசுவார்கள். ஒருவேளை மீண்டும் ஜெயா உள்ளே போட்டாலும் போடலாம். வைகோ, திருமா நடவடிக்கை தந்த தலைகால் புரியாத சந்தோஷத்தில் சம்பந்தமில்லாமல் லாஜிக்குகளை பிகேஎஸ் அள்ளிவிட்டதாக மட்டுமே தெரிகிறது.
//3. அதற்கு பிறகு நீங்கள் உள்ளே வருகிறீர்கள். வை கோ செய்தது சரி, அல்லது தவறு என்று பதிவுக்குச் சம்பந்தமாக பின்னூட்டம் இடுவதற்குப் பதிலாக தேவையே இல்லாமல், சம்பந்தமே இல்லாமல் பி கே எஸ்ஸை வம்புக்கு இழுத்தீர்கள். உங்களுக்கும் அவருக்கும் ஏதேனும் பிரச்சினை என்றால் அதை உங்கள் பதிவில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும். அதை விடுத்து பேசப் படும் விஷயத்திற்கு சம்பந்தமில்லாமல் ஒரு தனி நபர் தாக்குதலில் இறங்கினீர்கள். அதாவது வை கோ உடைத்த பிம்பத்தினால் ஏற்பட்ட அவமானம் பொறுக்காமல் அதைப் பற்றிய பேச்சில் இருந்து திசை திருப்ப நீங்கள் பி கே எஸ்ஸை வம்புக்கு இழுத்தீர்கள். உங்களுடைய நோக்கம் திசை திருப்புதல்தான். அது சரியாகவே நடை பெற்றது.//
ஏறகனவே சொன்னது போல் இது வழைப்போக்கனால் முற்றிலும் தேர்ந்தெடுக்கப் பட்டு முன்வைக்கும் திரித்தல். வலைப்பதிவுகளின் 'நசிவு சக்திகள்' என்று தொடங்கி பலர் மீது வைத்த பிகேஎஸின் தாக்குதலால் உந்தப்பட்டே ஈழநாதன் பேசினார். அதை ஒட்டியே அவரது மறுமொழியும் உள்ளது. அதை அப்படியே இங்கே வழிபோக்கன் திரிக்கிறார்.
//4. பி கே எஸ் உங்களுக்குப் பதில் கூறினார். பதிலுக்கு நீங்கள் உங்கள் பெயரில் அன்று வேறு பெயரில் எழுதியதே அல்ல என்று சத்தியம் செய்து, முடிந்தால் நீருபியுங்கள் என்று பி கே எஸ்ஸ¤க்கு சவால் விட்டீர்கள். வேறு பெயரில் எழுதியதை இல்லை என்று முழு பொய்யை அவிழ்த்து விட்டதும் அல்லாமல் சவால் வேறு விட்டீர்கள்.//
பிகேஎஸ் முதலில் ('நசிவு சக்திகள்' என்றெல்லாம் திட்டி) சொன்னது, வேறு பெயர்களில் ஒளிந்துகொண்டு *தன் அடையாளத்தை மறைத்துகொண்டு* மற்றவர்களை திட்டுவது பற்றி. ஈழவன் என்ற பெயரில் ஈழநாதன் தன் அடையாளத்தை மறைத்துகொண்டு எழுதவில்லை. எல்லோருக்கும் தெரியும் வண்ணம் ஒரு புனை பெயரில்தான் எழுதினார். ஏற்கனவே பாலாஜி-பாரி போன்றவர்கள் இப்படி (வழிப்போக்கன் என்ற பெயரில்) எழுதுவதும், அதை அவரே ஒப்புக்கொண்டது எல்லோருக்கும் தெரியும். 'ஈழவன் நீங்கள்தானா?' என்று சிவக்குமார் கேட்டபோது, 'ஆமாம் நான்தான்' என்று ஈழநாதன் சொன்னார். (அதை நானும் அந்த சந்தர்ப்பத்தில் படித்தேன்.) 'நான் வேறு பெயரில் எழுதவில்லை' என்று சொன்னது தன் அடையாளத்தை மறைத்து எழுதுவதை பற்றி என்பது புரிவதில் சிரமம் இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால் பிகேஎஸ் ஒரு வாக்கியத்தை தனக்கு சாதகமாக வைத்து விளையாடுகிறார். ஆக ஈழநாதன் 'ஈழவன்' விவகாரத்தில் போய் சொல்வதாக சொல்வது வழபோக்கன் சிவக்குமாரை போலவே செய்யும் விளையாட்டு மட்டுமே. மற்றபடி 'மலரவன்' விஷயம் வேறு அதற்கு அடுத்த பத்தியில் வருகிறேன்.
//5. பி கே எஸ் நீங்கள் எப்பொழுதெல்லாம் வேறு பெயர்களில் பின்னூட்டம் இட்டீர்கள் என்று தெளிவாக நிரூபித்தார். அப்பொழுதும் கூட உண்மையை ஒத்துக் கொள்ளாமல் ப்ரொள்சிங் செண்டரில் இருந்து பின்னூட்டம் இட்டதாகப் பொய் சொன்னீர்கள். அதையும் பொய் என்று நீங்கள் சொன்ன காலகட்டத்துக்கும் முன்பாக உள்ள பின்னூட்டத்தில் இருந்து நீரூபித்தார். அப்பொழுதும் கண்ணியமாக ஆமாம் நான் வேறு பெயரில் பின்னூட்டம் இட்டேன் என்று ஒத்துக் கொள்ளாமல் காலைத் தூக்குகிறார் கையைத் தூக்குகிறார் என்று தொடர்ந்து ஆபாசமாகவும், அடாவடித்தனமாகவுமே எழுதி கொண்டு செல்கிறீர்கள். முதலில் நான் பிற பெயர்களில் எழுதவே இல்லை என்று சொன்ன நீங்கள் இப்படி கையும் களவுமாகப் பிடிபட்ட பின்னர் அந்தப் பெயர்களில் எழுதினேன் என்கிறீர்கள். அப்ப முன்பு சொன்னது என்னவாயிற்று? அதை நாங்கள் எல்லாம் மறந்து விட வேண்டுமா என்ன? முதலில் சொன்னது உண்மையா, இப்பொழுது சொல்வது உண்மையா? எது உண்மை? நீங்கள் முதலில் சவால் விட்ட பொழுது சொன்னது அப்பட்டமான பொய் என்பதையும் ஏற்க மறுக்கிறீர்கள். நீங்கள் முதலில் சொன்னதும் இங்கு பின்னூட்டப் பெட்டியில் அப்படியே இருக்கிறது. இப்பொழுது சொல்வதும் அப்படியே இருக்கிறது. ஏன் இந்த ஏமாற்று வேலை? ஏன் இந்த மோசடி? //
'ஈழவன்' விவகாரம் பற்றி ஏற்கனாவே சொன்னதுபோல், அது வாக்கியத்தை தனக்கு சாதகமாக்கி பிகேஎஸ் வழிபோக்கன் செய்யும் விளையாட்டு மட்டுமே. ஆனால் பிகேஎஸ் ஐபிக்களை 'எடுத்து போட்டு' மலரவன் என்ற 'பெயரில் ஈழநாதன் எழுதியது' பற்றி பிகேஸ் சொல்வது வேறு விஷயம். மற்ற வெற்று சவடால்கள், திரித்தல்கள் தர்க்க சாமர்த்தியங்களை விட்டுவிட்டு, பிகேஎஸ் (ஈழநாதன் பற்றி) எழுதியதில் சீரியசாய் எடுக்க இந்த ஒருவிஷயம் மட்டுமே எனக்கு உள்ளது. ஐபிக்கள் எங்கிருந்து பெறப்பட்டன, அதன் நம்பகத்தன்மை என்ன, என்பதை அறிந்துகொள்ள எனக்கு போதுமான அறிவு இல்லை. அதானால் நிறைவாக என்னால் மிக நிச்சயமாக எதுவும் சொல்ல முடியவில்லை. மலரவன் என்ற பெயரில் ஈழநாதன் எழுதினாரா இல்லையா என்று என்னால் நிச்சயமாய் சொல்ல முடியாது. ஆனால் ஏற்கனவே கார்திக் விஷயத்தில் (அது குறித்து முடிந்தால் பிறகு எழுதலாம்) சரியாகவே ஒரு துப்பறியும் வேலையை செய்திருக்கும் சிவக்குமாரின் ஆதாரம், சரியாக இருப்பதாக நம்பவே எனக்கு தோன்றுகிறது. அது குறித்த ஈழநாதனின் விளக்கம் நிறைவாக இல்லை என்பதும் தெரிகிறது. அவர்தான் விளக்க வேண்டும்.
ஆனால் மலரவன் என்ற பெயரில் மறைந்துகொண்டு யாரையும் ஈழநாதன் தாக்கியதாக (எனக்கு) தெரியவில்லை. அப்படி எழுதியதன் மூலம் என்ன பெரிய பாதகத்தை செய்கிறார் என்றும் புரியவில்லை. (ஈழநாதன் பெயரில் எழுதாமல் மலரவன் பெயரில் மற்றவர்களை திட்டும் வசதிக்காகவோ, அல்லது கருத்துக் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கிலோ எழுதியதாகவோ தெரியவில்லை- அதாவது எல்லா ஆதாரமும் சரியாக இருந்து அவர் எழுதியிருக்கும் படச்சத்தில்.)
சண்டையின் போக்கில், தர்க்கச்சிக்கலில் மாட்டிகொண்டு ஈழநாதன் தான் எழுதவில்லை என்று சாதிப்பதாக கூட இருக்கலாம். இதை முன்வைத்து (வறலாற்றில் பலமுறை நடக்கும்) தர்ம அடிபோட எல்லோரும் முயலலாம். அதைதான் வழிப்போக்கன் கீழே செய்கிறார்.
//ஆக என்னைப் போன்ற ஒரு வழிப்போக்கர்களுக்கு நீங்கள் ஒரு பொய்யர், பித்தலாட்டக்காரர், நாணயம் இல்லாதவர்,நேர்மையற்றவர் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெளிவாகிறது. இனி நீங்கள் எங்கு எதை எழுதினாலும் எங்களுக்கு ஒரு நேர்மையற்றவரின் சவடால்களாக மட்டுமே தோன்றும். ஆரம்பத்திலேயே நீங்கள் உண்மையை ஒத்துக் கொண்டிருந்து காற்றில் அட்டைக் கத்தியை சுத்தாமல் இருந்திருந்தாலவது உங்கள் மீது உள்ள கொஞ்சம் நஞ்சம் மரியாதையும் மிச்சமிருந்திருக்கும். வை கோ பதிவை திசை திருப்புகிறேன் பேர்வழி என்று வந்து உங்களைப் பொய்யர் என்று நிரூபித்துக் கொண்டதுதான் மிச்சம். அது சரி, வை கோ, திருமாவை பின்பற்றும் உங்களைப் போன்றவர்களிடம் நேர்மையை எதிர்பார்ப்பது எங்கள் பிழைதான்.//
இது குறித்த அதிகப்படியான கருத்துக்கள் முடிந்தால் என் பதிவில் பிறகு.
இராம.கி பதிலாக எழுதியது.
அன்பிற்குரிய ரோசாவசந்த்,
இந்தப் பதிவை இடும் போதே, உங்களிடம் இருந்து எதிர்வினை வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இப்படி வரும் என்று தோன்றவில்லை.
என்னுடைய "குட்டிமுதலாளி" என்ற ஒரு பதத்தை, (கட்டுக் கூற்றை - category-யை) தன்மயமாக ஏன் புரிந்து கொள்ளுகிறீர்கள் என்று விளங்கவில்லை. குழலியின் பதிவில் நான் இட்ட முன்னிகையையும் அப்படித்தான் புரிந்துகொண்டீர்கள்.
நண்பரே! அது தவறான புரிதல்.
ஓரளவு மார்க்சையும் மற்றோரையும் ஒரு காலத்தில் பரந்து, ஆழப் படித்தவன் என்ற முறையில், குட்டி முதலாளி என்ற பெயரின் வரையறை புரிந்திருக்கிறேன் என்று தான் எண்ணுகிறேன். அதை petit-bourgeoise என்று தான் மார்க்சு எழுதுவார்; petty bourgeoise என்ற புழக்கம் பின்னால் மற்றவரால் திரிந்து வந்தது. அந்தச் சொல் பாரிசு குமுனம் (Paris Commune) எழுந்த போது பரவலாகிப் போன சொல். உங்களின் முதற்பேர் கொண்ட திருவாட்டி ரோசா லக்சம்பர்க்கும் கூட பாரிசுக் குமுனம் பற்றி எழுதுவார். (இன்றைக்கு அந்தப் பொத்தகங்கள் எல்லாம் சரியாக நினைவில் இல்லை; ஒவ்வொன்றையும் தேடித் தேடிப் படித்த காலம் ஒன்றுண்டு.) திரு. கருணாநந்தன் கூறியது போல குட்டிமுதலாளிகள் என்ற பதத்தை புதுக்க ஏதுக்களின் (means of production) வழியே தான் புரிந்து கொள்ளமுடியும். ஆனால் மார்க்சு காலத்து முதலாளியக் குமுகாயம் இன்றைக்கு இல்லை; அதன் கட்டுக்கூறுகள் பெரிதும் மாறிவிட்டன. தளையற்ற முதலாளியம் (laissez faire capitalism) என்பது இன்று எங்குமே கிடையாது. பெரும்பாலும் அதிகார முதலாளியம் (bureaucratic capitalism) தான் கோலோச்சுகிறது. இன்றைக்கு குட்டி முதலாளி என்பவர் தனித்து அடையாளம் காணுமாப்போல இருப்பதில்லை. நான் மார்க்சு காலத்து வரையறையைச் சொல்லுகிறேன்.
"எவனொருவன் புதுக்க ஏதுக்களை தானே கொண்டிருந்து, உழைப்பாளிகளை வேலை வாங்கி, பெருகு மதிப்பை (surplus value) தன் நுகர்வுக்கு எடுத்துக் கொள்ளுகிறானோ அவன் முதலாளி.
எவனொருவன் புதுக்க ஏதுக்களை தானே கொண்டிராமல், தன் உழைப்பை ஈந்து, வேலை செய்து, கூலி பெற்று, பெருகு மதிப்பை (surplus value) மற்றவர் நுகர்வுக்கு விட்டுக் கொடுக்கிறானோ, அவன் தொழிலாளி.
புதுக்க ஏதுக்களைச் சொந்தமாகக் கொண்டிருந்து, அதே நேரத்தில் தானும் வேலை பார்த்து, புதுக்க உறவுகளில் (relations of production) ஈடு பட்டு, தன் உய்வை நடத்திக் கொள்ளுகிறானோ அவன் குட்டிமுதலாளி.
குட்டி முதலாளி என்பவர் அந்தக் காலத்துக் கம்மாளர் (artisans) போல உள்ளவர். þó¾ì ¸¡Äò¾¢ø ®§Ã¡ðÊø ÒÂ×ò ¾È¢î (power looms) ¦º¡ó¾ì¸¡Ã÷¸Ç¢¼õ þó¾ ¦¿È¢Ó¨È இன்னும் கூட þÕ츢ÈÐ. பெரியது, சின்னது என எல்லாத் தறிக்காரர்களும் தறிச் சொந்தக்காரர்களாய்ச் சங்கத்தில் உறுப்பினராய் இருப்பார்கள். இருந்தாலும் பத்துத் தறி வைத்திருப்பவர், தறிப் பெரியவரிடம் (master weaver) ஒப்பந்தக் காரராய், அதே போது ஒரு ஒப்பந்தத் தொழிலாளர் போன்றே, புதுக்க உறவுகள் கொண்டிருப்பார்; 20000 அடி துணி நெய்யவேண்டும் என்ற புதுக்க ஏவலைத் (production order) தறிப் பெரியவர் பெற்றிருப்பார். அவர் அதைச் சிறிது சிறிதாகப் (2000, 3000 அடியாகப்) பிரித்து இந்த சின்னத் தறிக் காரர்களுக்குக் கொடுப்பார். (சின்னத் தறிக்காரர்களின் பேட்டை தான் சின்னதறிப் பேட்டை என்னும் சென்னைச் சிந்தாதிரிப் பேட்டை) சின்னதறிக் காரர்கள் நெசவாளிகளையும், ஒருசில எடுபிடிகளையும், வைத்துக் கொண்டு தங்களுக்கு உரிய 2000 அடி, 3000 அடித் துணிகளை நெய்து கொடுப்பார்கள். இந்தச் சின்னதறிக் காரர்கள் தான் குட்டி முதலாளி என்பவர்கள். இது போல குட்டி முதலாளிகளை விதவிதமாக நம் குமுகாயத்தில் பார்க்கலாம். பல தானிகளை வைத்திருப்பவரிடம், நாள் வாடகைக்குத் தானி (auto) எடுத்து ஓட்டும் ஆள், இருவளைப் (two wheelers) பழுது பார்க்கத் தனியிடம் எடுத்து அங்கு நாலைந்து சின்னப் பையன்களை வேலைக்கு வைத்துக் கொள்ளும் ஆள், பலசரக்குக் கடைக்காரர், சின்ன அச்சகம் நடத்துபவர், இப்படி இது போல எத்தனையோ பேரை அடையாளமாகக் காட்டலாம்.
ஆனால் ஓரளவுக்கு மேல், முதலாளிக்கும் குட்டிமுதலாளிக்கும் வேறுபாடு என்பது மங்கலாய்த் தான் தெரியும். இன்னொரு பக்கம் குட்டிமுதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையில் உள்ள கோடும் வெளிறிப் போவது இந்தக் காலத்தில் நடக்கிறது. 8மணி நேரம் ஒரு தொழிற்சாலையில் உழைக்கிறவர், இன்னொரு நேரத்தில் தனக்கென சிறுதொழில் செய்பவராக, நாலு உதிரி ஆட்களை வேலைக்கு வைத்துக் கொள்பவராய் இருக்கலாம். ஏன், பங்குச் சந்தையில் பெரும் பணங்களை பரிமாற்றம் செய்பவராயும் இருக்கலாம். அப்படிப் பட்டவர் தொழிலாளியா, முதலாளியா, குட்டிமுதலாளியா என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது இருக்கிறது.
சரி, பெரும் நிறுவனங்களில், அதிகாரம் வகிக்கும் அறிவுய்திகளை (intelligentia) எப்படிச் சொல்வது என்று கேட்டால் அறிவால் உய்யும் அறிவுய்திகள் என்றுதான் சொல்ல முடியும்; இல்லையென்றால் அதிகாரத்தைக் காட்டிப் பிழைக்கும் அதிகாரி என்று சொல்ல முடியும். என்னைப் பற்றிச் சொல்லியிருந்தீர்கள். நான் புரிந்தவரை, இன்றைய நிலையில் என்னைக் குட்டி முதலாளி என்று சொல்ல முடியாது (செம்மீன் படம் ஞாபகம் வருகிறது பபருங்கள்; அந்தப் பரீக்குட்டி சரியான குட்டி முதலாளி :-)) நான் ஓர் அறிவுய்தி; ஓர் அதிகாரி, ஒரு பெரிய நிறுவனத்தின் நிருவாகி; என் உழைப்பு எனக்குச் சோறு போடுகிறது; என் துய்ப்பு, நுகர்வுகளுக்குப் பணம் கொடுக்கிறது; அவ்வளவு தான். என் வீட்டில் வேலை பார்ப்பவரை வைத்து நான் பொதினம் (business) ஏதும் நடத்தவில்லை.
உங்களைப் பற்றியோ, குழலி பற்றியோ சொல்ல, எனக்குப் பட்டறிவு போறாது.
குட்டிமுதலாளி என்று நான் சொன்னது பொதுமையான கூற்று:
[மூன்றாவதாய் இடைநின்று, ஒர் இடது சாரிக் கூட்டம் குட்டி முதலாளியத் தன்மையொடு அவ்வப்பொழுது கருத்துச் சொல்வதும் உண்டு. அப்படிச் சொல்லும் போது, இடதுசாரிகள் குமுகாயப் புரட்சி, வர்க்கம், முரண்பாடு என்ற பல்வேறு தேற்றுக்களை(theory)யும், கொள்கைகளையும் பற்றி உரக்க விதந்து பேசுவார்கள்; ஆனால் நடைமுறை என்று வரும் போது "தமிழகக் குமுகாயத்தின் வெளிப்பாடுகளை, தமிழக வரலாற்றை, இவர்கள் என்றாவது ஆழ்ந்து புரிந்து கொண்டார்களா?" என்ற அய்யம் எழும்; இந்த அய்யம் தெலிங்கானாப் புரட்சிக்குப் பின் இடதுசாரிகள் நடந்து கொண்ட முறையில் இருந்தே தமிழ்நாட்டில் பலருக்கும் உண்டு. இடது சாரிகளின் நிலைப்பாடு பல நேரம் நீரின் மேல் கிடக்கும் எண்ணெய் போல தமிழ்க் குமுகாயத்தை ஓட்டியும் ஒட்டாமலும் இருக்கிறது.]
உங்களுக்கு 50, 60, 70 களில் இருந்த இடது சாரி நிலைமை தெரியுமா, தெரியாதா என்று எனக்குத் தெரியாது. "பாரிசுக் குமுனப் புரட்சி என்பது குட்டிமுதலாளியரால் நடத்தப் பட்டதுதான், அது அழித்தொழிக்கப் பட்டபோது எதிர்த்து நிற்க முடியாமல் போனதற்குக் காரணம்" என்று மார்க்சு சொல்லுவார். "குமுகாயப் புரட்சி, வர்க்கம், முரண்பாடு" என்ற தேற்றுக்களையும், கொள்கைகளையும் உரக்க விதந்து பேசிப் போக்கிய நாட்களுக்கள் நான் இனிப் போக விரும்பவில்லை. ஆனாலும் நான் ஒரு இடது சாரிக் காரன் என்று சொல்லிக் கொள்வதில் என்றும் வெட்கப் படுபவனும் இல்லை.
60, 70 களில் இளமைப் பருவம் கொண்டிருந்த மிகப் பலரும் இந்த இடதுசாரித் தாக்கத்து ஆட்படாமல் இந்திய நாட்டில், ஏன் பல நாடுகளில், இருந்தது இல்லை என்றுதான் புள்ளிவிவரம் கூறுகிறது.
எழுதிக் கொண்டே இருக்கும் போது, சலிப்பு எனக்கு வருகிறது. நிறுத்திக் கொள்ளுகிறேன்.
தன்மயமாக ஒன்றை எண்ணிப் பார்த்து, எங்கோ எவரோ சொல்லுவது தன்னைத்தான் சொல்லுவதாகப் பொருத்திக் கொள்ளும் பழக்கம் நல்லதல்ல, நண்பரே! அது சிறுகுழு மனப்பான்மை. நீங்கள் ஈடுபட்டு எழுதவேண்டிய புலனங்கள் பல. அதைச் செய்யுங்கள். என் கருத்தை நீங்கள் ஒப்ப வேண்டியதும் இல்லை; அதற்காக பட்டிமன்றம் ஏற வேண்டியதும் இல்லை. நாபா.வின் மணிபல்லவம் என்ற புதினத்தைப் படித்திருக்கிறீர்களோ? அதன் நாயகன் (இளங்குமரன் என்று நினைக்கிறேன். நாயகியின் பெயர் சுரமஞ்சரி என்ற அழகிய பெயர்.) நாவலோ நாவல் என்று கொடிநட்டு, மாற்று நெறியினரோடு வாதம் செய்ய முற்படுவதைச் சொல்லித் தொடங்கியிருப்பார். நாவலோ நாவல், பட்டி மன்றம், ஏது சாற்றம் (= தருக்கம் = ஏரணம் = அளவையாடல்) எல்லாம் இந்தத் தென்னாட்டில் இருந்து கிளம்பியவை தான். ஆனால் எல்லாமே அளவிற்கு மீறினால்..... திகட்டிப் போகும் நண்பரே!
தெரியாததைத் தெரிந்து கொள்ள வேண்டு; அறியாததை அறிந்து கொள்ளவேண்டும்; அதே பொழுது, நெஞ்சங்கள் அறிவால் வெல்லப் படுவதில்லை.
எனக்கு நெஞ்சங்கள் நிறைய வேண்டும்.
அன்புடன்,
இராம.கி.
நான் கடைசியாய் எழுதியது,
குழலியின் பதிவில் 'குட்டி முதலாளி' என்று என்னை குறிப்பிடவில்லை என்பது என்னை மிகவும் ஆச்சரியப் படுத்துகிறது. அந்த நேரத்தில் 'தமிழ் ஃபாசிஸ்ட்' என்ற பதத்தை அதிகம் பயன்படுத்தி பதிவு இட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் "தமிழ் பொதுக்கையன்' என்ற ஸ்மைலி போட்டி கையொப்பமிட்டதும் என் பதிவை முன்வைத்துதான் என்று புரிந்துகொண்டேன். ஆனால் அதை நீங்கள் இப்போது மறுக்கும் போது, என் வாசிப்பை வலியுறுத்த எந்த தேவையும் இல்லை. அதே நேரம் பலர் என்னை பொறுத்தி வாசிக்க இயலும் என்பதால் என் எதிர்வினை குறித்தும் வருத்தம் இல்லை. உங்கள் மறுப்பின் அடிப்படையில் அதில் உள்ளதை மட்டும் திரும்ப பெற்றுக்கொள்ள மட்டும் செய்கிறேன்.
மற்றபடி 'குட்டி முதலாளி' என்பதற்கு நீண்ட விளக்கம் தந்திருக்கிறீர்கள். அதே விளக்கத்தின் அடிப்படையிலேயே நானும் நீங்களும் குட்டி முதலாளி (மார்க்சிற்கு பின்னான மாறிவிட்ட முதாளித்துவ குமுகத்தில்) என்பது என் கருத்து. சாஃப்ட்வேர் காரர்கள் அதை விட மிக தெளிவாக குட்டி பூர்ஷ்வாகள் என்பதில் எனக்கு ஐயமே இல்லை. இங்கே பிரச்சனை அது குறித்து விவாதிப்பது அல்ல என்பதால் தொடரவில்லை. இந்த பதிவின் கருத்துக்கள் பற்றி (அறிவுமதி, பாமரன், சாருநிவேதிதா) பற்றி பேச நினைக்கும் சந்தர்ப்பத்தில் எழுதுவேன். நன்றி.
http://valavu.blogspot.com/2006/03/blog-post_08.html
கருணா எனக்கு எழுதியது:
ரோசா வசந்,எடுத்தவுடன் அதீத தனிநபர்வாதத்துடன் எழுதுகிறீர்கள்."தம்பி" என்பதை உங்கிளிடம் கேட்டுக்கொண்டு உங்கள் மூத்தவர் அழைப்பதில்லை.தமிழ் வாழ்வில் இளையோரை தம்பி என்று விளிப்பது மரபு.அது தங்களுக்க உவப்பற்றுப் போனால் அதை விட்டுவிடுவோம்.
அடுத்து பொதுத் தளத்தில் கருத்திடுவது ஒருவரொரின் "அறிவை"க் காட்டுவதற்கில்லை!
19ஆம் நூற்றாண்டில் கம்யுனீச அறிக்கை வெளியிடப்பட்டு,அதை நான் படித்திருக்கவில்லையென்பதல்ல இங்கே பிரச்சனை.
அவர் கூறினார்,இவர் கூறினார் என்பதல்ல எனது வாதம்.
நான் சொல்வது இன்றை முதலாளித்துவத்தின் மூன்றாங்கட்ட இருப்பில்(ஏகாபோகம்) குட்டி முதலாளியம் என்பது சிறுவுற்பத்திச் சக்திகளுடைய வர்க்கமாகும்,குட்டிப்ப+ர்ச்சுவா என்பது 19 ஆம் நூற்றாண்டின் பண்பிலருக்கும் சமூகப் பொருளாதாரக் கட்டத்துக்குப் பொருந்தும்.இந்த மூன்றாங்கட்ட ஏகபோக முதலாளியத்தில் அவையெல்லாம் மீளப் பார்க்கப்பட முடியாதவை.
நீங்கள் எவ்வளவுதான் வாதித்தாலும் அறிவுடைய அலுவலர்கள் ஒரு வர்க்கம் கிடையாது!
அவர்கள் தங்களுடைய உழைப்புக்கு ஊதியம் பெறுகின்ற அனைத்து ஊழியர்களையும்கொண்ட சம்பிரதாயமான,சட்டரீதியானவொரு குழுவாகும்.அவர்களைத் தொழில் ரீதியாகப் பிரிக்கலாம்:பொறியாளர்கள்,ஆய்வாளர்கள்,திறனாளர்கள்,நிர்வாக அலுவலர்கள் நுட்பநிபுணர்கள்,இதரர்களென!
அலுவலாகள் சட்டரீதியான குழுவென்போம்.அறிவுப்பகுயினரை இன்றைய காலக்கட்டத்தில் பிரத்தியேகமான உழைப்பு நடவடிக்கைகளைக்கொண்ட மெய்யான சமூகக் குழுவென்போம்.இது குட்டிப் ப+ர்ச்சுவாவோ அல்லது குட்டி முதலாளிகளோ அல்ல.
இன்றைய சமூகத்தில் அறிவுப் பகுதியெண்ணிக்கை மிகமிக வேகமாக வளர்கிறது.
இந்த மாற்றத்தை எடைபோடுவதும் அவசியமானது.சமூகத்தின் பெருந்திரளான பகுதியாகவுள்ள உழைப்பாளர்களுக்குள் இது சகல வடிவத்துள்ளும் மிகுதியாக உருவாகுதல் தவிர்க்கமுடியாத பல வர்க்கப் படிமுறைகளை ஏற்படுத்துகிறது.இதன்பாத்திரம் அதிகரித்துக் கொண்டிருக்கும்! தற்கால ஏகபோக மூலதன விருத்தியிலும் முதலாளியத்தின் மூன்றாங்கட்ட நிலையிலும் "அறிவுப் பகுதி"பாட்டாளி வர்க்கமாகும் நிகழ்வுப்போக்குக்கு உட்பட்டுக்கொண்டிருக்கிறது.
இத்தகைய புரிதலுக்கு மார்க்சிடம்,ஏங்கலுசிடம் போனால் அவர்களது சமகாலப் புரிதலையும்,இன்றைய பொருளாதாரப் படிமுறை வளர்ச்சியையும் உணர்வுப+ர்வமாக உள்வாங்கவில்லையென்பதே யதார்த்தம்.
மார்க்சியம்,கம்யுனிச அறிக்கைகள் யாவும் இன்றைய கணினியல்ல.அவை சமூகத்தின் அனைத்துப் படிமுறை வளர்ச்சிகளுக்கும் மாறாத தீர்வைச் சொல்ல.மார்க்சியத்தின் ஒளியில் சமூகத்தின் இன்றைய பல இருட்டுப் பகுதிகளைத் தேடித் தீர்வுக்காணச் சுய சிந்தனைகளை உருவாக்கவேண்டுமேயொழிய கடந்தகாலக் கதைகளை ஒப்புவித்தல் பலனுடையதல்ல.
இதுதான் எனது விளக்கம்.இது உங்களுக்கானதல்ல.பரந்துபட்ட வாசகர்களுக்கானது.உங்கள் பதிலையோ அல்லது விளக்கத்தையோ நான் எதிர்பார்க்கவில்லை.அத்துடன் உங்கள் அறிவு விளக்கத்தில் தெளிவுபெறும் நிலையில் நானில்லை.
நான் கடைசியாய் எழுதியது:கருணா, உங்கள் விளக்கத்திற்கு நன்றி. நீங்கள் எழுதிய அனைத்திற்குமே 'நான் அப்படி நினைக்கவில்லை' என்பதை தவிர வேறு எதையும் இப்போதைக்கு சொல்ல சமயமில்லை. முதாளித்துவத்தை முன்வைத்து என் அறிவுக்கு எட்டிய சில விஷயங்களை பேசும் நேரத்தில் என் கருத்துக்களை எழுதுவேன். நன்றி.
முகமுடி பதிவில் பிகே சிவக்குமார் எனக்கு எழுதியது. இது தவிர நான் முதலில் முன்வைத்து பேசிய வழிபோக்கன் எனக்கு (எதிர்ப்பார்த்த வகையில்) எழுதிய பதிலை விவாதத்திற்கானது என்று நான் (எனது தனிப்பட்ட தேர்வின் அடிப்படையில்) நினைக்காததால் இங்கே தரவில்லை.
சிவக்குமாருக்கு விரைவில் பதில் எழுதும் நோக்கம் உள்ளது. இனி பிகேஎஸ் எழுதியது.
ரோஸா,
வணக்கம். வாங்க. இனி இந்த விவாதத்தை இங்கு தொடர விருப்பமில்லை என்று ஈழநாதன் எழுதிய பின்னர், அதைப் பற்றி நானும் எழுதுவது
நாகரீகமில்லை என்று சும்மா இருந்தேன். அது விவாதத்தை திசை திருப்புகிற வேலையாகவும் இருக்கும். ஆனால், அந்த வேலையைச் செய்யப்
பலரும் இருக்கிறார்கள் என்பது வழிப்போக்கன், நீங்கள் மற்றும் பலரின் வளர்கிற பின்னூட்டங்களைப் பார்க்கும்போது தெரிகிறது. இனி வரப்போகும்
அனானிமஸ் பின்னூட்டங்கள் பற்றிச் சொல்வதற்கு இது என் பதிவில்லை என்பதால் நீங்கள் ( நீங்கள் அனானிமஸ் இல்லை என்பதாலும், நீங்கள்
திசைதிருப்ப வரவில்லை என்று நம்புவதாலும்) எழுதியிருப்பதற்கு மட்டும் பதில்.
பொதுவாக யாரைப் பற்றி எழுதினாலும், அது உங்களைப் பற்றித்தானோ என்று நினைத்துக் கொள்கிற மாதிரி (ஒரு ஸ்மைலி போட்டுக் கொள்கிறேன்
:-) ) நசிவு சக்திகள் என்று நான் சொன்னவர்களில் நீங்களும் இருப்பதாக நீங்கள் கற்பனை செய்து கொண்டிருப்பது எனக்கு வியப்பளிக்கவில்லை.
இதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது என்றபோதினும் நசிவு சக்திகள் என்று அந்த வார்த்தையை நான் எழுதியபோது, உங்கள் பெயரோ பிம்பமோ
என் மனதில் தோன்றவில்லை என்பதை மட்டும் சொல்வது என் கடமை. நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம். நீங்கள் ரோஸா வஸந்த் என்ற
பெயரில் எழுதினாலும் நீங்கள் யாரென்று எனக்குத் தெரியும். உங்களைப் பற்றிய விவரங்களை நண்பர் ராஜன்குறை மூலம் அறிந்திருக்கிறேன்.
ரோஸா என்ற பெயர் தவிர வேறு பெயர்களில் நீங்கள் எழுத மாட்டீர்கள் என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதுவுமில்லாமல், நாம் எவ்வளவோ
சண்டைகள் போட்டிருக்கிற போதினும், அதற்குப் பிறகு நீங்கள் கூட்டு வலைப்பதிவு மற்றும் தனிவலைப்பதிவு என்று எழுத ஆரம்பித்தபின்
வேறுபாடுகளை மீறி நீங்கள் எழுதுகிறவற்றுள் எனக்குப் பிடித்ததைப் பாராட்டுகிறேன். நீங்களும் அத்தகைய பாராட்டுகளைச் சில நேரங்களில்
(சிவகுமாரின் பிறச் செயல்பாடுகளைப் பற்றிய விமர்சனத்துடன் :-)) பாராட்டியிருக்கிறீர்கள். பிடிக்காததைப் பற்றிப் பொதுவாக நான் அதிகம் உங்கள்
பதிவில் மட்டுமில்லை - வேறு எங்குமே எழுதுவதில்லை - என்பதால், அந்தக் கருத்தைச் சொல்ல அவருக்கு உரிமை உண்டு என்று இருக்கிறேன்.
என் கருத்துடன் ஒத்துப் போகவில்லை என்றால், அவர் என்ன எழுதினாலும் பின்தொடர்ந்து தாக்குவதில்லை - சில நேரங்களில் என்னையும் மீறிப்
பின்னூட்டமோ எதிர்ப்பதிவோ போடுவதைத் தவிர.
சமீபத்தில் எங்கேயோ பெரியார் தன் கருத்துகளை எல்லாம் மிகவும் வெளிப்படையாக வைத்ததாலேயே அவரைத் தாக்குவது தவறு என்ற பெயரில்
நீங்கள் எழுதிப் படித்த ஞாபகம். அல்லது இந்தப் பொருளில் எழுதியிருந்தீர்கள். அந்த மாதிரி ஆரம்பம் முதலே வலைப்பதிவுகளிலும் பிற இணைய
ஊடகங்களிலும் நான் சொந்தப் பெயரில் மட்டுமே வெளிப்படையாக எழுதி வருகிறேன். பெரியாருக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயம் என்று
என் கருத்துகளைச் சொல்லும்போதெல்லாம் நான் எல்லைகளை மீறித் தாக்கப்படுவது ரொம்ப நாட்களாக நடந்துதான் வருகிறது. (அந்தக்
கருத்துகளில் தவறு இருக்கலாம் சரி இருக்கலாம். அதை விவாதபூர்வமாக எதிர்கொள்ள வேண்டும். என்னுடம் பேசுகிறவரின் மொழியிலும்
தொனியிலும் பேச எனக்கும் உரிமை இருக்கிறது. ) அப்படி எழுதுகிற என்னைக் கருத்தால் எதிர்கொள்ள இயலாமல் பேடிகள் மாதிரி ஒளிந்து
கொண்டு வந்து தாக்குவதும், தெலுங்கு டப்பிங் பட வில்லன் பேசுகிற வசனம் மாதிரி, "வலிக்கிற இடத்தில் அடிக்க வேண்டும்" என்று எழுதுவதும்,
ஆதாரமே இல்லாமல், "சூச்சூ நான் என்றும்", நான் வேறு பெயர்களில் எழுதுவதாக என் நண்பர்களே சொல்வதாகவும் சங்கரபாண்டிகள்
சுயமைதுனம் செய்து கொள்வதும், நான் காங்கிரஸ் கட்சியிலோ பா.ஜ.க.விலோ மெம்பர்ஷிப் கார்டை வைத்திருப்பதைப் பார்த்த உத்தமபுத்திரர்கள்
மாதிரி சின்ன வயதில் பீடி அட்டையில் பெயர் பொறித்துப் பார்த்து மகிழ்ந்துவிட்டபின், லோகாயுத சுகங்களைத் துறந்துவிட்ட முனிவர்களான
சுந்தரமூர்த்திகளும், பயந்து கொண்டு ஓடிவிட்டதாக இன்னும் சிலரும் எழுதியும் பேசியும் வருவதை நான் மட்டுமில்லாமல் நீங்களும்
கவனித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஓர் அளவுக்கு மேல் என் மீது அபாண்டமான, ஆதாரமற்ற, நாகரீகமற்றத் தாக்குதல்கள் நடக்கின்றன என்று
நான் உணரும்போது (இந்த breaking points உங்களுக்கு instant ஆக வந்துவிடும். நான் அதில் கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்ல முடியும்
என்று நம்புகிறேன் :-)), பதிலுக்கு நான் சீண்டவோ, ஆதாரம் கேட்கவோ, அவர்களின் முகத்திரைகளைக் கிழிக்கவோ, அல்லது சட்டம் எனக்கு
அளித்திருக்கிற எல்லா உரிமைகளையும் பயன்படுத்தி என்னைத் தற்காத்துக் கொள்ளவோ எனக்கு உரிமையிருக்கிறது.
உதாரணமாக, தன் சொந்தப் பெயர் தவிர வேறு பெயர்களில் தான் எங்கும் எழுதியதில்லை என்று ஈழநாதன் சொல்லும்போது, ஈழவன் என்ற
பெயரில் எழுதியதை மறந்துவிட்டார். அதை நான் சுட்டினேன். அப்போதும்கூட, மறந்துவிட்டது என்று அந்த விஷயத்தைச் சாதாரணமாக ஒத்துக்
கொள்கிற நேர்மைகூட அவரிடமோ அந்தக் கும்பலிடமோ இல்லை. ஆனால், தங்கமணி KGB-ஐ KGP என்று எழுதியதை ஜோக்கென்ற
அடைமொழியுடனும், இது அனைவருக்கும் நேரக்கூடியது என்றும் ஒத்துக் கொண்டு நான் சுட்டும்போது, விழுமியக் காவலர்கள் (நீங்கள் இல்லை),
பெயரிலி ஐ.பி.களை எடுத்துப் போட்டு (சம்பந்தமே இல்லாமல்) படம் காட்டியபோது, பெயரிலி பழைய பூதங்களைத் தோண்டியெடுத்திருக்கிறார்
என்று புளகாங்கிதமடைந்தவர்கள் மீண்டு வருகிறார்கள். :-) உங்களுக்கும்கூட ஈழவன் என்ற பெயரில் ஈழநாதன் எழுதினார் என்பதை அவர்
முதலில் ஒத்துக் கொள்ளவில்லை என்பதை நான் சுட்டும்போது திரிப்பாக இருக்கிறது. பிரச்னையில்லை. அப்படி நினைக்க உங்களுக்கு உரிமை
இருக்கிறது. எனக்கு அது திரிப்பாகத் தோன்றவில்லை.
ஆனால், ஆதாரமே இல்லாமல், சிவகுமாரைப் பற்றிச் சங்கரபாண்டிகளும் ஈழநாதன்களும் பெயரிலிகளும் சுந்தரமூர்த்திகளும் வரம்புமீறி
எழுதுவதைப் பற்றியெல்லாம் "திரிக்காதீர்கள்" என்று நீங்கள் எங்கும் எழுதியிருந்தால் தயவுசெய்து என் கவனத்துக்குக் கொண்டு வாருங்கள்.
தனிமனிதத் தாக்குதல்கள் வேண்டாமென்றும், பெரியார் அரசியல் எதிரிகளை எப்படி நாகரீகத்துடனும் கண்ணியத்துடனும் நடத்தினார் என்று
பாருங்கள் என்றும் நீங்கள் எங்கேனும் பொதுவில் சொல்லியிருந்தாலும் மகிழ்ச்சியே.
மற்றபடி, இதை ஆரம்பித்தது நான் இல்லை. இதில் நான் ****இப்போது*** இறங்கியிருப்பது, பொறுத்துப் பொறுத்துப் பார்த்து பொறுமை தீர்ந்தபின் -
என்னைக் காத்துக் கொள்ள. அதை என் பெயரிலும் சட்டத்துக்குட்பட்டும் ஆதாரபூர்வமாகவும் நான் செய்துவருகிற வரையில் - இடையில் சன்னாசி
அல்லது ரோஸா போன்ற - கருத்துகளில் உடன்படாவிட்டாலும் நான் மதிக்கிறவர்கள் - கேடயங்களாகவோ மாரல் சப்போர்ட்டாகவோ
மற்றவர்களுக்காக வந்தால், அதைப் பொருட்படுத்தாமல் (அவர்களுக்கு இனிமேல் பதில்கூடச் சொல்லாமல். இப்படி இருந்தால், ரோஸாவுக்குச்
சிவகுமார் பயந்துவிட்டார் என்று ஒரு பெயர் வரும். அது எனக்குப் பிரச்னையில்லை) முகமூடிகளைத் தொடர்ந்து கிழிப்பதை மட்டுமே நான் செய்யப்
போகிறேன்.
நான் ஏற்கனவே சொன்னதுபோல, இப்போது அந்தக் கும்பலுக்கு மாரல் சப்போர்ட் செய்கிறவர்களேகூட ஒத்துக் கொள்ள இயலாத அளவுக்கு
அந்தக் கும்பல் பல பெயர்களில் பல இடங்களில் எதிர்க் கருத்துடையோருக்குப் பதில் சொல்லாமல் அவர்களின் வாயை அடைக்கிற வேலையைச்
செய்திருக்கிறது. நான் பயந்து ஓடிவிட்டேன் என்றும் இன்னமும் அட்டைக் கத்திகளைத்தான் சுழற்றுகிறேன் என்றும் பெயர்கள் வரும்போது,
அட்டைக் கத்திகளின் ரீச் என்ன என்பதையும் காட்டலாமே என்றுதான் யோசித்து வருகிறேன்.
எனவே, இதை நான் ஆரம்பிக்கவில்லை. இதை நிறுத்துவதும் என் கையில் இல்லை. இரண்டு பக்கமும் சாராத - இரண்டு பக்கத்தின் மதிப்புக்குமுரிய
வலைப்பதிவர்களான பத்ரி போன்றோர் இந்த மாதிரி விஷயங்களில் சமாதானம் நிலவ வேண்டும் என்று எந்த யோசனையைச் சொன்னாலும் அதற்கு
நான் செவிமடுப்பேன். மற்றபடி - இதை ஆரம்பித்து வைத்தவர்களே இதை முடித்து வைப்பதுதான் நாணயமும் நேர்மையுமான செயலாக இருக்கும்.
சமாதானமென்றாலும் போரென்றாலும் நான் நம்புகிற கருத்தாக்கங்களைத் தொடர்ந்து இணையத்தில் வைத்துக் கொண்டே இருப்பேன். பொதுவாக
நான் எழுதுவது யாருக்கும் எரிச்சலூட்டுகிறது என்றால் அது என் பிரச்னை இல்லை. மற்றவர்கள் எழுதும்போது எனக்கும்தான் எரிச்சல் வருகிறது.
எழுதுபவர்க்கு அந்த உரிமை இருக்கிறது என்று நான் புத்திசாலித்தனமாகப் போய்விடுகிறேன்.
திராவிட இயக்கம், பெரியாரியம், விடுதலைப் புலிகள் ஆகியோரை ஆதரித்துப் பகிரங்கமாக இணையத்தில் எழுதுகிற பல நண்பர்களைப் பெயர்
சுட்ட முடியும். அவர்களுடன் எல்லாம் எனக்கு இருக்கிற கருத்துகளுக்கு அப்பாற்பட்ட நல்லுறவை எடுத்துக் காட்ட முடியும். ஆனால், இந்தக்
கும்பலைப் போல அந்த நண்பர்கள் எல்லாம் என் குரல்வளையை நெறித்து என் கருத்தை நிறுத்தப் பார்க்கவில்லை. அதனால், நான் ஒரு
இயக்கத்துக்கோ, தனிமனிதனுக்கோ எதிரி என்று முத்துதிர்ப்பவர்கள் உதிர்த்துக் கொண்டு இருக்கட்டும். அதேபோல, இனிமேல் உங்களைக் குறித்து
நான் எதுவும் எழுத வேண்டும் என்றால், ரோஸா என்று பெயரிட்டு அழைத்துச் சொல்கிற தைரியம் எனக்கு இருக்கிறது. அதனால், பொதுவில்
எழுதுவதை எல்லாம் உங்களைப் பற்றி என்று நினைக்க வேண்டாம் என்று மட்டும் வேண்டிக் கொள்கிறேன். இன்னொன்றையும் ஞாபகத்திற்குக்
கொண்டு வருகிறேன். திருமாவும் வை.கோ.வும் அணி மாறியதற்குக் கூட நான் திரு. மு.க.வையே அதிகமாகக் குறை சொல்வேன். அதை
இட்லிவடைப் பதிவிலும் எழுதியிருக்கிறேன். எனவே, என்னை உடனடியாகத் தலித் எதிரியாகவும், அம்மாவுக்கு ஓட்டுப் போடுகிறவராகவும் திரிக்கிற
யோக்கியவான்களின் முகமூடிகளை நான் கிழிப்பதைப் பற்றி யார் கவலைப்பட்டாலும் எனக்குக் கவலையில்லை.
நான் உங்களிடம் வேண்டிக் கொள்ள விரும்புவது ஒன்று உண்டு. வழிப்போக்கன் அவர் இவரென்ற பெயர்களில் வருகிற அனானி பினாமிகளுக்கு
பதில் சொல்லிக் கொண்டிருக்காமல், (நீங்கள் அத்தகைய காரியங்களையே மிக உவப்பாகச் செய்கிறீர்கள் என்று எனக்குள் ஒரு பிம்பம் இருக்கிறது.
இது தவறாக இருக்கலாம்.) நீங்கள் "அதைப் பற்றிய விமர்சனம் உண்டு" என்று சொல்கிற விடுதலைப் புலிகளைப் பற்றியும், இஸ்லாமிய தீவிரவாதம்
பற்றியும் சீரியஸாக உங்கள் வலைப்பதிவில் எழுதலாமே. மற்றவர்கள் திரிக்கிறார்கள் என்று அவர்கள்மீது காய்வதைவிடச் சீரியசாக உங்களைப்
போன்றோர் அதை வெளிச்சம் போட்டுக் காட்டத் தொடங்கினால் (உங்கள் நண்பர்கள் சுகன், ஷோபா சக்தி ஆகியோர் செய்வது மாதிரி (wrt ltte).
உடனடியாக சுகனும் ஷோபா சக்தியும் இந்திய மேலாதிக்கவாதத்தையும் வெளிச்சம்போட்டுக் காட்டுகிறார்கள் என்ற பதில் வேண்டாம். தனக்குப்
பிடிக்காதவற்றை எவரும் வெளிச்சம்போட்டுக் காட்டுவதன் மூலமே பொதுக்கருத்து உருவாக முடியும் என்று நான் நம்புகிறேன்.) திரிக்கிற
மற்றவர்கள் விடுதலைப் புலிகளைப் பற்றியோ, இஸ்லாமிய தீவிரவாதம் பற்றியோ தங்களின் லாப நோக்கங்களுக்கு ஏற்ப எழுத வேண்டியிருக்காதே.
:-) இதை மட்டும் யோசிக்க வேண்டுகிறேன். இல்லை, வழிப்போக்கர்களைக் கிழிப்பதும் முக்கியம் என்றால், அவர்களையும் கிழியுங்கள். அதைவிட
முக்கியமானவற்றுக்கும் நேரம் ஒதுக்குங்கள். (இதை எழுதியவுடன் நான் வழிப்போக்கனைக் காப்பாற்ற முயல்கிறேன் என்று எண்ணிவிட மாட்டீர்கள்
என்று நம்புகிறேன்.)
கடைசியாக உங்களுக்கு இல்லை, பொதுமக்களுக்கு. இது ஒரு தொடக்கம்தான். இன்னும் நிறைய ஆதாரங்கள் உள்ளன. நானும் என் கருத்துகளும்
எப்படித் தாக்கப்படுகின்றன என்பதை முன்வைத்து அந்த ஆதாரங்கள் வெளிவருவதோ, சட்டத்தின் துணையை நான் நாடுவதோ நடக்கும். என்னைப்
போன்ற எதிலும் சட்டத்துக்குட்பட்டு நடக்க விரும்புகிறவர்களுக்கு ஆபத்து என்று வரும்போது சட்டத்தின் துணையை நாடுவதைத் தவிர வேறு
வழியில்லை. அதைப் பற்றி விமர்சிக்கிற வன்முறையில் நம்பிக்கை கொண்டவர்கள் விமர்சித்துக் கொண்டிருக்கட்டும்.
இந்த சண்டையை இத்துடன் இங்கு முடித்துக் கொள்கிறேன். ரோஸாவோ மற்றவர்களோ இதில் இருந்து எடுத்து எழுதப் போகும் வாதங்களுக்கு
நான் பதில் சொல்லப் போவதில்லை. நான் பயந்து ஓடிவிட்டேன் என்று நினைப்பவர்கள் அப்படியே நினைத்துப் பீற்றிக் கொள்ளலாம்.
அன்புடன், பி.கே. சிவகுமார்
http://pksivakumar.blogspot.com/2006/03/blog-post_13.html#comments
//சு.ரா.வுக்கும் பிரமிளுக்கும் விரோதமே இருந்ததில்லை என்று எழுதிய ரவி அந்தப் புத்தகத்தைப் படித்தாரா என்று தெரியவில்லை.//
I think you misread what Ravi wrote. I do not think he says there was no enemity between them all the time(which is clearly absurd and everyone knows about that). I think he says 'SuRa and Pramil were not always enemies'. This means they are friends for sometime(and enemies for the rest of the time).
I do not have any commenst on the rest of the issue, but still enjoyed reading. I hope no one would ask me why I do not have commnets on the rest of the issue. Thanks!
http://ravisrinivas.blogspot.com/2006/03/blog-post_12.html#comments
//I have already asked somewhere that people who talk about womens-lib etc keep their mouth shut about pramil's attacks on Ambai. :-)//
PKS, if you may remember, I wrote a response to this(and I think SuMu also). I am not sure what you mean by attack on Ambai. May be you should write about that(with whatever informations you have). Then atleast I will open my mouth and write my opinion on that. thanks!
Post a Comment
<< Home