கூத்து!

உரசலாவது கேட்கட்டும்!

Name: ROSAVASANTH

Friday, October 06, 2006

புதிய பதிவு.

எனது மெயின் பதிவில் எழுதிய புதிய பதிவை, தமிழ் மணத்தில் சேர்க்க முடியவில்லை. ஏதோ RSS பிரச்சனை என்கிறது. எனக்கு புரிபடக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தெரியாததால், இங்கே அறிவிக்கிறேன். நண்பர்கள் யாராவது தமிழ்மணத்தில் சேர்த்துவிடக்கூடும் எனில், (அரசியல்/சமூகம் பிரிவிலோ, அல்லது குசும்பு செய்ய நினைத்தால் நகைச்சுவை/நையாண்டி பகுதியிலோ அவர்கள் விருப்பப்படி) சேர்த்துவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

Tuesday, September 19, 2006

என் பின்னூட்டம்.

ரவி ஸ்ரீனிவாஸின் பதிவில் நான் எழுதிய ஒரு பின்னூட்டம் வெளிவரவில்லை. எழுதி ஒருநாள் ஆகி, ஒரு மணி நேரம் முன்பு மற்ற பின்னூட்டங்கள் வெளிவந்து விட்டதால், அவர் அதை வெளியிடவில்லை என்றே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. என் பின்னூட்டத்தில் தனிப்பட்ட தாக்குதல் என்று எதுவும் இருப்பதாக நான் நினைக்காவிட்டாலும், இதில் வருத்தமோ, அவர் மீது குற்றம் சாட்டவோ எனக்கு எதுவும் இல்லை. இன்று இணையத்தில் - குறிப்பாய் வலைப்பதிவுகளில் - யாருடைய கருத்தையும் தடை செய்து, யாரும் யாருக்கும் ஜனநாயக மறுப்பை செய்ய முடியாது. தங்களுக்கு உவப்பான கருத்துக்களை மட்டும் ஒருவர் தன் வலைப்பதிவில் வைத்து கொள்வதால் ஜனநாயகத்திற்கு எந்த கேடும் இல்லை. மாற்று கருத்துக்களை -வசைகள் உட்பட்ட கடுமையானவற்றை - தனது சொந்த பதிவில் மற்றவர்கள் எழுதிகொள்ளலாம்.



என் பதிவுகளில் என்னை பற்றி என்ன திட்டிவந்தாலும், எந்தவகை மாற்றுக் கருத்தாக இருந்தாலும், அது எந்த மாற்றமும் இன்றி வெளிவரும். மற்றவர்களை திட்டி வந்தால் அது குறித்து யோசிக்க வேண்டிவரும். போலிப் பின்னூட்டங்கள் மட்டும் எந்த சமரசமும் இன்றி நீக்கப்படும். அந்த வகையில், என்னைவிட வாசிப்பிலும் (அதாவது ரவி புத்தகம் புரட்டுவதை எல்லாம் வாசிப்பு என்பதாக நாம் எடுத்துகொள்ள வேண்டுமென்றால்) வயதிலும் மூத்தவரான அவரைவிட, நான் பரந்த மனம் கொண்டிருப்பதில் மகிழ்சியே. அதே நேரம் ஒரு பின்னூட்டத்தை வெளியிடாதன் மூலம் அதற்கு அதிக விளம்பரம் மட்டுமே கிடைக்கும் என்று அவர் அறிவிற்கு எட்டாதது வருத்தமே.



மேலே இரண்டு பத்திகளுக்கு வூடு கட்டியிருப்பதற்கு ஏற்ப என் பின்னூட்டத்தில் விஷயம் எதுவுமில்லை. ரவி எழுதியதும் விஷய கனம், அறிவு என்று எதுவுமில்லாமல், அவர் மனத்திலிருந்து விழுந்த ஒட்டடை மட்டுமே. நான் எழுதியதும் வெறும் குப்பை மட்டுமே. தங்கமணி, திரு போல சுட்டிக்கு நன்றி மட்டும் சொல்லும் விவேகம் இல்லாததால், குப்பைக்கு குப்பையை மட்டுமே என்னால் காணிக்கையாக்க முடிந்தது. ஒரு பதிவிற்காக மட்டும் எனது பின்னூட்டம் இதாலிக்கில் கீழே.



ரவி சீனிவாஸு,

என்ன திட்டினாலும் உமக்கு உறைக்காது, எவ்வளவு விளக்கினாலும் உம் மண்டையில் ஏறாது என்று தெரியும் என்றாலும், நரம்பில் இன்னும் உணர்வு இருப்பதால் இதை ஏனோ எழுதாமல் தாண்டிப் போக முடியவில்லை. பிரேம் சாரு எழுதியதை படித்து சிரிக்க வேண்டுமா? உம்மையும், உம் எழுத்தையும் பார்த்து இன்று சிரிக்கும் அளவிற்கு கூட யாரும் மரியாதை தராமல், பலரும் துப்பிக் கொண்டிருப்பதும், உம்மோடு பல வருடங்களுக்கு முன்னால் வைத்திருந்த நட்பு குறித்து உமது பல நண்பர்கள் வெட்கப்படுவதும் உமக்கு தெரியுமா? இன்னும் உம் எழுத்தை முழுமையாக படிக்காத உமது சில முன்னாள் நண்பர்கள், கேள்விபட்டதை வைத்து, வெறும் வருத்தம் மட்டும் கொண்டிருக்கிறார்கள். நான் நேரடியாய் உம் பதிவு ஒன்றை வாசித்து காட்டியதை கேட்க நேர்ந்த உம் நண்பர் ஒருவர் (நான் அடிக்கடி சொல்லும் குமட்டலை விட அதிகமான) குமட்டலை அடைந்தார். இதுவரை ஒரு பதிவு, ஒரே ஒரு பதிவு, அறிவுபூர்வமாகவும், ஆழமான அலசலுடன், வெட்டி தீர்ப்புகள் இல்லாமல் எழுத முடியாத உமக்கு மற்ற எழுத்தை பார்த்து சிரிப்பு வருகிறதா? வாழ்க்கையில் இப்படியும் வெட்கமற்ற உதாரணங்கள் உண்டா என்று வியந்து கொண்டிருக்கிறேன்.

Monday, August 21, 2006

கேவலங்களிலும் கேவலம்-3.

மீண்டும் இந்த விவகாரம் பற்றி எழுதுவது துன்பமாக இருந்தாலும், அவசரப்பட்டு நேற்றய பதிவில் கருப்புவை தவறாக கண்டனம் செய்துவிட்டதாக நினைத்து வருத்தம் தெரிவித்து விட்டேன். அதற்கான ஒரே காரணம் அந்த நேரத்தில் அவரது இன்னொரு சாக்கடை பதிவை படித்திருந்திருக்கவில்லை. லக்கிலுக் பதிவில் தன் பெயரில் வந்த பின்னூட்டங்களை தான் எழுதவில்லை என்றவர் தன் பதிவிலேயே எழுதியிருப்பது கீழே.

//
ஆண்குறியை அறுத்து அந்த இடத்தில் ஓட்டை ஒன்றை போட்டு, வெற்று மார்பைக் கிழித்து சிலிக்கான் ஜெல் வைத்து திணித்து தாய்லாந்தில் பாலின அறுவை சிகிச்சை செய்துகொண்டு மும்பைக்கு வந்து பிராத்தல் செய்வார்கள் என டாக்டர் அம்பேத்கருக்கு அப்போதே தெரியாமல் போய் விட்டது.


நான் எல்லாரையும் சொல்லவில்லை. ஆனால் பெரும்பாலான திருநங்கைகள் செய்யும் தொழிலை நம் வலைப்பதிவர்கள் அறிவார்கள். திருநங்கைகள் கும்பலாய் சென்னையில் கடைகடையாய் ஏறி காசு கேட்பதும் தரவில்லை என்றால் 'வாத்தா வம்மா' என்று ஏகத்துக்கும் திட்டுவார்கள். அதற்குப் பயந்தே பெரும்பாலும் எல்லா கடைமுதலாளிகளும் காசைக் கொடுத்து விடுவார்கள். சென்னையில் கடை நடத்திய நானே அனுபவப் பட்டவன் என்பதால் எனக்கும் தெரியும்.


ஐந்தாண்டுகளுக்கு முன்னர் சென்னையின் மெரினாவில் காற்றுவாங்க மாலை வேளையில் மணலில் அமர்ந்திருந்தேன். அருகில் வந்தமர்ந்த ஒருவர் 'சார் மணி என்ன?' என்று கேட்கவே திரும்பி முகம் பார்த்து ஏழரையாக இன்னும் ஒன்றரை நிமிடம் இருக்கு என்று சொல்லிக்கொண்டே முகம் பார்த்தால்.. 'அய்யோ.. இது அதுவாச்சே!'.. பயம் குடிகொண்டது மனதில்!

சொன்ன பிறகும் நகரவில்லை..

'சார் வேணுமா?'


'இன்னாது?'


'அக்காங்.. புரியாத மாதிரில்ல கேட்குறீக.. கைக்கு பத்து வாய்க்கு இருபது!'


பார்வையால் எரித்து விடுவதுபோல பார்த்து.. 'அடச்சீ.. தூரப்போ!' எனகோபமாகச் சொல்லி விட்டு வேறிடம் சென்றவன் நான் என்பதால் அவர்களைப் பற்றித் தெரிந்திருக்கிறது எனக்கு! இது அன்றாடம் மாலைவேளைகளில் நடக்குமாம் அங்கே. நிறைய திருநங்கைகள் தலைநிறைய மல்லிகையோடு வாசனைத் திரவியங்களை அள்ளித் தெளித்துக் கொண்டு மெரினாவை வலம் வந்தது ஒரு காலம்.

அடுத்த நிகழ்ச்சி ஒன்று. நானும் நண்பர் மகேந்திரனும் யமஹா வண்டியில் துறைமுகம் ஓரமாக உள்ள சாலையில் வேகமாகச் சென்று கொண்டிருக்க கும்மிருட்டில் கைகாட்டி நிறுத்தினார் ஒரு பெரியவர். உதவி என நினைத்து நிறுத்தி விஷயம் கேட்க, இருளில் இருந்து கும்பலாய் ஓடி வந்தனர் அவர்கள். விபச்சரமோ.. மிரட்டிப் பணம் பறித்தலோ எதுவாயினும் தப்பிப்பதே இப்போதைய குறிக்கோள் என்றெண்ணி அவசரம் அவசரமாக ஓட எத்தனித்து எனது குழாய்ச்சட்டை கிழிந்து போகும்வரை ஓடி வந்தவன் நான் என்பதால் எனக்கும் அவர்களைப் பற்றித் தெரியும்///


ஆக போலி பின்னூட்டம் என்பதாக அவர் சொல்வதில் உள்ள கருத்தைத்தான் மீண்டும் வலையுறுத்தி தன் பதிவில் சொல்லுகிறார். இந்த சமூகத்தால் மிகவும் ஒடுக்கப்படும் மக்களை பற்றி இத்தனை கேவலமான கருத்துக்களை வைத்திருக்கும், வைத்திருப்பதோடு மட்டுமில்லாமல் அதை இத்தனை வெளிப்படையாக வெட்கமின்றி சொல்லும் இந்த இழிந்த பிறவிதான் பெரியாரை முன்வைத்து எதை எதையோ பேசி வருகிறது. அதை வேறு (மீண்டும் பெரியார் பெயரை சொல்லிக்கொண்டிருக்கும்) வெட்கமற்ற கும்பல் கைதட்டி பாராட்டிக் கொண்டிருக்கிறது. (இதில் தங்கமணி போன்ற விதி விலக்கானவர்களை பற்றி நான் பேசவில்லை.) இதைவிட கேவலம் வேறு என்ன இருக்கிறது? பெரிய அளவில் இவர்களின் எழுத்து கண்டிக்க படாமல் இருப்பது அதைவிட கேவலம் இல்லையா?!

லக்கிலுக் மற்றும் விடாது கருப்பு (வேறு சிலரும் இருக்கலாம், நான் எல்லாவற்றையும் படிக்கவில்லை) போன்றவர்கள் கருத்தை போலவே, இதே போன்ற பார்வையிலேயே இந்த சமூகத்தில் தலித் பற்றியும் பெண்கள் பற்றியும், பாலியல் தொழிலாளர்கள் பற்றியும் சொல்லாடல்கள் கட்டமைக்கப் படுகின்றன. இந்த விவாகாரத்தின் தொடக்கத்தை கவனித்தால் அது, ஒதுக்கப் பட்ட மக்கள் கூட்டத்தை சேர்ந்த ஒருவர், மேலே வரும்போதும், அவருக்கு பாராட்டுக்களும், வரவேற்புகளும் வழக்கத்திற்கு அதிகமாக கிடைக்கும் போதும், ஒலிக்கும் ஆதிக்க குரலை போலவே இருப்பதை காணலாம். அதற்கு பதிலாக அவர்கள் சற்றே ஆனவம் ஒலிக்க பேசிவிட்டால் மிக மோசமான முறையில் சமூக மதிப்பீடுகளை வைத்து, அடிவயிற்றில் மிதிக்கும் ஆத்திரத்துடன் வசைகளை அவிழ்த்திவிடுவார்கள். அதுதான் இங்கேயும் நடந்துள்ளது.


மீண்டும் சொல்வதானால் இந்த கூட்டத்திற்கு (அதாவது விடாது கருப்பு, லக்கிலுக் சார்ந்து அவர்களை கைதட்டி பாராட்டும் கூட்டத்திற்கு) எந்த வித சமூக நீதி பற்றிய கரிசனையோ, சமூகத்தின் ஒதுக்குமுறைகள் பற்றிய அக்கறையோ எதுவும் கிடையாது. தன்னைவிட ஒருபடி மேலே பார்பனர் இருப்பதன் பொறாமை மட்டுமே. அதுவும் எலும்பு துண்டு ஒழுங்காய் கிடைத்திருந்தால் எழும்பியிருக்காது. உதாரணமாய் சங்கரமடத்து பள்ளியில் மிக மோசமாய் கேவலப்படுத்தாமல் ஆட்டத்துக்கு சேர்த்துக் கொண்டிருந்தால், அம்பி ஒருவன் எச்சிவிட்டதை லக்கிலுக் பொறுத்துகொண்டிருப்பார்.

வித்யா தன் தன்னிலையை உறுதிப்படுத்திக் கொள்ளும் ஆணவத்துடன் பதில் சொன்னதுதான் லக்கிலுக்கிற்கு பிரச்சனை. அதாவது லக்கிலுக் தான் படித்ததாக சொன்ன சங்கரமடத்து பள்ளியில் பவ்யமாக (அவர் அப்பாவை போன்ற மனநிலையில்) இருந்திருந்தால் மற்ற அம்பிகளுக்கும், வாத்தியார்களுக்கும் கோபம் வந்திருக்காது. அவர் கொஞ்சம் தன்மானத்துடன் இருந்ததுதான் பிரச்சனை. இப்போது வித்யாவும் அவ்வாறு ஒரு சகவலைப்பதிவாளராய் கோபமாய் பதில் அளித்ததுதான் பிரச்சனை. அந்த வகையில் ஒரு ஆதிக்க திமிர்தான் லக்கிலுக், விடாது கருப்பு மனநிலையில் வேலை செய்கிறது.

இந்த பிரச்சனை குறித்து இதற்கு மேல் பேசும் நோக்கம் இல்லை. விடாது கருப்பிடம் சில கேள்விகள் கேட்கலாம் என்று நினைத்தேன். உதாரணமாக திருமலையிடம் நான் ராகாகியில் பல புரட்டுக்களை முன்வைத்திருந்ததாகவும், திருமலை அதை வெளிபடுத்தி என்னை 'ஓடஓட விட்டு கட்டையை எடுத்து துரத்தியதாக' சொல்லியிருந்தார். (http://vivathakooththu.blogspot.com/2006/08/blog-post.html#c115594690242354990) அந்த ராகாகி விவாதத்தில் பெரியாரை இனவெறியர் என்பதாக திருமலையும், அதை எதிர்த்து நானும் நிலைப்பாட்டில் இருந்து பேசிக்கொண்டிருந்தோம். அதில் நான் என்ன புரட்டு வைத்தேன், திருமலை அதை எப்படி தகர்தார் என்று, விடாது கருப்பு சோறு போட்டு தின்றிருந்தால் விளக்க வேண்டும் என்று எழுத நினைத்தேன். அவர் பதிவை படித்த பிறகு அவர் சோறு தின்பவரல்ல என்று தெளிவாகவே தெரிந்து விட்டதால் இது போன்ற கேள்விகளுக்கு தேவையே இல்லை.

நான் வித்யா அவர்களின் பதிவில் தொடர்ந்து பின்னூட்டுபவனல்ல. அவர் எழுதத் தொடங்கிய கட்டத்தில் மட்டும் என் வரவேற்பை தெரிவித்திருந்தேன். அவரை போன்றவர்கள் எழுதுவது நம் சமூகத்தின் பண்மை தன்மையை வளர்ப்பதுடன், நமது சகிப்புத்ன்மை பரந்த மனப்பான்மைக்கான ஒரு அடித்தளமாக இருக்கும் என்பதை குறிப்பிட்டிருந்தேன். அவருக்கு பரவலாய் கிடைத்த வரவேற்பு மிகவும் மனநிறைவை அளித்தது. ஒருவர் வேலைக்கு போவதும் சமூகத்தில் ஒரு அங்கத்தினராய் இருப்பதும் வலைப்பதிவில் எழுத வருவதும் எந்த விதத்திலும் சாதனையும் அதிசயமும் அல்ல. ஆனால் சமூகத்தால், தான் பிறந்த குடும்பதால் ஒதுக்கி வைக்கப்பட்டு, குடியிருக்கும் இடம் தொடங்கி பார்க்கும் வேலை வரை வெளியேற இயலாத இறுக்கமான தன்மையுடன், தப்பமுடியாத 'விதிவசபட்ட நிலையில்' வைக்கப்பட்ட ஒருவர் அதை செய்வதாலேயே இவையெல்லாம் சாதனைகளாகிறது. வித்யா மேலும் சாதிக்க வேண்டும். தொடர்ந்து வலைப்பதிவில் எழுத வேண்டும். இது போன்ற இடர்களை, சமூக காட்டிமிராண்டித்தனங்களை ஏற்கனவே எதிர்கொண்ட அவர், தளராமல் தன் பயனத்தை தொடர நான் புதிதாய் எதுவும் சொல்ல வேண்டிய தேவையில்லை. ஒரு கடமையாக இங்கே சொல்லிவைக்கிறேன்.

Sunday, August 20, 2006

கழிவு!

திருமலைக்கு நான் கடைசியாக ராகாகியில் எழுதிய மடல் கீழே! நான் அறிந்த வரை அவர் இதற்கு பதில் எதுவும் எழுதவில்லை.


**************************************************************************


திருமலை (அசோகமித்திரன் தொடர்பான இழையில்) என் மீது
பிராண்டியிருந்ததை (வேண்டுமென்றே) ஊரப்போட்டு முழுவதும் படித்தேன் - மிக
நிதானமாக, மிகுந்த பொறுமையுடன். படித்ததன் முக்கிய காரணம் அவர் பல
திரித்தல்களையும், புளுகுகளையும் முன்வைத்திருப்பார் என்று நான்
எதிர்பார்த்தது. என் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை.

என்னை பற்றி தனிப்பட்ட முறையில் அவர் சொன்ன சில புளுகுகளையும்,
திரித்தல்களையும், ஒரு பதிவிற்காக இங்கே மறுக்க வேண்டிய என் அவசியம்
காரணமாய் இந்த மடல் எழுதப்படுகிறது. திருமலையின் மடலை படிக்காதவர்கள்,
இது போன்ற சில்லரை விஷயங்களை (என்னை பற்றிய அவதூறுகளை) பற்றி
கவலைப்படாதவர்கள், என் பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்கள் இதை படிக்க
தேவை இல்லை.

திரித்தல் 1. இது அவர் திரிக்கும் வகையில் நானே வசதிப்படுத்தி
கொடுத்தது. ராகாகியில் நடைபெறும் பல விவாதங்கள், அதன் 'முக்கிய'
அங்கத்தினர்கள் குறித்து எனக்கு கருத்துக்கள் உண்டு எனினும், அதை நான்
எங்கேயும் சொல்லவில்லை. குறிப்பாக அவர் மீண்டும் மீண்டும் திரித்து
சொல்வது போல், நான் ராகாகியை 'குமட்டல், அழுகல், நரகல்', இங்கே
எழுதுபவர்களை எல்லாம் 'அசடுகள், தரமற்றவர்கள்' என்று எதையுமே
சொல்லவில்லை. திருமலையை பற்றி கூட அப்படி எதுவும் குறிப்பிடவில்லை.
'குமட்டல்' என்ற வார்த்தையையே நான் ஒருமுறைகூட இங்கே பயன்படுத்தவில்லை.
அந்த வார்த்தையை நான் PKசிவக்குமார் பற்றி என் பதிவில் எழுதிய
சந்தர்பத்தில் மட்டுமே (இரண்டு அல்லது மூன்று முறை) குறிப்பிட்டிருக்கிறேன்.
சிவக்குமார் பயன்படுத்தும் ஒருவகை தர்க்கம் பற்றிய என் கருத்திலேயே இந்த
'குமட்டல்' என்ற வார்த்தை வருகிறது. அதற்கு வேறு உதாரணம் எனக்கு
கிடைக்கவில்லை என்பதையும் சொல்லியுள்ளேன். உதாரணமாய் சிவக்குமார்
செய்யும் (எதிராளியை எல்லா வகையிலும் மிரட்டும் வொயிட்மெயில் கலந்த)
'தர்கத்தையே' திருமலையும் தன் எழுத்துக்களில் பயன்படுத்தினாலும், திருமலை
பற்றி கூட நான் அப்படி சொல்லவில்லை. திருமலை போன்ற
சாதிவெறியர்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. என்னால் திருமலையை
எளிதாக தெளிவாக பரிச்சயமான சட்டகத்தில் அடக்க முடியும். அவர் செய்யும்
திரித்தல் தர்க்கமும் எனக்கு பரிச்சயமானதே. மேலும் எல்லோரையும் ஒரே
புட்டிக்குள் நான் அடைத்து பார்பதும் இல்லை. உதாரணமாய் டோண்டுவை கூட ஜாதி
வெறியர் என்று நான் சொன்னதில்லை. அவர் எழுத்தை ஒரு பழமைவாதம் கலந்த
பார்பனியமாய் மட்டுமே பார்கிறேன். அதை பெரிய ஆபத்தாகவும்
பார்க்கவில்லை. அவரிடம் ஒருவகை நேர்மை வெளிப்படுவதாகவும் பலமுறை
சொல்லியுள்ளேன்.

நான் சொன்னது நடராஜனுடனும், திருமலையுடனும் (மட்டும்) எனக்கு விவாதிக்க
எதுவும் இல்லை. அதில் எனக்கு ஆர்வமும் இல்லை. இங்கே இந்த சந்தர்பத்தில்
விவாதிக்கும்போது நான் இவர்களுடனேயே விவாதிக்க வேண்டியுள்ளது. அதனால்
இந்த இடத்தை விவாதிப்பதற்கான இடமாக நான் நினைக்கவில்லை.
இணையத்தில் பெரியாரை முன்வைத்து எத்தனையோ வெட்டி விவாதங்கள்
காலகாலமாய் நடந்துவருகிறது. அப்படிப்பட்ட இன்னொரு விவாதத்தில் இறங்க
எனக்கு ஆர்வமில்லை. மற்றபடி இரா.மு ஜேஜே சில குறிப்புகள் பற்றி என்னுடன்
விவாதிக்க வந்தாலோ, பாரா பாலஸ்தீன் பிரச்சனை குறித்து விவாதிக்க
வந்தாலோ, பத்ரி வெங்கட் போன்றவர்களோ என்னுடன் ராகாகியில்
விவாதித்தாலோ அதில் எனக்கு எந்த பிரச்சனையும் அல்ல. இந்த
அசோகமித்திரன் தொடர்பான இழையிலேயே இகாரஸ¤டனும், சுரேஷ¤டனும்
பேசியுள்ளேன். வலைப்பதிவில் விவாதிக்கும்போது காப்பி கிளப்பில்
விவாதிப்பதில் மட்டும் என்ன பிரச்சனை? விவதிக்கும் நபரும் அவரின்
தர்க்கமுமே பிரச்சனையே தவிர இடம் அல்ல.

நான் சொல்ல வந்ததை அப்படியே எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம்
இல்லை. ஆனால் அதை மாற்றிபோட்டு ராகாகியை நான் 'குமட்டல், நரகல்'
என்று சொன்னதுபோலவும், அதன் அங்கத்தினர்களை திட்டியது போலவும், இவர்
ராகாகியின் முதலாளி போலவும் முற்றிலும் திரித்து அளந்து கட்டியுள்ளார்.
(நடராஜன் சொன்னதை நான் ஒப்புகொண்டு பேசியதையே நான் ஏதோ
'வீடியோ ஆதாரம்' கேட்டதாக திரித்து, பின்னர் அதற்கு ஒரு சப்பைகட்டு
கட்டியது போல் இதற்கும் எதையாவது ஒளரல் சப்பைகட்டை பதிலாய் தருவார்.)

இப்போது எழுதுவதும் விவாதம் அல்ல. பாத்ரூம் சுவரில் என்னை பற்றி
அபாசமாய் எழுதப்பட்டுள்ளதை நான் மறுக்க முனைந்தால் அதை விவாதம் என்று
சொல்லமுடியாது.

திரித்தல் 2. நான் இங்கே மற்றும் வேறு இடங்களில் எழுதிய பலவற்றை முற்றும்
முழுதாக அவர் திரித்துள்ளார் என்றாலும் இதை ஒரு உதாரணத்திற்காக மட்டும்
குறிப்பிடுகிறேன். எப்படி ஒரு விஷயத்தை சொன்னதன் சந்தர்பத்திலிருந்து
பெயர்த்தெடுத்து போகிற போக்கில் சொல்லி செல்ல முடியும் என்பதற்கு
உதராணமாய் மட்டும் குறிப்பிடுகிறேன்.

அவர் மேலோட்டமாய் திரித்து சித்தரிப்பது போல் ஒரு படத்தில் பெண்களை
கொல்லுவதால் மட்டும் அந்த 'நடிகனின் ஆண்குறியை அறுக்க வேண்டும்' என்று
அறைகூவவில்லை. அப்படியிருந்தால் தினமும் ஒரு 'ஆண்குறி அறுப்பு' பதிவு
போட மட்டுமே எனக்கு நேரம் இருக்கும். 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தில்
நடித்த கமல் குறித்து கூட நான் அப்படி சொல்லவில்லை. என் பதிவுகள் இங்கே
இருக்கிறது.

http://rozavasanth.blogspot.com/2004/11/blog-post_30.html

http://rozavasanth.blogspot.com/2004/12/blog-post.html

இங்கே மட்டுமில்லாமல் பல வலைப்பதிவுகளில் மீண்டும் மீண்டும் அது
திரிக்கப்பட்ட போதெல்லாம், கூறியதன் பொருள், அதற்கான காரணம்,
(இங்கே திருமலை உட்பட) அதை பற்றி பேசும் யாரும் மன்மதன் படக்கதையை
பற்றி பேசாதது என்று, விளக்கிய பின்னும் கூசாமல் இங்கே திரிக்கிறார்.
மன்மதன் படத்தில் சிம்பு பெண்களை கொல்வது அல்ல பிரச்சனை. அதை ஒரு
தர்மமாக வலியுறுத்தியதுதான் பிரச்சனை. அதே தர்மத்தை சிம்பு மீது
பிரயோகிப்பதை பற்றியே எழுதியிருந்தேன். அந்நியன் பார்வையின் படி
சங்கருக்கும் மரணதண்டனை மட்டும்தான் கொடுக்க முடியும் என்று சிலர் எழுதியது
போன்றதுதான் இதுவும். ஆனால் அந்நியன், சிகப்பு ரோஜாக்கள் போன்ற
படத்திலாவது படக்கதை சார்ந்து, கொலைகான நியாயத்தை(மனநோய்
என்பதாக) வாசிக்க இடமுண்டு. மன்மதன் படத்தில் அது கிடையாது. என்
வரிகள் கீழ்கண்டவாறு உள்ளது.

"ஆண்குறியை அறுக்க வேண்டும் என்று கோஷிப்பதினால், வன்முறையாக இதை
நினைக்க வேண்டாம். உதாரணமாய் `கெட்ட' பெண்களை கொல்லவேண்டும் என்று
கருத்தை, ஒரு தர்மமமாய், படத்தில் வலியுறுத்தி பிரச்சாரம் செய்யும்
சிம்பு, நடைமுறை வாழ்வில் அதை செய்ய போவதில்லை. இந்த படம் மூலம்
உந்துதல் அடைந்து யாரவது செய்தால் உண்டு. அதை போல இந்த கோஷத்தை, ஒரு
கோஷமாக மட்டும் முன் வைக்கிறேன். இந்த சிம்பு ஒரே ஒரு பெண்ணை மட்டும்
தொட்டு வாழபோவதில்லை. இந்த படத்திலேயே அவர் பல பெண்களுடன்
உல்லாசிக்கிறார். இதன் காரணமாய் படத்தின் நியாயத்தை அப்படியே எடுத்து
கொண்டு, ஒரு கோஷமாக இதை சொல்கிறேன். இதனால் உந்துதல் அடைந்து
யாராவது-சிம்புவின் மனைவி உட்பட-இதை நிகழ்த்தி காட்டினால் நான்
பொறுப்பல்ல."

தமிழ் சூழலில் கண்டதற்கும் கணடனங்கள் வரும். ஆனால் ஒரு திரைப்படம்
'நடத்தை கெட்ட' பெண்களை கொல்வதை தர்மப்படுத்தி பேசுவதை கண்டிக்க
நாதியில்லாத சூழலியே இதை நான் எழுத நேர்ந்தது. முதல் பதிவில்
திரைப்படத்திற்கு ஒரு கண்டனத்தை கூட நான் வைக்கவில்லை. வலைப்பதிவில்,
மற்றும் இணயத்தின் மற்ற இடங்கள் பத்திரிகைகள் படம் குறித்து முழுக்க
நேர்மறையாய் பாரட்டி விமர்சனங்கள் வந்த பின், படம் முதலிடத்தில்
ஓடுவதாய் செய்திகள் வந்த பின் என் இரண்டாம் பதிவு எழுதப்பட்டது. மற்ற
எத்தனையோ விஷயங்களுக்கு வருவது போல், குறைந்த பட்சம் தமிழ்நாட்டு
பெண்கள் இயக்கங்கள் இதை மெல்லியதாய் எதிர்ப்பதை கேள்விப்பட்டிருந்தால் கூட
'ஆண் குறி அறுக்க வேண்டும்' என்ற அளவில் அறைகூவல் விட எனக்கு அவசியம்
இருந்திருக்காது. வரிகளை எப்படி திரிக்க முடியும் என்பதற்கான ஒரு உதாரணம்
மட்டுமே இது.

இனி சில புளுகுகள் குறித்து.

புளுகு 1. இது குறித்து ஏற்கனவே சிவக்குமாருக்கு பதிலாய் எழுதி அது இன்னும்
மறுக்கப்படாத நிலையில் கூசாமல் மீண்டும் இவர் புளுகுகிறார். அதை இங்கே
காணலாம்.
http://rozavasanth.blogspot.com/2005/06/blog-post_21.html
.

அதில் சொல்லாத ஒரு விஷயத்தை மட்டும் இங்கே பதிவு செய்கிறேன். தனது
மடல் முழுவதும் - நான் எதையோ எழுதி அதை மறைப்பதற்காக அழித்து
விட்டதாக- திருமலை வொயிட்மெயில் செய்யும் விஷயம் ('என் ஜட்டிக்குள்
கைவிடுவதாக' என்று நான் எழுதியதாக சொல்வது) டோண்டுவிற்கு ஒருமுறை
நான் எழுதியது. அதனால் டோண்டு காயப் படவும் இல்லை. மாறாக என்
நேர்மையையும், வெளிப்படையான மனதையும் பாராட்டி மின்னஞ்சல் எழுதினார்.
அதை இப்போதும் டோண்டு மறுக்க மாட்டார் என்று தெரியும்.

என் அடையாளங்களை, குறிப்பாய் ஜாதிய அடையாளங்களை நோண்டி அது குறித்து
கிசுகிசுத்தனமாய் எழுதுவதை(இப்போது திருமலையும் செய்திருப்பதை)யே 'என்
ஜட்டிக்குள் கைவிடுதல்' என்று ஒருமுறை விவரித்திருந்தேன். முன்பு என் பதிவில்
அடிக்கடி தொல்லை தந்த ஒரு அனானிமஸிற்கு அதை (பற்றி பேசும்போது)
சொல்லியிருக்கிறேன். அதே வேலையை ஒருவர் செய்து, டோண்டுவின்
வலைப்பதிவில் எழுதியிருந்தார். டோண்டு அதை சரியாய்
புரிந்துகொள்ளாமலேயே அதை என் பதிவில் எழுதினார். டோண்டுவிற்கு
விஷயம் சரியாய் புரியவில்லை என்பது எனக்கும் தெரிந்ததால் 'தன்
எதிர்பாளர்கள் மட்டுமில்லாமல், ஆதரவாளர்கள் கூறுவது கூட டோண்டுவிற்கு
புரியவில்லை' என்றே எழுதியிருந்தேன். ஒரு சந்தேகத்தின் அடிப்படையில்
'ஒருவேளை டோண்டு என் 'ஜட்டிக்குள் கைவிட முயன்றிருந்தால்' அதை நேரடியாய்
நங்கநல்லூருக்கு வரும் போது காட்டமுடியும்' என்று எழுதியிருந்தேன். இதன்
அர்த்தம் என்னவென்று குழந்தைக்கும் புரியும். ஆனால் 'சந்தேகத்தின் பலனை
டோண்டுவிற்கு அளித்து அவர் புரியாமல் எழுதியதாக எடுத்துகொள்வதாக'வே
எழுதியிருந்தேன். நான் எதிர்பார்த்தது போலவே டோண்டு அதை
புரிந்துகொள்ளாமல்தான் செய்திருந்தார். அதை அவர் தெளிவாக்கிய பின்,
அவருக்கு தனிப்பட்ட முறையில் எழுதி, அவர் விஷயத்தை புரிந்துகொண்டு, தான்
புரிந்துகொள்ளாமல் எழுதியதை எனக்கு சொல்லி, பின் அவரது அனுமதியையும்,
ஆலோசனையையும் பெற்று இது தொடர்பான பின்னூட்டங்களை நீக்கினேன். இதற்கு
இடையில் ஒரு முழுநாள் அவைகள் என் தளத்தில் இருந்து அதை பலர்
வாசித்திருக்க முடியும். நீக்கியதன் அறிவிப்பும் அங்கே இன்னொரு முழுநாள்
இருந்தது. இதுதான் நடந்தது. எழுதிய எதையும் மறைக்கும் நோக்கத்தில் அந்த
பின்னூட்டங்களை நீக்கவில்லை. டோண்டு இதனால் புண்படவும் இல்லை. அவர் என்
நேர்மையையும், மற்றவர் கருத்திற்கு நான் அளிக்கும் மரியாதை, மற்றும்
வெளிப்படையான தன்மை குறித்து பாராட்டியே எனக்கு எழுதியிருந்தார். நான்
டோண்டுவை கடுமையாய் எதிர்த்தாலும், பலமுறை டோண்டுவிடம் ஒருவகை நேர்மை
வெளிப்படுவதாகவே சொல்லியுள்ளேன். அந்த என் நம்பிக்கையில் அவர் மேலே
நான் எழுதியுள்ள எதையும் மறுக்க மாட்டார் என்று எனக்கு தெரியும். இப்படி
டோண்டுவிற்கே பிரச்சனை இல்லாத விஷயத்தை, அவர் எங்கேயுமே எழுப்பாத
விஷயத்தை வைத்து இவர்கள் வொயிட்மெயில் செய்வதும், புளுகுவதும் நான்
இவர்களை பற்றி சொல்ல வருவதற்கு ஒரு பொருத்தமான உதாரணம்.

இதை தவிர ஒருவரிடம் பேசப்பிடிக்காமலோ, எழுத்துபிழை காரணமாகவோ,
பலமுறை வந்துவிட்டதன் காரணமாகவோ நீக்கியுள்ளேன். ஆனால் அவையனைத்தும்
வேறு இடத்தில் என் பதிவில் பதிவாகியுள்ளன. எந்த இடத்திலும் நான்
எழுதியதை அழித்து எதையும் நான் மறைக்க பார்த்ததில்லை. இப்போதும் நான்
எழுதியது குறித்து மற்றவர்கள் என்ன கருத்து வேண்டுமானாலும் சொல்லலாம்.
ஆனால் நான் ஏதோ ஆபாசமாய் எழுதி, அதை நீக்கி எதையோ மறைப்பதாக
திருமலையும், சிவக்குமாரும் புளுகுவதை மட்டுமே நான்
மறுக்கிறேன்.அப்படிப்பட்டவற்றை சிவக்குமாரோ, திருமலையோ (டோண்டு அதை
செய்யமாட்டார்) ஆதாரம் தரலாம். (சும்மா சந்தர்பம் குறிப்பிட்டால் கூட
போதும்). ஆதாரம் தர இயலாத நிலையில் அவதூறை ஒப்புகொள்ளவோ,
மன்னிப்பு கேட்கும் நாகரீகத்தையோ நிச்சயம் இவர்களிடம்
எதிர்பார்க்கமுடியாது. வாயை மூடிகொள்ளும் காரணத்திற்காக மட்டுமே இதை
சொல்லுகிறேன்.


புளுகு 2. அதே பதிவில் நான் எழுதிய இன்னொரு விஷயம் குறித்தும் கூசாமல்
புளுகுகிறார். அதையும் இங்கே எழுதியிருக்கிறேன்.
http://rozavasanth.blogspot.com/2005/06/blog-post_21.html

நான் திண்ணையை ஒதுக்கவில்லை. அவரகள் என்னை தடை செய்தனர். அதற்கு ஒரே
காரணம் ஒரு RSSகாரரரின் புளுகுகளை, அதுவும் அறிவியல் தொடர்பான
புளுகுகளை, நான் வெளிகொணர முயன்றது மட்டுமே. வேறு ஏதாவது காரணம்
இருப்பதாக கருதும் யார் வேண்டுமானாலும் இது குறித்து பேசலாம். அவ்வாறு பேச
நான் பலமுறை அழைப்பு விடுத்துவிட்டேன். பதிலில்லை. நான் திண்ணையில்
தடை செய்ய காரணமாய் இருந்த கட்டுரை இங்கே இருக்கிறது.
http://www.geotamil.com/pathivukal/rosavasanth_february2004.html
பலமுறை அழைத்தாகிவிட்டது. மீண்டும் அனைவரையும் இந்த கட்டுரையில் உள்ள
வசவு வார்த்தைகளை, கெட்ட தரக்குறைவான வார்த்தைகளை கண்டு பிடித்து தர
அழைக்கிறேன். இதற்கு ஒரு வாய்ப்பளித்ததற்கு திருமலைக்கு நன்றி.


வேறு சில புளுகுகளும் இருக்கலாம். அதை மறுக்கும் ஒரே காரணத்திற்காக
மீண்டும் ஒருமுறை திருமலை எழுதியதை படிக்கும் துன்பத்திற்கு ஆளாக முடியாது.
என் வலைப்பதிவின் முகவரி தாங்கிய ஒரு மடலில், ஒரு சொடக்கு தூரத்தில்
போய் தெளிவாக்கிகொள்ள கூடிய விஷயங்களை பற்றி கூசாமல் திரிக்கவும்,
புளுகவும் கூடியவர், பெரியாரை பற்றி என்ன வெல்லாம் புளுகவும் திரிக்கவும்
கூடும் என்பதை அவரவர் கறபனை செய்துகொள்ள வேண்டும்.

அவர் மடலை படிக்கும் போது ஒரு விஷயம் தெளிவாகிறது. பெரியார்
பேசியதாக அவர் தேதி போட்டும் போடாமலும் அளித்த மேற்கோள்கள்
மொட்டையானவை. அதை முழுவதும் அளிக்க அவரிடம் ஆதாரம் எதுவும் இப்போது
இல்லை. கைவசம் அந்த பத்திரிகையோ, அல்லது பெரியார் பேசியதன்
முழுவிவரமும் இல்லாமல் எங்கிருந்து எதனடிப்படையில் தேதிபோட்டு
'ஆதாரத்தை' அளித்தார் என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம். அதை அவர்
தெளிவுபடுத்தவில்லை. என்னால் 50 வருடங்கள் முந்தய விடுதலை
பத்திரிகைகளை பார்த்து மறுக்கும் வசதி நிச்சயமாய் இப்போது இல்லை.
இணையத்தை தவிர தமிழ் படிக்க வேறு வழியில்லாமல் ஜப்பானில் உட்கார்ந்து
கொண்டிருக்கிறேன். பெரியாரின் மொழிநடை, பேசியவை குறித்த எனது
பரிச்சயம், மற்றும் திருமலை (இந்த விஷயத்தில்) உண்மை பேசமாட்டார் என்ற
நம்பிக்கையில் மட்டுமே என் கருத்தை கூறினேன். இப்போதிருக்கும் நிலையில்
அவரிடமும் ஆதாரம் இல்லை, மறுக்க என்னிடமும் இல்லை. இந்த நிலையிலேயே
இத்தனை வெத்து வேட்டுக்களை வசவுகளாய் திருமலையால் மட்டுமே கொடுக்க
முடியும்.

கடைசியாய் ஒருவர் தன் அடையாளத்தை மறைத்து (அதாவது முகமுடியாய்)
எழுதுவதாலும், அப்படி எழுதாமல் இருப்பதாலும் இனவெறித்தன்மை எப்படி
தீர்மானிக்கபடக்கூடும் என்பது இதை பற்றி முதலில் (பொதுவாய்) பேசிய
சிவக்குமாருக்கும், அதை சற்று மாற்றி வாந்தியெடுக்கும் இந்த
அதிபுத்திசாலிக்கே வெளிச்சம். ஆனாலும் திருமலை முன்வைப்பது போல் நான்
முகமுடி அல்ல. என் இயற்பெயர் இந்த மடலில் உள்ளது. இணையத்தில் உள்ள பல
நண்பர்களை நான் நேரில் சந்தித்திருக்கிறேன். நான் இருக்குமிடம், பார்க்கும்
வேலை, வேலை பார்க்கும் இடம், மற்ற விவரங்கள் பலருக்கும் தெரியும்.
ராகாகியின் ஒரு முக்கிய உறுப்பினர் என் மனைவியை சந்தித்திருக்கிறார்.
டோண்டுவிற்கு என்னை பற்றி சில விவரங்கள் தெரியும். அவரை நான்
எதிர்காலத்தில் சந்திக்கக் கூடும். ராகாகியின் முக்கிய சில
உறுப்பினர்களை சந்திக்கும் திட்டம் சில நாட்களில் உண்டு. பலருடன்
தனிப்பட்ட முறையில் தொடர்பு உண்டு. தொலைபேசியில் பேசியுள்ளேன்.
நானே என்னை பற்றிய சில தகவல்களை என் எழுத்துக்களில் தந்துள்ளேன்.
இணையத்தின் மூலம் என்னை பற்றிய தகவல்களை பெறுவதும் கடினமில்லை. இதை
படிக்கும்(திருமலை உட்பட) யாருக்கேனும் என்னுடன் பேச விரும்பினால் என்
மொபைல் எண்ணை தரமுடியும்.

இந்நிலையில் 'என் ஜட்டிக்குள் கைவிடுவது' என்று நான் எதை
விவரித்தேனோ, அந்த வேலையை தன் மடலில் திருமலை செய்திருக்கிறார்.
என் ஜாதி, அதனுடன் எனக்குள்ள முரண்பாடான, முரண்நகையான உறவு, எழுத்துக்கும்
என் வாழ்வுக்கும் இடையிலான சமரசங்கள் இது குறித்து, அதற்கான(அதை
மற்றவர்கள் வாசிப்பதற்கான) முக்கியத்துவம் ஏற்படும் கட்டத்தில் நிச்சயம்
எழுதுவேன். அதை மறைக்க, நிச்சயமாய் என் ஜாதியை மறைக்க, எனக்கு எந்த
அவசியமும் இல்லை. அது என் கருத்துக்களுக்கு சாதகமாக இருக்குமே ஒழிய
பாதகமாக முடியாது. மேலும் என் ஜாதி பல நண்பர்களுக்கு தெரியும்.
திருமலையைபோல எது எதற்கோ போராடிய குடும்பத்திலிருந்த வந்ததாக நான்
பீலா விடுவதில்லை. அவரைப்போலவே அப்படியே அச்சாக பீலா விடக்கூடிய
எல்லா சாத்தியமுள்ள ஒரு பிண்ணணியிலிருந்தே நான் வந்தாலும், அந்த
பீலாக்களை வன்மையாய் மறுப்பவன். என் பாட்டனார், என் பெற்றோர்
இவர்களிடன் உள்ள ஜாதிவெறியையும், என் சொந்த ஜாதியையும், வாழ்வின்
அத்தனை தளங்களிலும் எதிர்த்து வருபவன் நான். அதற்காக பல விலைகளை
கொடுத்தவன். இன்றைக்கும் சரி செய்ய இயலாத நிலையிலேயே, (அவர்களுக்கு
வேறு நாதியில்லாத) ஒரே மகனான என் பெற்றோர்களுடனனான உறவு
இருக்கிறது. மிகவும் எதிர்பாராத முறையில் நிகழ்ந்த ஒரு துயர
சம்பவத்தினால், அந்த ஒரே காரணத்தால் மட்டும் சில சமரசங்களை
பெற்றோர்களுடன் செய்துகொண்டவன். அதற்கான சமன்பாட்டை நான் மட்டுமே
தீர்மானிக்க முடியும். அந்த சமரசங்களை நான் சொன்னதன்றி வேறு யாருக்கும்
தெரியவும் வாய்ப்பில்லை. திருமலை யார் என்ன சொன்னதை கேள்விப்பட்டார்
என்று எனக்கு தெரியாது. அது குறித்து கவலையும் இல்லை. (டோண்டு உட்பட)
யாருடனும் பேசும் போது இது குறித்த ஜாக்கிரதை உணர்வை வைத்துகொள்வதும்
கிடையாது.

திருமலையை நான் சாதிவெறியர் என்பது அவருடைய எழுத்தை முன்வைத்து
மட்டுமே. அவர் குறித்து எனக்கு எந்த விவரமும் தெரியாது. அதற்கான
முயற்சியையும் கவலையும் நான் ஒருபோதும் கொள்வதில்லை. வேறு யார்
குறித்தும் கூட அவர்கள் எழுதியதை தவிர்த்து மற்றவற்றை வைத்து எதுவும் இதுவரை
பேசியதில்லை. எப்படியிருந்தாலும் தன் முன்னோர்களின் அழுகலை தின்று
அழுகலுடனேயே வாழ்ந்து அதையே உன்னதமாய் முன்வைக்கும் திருமலை போன்ற
சாதிவெறியர்களுக்கும், பெயர் சொல்லாமல் என் தளத்தில் இது குறித்து
எழுதிய மற்ற அனாமதேய புழுக்களுக்கும் என் நக அழுக்கை தீண்டும் தகுதிகூட
கிடையாது. என்ன அடைப்படையில், யாரிடம் கேள்விபட்டு, நான் வீட்டில் ஒரு
வேஷமும், இணையத்தில் ஒரு வேஷமும் போடுவதாக, (அதுவும் இவர்
கடைபிடிக்காத) பிராமணியத்தை நான் வீட்டில் கடைபிடிப்பதாக குற்றம்
சாட்டி எழுதினார் என்பதையும், மற்றவரை முனகுவதற்கெல்லாம் மன்னிப்பு கோரி
உதார் விடுபவர், அதை பற்றி ஆதாரம் தரமுடியாத பட்சத்தில் மன்னிப்பு
கேட்கும் நாகரீகத்தையும் எதிர்பார்க்க முடியாது என்று நன்றாகவே தெரியும்.
வாயை பொத்திகொள்ள மட்டுமே மீண்டும் இதை சொல்கிறேன். அந்த
அளவிற்காவது வெட்கம் இருக்குமா என்பதும் சந்தேகமே!

இதற்கு திருமலை எழுதப்போகும் பதிலையும் உடனடியாய் படிக்கப் போவதில்லை.
படிக்காமலே கூட இருக்கலாம். நிச்சயமாய் அதற்கு பதில் சொல்லும் ஆசை
இல்லை. ஆனால் நான் இன்னும் சில புளுகுகளை எதிர்பார்பதால் அதை மறுக்க
மட்டும் ஒருவேளை பதில் எழுதலாம். உதாரணமாய், இந்த மடலில் நான்
சொன்னதை மீண்டும் திரித்தும், தமிழ்மணத்தில் நடந்த சில விவகாரங்கள்,
ஆபாச சண்டைகளை திரித்தும் சில வாதங்களை அவர் வைக்க முடியும். அது
குறித்து கவலையில்லை. ஆனால் அதையும் தாண்டி சில அப்பட்டமான புளுகுகளை
முன்வைக்கும் துணிவு இவருக்கு உண்டு. அதை மட்டும் ராகாகியின் சூழல் கருதி
மறுக்கும் தேவை எனக்கு இருக்கும். ஒருவேளை 'என்னவும் சொல்லிவிட்டுத்
தொலையட்டும்' என்று புறக்கணிக்கவும் செய்யலாம். ஆனால் அப்படி மறுத்தால் அது
விவாதம் அல்ல. திருமலை போன்றவர்கள் புழங்கும் இடத்தில் நானும் புழங்க
நேர்வதால் என் மீது ஏற்படும் நிர்பந்தம் மட்டுமே.

திருமலை எழுதிய ஆபாச மடல் முழுவதும் கிழே உள்ளது. அதற்கு கீழே என்
பழைய மடல் உள்ளது.


************************************************************************************

இங்கு ரோசா வசந்த் என்ற பெயரில் எழுதுபவர் தன்னை இணைய உலகின் மகா
மேதாவியாகவும், இவரது வலைப் பதிவில் இவருக்கு ஜால்ரா போடும் கும்பலைத்
தவிர
இது போன்ற குழுமங்களில் எழுதுபவர்கள் எல்லோரும் ஏதோ வெட்டிப் பேர்வழிகள்
என்றும், அசடுகள், தரமில்லாதவர்கள் என்றும் பொருள்படும் படி இங்கு பதில்
அளி
த்துள்ளார். இவருக்கு எங்கு எழுதுவதைப் படிக்க மாட்டேன் அல்லது அரைகுறையாய்
படித்தேன் என்று சொல்லிக் கொண்டே நான் எழுதியவற்றுக்கு ஆதாரம்
கேட்டுள்ளார். அரைகுறையாய் படித்தவருக்கு நான் ஈ வெ ராவைப் பற்றிக்
கேட்டக்
கேள்விகள் மட்டும் பளிச்சென்று கண்ணுக்குப் பட்டுவிடும் போல. விவாதங்களை
எல்லாம் வெட்டி விவாதம் என்று சொல்லிக் கொண்டே, கலந்து கொள்வதில்
ஆர்வம்
இல்லை என்று சொல்லிக் கொண்டே பக்கம் பக்கமாய் பதில் எழுதுவார். இனி
இங்கு
எழுதவே மாட்டேன் என்று வீராவேசமாகச் சொல்லிச் சென்ற பொழுதும் ஆயிரம்
முறை தி
ரும்ப வந்து எழுதுவார். இவரது இது போன்ற அசட்டுத்தனமான நடவடிக்கைகள்
எல்லாம்
இணைய உலகில் இன்று பெரிய ஜோக்காக உலவுகிறது. அது போல இந்த இடம்
இவர்
விவாதத்தில் கலந்து கொள்ளும் அளவிற்குத் தகுதியான இடமாக இவருக்குத்
தெரியவி
ல்லையாம். அதற்கான இடமாகவும் இவர் நினைக்கவில்லையாம். இதற்கு முன்
இவரது
நண்பர் இது குமட்டும் இடம் என்று சொல்லி விட்டுச் சென்றார். அவருக்கு
சொன்ன அதே பதில்தான் இவருக்கும் நான் அளிப்பேன். ஆம் இது இவர் போன்ற
ஆட்கள் எழுதக் கூடிய கழிவறைச் சுவர் இல்லைதான், ஆண் குறியை அறுப்பேன்,
என்றும், ஜட்டிக்குள் கையை விட்டுப் பார்க்கட்டும் என்றும், அவிழ்த்துக்
காட்டுகிறேன்
என்றும், மிகவும் கண்யமான மொழியில் நாகரீகமானப் பதிலை இவரை இங்கு
யாரும்
எழுத விட மாட்டார்கள் என்பதினால் இங்கு கலந்து கொள்ளும் ஆர்வம் இல்லை
என்கி
றார் போலும். இவரது கண்யமானப் பதிவுகளைச் சகித்துக் கொள்ளக் கூடிய இடம்
இந்த
குழுமம் இல்லைதான் என்ன செய்வது? இங்கு அது போன்ற தரமான எழுத்துக்களை
யாரும் இங்கே எழுத மாட்டார்கள் என்பதனாலும், எழுதினால் அனுமதிக்க
மாட்டார்கள்
என்பதினாலும் இவருக்கு விவாதத்தில் கலந்து கொள்ளக் கூடிய இடமாகத்
தோன்றாமல்
போயிருக்கலாம். அந்த வரை, இவர் பாணியிலேயே சொல்லுவதானால் இதை
ராயர்
காப்பி கிளப்பிற்கு கிடைத்த ஒரு பாராட்டாகவே எடுத்துக் கொள்ளலாம்.
இவர் இது
போல் ஒதுக்கும் அல்லது அவர்கள் இவரை ஒதுக்கும் மற்றொரு இடம் தி
ண்ணை, அங்கும் ஆபாசங்களுக்கு இடம் அளிக்கப் படுவது கிடையாது. இது வி
வாதத்துக்குத் தகுந்த இடம் இல்லையென்றால் ஆதாரம் கேட்டதுடன் மட்டும்
நிறுத்திக்
கொண்டிருக்கலாமே, பக்கம் பக்கமாக பதில் எழுதவில்லை என்று யார்
அழுதார்கள்?

கேட்டால் அது அசட்டுத்தனமானது என்பார். அசட்டுத்தனம், அம்பி போன்ற ஒரு
சில
வார்த்தைகள் இன்றி இவரால் நாலு வாக்கியம் கூட எழுத முடியாது
என்பதனால் அவற்றையெல்லாம் கேள்வி கேட்கும் இடங்கள் விவாதத்திற்குத்
தரமில்லாத
இடங்களகாகவும் அசட்டுத்தனமான கேள்வி கேட்கும் இடங்களாகவும் மாறி விடும்.
முதலி
ல் இந்த இடத்தையும், இதில் எழுதுபவர்களையும் மதிக்கக் கற்றுக் கொண்ட
பின்னர் எந்த
ஒரு விவாதத்தையும் இவர் தாராளமாகத் தொடரட்டும். இங்கு, இதுவரை இவர்
கண்யமாகவே எழுதியிருக்கிறார் என்ற பொழுதும், இந்த இடத்தை விவாதம்
செய்வதற்குத்
தகுந்த இடமாகத் தான் கருதவில்லையென்று சொல்லும் பொழுதே இவரது ஆணவமும்,
கர்வமும் வெளிப்படுகிறது. இவரைப் போலவே நானும் இவரும் இவரது ஜால்ராக்
கும்பல்கள் எழுதும் வலைப் பதிவை நாகரீகமான இடங்களாகக் கருதுவதி
ல்லை. அங்கெல்லாம் போய் பின்னூட்டம் இடுவதும் இல்லை. என்னைப்
போன்றவர்கள் வராமல் இருப்பது இவரது வலைப்பக்கத்துக்கு கிடைத்த கவுரவம்
பாராட்டு
என்று வழக்கம் போல பீற்றிக் கொள்ளலாம். ஆனால் நான் அங்கு சென்று உன்
வலைப்பதிவு எனக்குப் பிடிக்கவில்லை, குமட்டுகிறது, தரமில்லாதது, குரோதம்
நி
றைந்தது, என்றெல்லாம் நான் சொல்லிக் கொண்டே பதில் போடுவது
கிடையாது. துஷ்
டனைக் கண்டால் தூர விலகு என்பதைக் கைக் கொண்டு அங்கெல்லாம் பதிலுடுவதும்
கி
டையாது. அது போன்ற குறைந்த பட்ச நாகரீகம் எதையும் இவர் அறிவதில்லை
என்பது
தான் இவரது ஆணவமான பதில் விளக்குகிறது.

----------------------------------------------------------------------
---------------------------------------------------------------

இனி எனது வரிக்கு வரி பதில்

<
திருமலை நான் எழுதியுள்ளதை திரித்திருப்பதாலும், சில புளுகு காரணமாகவும்
மீண்டும் எழுதுகிறேன்.
>


எது திரித்தல் எது புளுகு என்று சற்று ஆழமாகப் பார்க்கலாமா?

<
அதாவது அவர் 'அவர்கள்' என்று குறிப்பிட்டு பேசுவது என்னையும், இந்த
சந்தர்பத்தில் என்னை மட்டுமே குறிக்கிறது. அவர் சொல்வது போல் நான்
எதற்கும் வீடியோ/ஆடியோ ஆதாரம் கேட்கவில்லை.
>

ஆமாம். உங்களைத்தான் குறிக்கிறது. நீங்கள் ஆதாரம் கேட்ட பின்பு நான்
தருகிறேன்
என்று சொன்ன பின்பு, இங்கு விவாதத்தில் ஈடுபட விருப்பம் இல்லையென்று
குறிப்பிட்ட
பின்பு உங்களிடம் பேசுவதில் பயன் இல்லையென்பதால் மட்டுமே நான் நண்பர்
நடராஜனுக்குப் பதில் அளித்தேன். இப்ப அதற்கு என்ன வந்தது? "இந்த இடத்தி
ல்" அதாவது காப்பிக் கிளப்பில் , விவாதத்தில் ஈடுபட விரும்பாதவரோடு
நாம்
ஏன் அநாவசியமாகப் பேசி அவர் கூற்றுப் படி ஒரு "வெட்டி விவாதத்தை"
உருவாக்குவானேன் என்ற அக்கறையில் நான் வேறு ஒருவருக்குப் பதில்
அளிப்பதோடு நி
றுத்திக் கொண்டேன், ஆனால் விவாதத்தில் கலந்து கொள்ள விருப்பமில்லை
என்று
சொன்னவர், வெட்டி இடம் என்று சொன்னவர் நான் இன்னொருவருக்குச் சொன்ன
பதி
ல் குறித்துக் கவலை கொள்வானேன்? பக்கம் பக்கமாகப் பதில் அளிப்பானேன்?
இது
என்ன போலி நாடகம்? எனக்குப் பிடிக்கவில்லை, எனக்கு குமட்டுகிறது,
எனக்குக்
குத்துகிறது, எனக்குக் குடைகிறது என்று சொல்லிக் கொண்டே அங்கேயே சுத்தி
சுத்தி
வருவானேன்? இதுதான் அசட்டுத்தனம், சிறுபிள்ளைத் தனம். இதைத்தான் அருண்
வைத்தியநாதன் நன்றாக நையாண்டி செய்துள்ளார். இதை வேலையை நீங்கள்
இணையத்தில் உள்ள பல வலைப் பதிவுகளிலும், திண்ணையிலும் பல முறை செய்து
இன்று ஒரு கேலிப் பொருளாக நிற்கின்றீர்கள் என்பது கூட உணராமல் இருப்பது
பரி
தாபம்தான்.

நீங்கள் எதற்கும் வீடியோ ஆதாரம் கேட்கவில்லைதான், ஆனால் பாம்பு
உதாரணத்திற்கு
ஆதாரம் கேட்டதை எந்த விதத்தில் எடுத்துக் கொள்வது. ஈ வெ ரா அப்படிப்
பேசியிருக்கி
றார், நான் கேட்டிருக்கிறேன் என்று சொல்லியாயிற்று, அட நான் தான்
புளுகன், அபார
நினைவு சக்தியுள்ள டோண்டு ராகவன் அவர்களும் சொல்லியிருக்கிறார். ஊர்
முழுக்க
சவர் முழுக்க கருப்புப் பெயிண்டால் எழுதித் தள்ளியுள்ளார்கள், ஒரு தலவைன்
பேசாததை தொண்டர்கள் எழுதி விட முடியுமா? இது வரை அவர் அப்படிப் பேச
வி
ல்லையென்று தி க வும் இன்று வரை மறுக்கவில்லை. இதை விட மோசமாகப்
பேசியி
ருப்பதையெல்லாம் நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள். நியாயமும்
படுத்துகிறீர்கள். ஆனால்
இதை மட்டும் பேச வில்லையென்று ஆதாரம் கேட்கிறீர். அதைத்தான் நான்
வீடியோ
ஆதாரம் என்று குறிப்பிட்டேன். இனியும் குறிப்பிடுவேன். ஈ வெ ரா அப்படிப்
பேசி
னார், கேட்டிருக்கிறோம் என்பதை ஒன்றுக்கு மேற்பட்டோர் சொல்லி வி
ட்டோம், அவர் அப்படிச் சொல்லவில்லையென்று அவரோ அவரது சீடர்களோ
இந்நாள்
வரை மறுக்கவில்லை. அப்படியிருக்க நீங்கள் மட்டும் அப்படி அவர்
பேசியிருக்கமாட்டார்
என்று வக்காலத்து வாங்குவதைத்தான் நான் வீடியோ ஆதாரம் என்று
குறிப்பிட்டேன்.
இது எப்படி இருக்கிறது என்றால் ஒருவன் கொலை செய்வான், கற்பழிப்பான்,
கொள்ளையடிப்பான் ஆனால் கன்னம் மட்டும் வைத்துக் கொள்ளையடிக்க
மாட்டான் அப்படி செய்ததற்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்பது போல்
இருக்கிறது. ஈ
வெ ரா ஒரு இனத்தின் மீது அளவுகடந்த துவேஷத்தையும் வெறுப்பையும்,
வன்முறையையும் கொட்டினார் என்கிறேன். அதை ஜீவா போன்றவர்களும்
கண்டித்திருக்கி
றார்கள் என்கிறேன். அதை நீங்களும் மறுக்கவில்லை அப்படிச் செய்வது
நியாயம்தான்
என்று வக்காலத்து வாங்கிறீர்கள். போய் தி க மடத்தில் போய்க் கேளுங்கள்
அவர்களே
மறுக்க மாட்டார்கள். ஆனால் அவர் செய்ததையும், சொன்னதையும் எல்லாம் விட்டு
வி
ட்டு, அவர் பேசிய ஒரே ஒரு வன்முறைப் பேச்சுக்கு மட்டும் ஆதாரம் கேட்கி
றீர்கள். அதைத்தான் நான் அவ்வாறு குத்தலாக வீடியோ ஆதாரம் கேட்பார்கள்
என்று கூறி
னேன்.

<
வர்ணிப்பதை முழுமையாய் ஏற்றுகொண்டு, அதை பெரியாருக்கு கிடைத்த சிறந்த
சான்றிதழாகவே பார்கிறேன்.
>

இதே வசனத்தை மீண்டும் மீண்டும் கேட்டுக் கேட்டுப் புளித்து விட்டது வேறு
ஏதாவது
புது வசனங்கள் பயன் படுத்துங்கள். நான் சான்றிதழ் கொடுக்கும் அளவிற்கு ஈ வெ
ராவை மதிப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி¢.


<
அதாவது நடராஜன் சொன்னதற்கு எதிராக,
கோவில் வாசல் தொடங்கி, நான் கேட்டதாகா சொன்ன பல விஷயங்களை
நிச்சயம் திருமலை கேட்டிருப்பார். தன் குடும்பத்தில், குறைந்த பட்சம் தன்
சுற்றத்தில், தெருவில் ஒரு கல்யாண நிகழ்விலாவது கேட்டிருப்பார். அது
குறித்த எந்த விமரசனமும் இல்லாத, தன் அடையாளத்தை (திரித்து
வளைக்கப்பட்ட) தர்கத்தின் மூலம் உரசி உரசி உறுதி படுத்திகொள்ளும், தன்
இனநலம் சார்ந்த எல்லாவற்றையும் நியாயபடுத்தி வரும் ஒரு இனவெறியன்
பெரியாரை 'இனவெறியன்' என்று சொல்வதை போன்ற பாராட்டு கிடையாது.
அதனால் திருமலை சொன்ன எதையும் நான் மறுக்கவில்லை. அவரிடம் கேட்டது
ஒரு தகவல் மட்டுமே.
>

ஆம் நானும் கேட்டிருக்கிறேன். நன்றாகக் கேட்டிருக்கிறேன். நான் முதன் முதலில்
தீண்டாமை என்றால் என்பதை அறிந்ததே ஒரு செங்குந்த முதலியார் ஜாதி
நண்பன்
மூலமாகத்தான், ஒரு இக்கட்டான தருணத்தில் எங்கள் வீட்டில் கூடப் படித்த
மாணவர்களை தேர்வு சமயத்தில் தங்க அனுமதித்த பொழுது, அதில் ஒரு மாணவன்
தாழ்த்தப்பட்ட மாணவன் என்பதற்காக, அந்த முதலியார்ப் பையன் எங்கள் வீட்டில்
தங்க
மறுத்து, தெருவோரத்தில் அவன் தங்கியபொழுதுதான் தீண்டாமையின் முழு
வீச்சை
நான் அறிந்து கொண்டேன். வேலைக்குச் சென்ற பொழுது அந்த அரசு
அலுவலகத்தில்
இருந்த ஒவ்வொரு தூணும் ஜாதி பார்த்தது, தீண்டாமையை ஏதாவது ஒரு
விதத்தில் கைக்
கொண்டது. அங்கும் கேட்டிருக்கிறேன். ஆனால் இரண்டாயிரம் பேர் வேலை
பார்த்த அந்த இடத்தில் பிராமணர்கள் ஒரு பத்து பேர் கூட கிடையாது, நான்
பார்த்ததெல்லாம் பிற ஜாதியினரிடம்தான். என்னை ஜாதி வெறியன் என்று
சொல்வோருக்கு நான் யார், எனது குடும்பப் பாரம்பரியம் என்ன, ஜாதி
குறித்தான
எனது கொள்கைகள், நிலைப்பாடுகள், என்ன என்பதையெல்லாம் நான் இங்கு
யாருக்கும் தமுக்கடித்துத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. என்னைத் தெரி
ந்தவர்களுக்கும் என் மனசாட்சிக்கும் தெரியும். இன வெறியர்களின்
ரவுடித்தனங்களையும்,
வன்முறைகளையும் ஆதரிக்கும், நியாயப் படுத்தும் பிரகிருதிகளுக்கு நிச்சயமாக
நான் அறிவி
க்க வேண்டிய அவசியம் இல்லை. பதிலுக்கு நானும் அதே வசனத்தைத் திருப்பிக்
கூறுகி
றேன். நான் தேவரீயத்தைக் கண்டிருக்கிறேன், நாயக்கரீயத்தைக்
கண்டிருக்கிறேன்,
முதலியாரீயத்தைக் கண்டிருக்கிறேன், நாடாரீயத்தைக் கண்டிருக்கிறேன்,
பார்ப்பணீயத்தையும் கண்டிருக்கிறேன். அனைத்தையும் உணர்ந்து அதைத் தவி
ர்க்கவும் அது தவறு என்று சொல்லியே வளர்க்கப் பட்டிருக்கிறேன், இது போன்ற
சமுதாயக் கொடுமைகளை எதிர்த்துப் போராடி சிறைக்குச் சென்ற குடும்பத்தில்
இருந்து

வந்திருக்கிறேன். நான் இங்கு முகமூடி போட்டுக் கொண்டு எழுதுவதில்லை. நான்
வீட்டில் என்ன கடைப்பிடிக்கிறேனோ அதைத்தான் வெளியிலும் சொல்வேன்
செய்வேன்.
தீண்டாமை எதிர்க்கும் அதே தீவீரத்துடன் எதிர் தீண்டாமையும் எதிர்ப்பவன்.
ஒன்றைத்
தவறு என்று சொல்லும் வேளையில் அதற்குப் பழி தீர்ப்பதும் தவறு என்று
சொல்பவன்.
வேண்டுமானால் என்னைப் பற்றி முழுக்க அறிய வேண்டுமானால் தாராளமாக
என்னுடன் என் வீட்டிற்கு வந்து உறுதி செய்து கொள்ளலாம், அப்பொழுது தெரியும்
யார்
இன வெறியன் என்பது. ஆனால் வீட்டில் ஒரு வேஷமும் இணையத்தில் தன்னை
முற்போக்குவாதியாகக் காட்டிக் கொள்ள ஒரு முகமூடியும் அணிந்து
கொண்டிருப்பவர்களுக்கு என்னை இன வெறியன் என்று சொல்ல எவ்வித அருகதையும்
கிடையாது. நான் இங்கு வெளிப்படையாகக் கூறியது போல் என்னை யார்
வேண்டுமானாலும் உரசிப் பார்த்துக் கொள்ளலாம், ஆனால் நான் இங்கு எனது நி
லையைக் கூறியது போல், தன் முகமூடியைக் கழட்டி விட்டு தான் யார்,
வீட்டில்
யார் , வெளியில் யார் என்பதை நீங்கள் வெளிக்காட்டத் தயாரா? நான்
யார், எங்கிருக்கி
றேன், என்ன செய்கிறேன், என் நிலைப்பாடு என்ன என்பதையெல்லாம் இங்கு
பலரும் அறிவார்கள். நான் அப்படிப் புளுகி விட்டு ஓடி விடுவதற்கு முகமூடி
அணிந்து
கொண்டு தேவைப்படால் கலைத்து விட்டுச் செல்லலாம் என்ற எண்ணத்தில் எழுதிக்
கொண்டிருக்கும் ஒரு கோழை அல்ல, ஒரு போலி அல்ல.


<
திருமலை (எல்லோரும் அறிந்த வகையில்) மிகைப்படுத்தி விவரிக்கும்
நிகழ்ச்சிகள் யாவையும் கூட நான் மறுக்கவில்லை. ஆதாரம் கேட்கவில்லை.
அதற்கும் வாய்ப்பு இருப்பதாக(அதாவது அவர் மிகைபடுத்தி விவரிப்பது போல்
அல்லாமல், ஒரு தினமலர் பாமகவின் தாக்குதலை விவரித்தால் அதில் நாம்
சிலவற்றை உண்மையென்று எடுத்துகொள்வோமல்லவா அதுபோல)வே
நினைக்கிறேன். பார்பனியம் போன்ற பாசிசத்தை எதிர்க்கும் இயக்கத்தில்
வெறுப்பின் நிழலே இல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை. உலகில் அப்படி எந்த
இயக்கமும் கிடையாது. ஒரு எதிர்ப்பியக்கத்தில் வெளிப்படும்
antagonisஅத்தை முன்வைத்து அதை நிராகரிக்க வேண்டுமானால், எதுவும்
தங்காது. அந்த வகையில் பெரியார் இயக்கத்திடமிருந்த வெளிப்படது மிக
குறைந்த வன்முறை என்பது மட்டுமே என் வாதம். அதை பொதுவாய் நடராஜனுக்கு
சொன்னேன். கடந்த பத்து ஆண்டுகாலத்தில் இந்துத்வம் வழங்கிய ரத்த களரி,
இன்னும் உலகை 'உய்விக்க' வந்த கம்யூனிஸம் வெளிப்படுத்திய வன்முறையுடன்
ஒப்பிட்டால், அதைவிட முக்கியமாய் பார்பனியம் காலம் காலமாய்
நிகழ்வேற்றியுள்ள கருத்தியல் மற்றும் சமூக வன்முறையுடன் ஒப்பிட்டால் இது
ஜுஜுபி.
>

வன்முறையில் ஜான் என்ன முழம் என்ன? குறைந்த வன்முறை அதிக வன்முறை
என்று அளக்க வன்முறை என்ன பனியன் சைசா? ஸ்மால், மீடியம் , லார்ஜ்
என்று அளக்க. வன்முறை எப்பொழுதுமே எக்ஸ்டிரா லார்ஜ்தான் (நன்றி அந்நியன்
சுஜாதா). எது மிகக் குறைந்த வன்முறை? ஏதோ ஒரு சினிமாவில் ஒருவன்
பெண்களைக் கொல்வதாக வரும் காட்சியினாலேயே அவனது ஆண் குறியை அறுக்க
வேண்டும் என்று வீராவேசமாக அறிக்கை விட்டவருக்கு, பிராமணப் பெண்களைத்
தேசி
ய மயமாக்க வேண்டும் என்று அறிவித்தது சாதாரணமான ஒரு விஷயமாகத்
தெரிகிறது.
குறைந்த பட்ச வன்முறையாகத் தெரிகிறது!! என்னே ஒரு இரட்டை வேடம்!
என்னே
ஒரு ஹிப்போகிரைசி!! என்னைப் பொருத்தவரையில் வன்முறையிலும்
தீவீரவாதத்திலும்,
ரவுடித்தனத்திலும் சின்ன சைஸ் பெரிய சைஸ் நடுவாந்திர சைஸ் என்பதெல்லாம்
கி

டையாது. வன்முறையை நியாயப் படுத்துபவன் எவ்வளவு பெரிய ஆளாக
இருந்தாலும்
சீர்த்திருத்தவாதியாக கருதப்பட்டாலும் கூட என்னைப் பொருத்தவரை இன
வெறியன்
தான். அதைப் போலவே அதை ஆதரிப்பவர்களும் கீழ்த்தரமான விலங்குகளே.
அந்தக்
கருத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது. வன்முறையைக் கைக் கொண்டு
பலவீனமானவர்களை மட்டும் தாக்கித் தன் கொள்கையைப் பரப்புவதாகக் கூறுபவன்
நி
ச்சயம் சீர்திருத்தவாதியாக இருக்க முடியாது. ஒரு ரவுடியாகவோ,
பொறுக்கியாகவோதான்
இருக்க முடியும். ஆண் குறியை அறுக்க வேண்டாம் அதற்குக் காண்பித்த தார்மீகக்
கோபத்தில் ஆயிரத்தில் ஒரு பங்காவது "தேசியமயமாக்க வேண்டும்" என்று
எழுதிய இழிபி
றவிகளைத் திட்டியிருக்கலாமே? ஏன் செய்யவில்லை? அதைக் கண்டிக்கக் கூட
மனம்
வரவில்லையே? வக்கிரம் பிடித்த மனது அதற்கு வக்காலத்து அல்லவா
வாங்குகிறது?
இவருக்கு இதெல்லாம் ஒரு ஜூஜூபியாகத் தெரிகிறது. வன்முறையில் சிறிது
பெரிதெல்லாம்
கிடையாது, அது மதத்தின் பெயரால் செய்யப்பட்டாலும், இனத்தின் பெயரால்
செய்யப்பட்டாலும், ஜாதியின் பெயரால் செய்யப்பட்டாலும், ஏன்...
சீர்திருத்தம் என்ற
பெயரால் செய்யப் பட்டாலும் அது வெறித்தனம்தான், அதற்கு வக்காலத்து

வாங்குபவர்களும் இன வெறியர்கள்தான். நானும் கூட பார்ப்பனீயம்,
வன்னியரீயம்,
தேவரீயம் எல்லாவற்றையும் கடுமையாக நிராகரிக்கிறேன் ஆனால் அதற்கு நான்
கைக்கொள்ளும் வழி வன்முறை அல்ல. அதையும் ஒரு பலகீனமான சாராரிடம்
மட்டும்
காண்பிப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். எத்துனை முறை ஈ வெர்
ராவும் அவர்தம் சீடர்களும் ஒரு தேவர்கள் தீண்டாமைக் கொடுமை புரியும்
இடங்களுக்கோ, வன்னியர்கள் இரட்டைத் தம்ளர் கைக்கொள்ளும் இடங்களுக்கோ,
நாயக்கர்கள் உயிரோடு கொளுத்திய இடங்களுக்கோச் சென்று தன் ஜாதிய
எதிர்ப்பைக்
காட்டியிருக்கிறார் என்று சொல்ல முடியுமா? எத்துனை இடங்களில் இரட்டைத்
தம்ளர்
வைத்திருக்கும் கடைகளைக் கொளுத்தியிருக்கிறார்கள் என்று கணக்குச் சொல்ல
முடியுமா? எத்துனை தேவர்களின் மீசையை அறுத்திருக்கிறார் என்ற புள்ளி
விவரம் அளி
க்க முடியுமா? என்றைக்காவது தீண்டாமை புரியும் தேவரையும் தேளையும் பார்த்து
வி
ட்டால் தேளை விட்டு விட்டு தேவரை அடி என்று சுவர்களில் எழுதியிருக்கி
றார்களா? அப்புறம் என்னையா பார்ப்பணீயம், பித்தளை பேரிச்சம்பளம்
எல்லாம்?
யாரை ஏமாற்ற?


<
நான் தகவல் கேட்டது பெரியார் பற்றி மட்டுமே. திருமலை சொல்வது போல்
அல்லாமல் பெரியார் பேசிய எழுதிய அனைத்தும் ஆவணப்படுத்தப் பட்டுள்ளது.
எதையும் ஆதரபூர்வமாய் தெளிவாக்கி கொள்ளமுடியும். (நான் அதை செய்யும்
படி திருமலையை வற்புறுத்தவில்லை. ஏதோ அவர் ஆதாரம் தந்தபின்னும் நான்
சொல்வதையே சாதித்துகொண்டிருக்க நான் அவரிடம் சவால் விடவும் இல்லை,
விவாதிக்கவும் இல்லை. கேட்டது ஒரு உதவி மட்டுமே!)
>


உங்கள் கோரிக்கையைத்தான் நிச்சயம் நிறைவேற்றுகிறேன் என்று
சொல்லியுள்ளேனே.
ஈ வெ ரா பேசியது எழுதியது செய்தது எல்லாம் ஒன்று கூட மறைக்காமல்
உண்மையாக, பொய்க் கலப்பின்றி ஆவணப் படுத்தப்பட்டுள்ளது என்று மனசாட்சி
என்று ஒன்று இருந்தால் அதைக் கேட்டுக் கூற முடிய்மா? ஈ வெ ராவின் வைக்கம்
போராட்டம் முதல் செருப்பால் அடித்த போராட்டம் வரை உண்மைகள் மறைக்கப்
பட்டுள்ளன, திரிக்கப் பட்டுள்ளன. உங்களைப் போன்ற இனவெறியர்களின்
அடியாட்கள்
வேண்டுமானால் அந்த ஆவணங்களை நம்பிக் கொள்ளலாம். அதே
ஆவணங்களே அவர் இரு இனவெறியர் என்பதை மறுக்கவில்லை என்பதுதான்
உண்மை. ஈ வெ ரா அப்படி ஒரு திறந்த புத்தகமாக இருந்தால் செருப்பால்
அடித்த
புகைப் படங்களை வெளியிட்ட துக்ளக் ஏன் அடித்து நொறுக்கப் பட்டது? படங்களை
நீக்கி விட்டு வெளியிட உத்தரவிடப்பட்டது? அதை ஈ வெ ரா செய்தால்
என்ன அவருடைய எடுபிடிகள் , ரவுடிக் கும்பல்கள், போலீஸின் துணையுடன்,
அரசி
ன் அராஜகத்தின் துணை கொண்டு செய்தால் என்ன? மறைப்பு மறைப்புதானே?
திரிப்பு தி
ரிப்புத்தானே?


<
திருமலை சொல்வது போல் "பார்ப்பனன் இந்த நாட்டிலிருந்து விரட்டப் பட
வேண்டும் என்று 29/1/54 விடுதலை இதழில் எழுதியுள்ளார்" என்பது உண்மையாய்
இருக்க வாய்பில்லை.
>

முதலில் ஆதாரம் கேட்க வேண்டியது. திகதி போட்டு இங்கே சொன்னார் என்று
சொன்னால் அதைப் பொய் என்று கூசாமல் கூற வேண்டியது. இதுதான் இவரது தர்க்க
நேர்மை. ஐயா நான் இந்த பத்திரிகையில் இந்த தினத்தில் இப்படி
எழுதியிருக்கிறார் என்று
ஒரு ஆதாரத்தை வைக்கிறேன். அதை பொய் என்று சொன்னால் அதை நிரூபிக்க
வேண்டும், இல்லை மன்னிப்புக் கேட்க வேண்டும். அசோகமித்திரன் விஷயத்தில்
மட்டும் அசோகமித்திரன் சொன்னதாகக் கூறப்பட்டவற்றை அப்படியே நம்பிக்
கொண்டு அப்படி அவர் சொல்லவில்லையென்று சொன்னால் அதை அவர்தான்
நிரூபிக்க
வேண்டும் என்று சொன்ன அதே நியாயவான்கள், இப்பொழுது ஆதாரம் கொடுத்தால்
கூட பொய் என்று கூசாமல் கூறுகிறார்கள். உண்மையாய் இருக்க வாய்ப்பி
ல்லையாம், அப்படியென்றால் அதை நிரூபிக்க வேண்டியதுதானே? நான் என்ன
உங்களைப் போல் முகமூடிப் போட்டுக் கொண்டு என் அடையாளங்களை மறைத்துக்
கொண்டா எழுதுகிறேன் இல்லையே!! குறைந்த பட்ச நேர்மை இருக்குமானால் நான்
இங்கிட்டதை பொய் என்று நிரூபியுங்கள் இல்லையேல் இனிமேல் இது
போன்ற அபாண்ட குற்றசாட்டுக்களை இனிமேல் கூறமாட்டேன் என்று சொல்லி
பகிரங்க
மன்னிப்புக் கேளுங்கள். செய்வீர்களா?


<
பெரியார் இது போல் தொனிக்க பேசியது கிடையாது.
29/1/54 என்று திகதி போடுபவர் முழு பத்தியையும் கொடுப்பதில் என்ன
பிரச்சனை? 'பார்பனர்கள் தங்கள் நிலையிலிருந்து கீழிரங்க வேண்டும் என்பது
கூட எங்கள் நோக்கம் கிடையாது' என்று பெரியார் பலமுறை பேசியுள்ளார்.
திண்ணையில் ராஜன்குறை கட்டுரையில் திகதி, பேசிய இடம், முழு பத்தியுடன்
இதற்கு ஆதாரம் உள்ளது.
>

முழுப் பத்தியையும் கொடுக்க வேண்டிய தருணத்தில்தான் கொடுக்க முடியும்.
எங்களுக்கு
இது முழு நேர வேலையில்லை. அல்லது இதையே முழு நேர வேலையாகச்
செய்யும் அளவிற்கு நான் எந்தப் உயர்நிலை ஆராய்ச்சிநிலையங்களிலோ,
பல்கலைக்
கழகங்களிலோ ஆராய்ச்சியாளானாகவும் இல்லை. நான் ஏற்கனவே கூறியது
போல
கூடிய விரைவில் அவசியம் என்னிடம் இருக்கும் எல்லாத் தகவல்களையும் பகிர்ந்து
கொள்ளத்தான் போகிறேன். ஈ வெ ரா முன்னுக்குப் பின் முரணாகத்தான்
எதையுமே
பேசுவார் செய்வார் , அவர் ஒரு மிகப் பெரிய முரண்பாட்டாளர் என்பதுதான்
உலகமே அறியுமே. அவர் அப்படிச் சென்னாராம் அதை ராஜன் குறை
எழுதியுள்ளாராம்
ஆகவே அவர் ஒரு இன வெறியர் இல்லையென்று நான் ஏற்றுக் கொள்ள
வேண்டுமாம். அதை அந்த ராஜன் குறை கூட முழுமையாக ஏற்றுக் கொண்டிருப்பாரா
என்பதே சந்தேகம்.

<
"கடவுளை ஒழிக்க வேண்டுமானால் பார்ப்பனை ஒழிக்க வேண்டும் " என்பதை
போல நிச்சயம் சொல்லியிருப்பார். ஆனால் என் புரிதலின் படி இப்படி
சொல்லியிருக்க வாய்பில்லை. திருமலை திரித்திருக்க காரணம் எதுவும்
இல்லாவிட்டாலும் தவறுதலாய் வந்திருக்கலாம்.
>

எனக்குச் சந்தேகத்தின் பலனை அளிப்பதற்கு நன்றி. தாராளமாக சரி செய்து
பார்த்துக்
கொள்ளலாம், உரசி உண்மையா இல்லையா என்று பரிசோதித்துக் கொள்ளலாம்,
யாரும் யாரையும் தடுக்கவில்லை. எனக்குப் படிக்கக் கிடைத்ததை அளித்துள்ளேன்.
தவறு என்றால் தாராளமாக நிரூபித்துக் கொள்ளலாம்.

<
கடைசியாக "சாதி பாகுபாடுகள் ஒழிப்பதற்கு அரசியல் சட்டம்,
காந்தியார், நேரு படங்களைக்
கொளுத்த வேண்டும். இவ்வத்தனை முயற்சிகளிலும் பலன் கிட்டாமல் தோல்வி கி
டைக்குமானால் பிறகு பார்ப்பனர்களை அடிக்கவும், உதைக்கவும்,
கொல்லவும், அவர்கள் வீடுகளைக் கொளுத்தவுமான காரியங்கள் நடை பெற
வேண்டும்" என்று (ஏனோ தேதி போடாமல்) திருமலை சொல்வது பச்சை பொய்
மட்டுமே. இப்படி இந்த வரிகளை பெரியார் சொல்லியிருக்க /எழுதியிருக்க
வாய்ப்பே இல்லை. தலையணை சைஸில் உள்ள பெரியாரின் தொகுப்புகள் ஒன்றில்
கூட இத்தகைய ஒரு வரியை, இதை ஒத்த ஒரு வரியை நான் கண்டதில்லை. இது
திருமலையின் புளுகு மட்டுமே. முடிந்தால் பெரியார் பேசியதை முழுவதும்
மேற்கோள் காட்டட்டும்.
>


நிச்சயம் நான் ஆதாரத்தைக் கொடுக்கிறேன், முழுப்பக்கத்துடன். அப்படி அவர்
சொன்னார் என்று நிரூபிக்கப் பட்டால் சந்தேகத்திற்கு இடமின்றி அவர் ஒரு
இன வெறியர்

என்பதை ஒத்துக் கொள்ளப் போகிறீர்களா என்ன? அதற்கான அடிப்படை நேர்மை

இருக்கிறதா? அதையும் நியாயப் படுத்தவும் வக்காலத்து வாங்கவும்தானே
போகிறீர்கள்.
யார் சொல்லுவது புளுகு யார் புளுகன் யார் யோக்கியன் என்பதையெல்லாம் நான்
இங்கே மேலும் ஆதரங்களை இட்ட பின்பு பேசிக் கொள்ளலாம். இணையத்தில் ஒரு
பதி
லை போடுவதும் பின்னர் அதை அழித்து விட்டு மறைக்கப் பார்க்க முயலும் அண்டப்
புளுகன் யார் என்பதை பி கே எஸ் , டோண்டு போன்றவர்களிடம் கேட்டால்
தாராளமாகச் சொல்லுவார்கள்.

<
பெரியார் வன்முறைக்கு நேரடியாய் அழைப்பு விடுத்த ஒரே தருணம் ராஜாஜியின்
'குலக்கல்வி' குறித்த எதிர்ப்பில் மட்டுமே. (திருமலையின் மேற்படி
மேற்கோள் இந்த சந்தர்பத்திலெனில், அதை அந்த சூழலுடன் வைத்தே பார்க்க
முடியும்.) அதுவும் வருடக்கணக்கான போராட்டங்கள் பலனளிக்காமல் போனதால்
கடைசி ஆயுதமாய் மட்டுமே வன்முறையை கையில் எடுத்தார்.
>

முதலில் அவர் சொல்லியிருக்கவே மாட்டார் என்று சொல்ல வேண்டியது. அப்புறம்
ஒரு
தருணத்தில் சொல்லியிருக்கலாம் என்று எழுத வேண்டியது. முரண்பாட்டில் நீங்கள்
குருவை மிஞ்சிய சிஷ்யன்தான். முதலில் திருமலை சொல்லுவது புளுகு என்று
சொல்ல
வேண்டியது. அடுத்த வரியிலேயே அப்படி சொல்லியிருந்தாலும் அதுவும்
நியாய்ம்தான்
என்று வக்காலத்து வாங்க வேண்டியது. நான் சொல்லுவது புளுகு என்று உறுதியாகச்
சொல்ல முடியுமானால் அப்புறம் ஏன் சப்பைக் கட்டு? சரி அப்படியே ராஜாஜி
ஒரு சட்டம்
கொண்டு வந்திருந்தால் அரசாங்கத்தை அல்லவா எதிர்க்க வேண்டும். அப்பாவி
பிராமண
மக்கள் என்ன பாவம் செய்தனர். அவர்களையேன் அடித்தார்கள்? ராமர்,
பிள்ளையார் சி
லைகளைச் செருப்பால் அடித்த மாவீரர் அதைப் பற்றிய படங்கள் வெளிவருவதை
மட்டும்
ஏன் தடுத்தாராம்? உத்தம புத்திரனாக இருந்தால் தான் என்ன செய்தேன் என்பதை
தயங்காமல் ஊருக்குக் காட்டுவதுதானே? ஏன் துக்ளக்கைப் பறிமுதல் செயதார்கள்,
போலீசார் மூலமும் ரவுடிக்கள் மூலமும் அந்த இதழ் வெளிவருவதைத்
தடுத்தார்கள். அந்தப் படங்கள் எல்லாம் நீக்கப் பட்டு, வெற்றிடங்களாகத்தானே
அந்த
துக்ளக் வெளிவந்தது? இதுதான் இவர் நடத்திய போராட்டங்களின் லட்சணம்.
ரவுடித்தனமும் அராஜகங்களும்தான் இவர் நடத்திய போராட்டங்கள் என்பதற்கு
இருட்டடிக்கப் பட்ட அந்தத் துக்ளக் இதழே சாட்சி. அட நான் தான் புளுகன்,
பொய்யன். உங்கள் நண்பர் கனடா வெங்கட்டிடம் சென்று கேட்க
வேண்டியதுதானே? அவர் உறவினரை அல்லது பக்கத்து வீட்டுக் காரரை எப்படிக்
கொன்றார்கள் என்று? எந்தச் சூழலில் சொன்னால் என்ன வன்முறைப் பேச்சு, இன
அழி
ப்புப் பேச்சு இல்லையென்று ஆகி விடுமா? இந்தப் பேச்சு ஒன்றே போதுமே ஒரு
கடைந்தெடுத்த இன வெறியன் என்பதை நிரூபிக்க.

<
(அதை நான் கண்டிக்காவிட்டால் இனவாதி என்று யாராவது நினைக்கலாம்,
அதானால் சொல்கிறேன். அதை ஒரு மாபெரும் வறலாற்று நிகழ்வாக
பார்கிறேன்.)
>

உங்களைப் போன்ற வெறுப்பையை மூச்சாக விடுபவர்களுக்கு வேண்டுமானால் அது
வரலாற்று நிகழ்வாக இருக்கலாம். சம்பந்தமேயில்லாமல் பாதிக்கப் படும்
அப்பாவி
களுக்கு அது ஒரு இனவெறியாகத்தான் கண்ணுக்குத் தெரியும்.

<
'ஒப்புகொள்ளவா போகிறார்கள்' என்று திருமலை போல நான்
அங்கலாய்ப்பதில்லை. எல்லாவகை பாசிசத்திற்கும் (தமிழை முன்வைத்த
பாசிசத்திற்கும்) எல்லாவகையிலும் எதிரான ஒருவனை, காலகாலமாய் தன்
இனம் நிகழ்த்திவரும் வன்முறையை எல்லாம் மாறி மாறி நியாயபடுத்தி வரும்
ஒரு இனவெறியன், எப்படி எதிர்கொள்வ்பான் என்று எனக்கு நன்றாகவே
தெரியும்.
>

உங்கள் முகமூடியைக் கழட்டி வைத்த்து விட்டு வந்தால். நான் யார், யார் இன
வெறி
யன் என்பதை நேரில் வந்து தாராளமாகப் பார்த்துக் கொள்ளலாம். முகமூடி
மாட்டிக்
கொண்டு என்னை இன வெறியன் என்று சொல்லுவதற்கும் ஜாதி வெறியன் என்று
சொல்லுவதற்கும் உங்களுக்கு எவ்வித அருகதையும் கிடையாது. உங்களைப் பற்றியும்
பலரும் பலவிதமாகச் சொல்லுகிறார்கள். அப்படியெல்லாம் இல்லை நான் பி
ராமணத்துவத்தை எந்த விதத்திலும் கடைப்பிடிக்காதவன் என்று நிரூபிக்க
வேண்டியதுதானே? இணையத்தில் முகமூடி போட்டுக் கொண்டு பெரிய
சீர்திருத்தவாதி
மாதிரி யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எழுதலாம் அல்லவா? நான்
இப்படித்தான் வாழ்கிறேன் யார் வேண்டுமானாலும் வந்து என்னைப் பற்றி அறிந்து
கொள்ளுங்கள் என்று மறைக்காமல் கூறுகிறேன். அப்படி உங்களால் கூற முடியுமா?
உங்களை இனங்காட்ட முடியுமா? உங்களி குரோத எழுத்துக்களுக்கு உள்நோக்கம்
எதுவும் இல்லை என்று வெளிப்படையாகக் கூறும் துணிவு உண்டா?

எத்துனை முறை நீங்கள் தமிழை முன்வைத்த பாசிசத்தையும், இந்து மதம் அல்லாத
பிற
மதங்கள் முன்வைக்கும் தீவீரவாதத்தையும், கம்ன்யூஸ்டிகள் நடத்திய
படுகொலைகளையும்
கண்டித்திருக்கிறீர்கள் என்று கூறினால் நான் படித்துச் ஜென்ம சாபல்யம் அடைந்து
கொள்வேன். பிராமண வசவுகளில் நூறில் ஒரு பகுதியாவது அத்தகைய
கண்டனங்கள்
இருந்திருக்குமா? சினிமாவைப் பற்றி எழுதியதில் பத்தில் ஒரு பங்காவது
உலகளாவிய மதப்
பயங்கரவாதத்தைக் கண்டித்திருபீர்களா? எத்துனை முறை தமிழை முன்வைத்த
பாசி
சத்தைக் கண்டித்துக் கட்டுரை எழுதியுள்ளீர்கள் என்று சொல்ல முடியுமா? எத்துனை
முறை விடுதலை என்ற பெயரில் அவிழ்த்து விடப்பட்டிருக்கும் படுகொலைகளைக்
கண்டித்தி
ருக்கிறீர்கள் என்று புள்ளி விபரம் கொடுக்க முடியுமா? இந்துத்துவ எதிர்ப்பைத்
தவிர பிற
மதம் சார்ந்த தீவீரவாதங்களைக் கடுமையாகக் கண்டித்து (ஆ கு அறுப்பு
ஸ்டைலில்)
என்றைக்காவது ஒரு முழு நீளக் கட்டுரை எழுதியது உண்டா? எழுதத் துணிவுதான்
உண்டா?

<
ஜீவாவின் பேச்சை நானும் கேட்டான். கலமெல்லாம் திட்டிவிட்டு இப்படிபட்ட
சந்தர்பங்களில் ஜீவா போன்ர கம்யூனிஸ்டுகள் பேச்சை இவர்கள் மேற்கோள்
காட்டுவது சுவாரசியமானது. கம்யூனிஸ்டுகள் (ஜாதி குறித்த அவர்களின்
பார்வ்வை) பற்றி இதைவிட கடுமையாய் விமர்சனம் இருக்கிறது. அதையெல்லாம்
எடுத்து போட்டு மாளாது. காலம் அதை உறுதியும் படுத்தியிருக்கிறது. அதற்கு
ஜீவாவின் பேச்சு இன்னொரு ஆதாரத்தை தருகிறது, அவ்வளவே!
>

ஆக உங்களுக்குத் தேவையென்றால் ஜீவாவின் வார்த்தை வேதமாகத் தெரியும்.
யார்
மேற்கோள் காட்டினால் என்ன? ஜீவாவின் பேச்சில் சத்தியம், நியாயம்
இருக்கிறதா
இல்லைய என்பதுதான் இங்கே கேள்வி. அதை விடுத்து விட்டு வழக்கம் போல
திசைதி
ருப்பும் வேலைகளை வேறு ஆட்களிடம் வைத்துக் கொள்ளுங்கள். ஜீவா ஈ வெ
ராவி
ன் அரசியலை ஒரு இனவெறி அரசியலாக்த்தான் பார்க்கிறார். க்டுமையாகக்
கண்டிக்கி
றார். அதில் உண்மை உள்ளது. தாராளமாக ஜீவா ஜாதி குறித்துச் சொன்னதை
போட்டுக் கொள்ளுங்களேன்! நான் என்ன மறுக்கவா போகிறேன்? அதை ஏற்கும்
நான்
இதையும் ஏற்கிறேன். ஆனால் உங்களுக்குத்தான் ஜீவா பேசியதில் இருக்கும்
சத்தியம்
உறுத்துகிறது. எட்டிக்காயாகக் கசக்கிறது. நான் ஜீவாவின் ஜாதி குறித்த
பார்வைகளை
ஏற்றுக் கொள்கிறேன், நீங்கள் ஜீவா ஈ வெ ராக் கூட்டத்தை இனவெறிக்
கும்பல்
என்று அழைப்பதை ஏற்றுக் கொள்வீர்களா? என்னைப் பற்றிய ஒரு சில சொந்தத்
தகவல்களை பொதுவில் அளிப்பது முறையாக இருக்காது என்பதனால் நான்
வளர்ந்த வி
தத்தை, எனது சூழலை நான் இங்கு குறிப்பிடாமல் விடுகிறேன்.

<
இந்த மடலுடன் நான் இந்த இழையில் எதையும் படிக்கவும் எழுதவும்
மாட்டேன்.(குறைந்த பட்சம் உடனடியாக). வேலை நெருக்கடி முக்கிய காரணம்
என்றாலும், இதனால் பயனிருக்க போவதில்லை எனபதே முக்கிய காரணம்.
(அப்பறம் ஏன் வந்தாய் என்று அசட்டுத்தனமாய் கேட்ககூடாது. இது போல சிறு
இடையீடு செய்வதும், அதன் trapஇல் மாட்டிகொள்ளாமல் கழண்டு கொள்வதையும்
ஒரு நல்ல அணுகுமுறையாகவும், அதை முடிந்தவரை பின்பற்றுவதுமாகவும் நான்
இருக்கிறேன்.) யாருக்கேனும் என்னிடம் ஏதாவது அறியதரவோ, அறியவோ
ஆர்வம் இருந்தால் என் வலைப்பதிவில் அதை செய்யலாம்.
http://rozavasanth.blogspot.com/
>

இது போலக் குறைந்த பட்சம் ஒரு ஆயிரம் முறையாவது சொல்லியிருப்பீர்களா?
இது
போன்று யாராவது பேசினால் சும்மா 'ரோசா மாதிரி உளறாதே" என்று
இணையத்தில்
உங்களது வழக்கம் ஒரு சொலவாடையாகவே மாறிப் போய் விட்டது. ஏன் இந்த
பம்மாத்தெல்லாம். கொஞ்சம் முதிர்ச்சி அடையப் பாருங்கள். பதில்
உடனடியாகப் போடவி
ல்லையென்றாலோ, பதிலே போடவில்லையென்றாலோ, பயந்து ஓடி விட்டார்
என்றெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக இங்கு யாரும் எழுதப் போவதி
ல்லை. அப்படியெல்லாம் எழுதுவது உங்களது பிறப்புரிமை மட்டுமே. உங்கள்
ஏகபோக உரிமையைப் பாதியதைக் கொண்டாடும் எண்ணம் இங்கு யாருக்கும் கி
டையாது. விரும்பினால் எழுதலாம், விரும்பாவிட்டாலோ,
நேரமில்லாவிட்டாலோ
எழுதாமலும் இருக்கலாம், இங்கு நீங்கள் என்னதான் எழுதினாலும் நீங்கள் எழுத
எழுத
என் கருத்துக்கள் உறுதிப் படவே செய்யும். சும்மா அடித்து விட்டு ஒளிந்து
கொள்வேன்
என்று கூறுகிறீர்கள். அதை புத்திசாலித்தனம் என்றும் பெருமையாகப் பீற்றிக்
கொள்கி
றீர்கள். எது அசட்டுத்தனம் என்பதை படிப்பவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.

உங்களுக்கு வேலைப் பளு இருப்பின் தாராளமாக அதை முதலில் பாருங்கள். ஈ வெ
ராவும், அசோகமித்திரனும் வந்து நமக்குச் சம்பளம் தரப்போவதில்லை.
குழந்தைகளுடன்
நேரம் செலவழிப்பது அதை விட முக்கியம். அதற்கெல்லாம் நேரம் ஒதுக்கிய
பின் இங்கு
கடைசியாக வந்தால் போதும். அப்படி வரும் பொழுது இது குமட்டுகிற இடம்,
இங்குள்ளவர்களுக்குத் தகுதி யில்லை தராதரம் இல்லை என்றெல்லாம் கூறாமல்
பதில் அளி
க்க விரும்பினால் மட்டுமே தாராளமாகக் கலந்து கொள்ளலாம். விருப்பமி
ல்லையென்றாலும் குறையொன்றுமில்லை. உங்கள் தேர்வு.


இதற்கு என்னப் பதில் வரப்போகிறது என்பதை என்னால் இப்பொழுதே சொல்ல
முடியும், இருந்தாலும் அந்த நகைச்சுவையை மற்றவர்களும் அனுபவிக்கட்டுமே என்று
நான் சொல்லாமல் விடுகிறேன். உங்களிடம் நேர்மையில்லை, நீங்கள் அசடு,
அம்பி,
உங்களுடன் எல்லாம் விவாதிக்கும் தகுதி கிடையாது, இனிமேல் எழுத
மாட்டேன், மூஞ்சி
லேயே முழிக்க மாட்டேன், வேலை நெருக்கடி, ஒண்ணுக்குப் போகிறேன், ஊருக்குப்
போகிறேன், குமட்டுகிறது, நாறுகிறது, நீங்கள் திட்டுவதால் எனக்குப்
பெருமை
என்றெல்லாம் பம்மாத்துப் பண்ண ஜல்லியடிக்கவெல்லாம் எனக்குத் தெரியாததால்,
நான்
நிச்சயம் ஆதாரங்களுடன் ஒரு சில மாதங்களில் இங்கு மீண்டும் எழுதுவேன்
என்பதை
மட்டும் கூறிக் கொண்டு இந்த இழையில் இருந்து இப்பொழுது விடை பெற்றுக்
கொள்கி
றேன். பதில் ஏதும் வருமாயின் அதற்குப் பதில் சொல்லவும் நிச்சயம் வருவேன்.

******************************************************************************

அதற்கு முன்பு நான் எழுதியது கீழே.

திருமலை நான் எழுதியுள்ளதை திரித்திருப்பதாலும், சில புளுகு காரணமாகவும்
மீண்டும் எழுதுகிறேன்.

அதாவது அவர் 'அவர்கள்' என்று குறிப்பிட்டு பேசுவது என்னையும், இந்த
சந்தர்பத்தில் என்னை மட்டுமே குறிக்கிறது. அவர் சொல்வது போல் நான்
எதற்கும் வீடியோ/ஆடியோ ஆதாரம் கேட்கவில்லை. மாறாக நடராஜன் சொன்ன
பல விஷயங்கள் உண்மையாய் இருக்க வாய்ப்பு இருப்பதாகவே
சொல்லியிருக்கிறேன். அவர் என்னை கேட்டதால் அது குறித்து நான்
அறிந்தவற்றை சொல்லியிருக்கிறேன். மேலும் 'ஈவேரா
இனவாதியா(வெறியறா?)' என்ற விவாதத்தில் ஈடுபடவில்லை. மாறாக
அவரை 'இனவெறியன்' என்ற வார்த்தையால் திருமலை போன்றவர்கள்
வர்ணிப்பதை முழுமையாய் ஏற்றுகொண்டு, அதை பெரியாருக்கு கிடைத்த சிறந்த
சான்றிதழாகவே பார்கிறேன். அதாவது நடராஜன் சொன்னதற்கு எதிராக,
கோவில் வாசல் தொடங்கி, நான் கேட்டதாகா சொன்ன பல விஷயங்களை
நிச்சயம் திருமலை கேட்டிருப்பார். தன் குடும்பத்தில், குறைந்த பட்சம் தன்
சுற்றத்தில், தெருவில் ஒரு கல்யாண நிகழ்விலாவது கேட்டிருப்பார். அது
குறித்த எந்த விமரசனமும் இல்லாத, தன் அடையாளத்தை (திரித்து
வளைக்கப்பட்ட) தர்கத்தின் மூலம் உரசி உரசி உறுதி படுத்திகொள்ளும், தன்
இனநலம் சார்ந்த எல்லாவற்றையும் நியாயபடுத்தி வரும் ஒரு இனவெறியன்
பெரியாரை 'இனவெறியன்' என்று சொல்வதை போன்ற பாராட்டு கிடையாது.
அதனால் திருமலை சொன்ன எதையும் நான் மறுக்கவில்லை. அவரிடம் கேட்டது
ஒரு தகவல் மட்டுமே.

திருமலை (எல்லோரும் அறிந்த வகையில்) மிகைப்படுத்தி விவரிக்கும்
நிகழ்ச்சிகள் யாவையும் கூட நான் மறுக்கவில்லை. ஆதாரம் கேட்கவில்லை.
அதற்கும் வாய்ப்பு இருப்பதாக(அதாவது அவர் மிகைபடுத்தி விவரிப்பது போல்
அல்லாமல், ஒரு தினமலர் பாமகவின் தாக்குதலை விவரித்தால் அதில் நாம்
சிலவற்றை உண்மையென்று எடுத்துகொள்வோமல்லவா அதுபோல)வே
நினைக்கிறேன். பார்பனியம் போன்ற பாசிசத்தை எதிர்க்கும் இயக்கத்தில்
வெறுப்பின் நிழலே இல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை. உலகில் அப்படி எந்த
இயக்கமும் கிடையாது. ஒரு எதிர்ப்பியக்கத்தில் வெளிப்படும்
antagonisஅத்தை முன்வைத்து அதை நிராகரிக்க வேண்டுமானால், எதுவும்
தங்காது. அந்த வகையில் பெரியார் இயக்கத்திடமிருந்த வெளிப்படது மிக
குறைந்த வன்முறை என்பது மட்டுமே என் வாதம். அதை பொதுவாய் நடராஜனுக்கு
சொன்னேன். கடந்த பத்து ஆண்டுகாலத்தில் இந்துத்வம் வழங்கிய ரத்த களரி,
இன்னும் உலகை 'உய்விக்க' வந்த கம்யூனிஸம் வெளிப்படுத்திய வன்முறையுடன்
ஒப்பிட்டால், அதைவிட முக்கியமாய் பார்பனியம் காலம் காலமாய்
நிகழ்வேற்றியுள்ள கருத்தியல் மற்றும் சமூக வன்முறையுடன் ஒப்பிட்டால் இது
ஜுஜுபி.

நான் தகவல் கேட்டது பெரியார் பற்றி மட்டுமே. திருமலை சொல்வது போல்
அல்லாமல் பெரியார் பேசிய எழுதிய அனைத்தும் ஆவணப்படுத்தப் பட்டுள்ளது.
எதையும் ஆதரபூர்வமாய் தெளிவாக்கி கொள்ளமுடியும். (நான் அதை செய்யும்
படி திருமலையை வற்புறுத்தவில்லை. ஏதோ அவர் ஆதாரம் தந்தபின்னும் நான்
சொல்வதையே சாதித்துகொண்டிருக்க நான் அவரிடம் சவால் விடவும் இல்லை,
விவாதிக்கவும் இல்லை. கேட்டது ஒரு உதவி மட்டுமே!)

திருமலை சொல்வது போல் "பார்ப்பனன் இந்த நாட்டிலிருந்து விரட்டப் பட
வேண்டும் என்று 29/1/54 விடுதலை இதழில் எழுதியுள்ளார்" என்பது உண்மையாய்
இருக்க வாய்பில்லை. பெரியார் இது போல் தொனிக்க பேசியது கிடையாது.
29/1/54 என்று திகதி போடுபவர் முழு பத்தியையும் கொடுப்பதில் என்ன
பிரச்சனை? 'பார்பனர்கள் தங்கள் நிலையிலிருந்து கீழிரங்க வேண்டும் என்பது
கூட எங்கள் நோக்கம் கிடையாது' என்று பெரியார் பலமுறை பேசியுள்ளார்.
திண்ணையில் ராஜன்குறை கட்டுரையில் திகதி, பேசிய இடம், முழு பத்தியுடன்
இதற்கு ஆதாரம் உள்ளது.

"கடவுளை ஒழிக்க வேண்டுமானால் பார்ப்பனை ஒழிக்க வேண்டும் " என்பதை
போல நிச்சயம் சொல்லியிருப்பார். ஆனால் என் புரிதலின் படி இப்படி
சொல்லியிருக்க வாய்பில்லை. திருமலை திரித்திருக்க காரணம் எதுவும்
இல்லாவிட்டாலும் தவறுதலாய் வந்திருக்கலாம். "பாப்பானை ஒழிக்க கடவுளை
ஒழிக்க வேண்டும்" என்பதாக பெரியார் சொல்லியிருக்க கூடும்,
சொல்லியிருக்கிறார். பெரியாரின் கடவுள் மறுப்பு பார்பனிய எதிர்பின்
மீது கட்டப்பட்டதே ஒழிய கடுவுள் மறுப்பிற்காக பார்பனிய எதிர்ப்பை அவர்
கைகொள்ளவில்லை. அதனால் இந்த வகையில்தான் அவர் சொல்லியிருக்க
வேண்டும். மேலும் '9/10/58'இல் மட்டுமில்லாமல் பலமுறை 'பாப்பான் ஒழிய
வேண்டும்' என்று சொல்லியிருக்கிறார். அதை பாப்பானை அடித்து ஒழிக்க
வேண்டும் என்பதாக திருமலை கொள்ள முடியும். ஆனால் பெரியார் 'சூத்திரன்
ஒழிய வேண்டும்' இன்னும் 'பறையன் ஒழியவேண்டும்' என்று கூட
சொல்லியிருக்கிறார். 'பறையன் பட்டம் ஒழியாமல் சூத்திரன் பட்டம்
ஒழியாது' என்றும் சொல்லியிருக்கிறார். 'பாப்பான் ஒழியாமல் சூத்திரன்
ஒழிக்க முடியாது' என்றும் சொல்லியிருக்கிறார்.

கடைசியாக "சாதி பாகுபாடுகள் ஒழிப்பதற்கு அரசியல் சட்டம்,
காந்தியார், நேரு படங்களைக்
கொளுத்த வேண்டும். இவ்வத்தனை முயற்சிகளிலும் பலன் கிட்டாமல் தோல்வி கி
டைக்குமானால் பிறகு பார்ப்பனர்களை அடிக்கவும், உதைக்கவும்,
கொல்லவும், அவர்கள் வீடுகளைக் கொளுத்தவுமான காரியங்கள் நடை பெற
வேண்டும்" என்று (ஏனோ தேதி போடாமல்) திருமலை சொல்வது பச்சை பொய்

மட்டுமே. இப்படி இந்த வரிகளை பெரியார் சொல்லியிருக்க /எழுதியிருக்க
வாய்ப்பே இல்லை. தலையணை சைஸில் உள்ள பெரியாரின் தொகுப்புகள் ஒன்றில்
கூட இத்தகைய ஒரு வரியை, இதை ஒத்த ஒரு வரியை நான் கண்டதில்லை. இது
திருமலையின் புளுகு மட்டுமே. முடிந்தால் பெரியார் பேசியதை முழுவதும்
மேற்கோள் காட்டட்டும்.

பெரியார் வன்முறைக்கு நேரடியாய் அழைப்பு விடுத்த ஒரே தருணம் ராஜாஜியின்
'குலக்கல்வி' குறித்த எதிர்ப்பில் மட்டுமே. (திருமலையின் மேற்படி
மேற்கோள் இந்த சந்தர்பத்திலெனில், அதை அந்த சூழலுடன் வைத்தே பார்க்க
முடியும்.) அதுவும் வருடக்கணக்கான போராட்டங்கள் பலனளிக்காமல் போனதால்
கடைசி ஆயுதமாய் மட்டுமே வன்முறையை கையில் எடுத்தார். பெரியாரின்
இறப்புக்கு பிந்தய திக போல் அல்லாமல், அவர் காலத்தில் அவருக்கு பரவலான
வெகுஜன ஆதரவும் உண்டு. ராஜாஜி ஆட்சி காலத்தைவிட 70இல் திமுக
அலையும், பெரியாருக்கான ஆள்பலம் மட்டுமின்றி, அரசும் அவர் பக்கம்
இருந்தது. எத்தகைய வன்முறையிலும் அவரால் இரங்கியிருக்க முடியும். மாறாக
அவரால் கடைசியாய் களத்தில் புகுந்த 'கருவறை நுழைவு' போராட்டத்தில் கூட
வெற்றி பெறமுடியவில்லை. பரிதாபமாக அவர் அதில் தோல்வி கண்டதுடன்,
இன்றுவரை கூட திகவால் அதில் ஒரு அடிகூட நகர முடியவில்லை. பெரியார்
கருவறையில் நுழையப் போவதாய் அறிவித்து, கருணாநிதி அதன் விளைவையும்
தன் ஆட்சியையும் குறித்து பயந்து, அவரே சட்டம் கொண்டுவந்து, பெரியாரும்
அதை ஏற்று(இதுதான் அவர் காட்டிய வன்முறை) பின்னர் சுப்ரீம் கோர்ட்
கருணாநிதி கொண்டுவந்த அனைவரும் அர்சகராகும் சட்டத்தை ஒன்றும்
இல்லாமலாக்கியது. எல்லாம் சாதகமாய் பெரும் பலத்துடன் இருந்த காலத்தில்
அவர் செய்த ஒரே விஷயம் ஒரு எதிர்வினையாய்(மேல்விபரத்திற்கு என்னை
அணுகலாம்) ஒரு குறியீடாய் ராமர் படத்தை செருப்பால் அடித்தது மட்டுமே!
(அதை நான் கண்டிக்காவிட்டால் இனவாதி என்று யாராவது நினைக்கலாம்,
அதானால் சொல்கிறேன். அதை ஒரு மாபெரும் வறலாற்று நிகழ்வாக
பார்கிறேன்.)

'ஒப்புகொள்ளவா போகிறார்கள்' என்று திருமலை போல நான்
அங்கலாய்ப்பதில்லை. எல்லாவகை பாசிசத்திற்கும் (தமிழை முன்வைத்த
பாசிசத்திற்கும்) எல்லாவகையிலும் எதிரான ஒருவனை, காலகாலமாய் தன்
இனம் நிகழ்த்திவரும் வன்முறையை எல்லாம் மாறி மாறி நியாயபடுத்தி வரும்
ஒரு இனவெறியன், எப்படி எதிர்கொள்வ்பான் என்று எனக்கு நன்றாகவே
தெரியும்.

ஜீவாவின் பேச்சை நானும் கேட்டான். கலமெல்லாம் திட்டிவிட்டு இப்படிபட்ட
சந்தர்பங்களில் ஜீவா போன்ர கம்யூனிஸ்டுகள் பேச்சை இவர்கள் மேற்கோள்
காட்டுவது சுவாரசியமானது. கம்யூனிஸ்டுகள் (ஜாதி குறித்த அவர்களின்
பார்வ்வை) பற்றி இதைவிட கடுமையாய் விமர்சனம் இருக்கிறது. அதையெல்லாம்
எடுத்து போட்டு மாளாது. காலம் அதை உறுதியும் படுத்தியிருக்கிறது. அதற்கு
ஜீவாவின் பேச்சு இன்னொரு ஆதாரத்தை தருகிறது, அவ்வளவே!

இந்த மடலுடன் நான் இந்த இழையில் எதையும் படிக்கவும் எழுதவும்
மாட்டேன்.(குறைந்த பட்சம் உடனடியாக). வேலை நெருக்கடி முக்கிய காரணம்
என்றாலும், இதனால் பயனிருக்க போவதில்லை எனபதே முக்கிய காரணம்.
(அப்பறம் ஏன் வந்தாய் என்று அசட்டுத்தனமாய் கேட்ககூடாது. இது போல சிறு
இடையீடு செய்வதும், அதன் trapஇல் மாட்டிகொள்ளாமல் கழண்டு கொள்வதையும்
ஒரு நல்ல அணுகுமுறையாகவும், அதை முடிந்தவரை பின்பற்றுவதுமாகவும் நான்
இருக்கிறேன்.) யாருக்கேனும் என்னிடம் ஏதாவது அறியதரவோ, அறியவோ
ஆர்வம் இருந்தால் என் வலைப்பதிவில் அதை செய்யலாம்.
http://rozavasanth.blogspot.com/

ரோஸாவசந்த்.

கேவலங்களிலும் கேவலம் - 2.

சென்ற பதிவில் நான் கண்டித்திருந்த பின்னூட்டத்தை தான் இடவில்லை என்ற தகவலை விடாது கருப்பு அளித்திருந்தார். இப்போது அவருடைய பின்னூட்டத்தை பார்த்த பிறகே அந்த மட்டமான பின்னூட்டம் அவருடையது அல்ல, போலியானது என்று அறிகிறேன். அவரும் அதை இதற்கு முன்பு மறுத்ததாக எனக்கு தெரியவில்லை. இந்த தவறுக்கு நான் மட்டும் முழு பொறுப்பு இல்லையெனினும், தவறாக எடுத்துக் கொண்டு கண்டித்ததற்கு என் மன்னிப்புக்களை தெரிவித்து, அது தொடர்பான என் கண்டனத்தை திரும்ப பெற்று கொள்கிறேன். மற்றபடி அவரை பற்றி சொன்ன கருத்து எதிலும் மாற்றமில்லை. என் கருத்துக்களை அவர் மீண்டும் நிருபித்ததற்கு என் நன்றிகளும் பாராட்டுக்களும்.

சில பார்பன புழுக்களும், அனானி மல புழுக்களும் சொல்வதையே இவரும் சொல்லியிருப்பதன் மூலம், இவர் அவர்களில் இருந்து அடிப்படைகளில் எந்த விதத்திலும் வேறு படவில்லை என்று வெளிப்படுத்தியுள்ளார். என்னை விடவா பார்ப்னர்களையும், பார்பனியத்தையும் அவர் அதிகம் எதிர்கிறார் என்று ஒரு கேள்வி கேட்டிருந்தார். நிச்சயமாக இல்லை! நான் பார்பனியத்தை எதிர்ப்பது என்பது பிரபஞ்சம் தழுவிய மனித விடுதலை சார்ந்தது. அது எல்லாவித ஒடுக்குமுறைகளுக்கும் எதிரானது. அவரது 'எதிர்ப்பும்', வெறுப்பும், ஏற்கனவே சொன்னது போல, ஒரு பாப்பானாக தான்பிறக்காத தாழ்மை உணர்வால், கோபத்தால், ஆதங்கத்தால் உண்டானது. அது பார்பனியத்துடன் எளிதில் சமரசம் செய்து கொள்ளக் கூடியது. பார்பனியத்திலிருந்து அடிப்படையில் வேறுபடாதது. அதை எனக்கு அளித்த பதிலிலேயே அவர் நிருபித்துள்ளார்.

திருமலை ராயர் காப்பி க்ளப்பில் என்னை ஏதோ ஓட ஓட விரட்டியதாக இவருக்கு நம்பகமான இடத்திலிருந்து தகவல் கிடைத்ததாம். திருமலை போன்ற பச்சையான பார்பன வெறியர்களை, விடாது கறுப்பு போன்ற பார்பனராய் பிறக்காமல், அவ்வாறு பிறக்காத ஒரே காரணத்தால் மட்டும் பார்பனர்களை திட்டும் பிறவிகள், சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்ப ஆதரவுக்கு சேர்த்துகொளவ்தும், ஆதாரமாக காட்டுவதிலும் ஆச்சரியம் கொள்ள எதுவும் இல்லை; இயல்பானதுதான்! ஆனால் துரதிர்ஷ்டவசமாக திருமலை என்னை ஓட விரட்டும் அளவிற்கு எதுவும் செய்யவில்லை. இணையத்தில் இப்போது அனானி மலப்புழுக்களும் (அது திருமலைதானா என்று எனக்கு சரியாய் தெரியாது), கடந்த பின்னூட்டத்தில் கருப்புவும் செய்தது போல, என் ஜட்டிக்குள் ஒரு மடலில் திருமலை கை விட்டுருந்தார். இப்போது கருப்பு எழுதியது போலவே ஒரு மிரட்ட்ல் என்று நினைத்து அவ்வாறு செய்திருந்தார். அதற்கு தெளிவான ஒரு பதிலை நான், சற்று காலம் தாழ்த்தி எழுதியிருந்தேன். நான் அறிந்து கடைசி வரை திருமலை அதற்கு பதில் தரவில்லை. ஆகையால் ஓடியது திருமலையேஅன்றி நான் இல்லை. திருமலைக்கு எழுதிய கடைசி பதிலை முடிந்தால் அடுத்த பதிவில் தருகிறேன்.

இப்போதைக்கு இந்த பதில் போதும் என்று தோன்றுகிறது. மற்ற பதிவுகளையும், அவர் என்னை முன்வைத்து எழுதிய பதிவையும் இன்னும் படிக்கவில்லை. தேவையிருந்தால் பிறகு.

Friday, August 18, 2006

கேவலத்திலும் கேவலம்!

ஆழியூரான் பதிவில் (http://nadaivandi.blogspot.com/2006/08/blog-post_17.html) பின்னூட்டமாய் எழுதியது. அவர் பின்னூட்டங்களை நிறுத்தி வைத்திருப்பதனால் இங்கே பதிவாக இடவேண்டியத்காகிவிட்டது.

தற்சமயம் வலைப்பதிவுகளை நிறைவாக படிக்க இயலாததால் இது பற்றிய எல்லாவற்ரையும் படிக்க
இயலவில்லை. வித்யாவிற்கு கிடைத்த வரவேற்பின் காரணமாய், அழுக்காறினால் துவங்கிய
விவகாரமாகவே இதை என்னால் பார்க்க முடிகிறது. இது எப்படியென்றால் இட ஒதுகீட்டில் ஒரே ஒரே
(கவனிக்கவும் மொத்தமாய் ஒரே ஒரு) தலித் மேலே வரும்போது, அழுக்காறும் வயெற்றெரிச்சலும் கொண்டு
இந்திய ஆதிக்க சாதி கூட்டம் போடும் கூச்சலுக்கு ஒப்பானது இது. சற்று யோசித்துப்
பார்த்தால் மிக நேரடியாக இந்த ஒப்புமையை செய்ய முடியும். இதில் ஆச்சரியம் என்னவென்றால் பெரியார்
பெயரை சொல்லும், இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவான ஒரு கும்பலை சேர்ந்தவர்கள், குறுகிய புத்தி
சார்ந்து, இந்த கூச்சலை இட்டு உள்ளனர். அதிலும் வலைப்பதிவில் சாக்கடையை கொட்டிக் கொண்டிருக்கும் 'விடாது
கருப்பு' என்பவர் எழுதிய பின்னூட்டம், நமது சமூகத்தின் அழுகிய பகுதியிலிருந்து வரும் விஷம்
கலந்த குரல். ஏற்கனவே குஷ்பூவை பற்றி இவர் எழுதிய ஒரு சாக்கடை பதிவுடன் இதையும் ஒப்பிட்டு
பார்க்க வேண்டும். இவர் பார்பனர்களை திட்டுவது என்பது, எந்த வித சமூக நீதி சார்ந்த
குரலும் அல்ல. பாப்பானாக பிறக்காததன் ஆதங்கத்தில் ஏற்பட்ட கோபம் மட்டுமே. முதலில்
இவர்களிடமிருந்து பெரியாரை பாதுக்காக்க வேண்டும். அதற்கு முன் பரந்த மனப்பான்மைக்கான
மனதை திறாந்து வைக்க வேண்டும்.

வித்யா நாட்டு பற்றி எழுதியிருந்ததும் மிகுந்த பொறுப்புணர்வுடனும், முதிர்ச்சியுடனும் இருந்தது.
அதையும் பெரியார் பெயரை சொல்லும் கொழுந்துகள் தாக்கி எழுதுவதன் அசட்டு நகைச்சுவைக்கு
சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. பெரியார் 1947 சுதந்திர தினத்தையே துக்க நாளாக
அறிவித்தார். இறப்பதற்கு நான்கு நாட்கள் முந்தய பேச்சில் கூட தான் இந்திய இறையாண்மையை
ஏற்றுகொள்ளாததை கூட்டத்தில் அறிவித்தார். அவர் பெயரை சொல்லும் முட்டாள்கள், சொந்த பகை
காரணமாகவும், பொறாமையின் காரணமாகவும், நாட்டு பற்று பேசிய மிகவும் ஒடுக்கப் பட்ட
மக்கள் கூட்டத்தில் இருந்து வந்த, பல இடர்களை கடந்து முன்னேறி சாதனை படைத்த ஒருவரை
திட்டிகொண்டிருக்கின்றன. கேவலதிலும் கேவலம் இது!

இன்னும் இருக்கும் கருத்துக்களையும், பின்னுட்டங்கள் சார்ந்து மேலும் சொல்ல வேண்டிவனவற்றையும்
அடுத்த பதிவு எழுதும் கட்டாயத்தின் போது பார்கிறேன். இந்த வலைப்பதிவில் பின்னூட்டங்கள் பொதுவாய்
மட்டுறுத்தப் படுவது இல்லை. இந்த பதிவில் வித்யாவை தாக்கி மட்டமான பின்னூட்டங்கள் வரக்கூடும்
என்று எதிர்பார்ப்பதால் இந்த பதிவும் தற்போதைக்கு மட்டுறுத்தல் அமுலில் உள்ளது.
சுரதாவில் தட்டியதால் வரும் எழுத்துப் பிழைகளுக்கு மன்னிக்கவும்.

Thursday, July 06, 2006

ஈனா மீனா டிகா..!

லேனா என்பவர் எனது 'வயறு எரிகிறது' என்ற பதிவில் எழுதிய பின்னூட்டத்திற்கான பதில் இது. நீளமாகி போனதால் மட்டுமில்லாது, அந்த பதிவுடன் இதன் தொடர்பின்மை மற்றும் இதன் தனிப்பட்ட விவாதத் தன்மை கருதியும் இங்கே இடுகிறேன்.

லேனா பின்னூட்டமளிக்க காரணமான முந்தய பின்னூட்டங்களையும் இத்தாலிக்கில் அளித்துவிட்டு எனது பதிலை கீழே தருகிறேன். இதற்கு பதில் எழுத வேண்டாம் என்றுதான் முதலில் நினைத்தேன் என்ற வழக்கமான பல்லவி ஒன்று போட முடியும்தான். லேனாவிற்கு பதில் எழுதுவதை விட, மார்க்சிய மொக்கைத்தனத்தை இப்போது இல்லாவிட்டாலும் பின்னால் எப்போதாவது எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். சில விஷயங்களை ஒருமுறை சொல்லிவிட்டால் பின்னால் பழைய வைக்கோலை அசைபோடும் கட்டாயம் இருக்காது. அதனால் இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு....!

மோகன்தாஸ்: வசந்த், நீங்கள் உட்பட (வசந்தன் தவிர்த்த) அனைவரும் ஜெர்மனியை எதிர்ப்பதில், அவர்களுடைய முறை தவறிய ஆட்டத்தை விடவும் ஏதோவொன்று இருப்பதாகவே எனக்கு படுகிறது. இதை நான் கிரிக்கெட் போட்டிகளில், இங்கிலாந்து வெல்லவேக்கூடாதென்று நினைக்கும் என் சில நண்பர்களுடன் ஒப்பிட்டுப்பார்க்கிறேன்.

இதை சாருவும் மொழிந்தது வருத்தத்திற்குரியது.

இதற்கு(ஜெர்மனியை வெறுப்பதற்கு) வேறு எதுவும் காரணங்கள்(ஹிட்லர்???) இருந்தால் விளக்கவும். நடுநிலை ஜல்லி உங்களிடம் இருந்து வராதென்று நம்பிக்கையில.

ரோஸாவசந்த்: மோகன்தாஸ்,

தாமதத்திற்கு மன்னிக்கவும். நடுநிலமை என்று ஜல்லி எதுவும் அடிக்காமல் ஜெர்மனி பற்றி ஒரு முன்னபிப்ராயம் இருக்கிறது என்று ஒப்புகொள்கிறேன்.

இத்தாலியில் இருந்த போது மொத்தமாய் நான்கு வாரங்கள் -இடையில் ஒருவார இடைவெளியுடன் -ஜெர்மனியில் இருக்க நேர்ந்தது. எப்படா இத்தாலிக்கு திரும்புவோம் என்று இருந்தது. வறலாற்றில் ஒரு ஹிட்லர் இருந்தது மட்டும் ஜெர்மனி மீதான கற்பிதத்திற்கு காரணம் என்று தோன்றவில்லை. இத்தாலியிலும் ஒரு முசோலினி, பிரான்ஸில் ஒரு லூபானும் நிச்சயம் உண்டு. (அதேநேரம் ஹிட்லரை ஒரு வறலாற்றின் விபத்தாக பார்க்க முடியாது என்று தோன்றுகிறது. ஹிட்லருக்கான எல்லாவித வெளியையும், துவக்க ஆதரவையும், பின்னர் மாஸ் ஹிஸ்டீரியாவையும் அங்கிருந்த வெகு மக்கள் உணர்வே ஏற்படுத்தி கொடுத்ததாக கொள்ள வேண்டியிருக்கிறது. என்றாலும் ஹிட்லர் மட்டுமல்ல, ரோஸா (லக்சம்பர்க்) பிறந்து இறந்ததும் கூட ஜெர்மனிதான். நீட்ஷே காண்ட் உடபட பல தத்துவ மேதைகள் பிறந்ததும் ஜெர்மனிதான்.)

இனவாதம் குறைவாக இருப்பதாக நான் கருதும் பிரான்ஸிலேயும் எதிர்பாராமல் அவமதிக்கப் படும் வாய்ப்பு உண்டு. ஜெர்மனியிலும் மிக நல்ல மனிதர்களை சந்திக்க முடியும். அதனால் எதையும் பொதுமை படுத்தி சொல்வதில் அர்த்தமில்லைதான். ஆனால் ஜெர்மனியின் சமூக வாழ்வில், அவர்களின் நகைச்சுவை தொடங்கி எல்லாவற்றிலும் ஏதோ பிரச்சனை இருப்பதாக தோன்றுகிறது. இது தவறாகவும், கற்பிக்க பட்டதாகவும் இருக்கலாம், தெரியவில்லை. ஆனால் பிரன்ஸில் காணும் சுதந்திரத்தை, களியாட்டத்தை அங்கே காணமுடியவில்லை என்றே தோன்றுகிறது.

ஊருக்கு வெளியே ஒரு நெடுஞ்சாலையில் பிரான்ஸில் நீங்கள் ரோட்டை கடந்தால், அதி வேகத்தில் காரில் வருபவர் தூரத்திலேயே உங்களை கண்டு, வேகத்தை குறைத்து, பொறுமையாய் நீங்கள் ரோட்டை கடக்க காத்திருந்து புன்முறுவல் மாறாமல் 'bonjour' சொல்லிவிட்டு கடந்து செல்வார். ஜெர்மனியில் நீச்சயமாய் நீங்கள் சாலையை கடந்திருக்க மாட்டீர்கள். இப்படித்தான் நான் கேள்விப்பட்ட அனுபவங்கள் இருக்கிறது. குறைந்த கால சொந்த அனுபவமும் இதையே உறுதி செய்கிறது.

(இதே போன்ற கருத்தை சாருவும் தனது கோணல் பக்கங்களில் எழுதியிருப்பார்.)

லேனா: "ஹிட்லரை ஒரு வறலாற்றின் விபத்தாக பார்க்க முடியாது என்று தோன்றுகிறது. ஹிட்லருக்கான எல்லாவித வெளியையும், துவக்க ஆதரவையும், பின்னர் மாஸ் ஹிஸ்டீரியாவையும் அங்கிருந்த வெகு மக்கள் உணர்வே ஏற்படுத்தி கொடுத்ததாக கொள்ள வேண்டியிருக்கிறது. என்றாலும் ஹிட்லர் மட்டுமல்ல, ரோஸா (லக்சம்பர்க்) பிறந்து இறந்ததும் கூட ஜெர்மனிதான். நீட்ஷே காண்ட் உடபட பல தத்துவ மேதைகள் பிறந்ததும் ஜெர்மனிதான்"

இதை எழுதிய இந்த மனிதன் யார்? என்னையே வினவிக்கொண்டபோது,"ஒரு குட்டி பூர்ஷ்வாவின் கல(க்)கமும், எண்ணங்களும் சில நல்லிணக்க முயற்சிகளும்" என்பது என் கண்ணில் பட்டது. உண்மையில் இவரது மேற்கணாணும் பந்தி எதை எமக்கு அறிவுறுத்துகிறது? ஜேர்மானியர்களின் துவேச உணர்வுதான் ஹிட்லிரின் வெற்றியாகும் என்கிறார். குட்டிபூர்சுவாக்களின் மூக்குக்கு மேலே பார்க்கதெரியாத குறுகிய பார்வையினதும், மக்கள் மீதான வெறுப்பின் தன்மையை, இந்த வசனம் அசதாரணமுறையில் வெளிப்படுத்துகின்றன. இவர்களுக்கு உழைக்கும் மக்களின் மீதோ அல்லது வரலாற்று உண்மை மீதோ அக்கறை கிடையாது. 20ம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வின் வெளிப்பாட்டிற்கு(1917 இல் ரஷ்யாவில் ஏற்பட்ட உலக் சோசலிச புரட்சிக்கு) எதிராக நனவான முறையில் வளர்த்தெடுக்கப்பட்ட பாசிசத்தினை, ஜேர்மானிய மக்களின் பொதுவுணர்வாக அது இருந்தது என கூறுவது ஒரு பொய்மைப்படுத்தலாகும். இந்த பொய்மைப்படுத்தலை ரோசா வசந் கண்டுபிடிக்கவில்லை, அவரது ஆசான்களான குட்டிமுதலாளித்துவ மற்றும் வலது சாரி வரலாற்று ஆசிரியர்களின் கூற்றாகும் இது. தயவு செய்து, இவரது இந்த கூற்று எங்கிருந்து வருகிறது என்பதை அறிந்துகொள்ள ஒரு கட்டுரையின் ஒரு குறிப்பிட்ட தலையங்கத்தை, அது ஆங்கிலத்தில் இருக்கிறது, இங்கே பதிவு செய்கிறேன், தயவுசெய்து அந்த கட்டுரையில் இணைப்பினை இதில் பதிவுசெய்கிறேன், இதை முற்றாக வாசிக்கவும்.

ஒரு குட்டிபூர்ஷவாவின் பண்பு இதுதான். சமூக பிரச்சனை, மக்களின் துயரங்கள் எதையிட்டும் அது அக்கறைப்படுவதில்லை மற்றும் சுயப்பிரதாபங்களும், குறுகிய சுயநலமும் கொண்டதாக அது எப்போதும் இருந்துவருகிறது. இதனால் வரலாற்றினை அது ஆழமாக அறிந்துகொள்ள அது எப்போதும் எத்தனிப்பது கிடையாது. அதற்கு ஒரு சாதரண சம்பவத்தை மட்டும் குறிப்பிடுகிறேன், ரோச வசந் எனும், அவரது வார்த்தையில் சொன்னால்,''ஒரு குட்டிபூர்ஷ்வா'', எழுதுகிறார், ''ரோஸா (லக¢சம¢பர¢க¢) ப¤றந¢து இறந¢ததும¢ கூட ஜெர¢மன¤தான¢.'' இது ஒரு சிறிய தவறான புள்ளிவிபரமாகும். ஆனால் இதைக்கூட இந்த நபர் அறிந்துகொள்ளாது அக்கறையற்று எழுதியதே இவரது எல்லாவித அக்கறைகளும் எவ்வளவு பாசாங்குத்தனமானது என்பதை நிரூபித்துவிடுகிறது. 20 நூற்றாண்டின் மாபெரும் (லெனினுக்கு நிகரான)மார்க்சிஸ்டுகளில் ஒருவரான ரோஸ லக்சம்பேர்க் ஜேர்மனியில் பிறக்கவில்லை என்பது உலகறிந்த ஒரு சாதரண உண்மை. இது கூட தெரியாமல் இவர் இதை எழுதியது இந்த குட்டிபூர்ஷவாவின் குணாம்சத்தின் சிறந்த நிரூபணமாகும். தெரியாமல் இருப்பது பெரும் பிழையல்ல, ஒன்றில் எழுதும்போது, அதைப் பலர் படிப்பார்கள் ஆகையால் நாம் எழுதுவது சரியா பிழையா என ஆய்ந்து அறிந்தபின்தான் அதை எழுதவேண்டும். இன்று கூக்கிளில் போய் அவரது பெயரை அடித்தால் போதும், அவர் பற்றிய உண்மை அறிந்துகொள்ளலாம் அதுகூட இவருக்கு பஞ்சியாக இருக்கிறது. யூத வர்த்தக குடும்பத்தைச் சேர்ந்த ரோச லக்சர்ம்பேர்க் போலந்தில் சமோஸ்க் எனும் நகரில் 1871 ம் ஆண்டு பிறந்தவர், பின்னர் ஜேர்மனியில் குடியுரிமை பெற்று வாழ்ந்துதுடன், வலதுசாரி பாசிச இராணுவ பிரிவினரால்,1919 இல் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார். இந்தப் புரட்சிகர பெண்மணியைப்பற்றி சொல்வதென்றால் நிறைய விடயம் இருக்கிறது. எப்படியிருந்தபோதும், ரோசவசந் மீதான் தனிப்பட்ட தாக்குதலாக இதை நான் எழுதவில்லை. அந்த குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் பொதுக்குணாம்சத்தின் தன்மை எப்படிப்பட்டது என்பதை சுட்டிக்காட்வே இதை எழுதினேன்.

lena

go and read this link, http://www.wsws.org/history/1997/apr1997/fascism.shtml

Goldhagen's argument

The principal theme of Goldhagen's book is easily summarized. The cause of the Holocaust is to be found in the mind-set and beliefs of the Germans. A vast national collective, the German people, motivated by a uniquely German anti-Semitic ideology, carried out a Germanic enterprise, the Holocaust. The systematic killing of Jews became a national pastime, in which all Germans who were given the opportunity gladly and enthusiastically participated.Germans killed Jews because they were consumed, as Germans, by an uncontrollable Germanic anti-Semitism. Hatred of Jews constituted the foundation of the universally accepted weltanschauung, world view, of the German people.The politics of the regime was of only secondary importance. Goldhagen insists that terms such as "Nazis" and "SS men" are "inappropriate labels" that should not be used when referring to the murderers. Goldhagen seems to suggest that the only essential causal relationship between the Third Reich and the extermination of the Jews was that it allowed the Germans to act, without restraint, as Germans, in accordance with German beliefs.As Goldhagen writes: "The most appropriate, indeed the only appropriate general proper name for the Germans who perpetrated the Holocaust is 'Germans.' They were Germans acting in the name of Germany and its highly popular leader, Adolf Hitler" (page 6).So as not to distract attention from the flow of Goldhagen's astonishing insights, I will not dwell on the fact that Hitler himself was an Austrian, or that his racial theories were plagiarized from the writings of a nineteenth century French count, Gobineau, or that his political hero, Mussolini, was an Italian, or that his chief ideologist, Alfred Rosenberg, hailed from a Baltic province of czarist Russia, or that Hitler's closest comrade-in-arms, Rudolf Hess, was born in Egypt.Rather than ponder the implications of such awkward contradictions, let us move quickly to Goldhagen's conclusion: "that antisemitism moved many thousands of 'ordinary' Germans--and would have moved millions more, had they been appropriately positioned--to slaughter Jews. Not economic hardship, not the coercive means of a totalitarian state, not social psychological pressure, not invariable psychological propensities, but ideas about Jews that were pervasive in Germany, and had been for decades, induced ordinary Germans to kill unarmed, defenseless Jewish men, women, and children by the thousands, systematically and without pity" (page 9).Employing a crude version of Kantian epistemology, Goldhagen argues repeatedly that anti-Semitism was an integral, virtually a priori, component of the cognitive apparatus of the Germans: "the antisemitic creed," he writes, "was essentially unchallenged in Germany" (page 33).



இனி வருவது எனது பதில்.


அன்புள்ள லேனா,

நான்காம் அகிலத்தில் வந்த கட்டுரையின் சுட்டிக்கு மிகவும் நன்றி. நேற்று பதிலாக ஏதாவது எழுதலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அந்த கட்டுரையை படிப்பதற்குள்ளேயே தாவி தீர்ந்து போய்விட, வீட்டிற்கு கிளம்ப வேண்டியதாக விட்டது. உங்களை போல இந்த கட்டுரைகளை எழுதியோ படித்தோ சித்திக்க போவதாக கருதும் ஒரு புரட்சியை விசுவாசித்திருக்காத காரணத்தால், என்னை மாதிரி குட்டி பூர்ஷ்வாவிற்கு வீட்டுக்கு போய் சம்சார சாகரத்தில் ஆழ்வது இங்கே பதிலளிப்பதை விட முக்கியமாகிவிடுகிறது.

முதலாளித்துவ சாத்தானின் பார்வை காரணமாக மட்டுமே இந்த உலகில் எல்லா தீமைகளும் தலை விரித்தாடுகின்றன என்ற ஒற்றை விஷயத்தை நிறுவ, சைடுபார் இக்கிணியூண்டாக தெரியும் அளவிற்கு நீளமாய் மாய்ந்து மாய்ந்து இந்த ட்ராட்ஸ்கியிஸ்டுகள் சோறு தண்ணியில்லாமல் எழுதுவதை, சிசிபஸ் பாறாங்கல்லை மலைமீது சுமந்து போகும் உழைப்பின் அபத்தமான படிமம் மூலம் வாழ்விற்கான பொருளை கற்பித்து கொள்ள முடிவது போல், வேறு வகைகளில் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். இப்படி சொல்வதையும் வலது சாரி குட்டிபூர்வாத்தனம் என்ற முத்திரைக்கு மேல் உங்களால் வேறு எதுவும் சொல்ல முடியாது என்று தெரியும்! இருந்தாலும் அடுத்த முறையாவது நீங்கள் இன்னும் அறிவுபூர்வமான தளத்தில் பேசவேண்டும், மீண்டும் சுட்டி கொடுத்த கட்டுரையை கூட படிக்காத குட்டி பூர்ஷ்வாக்களின் மனநிலை, சமூக அக்கறையின்மை என்று ஜல்லியடிக்க வாய்ப்பு தரக் கூடாது என்பதற்காக முழுவதுமாய் படிக்க முனைந்தேன். ஆனாலும் முழுவதும் முடியவில்லை.

ரோஸா லக்சம்பர்க் ஜெர்மனியில் பிறந்ததாக போகிற போக்கில் குறிப்பிட்டது பிழைதான். அதற்காக என் பதிவை வாசிப்பவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ரோசா பற்றி தமிழ் சிறு பத்திரிகைகளில், எஸ்.வி.ராஜதுரை/வ.கீதா எழுத்துக்களில், பின்னர் இணையத்தில், குறிப்பாக அவரது வாழ்க்கை பற்றி எடுத்த திரைப்படம் இதன் மூலம் மிகவும் குறைவாகவே எனக்கு தெரியும். நான் படித்தவற்றில்/பார்த்த திரைப்படத்தில் நிச்சயமாய் அவர் போலந்தில் பிறந்த தகவல் எங்காவது குறிப்பிடப் பட்டிருக்கும் என்றாலும், என் மண்டையின் தகவல் கிடங்கில் அது ஏனோ தங்கவில்லை. வழக்கமான மரபுசார் மார்ச்சியர்களின் வரட்டுத்தனத்தை மீறி அவர் சிந்தித்திருப்பது என்னை கவர்ந்தது - குறிப்பாக அவர் சக கம்யூனிஸ்ட்களுடன் காட்ஸ்கி போன்றவர்களுடன் செய்த வாதங்கள் - குறிப்பாக தேசியத்தை முன்வைத்த அவரது விமரசனங்கள்; அதை விட முக்கியமாக புரட்சி -அதுவும் தவறாக குறிக்கப்படும் புரட்சி - அதில் வெளிபடும் வன்முறை குறித்த அவரது சுய உணர்வு என்னை கவர்ந்தது; இது எல்லாவற்றையும் விட என்னை கவர்ந்தது அவரது கவித்துவம் நிறைந்த, பேரன்பை உள்ளடக்கிய, நிரம்பி வழியும் காதல்களும் போராளித்தனமும் கொண்ட கடைசி வரையிலான அவரது வாழ்க்கை. இவ்வாறு தத்துவத்தை விட அவர் வாழ்க்கையால் உந்தப்பட்டு, அவர் பெயரை என் புனைபெயருடன் இணைத்து கொண்டு, அவரது பிறப்பிடத்தை கூட நினைவில் வைத்துக் கொள்ளாதது சற்றே வெட்கத்திற்குரியதுதான் என்றாலும், உங்களுடன் பேசும் போது இந்த அல்ப விஷயத்திற்காக வெட்கப்பட தேவையிருப்பதாக தோன்றவில்லை. ஏனெனில் ரோஸாவின் வாழ்வு ஏற்படுத்தக் கூடிய அதிர்வுகளை நான் சரியாகவே உள்வாங்கிருக்கிறேன்; சுரண்டலுக்கு எதிரான என் போன்ற ஒருவனையும், ஒரு தகவல் பிழையை முன்வைத்தாவது எப்படி போட்டுத் தள்ளலாம் என்று, தன் சட்டகத்தின் உள் அடங்காத கருத்துக்களை ஒரு மதவாதியின் மூர்க்கத்தோடு எதிர்கொள்ளும் உங்களால், ஒருநாளும் ரோஸாவின் அருகே வர முடியாது.

ஒரு உதாரணம் ரோஸாவின் பிறப்பிடம் பற்றிய தகவல் பிழையை, அதற்கு காரணமான அசிரத்தையை மட்டும் முன்வைத்து நீங்கள் ஜல்லியடிக்கும் குட்டி பூஷ்வான்மை, சமூக அக்கறையின்மை, இன்னும் இதர விஷயங்கள். குட்டி பூர்ஷ்வாக்கள், பூர்ஷ்வாக்கள் ஏகாதிபத்திய ஏஜெண்ட்கள், (லும்பன் பாட்டாளிகள் இந்த விஷயத்தில் சந்தேகம்தான்) மற்றும் மதவாதிகள், யாரானாலும் மிக துல்லியமான தகவல்களுடன், எந்த தகவல் பிழையும் எல்லாமல், மிகுந்த சிரத்தையுடன் எழுத முடியும். எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் தகவல் பிழை விடுவதற்கும், குட்டி பூர்ஷ்வா தன்மைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இதை வாசிக்கும் அனைவருக்கும் மட்டுமின்றி, லேனாவிற்கும் கூட மிக நன்றாகவே தெரியும். ஆனால் கையில் எது கிடைத்தாலும் அதை கொண்டு, எதிராளியை உழைக்கும் மக்களின் விரோதியாய் கற்பிக்கும் முனைப்பில் , இது போன்ற சாதாரண காமன் ஸென்ஸ் கூட இவர்களுக்கு உதவுவதில்லை. நியாயமாய் பார்த்தால் லேனா என்ற ஒரு தனி மனிதரின் இந்த மூர்க்கத்தனம் கொண்டு, எல்லா கம்யூனிஸ்டுகளையும் பொதுமை படுத்த முடியாது என்றாலும், பொதுவாகவே இவர்கள் சிந்தனை இப்படித்தான் விரிகிறது என்பதற்கு இந்த நான்காம் அகிலத்தின் இணையதளத்தின் பல கட்டுரைகளே ஒரு சாட்சி. (அவர்கள் லேனாவை விட இன்னும் அறிவுபூர்வமாய் தோற்றமளிக்கும் மொழியில் எழுதினாலும் உள்ளடக்க அணுகுமுறை இப்படித்தான் இருக்கிறது.)

நான் எழுதிய சாதாரணப் பின்னூட்டம் ரோஸாவின் வாழ்க்கை பற்றியது அல்ல. ஜெர்மனி பற்றியும் ஆராய்ச்சி பூர்வமாய் எதையும் அங்கே சொல்ல விழையவில்லை. மோகன்தாஸ் 'ஜெர்மனி குறித்த ஒரு முன்னபிப்ராயம் இருக்கிறதா?'என்று கேட்டதற்கு, அதை மறுத்து 'ஜெர்மனி காலபந்தாட்டத்தில் தோற்கவேண்டும்' என்று பலரை போல நானும் நினைப்பதற்கு வேறு காரணங்களை எளிதாய் தர்க்கப்படுத்த முடியும். ஆனால் அவர் கேட்டுகொண்டபடி நடுநிலை ஜல்லி எல்லாம் அடிக்காமல், அப்படி ஒரு முன்னபிப்ராயம் இருப்பதை நேரடியாய் ஒப்புக்கொண்டு அளித்த பதில் அது. பதில் தெளிவாகவே 'இருக்கலாம், தெரியவில்லை' என்று சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையிலேயே எழுதப்பட்டுள்ளது. தனக்கு தானே கேட்டுக்கொள்ளும் தொனியுடன் அது எழுதப்பட்டிருப்பதும் சிலருக்கு புரியலாம். ஜெர்மனி பற்றி கொண்டிருக்கும் முன்னபிப்பிராயம் தவறாக இருக்க கூடிய வாய்புகளை கருதி, ஒரு எதிர் உதாரணமாகவே ரோஸாவும் கூட அங்கெ 'பிறந்து இறந்ததாக' குறிப்பிட்டிருந்தேன். சொன்னதன் காரணம், அதன் தொனி, அந்த சந்தர்பத்தில் அதன் பின்னுள்ள வாதம் இது எதையுமே புரிந்து கொள்ள தேவையில்லாமல், ஒரு வார்த்தையில் உள்ள ஒரு தகவல் பிழையை முன்வைத்து இத்தனை ஆராய்ச்சி முடிவுகளுக்கு லேனா போகிறார்.

'குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் பொதுக்குணாம்சத்தின் தன்மை எப்படிப்பட்டது என்பது சுட்டி காட்ட இதை எல்லாம் எழுதினாராம். என் ஒருவனை வைத்து பொதுகுணம்சத்தை கண்டுபிடிக்கும், இவர்களின் பொது குணாம்சம் ஒரு பக்கம் இருக்கட்டும். நான் ஒரு குட்டி பூர்ஷ்வா என்பதை எப்படி கண்டு பிடித்தார்? அந்த பின்னூட்டத்தை படித்து, 'இதை எழுதிய மனிதன் யார்?' என்று தன்னையே வினவிக்கொண்டு மேலே பார்த்த போது, நானே பதிவின் தலைப்பில் எழுதியது கண்ணில் படவும் தெரிந்து கொண்டாராம். மாறாக நான் 'பாட்டாளி' என்றோ, 'நக்சலைட்' என்றோ எழுதிகொண்டிருந்தால் அப்படியே எடுத்து கொள்வாரா என்று அவரை போல மொண்ணையாக நான் கேட்பதில்லை.

ஒருவன் குட்டி பூர்ஷ்வா என்று தன்னையே சொல்லி கொள்வதன் பின்னுள்ள ஒரு அடிப்படை நேர்மை, அந்த வார்த்தைக்கான இந்த சந்தர்பத்தின் பொருள், 'குட்டி பூர்ஷ்வாவின் கலகம்' என்று சொல்வதில் உள்ள சுய எள்ளல், உள்முரண் பற்றிய எந்த புரிதலும் இல்லாத ஒரு மொண்ணைதனம் மட்டுமல்ல இது; எதிராளியாய் ஒருவரை கற்பித்து விட்டபின் எதை கொண்டெல்லாம் மர்மஸ்தானத்தில் அடிக்கலாம் என்று பார்க்கும் மூர்க்கம் மட்டுமே லேனாவிடம் வெளிபடுகிறது. (ஏற்கனவே இராம,கி. அவர்கள் சொன்னதுபோல்) வழைமையான பொருளில் என்னை குட்டி பூர்ஷ்வா என்று சொல்ல முடியாது என்ற சிறிய மார்க்சிய அறிவு கூட இல்லாமல்தான் லேனா ஆராய்ச்சி முடிவுகளை அடுக்குகிறார். (நான் என்ன பொருளில் அப்படி ஒரு பட்டத்தை வைத்துக் கொண்டிருக்கிறேன் என்பதை இங்கே விளக்க முடியாது, அதற்கான தேவையும் இல்லை. ஆனால் அதிகாரத்தின் விசாரணையற்ற, எந்த ஆபத்துக்கும் வழிவகுக்காத கலகத்தையே வலைப்பதிவில் செய்துகொண்டிருப்பதாக சொல்ல வேண்டிய தேவையினாலேயே, 'குட்டி பூர்ஷ்வாவின் கலகம்' என்று ஒரு தலைப்பு வைப்பதற்கு பின்னால் உள்ளது என்பதை, பலமுறை அது தவறாக வாசிக்கப் பட்ட காரணத்தால் சொல்ல வேண்டியிருந்தது. )

இப்போது பேசிக்கொண்டிருக்கும் ஜெர்மனி பற்றிய பிரச்சனைக்கு வருவோம். 'ஜேர்மானியர்களின் துவேச உணர்வுதான் ஹிட்லிரின் வெற்றியாகும்' என்று சாராம்சப் படுத்தி நான் எதையும் சொல்லவில்லை. அது லேனாவின் திரித்தல் மட்டுமே. அவர் மேற்கோள் காட்டியபடி நான் பேசிக்கொண்டிருந்த விஷயத்துடன் தொடர்புடையதாய் அடைப்பு குறிகளுக்குள் சொல்லியிருப்பது,

"ஹிட்லரை ஒரு வறலாற்றின் விபத்தாக பார்க்க முடியாது என்று தோன்றுகிறது. ஹிட்லருக்கான எல்லாவித வெளியையும், துவக்க ஆதரவையும், பின்னர் மாஸ் ஹிஸ்டீரியாவையும் அங்கிருந்த வெகு மக்கள் உணர்வே ஏற்படுத்தி கொடுத்ததாக கொள்ள வேண்டியிருக்கிறது."

இதில் எதை இவர் மறுக்கிறார் என்று புரியவில்லை. 'ஹிட்லரை ஒரு வறலாற்று விபத்தாக பார்க்க முடியாது' என்று சொல்வதை அவர் மறுப்பாரா என்று தெரியவில்லை. ஆனால் அவர் சுட்டியளித்த கட்டுரை அப்படி ஒரு நிலைபாட்டை எடுக்கவில்லை. முதாளித்துவத்தின் வளர்ச்சி கூட அதற்கு ஒரு பிண்ணணியாய் இருந்ததை பற்றி கட்டுரை பேசுகிறது. அதனால் ஹிட்லருக்கு துவக்க வெளியையும், பின்னர் ஒரு கூட்டு ஹிஸ்டீரியாவையும் வெகு மக்கள் உணர்வு ஏற்படுத்தி தரவில்லை என்கிறாரா என்று கேட்கவேண்டும். அதற்கு 'ஆமாம்' என்று சொன்னால், புளுகு அல்லது வறலாற்று அறிவு சூன்யம் என்ற இரண்டு நிலையிலிருந்துதான் அவர் பதில் சொல்ல வேண்டும். அதனால் இந்த இடத்தில் லேனா பதில் சொல்ல ரொம்பவே திணர வேண்டும்.

நான் ஹிட்லருக்கு துவக்கத்திலும் பிறகும் எதிர்ப்பே இருந்ததில்லை என்று சொல்லவில்லை. அப்படி சொல்ல நினைத்திருந்தால் ரோஸாவின் பெயரை கூட சாமர்த்தியமாய் உச்சரித்திருக்க மாட்டேன். அன்றய வெகு மக்கள் உணர்வு நாஜிக்கள் அதிகாரத்தை கைப்பற்ற ஆதரவாகவும், கைப்பற்றிய பிறகு தொடர்ந்த விசாரணைகளை அங்கீகரிப்பதுமாகவே இருந்தது என்பது ஒரு வறலாற்று உண்மை. அவர் சுட்டியளித்த டேவிட் நார்த்தின் கட்டுரையும் இதை மறுத்து பேசவில்லை. இவ்வாறு நான் எழுதி அவரும் மேற்கோள் காட்டிய வரிகளில் அவரால் மறுக்க எதுவும் இல்லாத நிலையில் சொன்னதை திரித்து, 'ஜேர்மானியர்களின் துவேச உணர்வுதான் ஹிட்லிரின் வெற்றியாகும்' என்று சொன்னதாக திரித்து, நான் Goldhagen என்பவர் சொன்னதைத்தான் சொல்வதாகவும் ஒரு புரட்டை முன்வைக்க வேண்டி வந்தது. கோல்தாகென் எழுதிய எதையும் நான் இதுவரை படித்ததில்லை. (இப்போது அவர் எழுதியதை படிக்கும் ஆர்வம் வந்துள்ளது என்பது வேறு விஷயம். அதற்கு லேனாவிற்கு நன்றி.) மேலும் நான் அவர் சொன்னதை சொன்னதாகவும் தெரியவில்லை. (அதாவது அவர் ஒரிஜினலாய் என்ன சொன்னார் என்று தெரியவில்லை, மேற்படி கட்டுரையிலிருந்து அறிந்த வரையில் ...).

கோல்தாகென் என்ன சொல்லியிருந்தாலும், ஜெர்மனியில் நிகழ்ந்த அனைத்திற்கும் அந்த சமுகத்தின் பிரஞ்ஞைக்கு நிச்சயமாய் ஒரு பங்கு இருப்பதாகவே நினைக்கிறேன். நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிந்து கொள்ள வேண்டுமானால் ஸீக்ஃப்ரெட் லென்ஸ் எழுதிய 'நிரபராதிகளின் காலம்' (தமிழில் ஸ்ரீராம் மொழிபெயர்த்தது) என்ற நாடகத்தை படிக்க வேண்டும். (இன்னும் பலரும் இது குறித்து பேசியுள்ளார்கள். அந்த காலகட்டத்தில் குற்றமற்றவர்கள் என்று யாருமே இருக்கமுடியாது என்பதையும், பலரும் (எந்த குற்றத்திலும் நேரடியாய் பங்கு கொள்ளாத ) தங்களுக்கு அதை அனுமதித்ததில் பங்கு உண்டு என்று ஒப்புகொண்டுள்ளனர். ) ஒரு சமூகத்தின் கூட்டு மனநிலையின் உள்ள சிக்கலான பிரச்சனைகளை வரட்டு மார்க்சியத்தால் ஒரு நாளும் உள்வாங்க முடியாது. ஒருவகையில் டேவிட் நார்த் தன் கட்டுரையின் தொடக்கதில் சொல்வதை போலவே, இந்த வறலாறும் அது தரும் தகவல்களும் தர்க்கத்திற்கு தர்க்கப்படுத்துதலுக்கும் அப்பாற்பட்டே இருக்கிறது. ஆனால் இந்த படுகொலை வறலாற்றின் வேர்கள் ஜெர்மனிய சமூகத்தின் பிரஞ்ஞையில், அதன் மரபில், எங்காவது இருக்கிறதா என்று பார்ப்பது மிக முக்கியமானது.

ஜெர்மனியில் மட்டுமின்றி, குஜராத்தில் கூட அந்த மாநிலத்திற்கு பிரத்யேகமான பிரச்சனைஇருக்கிறதா என்று பார்ப்பதில் தவறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. குஜராத்தின் வறலாற்றில், அங்கே நிலவிய அதீதமான சமஸ்கிருத மயமாக்கலில், இடதுசாரி அரசியலின் பாதிப்பே இல்லாமல் இருக்கும் சமூக யதார்த்தத்தில், அதன் சாதி சார்ந்த புள்ளிவிவரத்தில், அதன் வெகு மக்கள் உணர்வில் அதன் நம்பிக்கைகளில், அங்குள்ள பிரத்யேக முதாலாளித்துவ வறலாற்றில் இருக்கிறதா என்ற ஆய்வு மிக முக்கியமானது. ஆனால் இவை எதுவுமே ஒரு சாராம்சபடுத்துதலாக இருந்தால் அதுதான் ஆபத்தானது.

அந்த வகையில் கோல்தாகெனின் புத்தகத்தில் நாஜிக்களில் எழுச்சி அனைத்திற்கும் ஜெர்மானிய மனநிலையும், ஜெர்மானிய நம்பிக்கைகளும் *மட்டுமே* என்று சாராம்ச படுத்தியிருந்தால் அது எனக்கு ஏற்புடையதன்று. மாறாக ஜெர்மானிய நம்பிக்கைகளும், சமூக மனநிலையும் என்ன வகை பங்கு வகித்தது என்ற ஆய்வில் இறங்கியிருந்தால் அது மிக முக்கியமானது. டேவிட் நார்த் தருவதை மட்டும் வைத்து எந்த முடிவிற்கும் வருவது எனக்கு சாத்தியமில்லை. ஏனெனில் மார்க்சியர்கள் திரிப்பதில் வல்லவர்கள். (லேனா எழுதிய பின்னூட்டம் ஒரு உதாரணம் மட்டுமே) இதை நேர்மையின்மை என்று சொல்ல முடியாது. ஒரு மத நம்பிக்கையை ஒத்த அணுகுமுறையே அதற்கு அடிப்படை காரணம். காண்டின் கச்சாவான ஒரு எபிஸ்டமாலஜியை (crude version of Kantian epistemology) கோல்தாகென் பயன்படுத்துவதாக டேவிட் சொல்கிறார். காண்டை அறிவுபூர்வமாய் பயன்படுத்தவில்லை என்கிறாரா அல்லது காண்டிற்கும் ஒரு பூசை வைக்கிறாரா என்று புரியவில்லை. நேரடியாய் படித்தால்தான் சொல்லமுடியும். (லேனா WSWS கட்டுரை தவிர்த்து கூகுளில் தேடினாரா என்று தெரியவில்லை. நான் தேடி படித்த வரையில் கோல்தாகெனை ஏற்றுகொள்ள முடியும் என்று தோன்றவில்லை, ஆனால் கணக்கில் கொள்ள வேண்டியதாகவே தெரிகிறது. ஆனாலும் கூட நேரடியாக படிக்காமல் இன்னமும் எந்த முடிவிற்கும் வர இயலாது.)

ஆனால் டேவிட் நார்தின் பிரச்சனை என்னவெனில் அவர் தன் காலில் தானே கட்டிகொண்டிருக்கும் ட்ராஸ்ட்கியிச சங்கிலி. உதாரணமாய் கட்டுரையின் துவக்கத்தில் ஹோலோகாஸ்டிற்கான காரணங்கள் எளிதான புரிதல்களுக்கு அப்பாற்பட்டதாய் இருப்பதாக, தர்க்கத்திற்கு அப்பால் இருப்பதாகவும் சொல்கிறார். கொஞ்சம் கவித்துவமாய் கூட பேசுகிறார். ஆனால் கட்டுரை முழுக்க அன்று பரிணமித்து வந்த முதாலாளித்துவமே எல்லாவற்றிற்கும் காரணம் என்று நிறுவ படாத பாடு படுகிறார். இப்படி நகைச்சுவையாய் கட்டுரை போய்விடுவதால், அவர் அர்த்தமுள்ளதாய் எதாவது விமர்சனம் வைத்திருந்தாலும், அதுவும் அதில் அடித்து செல்லப்பட்டு விடுகிறது.

சரி, லேனா, டேவிட் நார்த் இவர்களை விட்டுவிட்டு எனது பின்னூட்ட துணுக்கிற்கு வருவோம். நான் ஹிட்லர் மட்டும் எனக்கும் மற்ற பலருக்கும் இருக்கும் ஜெர்மனி பற்றிய முன்னபிப்ராயத்தித்ற்கு காரணமில்லை என்றே சொல்லியிருக்கிறேன். அந்த முன்னபிப்ராயத்துடன் எனக்கு மிக தீவிரமான பிரச்சனைகளும் உண்டு. இது ஒரு உலகளாவிய உணர்வாக இருப்பதையும் காணமுடியும். நானும் இந்த உணர்வை பகிர்ந்து கொண்டாலும், இதன் பின்னுள்ள அரசியலையும் கவனிக்க வேண்டும் என்றும் நினைக்கிறேன்.

ஜெர்மனி மீது மேற்கின் மனநிலை கொண்டிருக்கும் முன்னபிப்ராயத்தை நாமும் பகிர்ந்து கொள்ள வேண்டுமா என்ற கேள்வியும் இருக்கிறது. ஏனெனில் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். ஜெர்மனி ஒரு காலத்திலும் மற்ற பிரிடீஷ், பிரான்ஸ், ஸ்பெயின், போர்சுகிஸ், டச்சு காரர்களை போல ஒரு ஐரோபிய காலனி அமைக்கவில்லை. மீண்டும் வாசிக்கவும். நம்மை போன்ற முன்றாம் உலக நாடுகள் என்று அழைக்கப்படும் நிலப்பரப்பை ஜெர்மனி தவிர்த்த ஐரோப்பா காலனியாக்கியது. அந்த ஐரோப்பாவையே ஜெர்மனி தனது காலனியாக ஆக்கிக் கொண்டது. இதில் ஜெர்மனிக்கு எதிரான கற்பிதங்களும் ஒரு காலனிய மனோபாவமும், காலனிய அடிமை மனோபாவமும் கொண்டது என்பது எனக்கு இருக்கும் ஒரு பார்வை. இதுதான் எனது அடிப்படை பார்வை அல்ல. இப்படி ஒரு பார்வையில் ஜெர்மனி மற்றிய கற்பிதத்தை மறுபரிசீலனை செய்தும் எல்லாவற்றையும் மீள வாசிக்க வேண்டும் என்றும் நினைக்கிறேன். இதை நிச்சயமாய் மார்க்சியர்கள் ஒரு நாளும் சாத்தியமாக்க போவதில்லை.


இன்னும் கொஞ்சம் இன்றய முதாலாளித்துவத்தின் bruttalதன்மை, அது எதிர்காலத்தில் அதிகமாக மட்டுமே இருக்கும் வாய்ப்பு, அது தரப்போகும் அழிவு, தவிர்க்க முடியாமல் மார்க்சையும் அவர் எழுத்துக்களையும் மறுவாசிப்பு உட்படுத்தப் பட வேண்டிய தேவை இதை பற்றி எழுத நினைத்தேன். மணி இரவு ஒன்றாகிவிட்டது. வீட்டிற்கு கிளம்பவேண்டும். அடுத்த பதிவாய் இதை எல்லாம் எழுதலாம்தான். ஆனால் இப்படி எதற்காகவாவது பதில் சொல்ல நேரும் போது இருக்கும் உத்வேகம் பிறகு இருப்பதில்லை (ஈகோ?). பார்போம்!

உள்ளே இடும் முன் லேனாவிற்கு ஒரு கேள்வி. சில வருடங்கள் முன்னே, திண்ணையில் 'திராவிட திண்ணை, மஞ்சள் இந்துத்வம்... 'என்று ஒரு கட்டுரை (அ. மார்க்ஸையும் இடையில் நாலு சாத்து சாத்தி) எழுதியது நீங்கள்தானே? (அது தெரிந்தும் இந்த பதிலை ஏன் எழுதினேன் என்று பிறகு யோசித்து கொள்கிறேன்.)

Thursday, June 29, 2006

இதுதாண்டா விவாதம்!

மாதங்கள் முன்பு சிங்கள கடற்படை தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலெல்லைக்குள் நுழைந்து நடத்திய, இன்று வரை இந்திய அரசினால் சின்ன முணுமுணுப்பினால் கூட எதிர்கொள்ளப் படாத தாக்குதலை தொடர்ந்து நான் எழுதிய பதிவிற்கு வந்தியத்தேவன் முன்வைத்த எதிர்வினை பற்றி இப்படி தொடங்கியிருந்தேன்.

"மீனவர்கள் மீது நிகழ்ந்த தாக்குதலால் (அல்லது இந்நாள் வரை தொடர்ந்து வரும் தாக்குதல்களால்) உந்தப் பெற்று, வந்திய தேவன் பதிவு எழுத வரவில்லை என்பது, வந்தியத்தேவன் உட்பட அவர் பதிவை படிக்கும் அனைவருக்கும் தெரியும் வகையிலே, அவரது பதிவே எழுதப்பட்டுள்ளது. அவர் பதிலளிக்கும் விதத்திலிருந்தே தெளிவாக, இந்திய கடற்படை மற்றும் இந்திய தேசியம் பற்றி காட்டமாய் நான் எழுதியதற்கும், 'இந்திய குடிமகன்களை காக்க ஏன் இத்தனை பெரிய படைக்கு வக்கு இல்லை? கண்டதற்கும் வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பவர்கள் ஏன் இந்த பிரச்சனை குறித்து மௌனமாய் இருக்கிறார்கள்?' என்கிற விதத்தில் சில கேள்விகளை, தடித்த உடைகளை தாண்டி சிலருக்கு உள்ளே கொஞ்சம் உறைக்கும் வண்ணம், கேட்டதற்கு பதிலாகவே அவருடைய பதில் வந்துள்ளது. "

இவ்வாறு நான் எழுதியதை திரித்தல் என்றும் கயமைத்தனம் என்றும் அவர் சொல்லியிருந்தார். நான் குறிப்பிட்டபடி, எனக்கு எதிர்வினையாய்/இந்திய கடற்படைக்கு வக்காலத்து வாங்குவதாய் அல்லாமல், தமிழக மீனவர்கள் மீதான அக்கறையினால் மட்டுமே அவர் எழுதினார் என்பதை, அவர் பதிவில் கோவிந்தா பின்னூட்டங்கள் அளித்தவர்கள் கூட மனதளவில் நம்ப மாட்டார்கள் என்பது ஒரு புறம் இருக்கட்டும். இரண்டு வாரங்களுக்கு முன்பு மீண்டும் சிங்கள கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. ஒருவர் காயமும் அடைந்துள்ளார். கடந்த முறை போல அல்லாமல் இந்த முறை செய்தி சன் நியூஸ், என்டிடிவி, சிஎன்என் ஐபிஎன் வரை எல்லா செய்தி சேனல்களிலும் வாசிக்கப் பட்டது. ஒரு முழுநாள் எல்லா சேனல்களிலும் கீழே ஒரு வரி ஓடிக்கொண்டும் இருந்தது. கலைஞர் கூட்டம் போட்டு மைய அரசிற்கு இது குறித்து கோரிக்கையும் வைத்துள்ளார். (அதற்கு மேல் அவர் என்ன செய்யமுடியும்?) வழக்கம் போல இந்தியாவிடமிருந்த - குறிப்பாக எதிர்காலத்தில் இது நடக்காதிருக்க இலங்கை அரசிற்கு எச்சரிக்கை கலந்த செய்தியளிக்கும் - எந்த எதிர்வினையும் இல்லை. அது தெரிந்த விஷயம்தான், எதிர்பார்த்ததுதான்! தமிழக மீனவர்கள் மீது பாசம் வைத்திருக்கும், மீனவர்களின் பிரச்சனை குறித்த அத்தனை செய்திகளையும் டெஸ்க்டாப்பில் வைத்து 10 பதிவுகள் போட்ட, முன்னாள் கடற்படை வீரருக்கு அதை பற்றி எதுவும் சொல்லத் தோன்றவில்லை. ஆனால் ஸ்ரீகாந்த் பதிவில் இந்தியாவை முன்வைத்து நான் ஒரு பின்னூட்டமிட்ட உடன், ஒரு வசைப்பதிவு எழுதும் obsessionஐ மட்டும் அடக்கி கொள்ள முடியவில்லை. (அவரது பதிவை படித்துவிட்டு இந்த பதிவை தொடரவும்.)

தமிழக மீனவர்களுக்கும் ஈழத்து மீனவர்களுக்கும் மீன் பிடிப்பதில் இருக்கும் பிரச்சனையுடன், சிங்கள கடற்படை தமிழக மீனவர்களை தாக்குவதுடன் முடிச்சு போட்டு, மீனவர்கள் பிரசனையை ஏற்கனவே தீர்த்து வைத்து, அறிவாளிகளின் பாராட்டையும் பெற்றாகிவிட்டது. இப்போது ஈழப்பிரச்சனையிலும் கை வைக்க திட்டமிட்டு, இன்னும் பல பதிவுகள் எழுதப் போகிறாராம். இதையும் ஈழத்தமிழர்கள் மீதான மாளாத காதலால்தான் எழுதினார் என்றே எடுத்துக் கொள்ளவேண்டும். ஆனால் இதை அவரால் தீர்க்க இயலாத வகையில் பிரச்சனை குறித்து ஏகப்பட்ட பேர்கள் வண்டி வண்டியாய் ஏற்கனவே எழுதியுள்ளனர். அதை பற்றி எழுதுவதை விட, என்னிடம் கேட்ட ஒரு கேள்விக்கு பதில் எழுதப் போய், வேறு விஷயங்கள் சேர்ந்து நீண்டு விட்டதால் இந்த பதிவு.

இறந்த கால சாட்சியங்கள் இத்தனை வைத்திருக்கும் வந்தியத்தேவனுக்கு பச்சையாய் திட்டத்தெரியும் என்பது கூட தெரியாமலா எழுத்தில் என் ஜீவனை வைத்திருக்கிறேன்! திட்டுவது மட்டுமல்ல, எனக்கு திட்டாமல் இருக்கவும் - குறிப்பாக வசைகள் மொத்தமாய் தாக்கும் போது மௌனமாய் இருக்கவும்- தெரியும் என்ற விஷயத்தை அவருக்கு புரிய வைக்க முடியுமா?

நான் புலிகளை ஆதரிக்கிறேனா எதிர்கிறேனா, 'சுற்றி வளைத்து தெருவடைக்க மார்'கழி'க் கோலமிடாமல், "இருபுள்ளி ஒரு கோடு' என்று பதில் சொல்ல வேண்டுமாம்? இது போன்ற கேள்விகளுக்கு பதில் என்று ஒன்று இருக்கிறதா என்பது ஒரு புறம் இருக்கட்டும்.

வந்தியத்தேவன், என்னிடம் பதிலை பெற்று என்ன செய்ய உத்தேசம்? 'இரு புள்ளி ஒரு கோடு' என்று 'either with us or against us' என்று மட்டும் புரிந்து கொள்ளும் மொண்ணைத்தனம் உள்ள உங்கள் புத்திக்கு எதை சொல்லி நான் புரிய வைக்க முடியும்? என் நிலைபாடு தெளிவாக மீண்டும் மீண்டும் முன்வைக்கப் பட்டிருக்கிறது. என் எழுத்தை தொடர்ந்து படிக்கும் உங்களுக்கு, உங்கள் குடைக்கு கீழே நின்றால் மட்டுமே என் புலி எதிர்ப்பு புலப்படும் என்ற அளவிற்கு தன் நிலைபாடு சார்ந்த வெறி கொண்டிருக்கும் போது, எதை முன்வைத்து மிகுந்த ஜனநாயக தன்மையை அனுமதிக்கும் என் போன்றவர்களால் விவாதிக்க முடியும்? (கெக்கே பிக்கேவென்று எதையாவது கிண்டலடிக்க வந்தியத்தேவனுக்கு வாய்ப்பு தருவதற்காகத்தான் இந்த வரியை எழுதுகிறேன்.)

இரு புள்ளிகளுக்கிடையில் என் நிலைபாட்டை விளக்க முடியாது, அதையும் வந்தியதேவன் போன்றவர்களிடம் விளக்கும் தேவையும், சாத்தியமும் இல்லை என்றுதான் பதில் சொல்லவேண்டும். என்றாலும் வந்தியதேவன் போன்றவர்கள் - இன்னும் அவர் பதிவை பாராட்டப் போகும் நண்பர்கள் மற்றும் சில மலப்புழுக்கள் - என்னை புலி ஆதரவாளனாகவே பார்த்தால் எனக்கு பிரச்சனை எதுவும் இல்லை. இங்கே மட்டுமல்ல இயல்பு வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் இப்படி நேரடியாக சொல்ல தயங்கியதும் இல்லை.

புலிகளின் நிபந்தனை அற்ற ஆதரவாளர்கள், தமிழ் தேசியவாதிகள் இன்ன பிற சந்தர்ப்பங்களில்தான் புலி பாசிசத்தை முன்வைத்து எதிர்வினை வைக்கவும் எதிர்க்கவும் வேண்டியுள்ளதே ஒழிய, இந்திய தேசிய வெறி பிடித்தலையும், கடற்படை வீரராகவே வாழும் எவரும் என்னை புலி ஆதரவாளனாய் பார்த்தால், மறுக்கும் அவசியம் அறிவுதளத்தில் எனக்கு இல்லை. இது என்னிடம் வந்தியத்தேவன் நேரடியாக கேள்விக்கு பதில்.

அடுத்து ஸ்ரீகாந்த் வாசித்துக் கொண்டது போல் இந்திய ராணுவத்தின் அத்துமீறல்கள், ராஜிவ் படுகொலை இரண்டையும் ஒப்பிட்டு எதையும் பேசுவது என் நோக்கமில்லை. ஒன்றை முன்வைத்து இன்னொன்றுக்கு தர்க்க நியாயம் அளிக்கவும் முயலவில்லை. பிரபாகரன் சரணடைந்து, விசாரணைக்கு உடபடுத்தப் பட்டால் மட்டுமே அர்த்தமுள்ளதாய் எதையும் பேசமுடியும் என்ற பொருள்பட அவர் சொன்னதற்கான எதிர்தர்க்கத்தை மட்டும் நான் வைத்தேன். அரசு என்ற அமைப்பு தன் தவறுகளை ஒப்புகொள்ளும் நேர்மையை கூட காட்டாது. மன்னிப்பு, விசாரணை, குற்றத்திற்கான பிராயசித்தம் (அரசை தண்டிக்கவா முடியும்) என்பதெற்கெல்லாம் அதற்கு பிறகுதான் அர்த்தம் ஏற்பட முடியும். வரிசையான பட்டியல்களின் இறுதியில் ஒரு ஆயுதமும், அதிகாரமும் இல்லாத ஆதிவாசிகள் மீதான ஒரு தாக்குதலுக்கு கூட அரசு பொறுப்பேற்று வருத்தம் தெரிவிக்காத போது, ஒரு இணை அரசை நடத்திகொண்டிருக்கும் பிரபாகரன் விசாரணைக்கு உட்படவேண்டும் என்று சொல்வதன் அபத்தம் பற்றி மட்டுமே பேசியுள்ளேன். (நாட்டில் துப்பாக்கி சூடு நடந்தால், யாராவது அரசியல்வாதி வருத்தப்பட்டு அறிக்கைவிடத்தான் செய்வார். அப்படி எதையாவது எடுத்து போட்டு யாராவது பதில் சொல்வார்களா என்று எதிர்பார்த்தேன். அந்த அளவிற்கு விவஸ்தை கெடவில்லை என்று சமாதானப்பட்ட போது வந்தியதேவனின் பதிவு (அதுவும் கடைசி பத்தி) பார்க்க கிடைத்தது.)

புலிகள் எந்த அளவிற்கு இலங்கை ராணுவத்திற்கு ஈடு கொடுத்தாலும், மேலாதிக்கம் பெற்றாலும், இந்தியாவின் ஆமோதிப்பும் அங்கிகரிப்பும் இல்லாமல் குறிப்பிடத் தகுந்த மாற்றம் -அதாவது ஈழம் அமைவது அல்லது அதற்கு சற்று குறைவானது - எதுவும் நடக்க வாய்ப்பில்லை. சரியாக சொல்ல வேண்டுமானால் அமேரிக்காவின் ஆமோதிப்பு இல்லாமலும் எதுவும் நடக்க வாய்ப்பில்லைதான் என்றாலும், இந்தியாவின் ஆமோதிப்பு இன்னும் முக்கியமானது. தலையிட மாட்டோம் என்று சொல்லி கொண்டு, நடுநிலை வகிப்பதாய் காட்டி கொண்டே சிங்கள் அரசிற்கு மட்டும் எல்லா ஒத்துழைப்பையும் கொடுத்தாலும் -கடந்த யாழ்பாண முற்றுகை போன்ற -க்ளைமாக்ஸ் காட்சியில் இந்தியா உண்மையிலேயே சும்மா இருக்காது என்பதுதான் பலருக்கும் இருக்கும் புரிதல். இந்த பிரச்சனையினாலேயே புலிகள் இப்படி சால்ஜாப்பாகவாவது பேச வேண்டியுள்ளது என்பதையே நான் குறிப்பிட்டேன். மற்றபடி இந்த 'மன்னிப்பு கேட்டலை' போலியானதாக, உளமாற எதுவும் இல்லாததாகவே நானும் பார்க்கிறேன்.

ஆனால் எனது பின்னூட்டம் ஒரு சிக்கலான பிரச்சனையில், நாம் எவ்வளவு தூரம் வறலாற்று சம்பவங்களுக்கு விசாரணை, ஒப்புதல் வாக்குமூலம் என்பதை எல்லாம் வைத்து அணுக முடியும் என்பதை பற்றியது. இந்த பிரச்சனையை (வந்தியதேவனை மட்டும் முன்வைத்து சொல்லவில்லை, பொதுவாய் நடக்கும் எல்லா விவாதத்தையும் வைத்து சொல்கிறேன்) பற்றி விவாதிக்கும் சூழல் இருப்பதாக தெரியவில்லை. தென்னாப்பிரிகாவில், ஒரு வழியாய் தீர்வு போன்ற ஒரு திருப்பு முனை அமைந்த பின், Apartheid இன் போது நடந்த குற்றங்களின் ஞாபகங்களை என்ன செய்வது என்ற கேள்வி இருந்தது. எல்லாவற்றையும் தண்டிக்க வேண்டுமெனில் மக்கள் தொகையில் (கருப்பு வெள்ளை இரு தரப்பாரிலும்) ஒரு பெரிய சதவிகிதத்தினருக்கு மரண தண்டனைதான் விதிக்க வேண்டி வரும். அதே நேரம் பொத்த்தாம் பொதுவாக அதை மறக்கவும் மன்னிக்கவும் முடியாது. அதனால் மக்களின் மன வடிகாலுக்காக ஒரு தோற்ற விசாரணை நடைபெற்று ஒவ்வொருவரும் தங்களுக்கு கொடுமை இழைத்தவர்களை தாங்களாகவே முன்வந்து மன்னிக்க வேண்டிய தீர்வை மேற்கொள்ள வேண்டிவந்தது. (வெள்ளை இனத்தின் இன்னொரு கயமைத்தனமான நாடகம் என்று இதை சொல்பவர்களும் உண்டு.) கிட்டதட்ட அதே நிலமையில்தான் ஈழமும் உள்ளது. பிரச்சனையின் உள்ளே மாட்டியிருப்பவர்கள் மட்டுமின்றி, வெளியே இருப்பவர்களும் எந்த தீர்வையும் நோக்கி நகரவிடமாட்டார்கள் என்பதற்கு இன்று ஒலித்துவரும் எல்லா குரல்களும் சிறந்த எடுத்துக் காட்டுக்கள்.

சரி, இதையெல்லாம் ஒரு அர்த்தமுள்ள விவாதத்தில் பேசுவோம். இப்போது பலரால் பெரிதாய் சிலாகிக்கப் பட்ட வந்தியத்தேவனின் தர்க்கத்திற்கு சாம்பிளாய் அவரது பதிவில் இருந்து..

//1200 இந்திய அமைதிப்படையினர் இலங்கை மண்ணிலே மாண்டனரே... அதற்காகவா அண்டன் பாலசிங்கம் புலிகள் சார்பாக மன்னிப்புக் கோரினார்? அப்படியென்றால் இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த (ஏகோபித்த தமிழ் வலைப்பதிவர்கள் எண்ணுவது போல, எழுதுவது போல) அட்டூழியங்களுக்காக இந்தியப் பிரதமரை மன்னிப்புக் கூற கோரலாம். ஆனால் நடந்ததாய் சொல்லி இன்று நடப்பதென்ன?//

என்ன ஒரு அறிவுபூர்வமான தர்க்கம்! அமைதிப்படையினரால் உயிரிழக்க நேர்ந்த புலிகளின் மரணம் பற்றி பேசும் போது, அதே போரில் மாண்ட இந்திய வீரர்களின் மரணத்தை பற்றி பதிலுக்கு பேசினால், அது தர்க்கம். அமைதி படையினரால் பாதிக்கபட்ட அப்பாவி மக்கள் பற்றி பேசும் போது, புலிகளுடனான போரில் மாண்ட ராணுவ வீரர்கள் பற்றி பேசுவதை குதர்க்கம் என்று கூட சொல்ல முடியாது. குதர்க்கம் என்பது நேரடி தர்க்கத்தவிட இன்னும் அற்புதமான டெக்னிக்.

அடுத்து //ஜப்பான் அன்றைய உலக யுத்தத்தில் ஏனைய நாடுகள் மேல் செய்த அராஜகத்துக்கு இன்றைக்கு மன்னிப்பு கேட்கின்றது.

ஆனால் இந்தியாவோ "அமைதி"ப்படையை இலங்கைக்கு அனுப்பியது. அங்கே யுத்தம் செய்யவா அனுப்பினார்கள்?//

நான் எழுதியதுடன் என்ன தொடர்போ, என்ன எழவு அர்த்தமோ! வாசித்து அக்கறை உள்ளவர்கள் எனக்கு பின்னூட்டத்தில் விளக்கவும்.

கடைசி பத்திகளில்தான் எங்கேயோ போய்விட்டார். மீனவர்கள் பிரச்சனையில் கடற்படையின் பிரதிநிதியாய் மாறி, அவர்களின் செயலற்ற தன்மைக்கு மாறி மாறி விளக்கம் கொடுத்தவர், இப்போது மொத்த இந்தியாவிற்கே பிரதிநிதியாகிவிட்டார்.

//சரி, கேரளாவில், கலிங்கா நகரில், கங்காவரத்தில் கொல்லப்பட்ட எந்த ஆயுதமும் அதிகாரமும் இல்லாத ஆதிவாசிகள் மீதான கொலைக்கு அரசின் ஏதாவது பிரதிநிதி மன்னிப்ப்பு கேட்பாரா?

"ஆஹா கேட்போம் கேட்போம் கேட்போம்... ஹலோ என்ன "Regret" என்று பல வருடங்கள் கழித்து வலிநிவாரணி விளம்பரம் போல் 'போயே போச்சு'... 'போயிந்தே'... 'It's Gone'. சொல்வோம் சொல்வோம் சொல்வோம்...ஆனால் என்ன செய்வது "மறக்கவோ மன்னிக்கவோ முடியாது" என்று கவிதை பாடுவார் சிலர்... சில (வோல்கார்) அமைப்புகள்...//

என்ன தர்க்கம், என்ன அறிவு! இந்த லட்சணத்தில் என் தர்க்கத்தை பற்றி இணையம் அறியுமாம்! இணையமா? உலகமே அறியும்! இப்போது கொஞ்சம் தெரியும், எதிர்காலத்தில் இன்னும் விவரமாக அறியும். இப்படி எழுதுவது திமிராக தோற்றமளிக்கலாம். ஆனால் அதிகாரத்திடமும், கீழ்மையிடமும் கொள்ள வேண்டிய ஆணவம் பற்றி ஜெயகாந்தனும், ஜெயமோகனும் சொன்ன விஷயங்களில் எனக்கும் ஒப்புதல் உண்டு. (குண்டக்க மண்டக்க கேள்விகளை இப்போது கேளுங்கப்பா!)

Site Meter