கூத்து!

உரசலாவது கேட்கட்டும்!

Tuesday, March 21, 2006

மூன்றாவது பதிவு.

தமிழ்மணத்தில் பதிவை சேர்க்க மூன்று பதிவுகள் படையல் கேட்கிறது. அதனால், எப்படியும் நிறய பதிவுகள் போடப்போகிறோம் என்ற தைரியத்தில், இப்படி ஒரு பதிவு போட்டு சாமியை ஏமாற்றுவது குற்றமல்ல என்று தோன்றுகிறது. இங்கே பின்னூட்டமாய் சேமிக்காத எனது அண்மைக்கால பின்னூட்டங்களை இட்டிருக்கிறேன். குறிப்பாக ரவி ஸ்ரீனிவாஸ் பற்றி காட்டமாக எழுதியவை. இது குறித்து பேச, இன்னொரு சந்தர்ப்பம் அல்லது கட்டாயம் நிச்சயமாய் ஏற்படும் என்பதை சொல்லவும் வேண்டுமோ?

10 Comments:

Blogger ROSAVASANTH said...

http://seythi.net/2006/02/21/53

அருந்ததி பரிசை நிராகரித்தது பற்றி எனக்கும் சில கருத்துக்கள் இருக்கின்றன என்றாலும், ரவி ராய் பற்றி கூறுவது கண்டு ரொம்பவே (எரிச்ச்லையும் மீறி) சிரிப்பு வருகிறது. வலைபதிவின் பின்னூடங்களிலும் (தன் பதிவுகளிலும்) வெறும் காக்காய் எச்சம் மட்டும் தொடர்ந்து போட்டு வருபவர், இதுவரை ஆழமான முறையில் ஒரு பதிவு கூட எழுதாதவர், தன்னை ஏதோ தமிழின் ஏகபோக அறிவுஜீவியாய் எண்ணிக்கொண்டு எல்லாவற்றை ப்ற்றியும் வெற்று தீர்புகளை அளிக்கும் ஆபாசத்தை எப்போஒது நிறுத்தப் போகிறார் என்று தெரியவில்லை.

ராயின் புத்தகம் இலக்கியமில்லை என்பதில் பிரச்ச்னையில்லை, அதை போலெமிக்ஸ் என்கிறார். ராயின் கட்டுரைகளில் அரசு என்ற நிறுவனத்தின் அதிகாரம் குறித்த பல கட்டமைப்புகளை,அதன் அர்தங்களை கற்பிதங்களை தொடர்ந்து கட்டவிழ்த்து வருவதை காணலாம். நர்மதா போராட்டத்தை முன்வைத்ததும், வழக்கமான கம்யூனிஸ பாணியிலிருந்து விடுபட்டௌ ஏகாதிபத்தியம் பற்றி அவர் எழுதி வருவதும் உதாரணத்திற்கு. ரவி போன்றவர்கள் விரும்பும் ஆதாரம் வேண்டுமெனில் சாம்ஸ்கி அருந்ததி பற்றி சொன்னதை குறிப்பிடலாம். இன்னும் பல உதாரணங்கள் இணையத்தில் தேடுபவருக்கே கிடைக்கும். ராயின் எழுத்தை பற்றி மொட்டையாய் குறிப்பிடுள்ளது ரவியின் சின்னததன்ம் அன்றி வேறு எதுவும் இல்லை. இத்தனை நாட்கள் இல்லாமல் இப்போது திடீரென்று இஸ்லாம் பற்றி விமர்சனமாய் (அவ்வாறு எழுதியவர்களை ஒருகாலத்தில் திட்டிவிட்டு) எழுதிவருவது கூட ரவியின் ஈகோ சம்பந்த பட்ட, வலைப்பதிவில் ஏற்பட்ட சில சில்லரி சண்டைகளே காரணம். (அங்கேயும் காக்காய் எச்சம் மட்டுமே விழுகிறது என்பது வேறு விஷயம்.)

அருந்ததியின் எழுத்துக்கள் உலகமெங்கும் அதிர்வுகளை ஏர்படுத்தியிருக்கிறது. குட்டி பூர்ஷ்வா சமூகத்தின் பிரஞ்ஞையை, மனசாட்சியை உலுக்கியிருக்கிறது. அதை மிகவும் அறிவுரீதியாய் தேவையான உணர்ச்சி கலந்து செய்திருக்கிறது. கண்டதையும் படித்து செரிக்காமல் ஏப்பம் மட்டும் விடும் ரவி போன்றவர்கள் அணுகமுடியாத தளத்திலே அருந்ததி இயங்கி வருகிறார்.

அருந்ததி பரிசை நிராகரித்தது குறித்து வழக்கமான அற்ப வாதங்களை (மற்றதை ஏன் ஏற்றுகொண்டார், அப்போது ஏன் ஒப்புகொண்டார் என்பதை) மீறி எதுவும் வரவில்லை. அருந்ததி உலகின் எல்லா அதிகாரத்தின் அடக்குமுறைகளுக்கு எல்லாம் சரியான விகிதத்தில், ஒரே மாதிரியான வகையில், எதிர்வினை செய்வதாக தன்னை சொல்லிகொள்ளவில்லை. வாழ்தலின் சமரசங்கள் அதில் நாம் தேர்ந்தெடுத்து செய்யும் சில எதிர்வினைகள் எதிர்ப்புகள் இது குறித்த மிகுந்த சுய நினைவுடனேயே அவருடய எல்லா எழுத்துக்களும் திகழ்கின்றன. அது குறித்த (இதற்கு முன் பெரியார் போன்ரவர்களிடம் கண்ட) ஒரு சுய பிரஞ்ஞையை அவரிடம் காணமுடியும். அந்த வகையில் (இந்திய அரசிடம் கூட) செய்துகொண்ட எத்தனையோ வாழ்வின் சமரசங்களுக்கு நடுவில், இந்த சந்தர்ப்பத்தில் தனக்கௌ அளிக்கப்பட்ட பரிசை ஏற்றுகொள்ள இயலாததை கூறி(அதே நேரம் பரிசளித்தவர்கள் மீதான தன் மரியாதையை சொல்லி) நிராகருத்துள்ளார். இது எத்தனி தூரம் விவேகமான முடிவு என்பது விவாததுக்கு உரியது. ஆனால் அருந்ததியின் அக்கறை தலித் மற்றும் ஆதிவாசி மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிரானது. அது குறித்த எந்த அக்கறையும் இல்லாமல் (அப்படி இருப்பதான சாயத்துடன்) சில மட்டையடி கேள்விகளை மீறி அது குறித்து பேச இயலாத ரவி போன்ரவர்கள், ஒரு அறிவுஜீவி பாவனையுடன் அருந்ததி குறித்து தீர்பளிப்பது அற்பமானது. இங்கே பின்னூட்டமிட்டுள்ள ஒரு சமுத்ராவின் தளத்தில்தான் ரவியின் சிந்தனையும் உள்ளது. இதில் எனக்கு அச்சரியம் இல்லை. தெரிந்த விஷகயம்தன். இன்னமும் மற்ற நண்பர்கள் இவரை சீரியசாய் எடுத்துகொள்வதுதான் வேடிக்கையாய் உள்லது.

(சுரதாவில் தட்டியதில் வரும் எழுத்து பிழைகளுக்கு மன்னிக்கவும்.)

**************************************

ரவி முன்வைப்பது போல் அவுட்லுக் கட்டுரி அருந்ததி பற்றி குறை கூறியதாக தெரியவில்லை. அருந்ததி ப்ற்றி மிக மரியாதையுடன் நேர்மறையாகவே எழுதியுள்ளது. ரவி அற்பத்தனமாய் தீர்பளித்துள்ளது போல், அருந்ததி பரிசை நிராகரித்தை ‘ஸ்டண்ட்’ என்றூம் சொல்லவில்லை. அது தவிர ” Mahasweta devi has spent years in fighting for rights of tribals. Her views cannot be brushed aside lights……. Mahaswta Devi’s arguments make more sense. ” என்று சொல்வதை பார்த்தால் மகாஸ்வேதா தேவி ஏதோ கருத்து சொன்னது போல் தோன்றும், ஆனால் கட்டுரையில் மகாஸ்வேதா தேவியின் கருத்தாக ஒரு வரி மட்டுமே உள்ளது. அதுவும் பரிசு குறித்து அல்ல, நமக்கு இருக்கும் ப்ரிவிலேஜ் ஆதிவாசிகளுக்கு இல்லாதது பற்றி. ரவி கட்டுரையை படித்தாரா அல்லது வழக்கம் போல் லிங்க் மட்டும் கொடுத்தாரா என்று தெரியவில்லை.

***************************

சுந்தரவடிவேல் எழுதியது : பதிவுக்கு நன்றி.
அருந்ததி ராயின் போராட்டக் குணம் இந்திய அரசுக்கெதிரானது மட்டுமன்று. அமெரிக்காவிற்குச் சென்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், அதன் பிழைகளையும் தைரியமாக எதிர்த்திருக்கிறார். அவரது, “போராட்டங்களை ஒடுக்குவது எப்படி” என்பது குறித்தவொரு உரையை முன்பொருமுறை தமிழாக்கியிருந்தேன். அதன் சுட்டி:

http://bhaarathi.net/sundara/?p=136

அதிலிருக்கும் 3 பகுதிகளையும் படித்தால் ராய் பணி புரியும் தளமும், சாகித்ய அகாடமி விருதை அவர் மறுத்ததற்கான காரணங்களையும் விளங்கிக் கொள்ள முடியும்.

//(இதற்கு முன் பெரியார் போன்ரவர்களிடம் கண்ட) ஒரு சுய பிரஞ்ஞையை அவரிடம் காணமுடியும்.//
இதை உணர முடிகிறது.

ரவி ஸ்ரீநிவாஸ் எழுதியது:

i am not going to comment on this anymore in this forum

(பிறகு ஒட்டியது)

http://www.outlookindia.com/full.asp?fodname=20060202&fname=paromita&sid=1&pn=1

Two Awards, Two Authors, Two Activists
Arundhati Roy refused the Sahitya Akademi award. Mahasweta Devi is ‘overwhelmed’ by the Padma Vibhushan. One takes pride in being called a writer-activist, the other says the term makes her flinch.
PAROMITA SHASTRI

Mahasweta Devi is “overwhelmed” by the Padma Vibhushan. Well, she’s getting on in years, isn’t she? Having crossed 80 winters now, this lifetime-activist-writer is likely to look at national awards a little more benignly, even awards that are distributed so freely (the Padma awards are up this year to 106 from 96 last year and 86 in 2004) by a state that habitually represses dissent and protest in any form and sits on the fence on controversial globo-political issues like big dams and Iraq and Afghanistan.

But wait, what have we here? Mahasweta also told a journalist, who first informed her of the award (not a state official), that there were other people more deserving and also that she’d “like the same amount of cooperation from the government to help achieve [her] objective of ensuring the welfare of tribals”. Not one to mince words even at 81, is she?

In fact, the recent furore over Arundhati Roy declining the Sahitya Akademi award (non-fiction) must seem embarrassing for Mahasweta, who’s got a bagful of them. She received the Akademi (for fiction, Aranyer Adhikar) in 1979, Padmashree in 1984, the Bharatiya Jnanpith in 1996 and the Magsaysay in 1997, the officer desarts et des lettrea (officer of arts and literature), France’s second highest civilian award, in 2003. And now, the second highest civilian award, the Padma Vibhushan from a government that she thinks has not only not done anything for tribal people but also evicts them with alacrity whenever it needs a piece of their land.

The comparisons between Arundhati and Mahasweta are inevitable. Both work for the voiceless people and have a large body of non-fiction, and both are known as writer-activists, though one likes to be so addressed and the other says the term makes her flinch. And yet, it is one of those ironies, that while one’s activism makes the waves, the other soldiers on, away from media spot-light.

Ask any one, or at least the readers of what is called IWE, and they would know what activist Arundhati Roy’s causes are (even if they, unfortunately, never get debated or dwelt on in each furore her every action is greeted by), but a mention of Mahasweta Devi’s name still gets quizzical and confused raising of eyebrows. So perhaps the bare essentials. need to be stated: Mahasweta Devi, apart from being an acclaimed writer, has toiled almost all her life trying to get denotified tribals — primarily the Kheria Shabar community of Purulia, the Lodhas of Midnapore and the tribals in Chhotanagpur — a better life and knowledge of basic human rights. Teaching them how to farm fish, for instance, or get admitted to a school, how to file an FIR, pick up some income-earning activity, and so on. For 20 years now, she’s been editing a magazine called Bortika (the lamp) where the writing is primarily by tribals. The Magsaysay award citation put it in a nutshell: “For her compassionate crusade through art and activism to claim for tribal peoples a just and honourable place in India’s national life.'’

Every one perhaps works differently for the causes they espouse. Some seek to bring attention to them by stirring up a debate in the media and some go out of their way to stay away from the limelight so that they can carry on with the work they have chosen to do. Arundhati’s opinion of the Akademi may or may not be justified. But it is definitely shared by many including the half a dozen writers who have refused an Akademi award in the past. Perhaps even by Mahasweta.
But then, Mahasweta wouldn’t believe in passivity or rejection, but action. She herself had no objection when a band of Left-leaning writers put up her name as a presidential candidate for the Akademi three years ago. She lost to Gopi Chand Narang who claimed his election as a victory of “real secularists over pseudo-secularists”. U R Ananthamurthy, one of her leading supporters, said later that Mahasweta put her name up only “to defend the freedom of writers. These are difficult times (the BJP rule) and she would have taken a principled stand”. As she had herself said in 1997 talking to us: “These are difficult times, these are the times to work.” And she worked behind the scenes, getting prominent citizens to intervene and write to the President when Gujarat burned in 2002.

Indeed, Mahasweta’s life gives lie to the award-snobbery that exists among intellectuals all over the world; the belief that awards, especially state awards, are politically motivated and mostly go to the undeserving. Gujarati litterateur Suresh Joshi felt Sahitya Akademi award had no cultural value. Sisir Bhaduri, doyen of Bengali theatre, had refused the Padma Vibhushan citing two reasons. The first was on principle: he felt state awards merely help create a sycophantic brigade. The second was personal: by accepting, he did not want to encourage the impression that the government was serious about the importance of theatre in national life. Probably the most controversial event in Jean Paul Sartre’s very politicised and exciting life was his refusal to accept the Nobel awarded by “the bourgeois society”.

Yet anti-bourgeois or communist sentiments are not enough to be disdainful of awards or even, as painter Claude Monet wanted, “to be really undeserving”. Mikhai Sholokov called the Nobel an imperialist award when Boris Pasternak was named (he refused), but didn’t have any problem accepting it when he himself was awarded with it a few years later. The Magsaysay award carries a lot of prestige in Asia and has gone to some very genuine names who obviously don’t associate the award with Ramon Magsaysay, the former Philippine president who had brutally put out a farmers’ movement with US help. In the media hullabaloo that has followed Arundhati’s refusal, it is important not to lose sight of the real issue: it is not who rejected (a beautiful and intelligent woman who earned one of the biggest advances in publishing history and likes to court arrest), but why.

What writers hold dearest is their freedom of expression and Roy deserves respect for standing up for what she believes in. It’s a choice that she has made. Fortunately, unlike the tribals and the dispossessed that she fights for, she has always had the freedom to make the choice. So have we. As Mahasweta says: “Independence is for our class. I belong to a privileged class. We have got education and everything. I am getting prizes. What have the tribals got? Nothing.” When the camera or the recorder stops rolling at the protester or the protest, it is perhaps time to question if that that freedom and that precious privilege is getting wasted. In the abysmal silence of ignorance and apathy among the educated, something that Mahasweta has regretted all her life, even the smallest action counts.

4:04 AM  
Blogger ROSAVASANTH said...

கடைசியாய் செய்தி.நெட்டில் எழுதியது,

///The comparisons between Arundhati and Mahasweta are inevitable. Both work for the voiceless people and have a large body of non-fiction, and both are known as writer-activists, though one likes to be so addressed and the other says the term makes her flinch. And yet, it is one of those ironies, that while one’s activism makes the waves, the other soldiers on, away from media spot-light….

Arundhati’s opinion of the Akademi may or may not be justified. But it is definitely shared by many including the half a dozen writers who have refused an Akademi award in the past. Perhaps even by Mahasweta.
But then, Mahasweta wouldn’t believe in passivity or rejection, but action. She herself had no objection when a band of Left-leaning writers put up her name as a presidential candidate for the Akademi three years ago…..

What writers hold dearest is their freedom of expression and Roy deserves respect for standing up for what she believes in. It’s a choice that she has made….///

“i am not going to comment on this anymore ” என்று சொல்லிவிட்டு, அவுட்லுக்கின் முழு கட்டுரையையும் வெட்டி ஒட்டி கமெண்ட் செய்த ரவிக்கு பாராட்டுக்கள். ஆனாலும் வெட்டி ஒட்டியதன் தாத்பர்யம் இன்னமும் புரியவில்லை.கட்டுரை சில விமர்சனங்களை பூடகமாய் சொன்னாலும், அடிப்படையில் அருந்ததி பற்றி மிகுந்த மரியாதையுடன் பேசுகிறது. ரவியைப்போல அவர் பரிசை நிராகரித்ததை கொச்சைப் படுத்தவில்லை. ரவி தனது பின்னூட்டத்தில் அவுட்லுக் கட்டுரை ஏதோ அருந்ததியை தாக்கி எழுதியுள்ளது போன்ற தொனியில் எழுதியுள்ளதால், அவர் உண்மையில் கட்டுரையை படித்தாரா என்று கேட்டிருந்தேன். இப்போதும் கூட வெட்டி ஒட்டும் முன் ஒரு முறை படித்தாரா என்ற சந்தேகம் உள்ளது.

செய்திகள், உங்கள் மறுமொழிக்கு நன்றி.சில வார்த்தைகளை தவிர்க்க நானும்தான் விரும்புகிறேன் - குறைந்த பட்சம் சுட்டியதை விட்டு விட்டு அதை பிடித்து கொண்டு சிலர் தொங்குவார்கள் என்று தெரியும் என்பதால். ஆனால் இந்த (காக்காய் எச்சம் போடும் வேலையை, அதையும் அறிவு ஜீவி பாணியில் போடுவதை) ரவி ரொம்ப நாளாய் செய்துவருகிறார். அதனால் வரும் எரிச்சல். ஆரம்ப காலங்களில் மிகுந்த பொறுமையுடந்தான் பேசியுள்ளேன். மற்றபடி இதனால் விவாதம் திசை திரும்பினால் மன்னிக்கவும். நன்றி.

4:05 AM  
Blogger ROSAVASANTH said...

http://urpudathathu.blogspot.com/2006/03/blog-post.html

பாஸ்டன் பாலாஜி:அருந்ததி ராயின் கட்டுரை எனக்கு நகைச்சுவையுணர்வையே அளிக்கிறது. varnam: Arundhathi Roy turns humor writer (கார்டியன், ஹிந்து போன்ற பல இதழ்களில் இந்தக் கட்டுரை சிண்டிகேட் செய்யப்பட்டிருக்கிறது.)

She wants to emulate literary activist luminaries. Thatz a good idea. By rejecting Sahitya prize probably like Sartre who rejected Nobel lit. prize (for a strong reason). But, she does not have a similar consistent stature; just by emitting the same action, she strives to achieve it...

ரவி ஸ்ரீனிவாஸ்:She wants to emulate literary activist luminaries. Thatz a good idea. By rejecting Sahitya prize probably like Sartre who rejected Nobel lit. prize (for a strong reason). But, she does not have a similar consistent stature; just by emitting the same action, she strives to achieve it...

Dont you know that this is a politically incorrect stand.So
you better revise it and start
telling Bush Murdabad,Arundathi
Roy Zindabad :)

நான் எழுதியது:
பாஸ்டன் பாலாஜிக்கு சிரிப்பு வந்ததிலும், அவர் வர்ணம் 'கட்டுரைக்கு' லிங்க் தருவதிலும் ஆச்சரியம் எதுவுமில்லை. ஏற்கனவே அரஃபத் இறந்த போது எழுதிய கட்டுரையிலும், 'வான் புலிகள்' பற்றி எழுதிய போதும் அவர் கருத்துக்கள் என்னவென்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் இதுவரை 'எதிர்ப்பு அரசியல்' பேசுவதாய் வேஷம் போட்டு வந்த ரவி ஸ்ரீனிவாஸ் இங்கே முழுமையாய் (பாலாஜி மற்றும் வர்ணம் கட்டுரையுடன்)ஒத்து போவதும்(அவரின் அச்சுபிச்சு நகைச்சுவை கமெண்டை அப்படித்தான் எடுத்துகொள்ள வேண்டும்) அதை போட்டு உடைத்திருப்பதும் முக்கியமானது. அது எப்படியும் கிடக்கட்டும். பிரச்சனை இவரை ஏதோ பாதுக்காக்கப் படவேண்டியவர் போல மற்ற நண்பர்கள் (பெயர் சொல்ல நமக்கு என்ன தயக்கம், தங்கமணி, சுந்தரமூர்த்தி, சங்கரபாண்டி, பெயரிலி போன்றவர்கள்) வக்காலத்து பல இடங்களில் வாங்குவதுதான் வேடிக்கை.

(ஒருவேளை இதில் வேடிக்கை எதுவும் இல்லையோ?)

பெயரிலி எழுதியது: அண்ணே ரோசா வசந்து, பதிவூரிலே அடிக்கடி தலை காட்ட முடிகிறதாயில்லை. புச்சின் பற்றியோட்டுக்கு பயந்து ஒளிஞ்சிருக்கிறேன். புச்சு நாட்டிலே இல்லையே இப்பவாச்சும் தலையைக் காட்டுவோமேயெண்டு வந்தா, இப்பிடியா இழுப்பீங்க? ;-)

வேண்டுமானால், "தாங்கத் தங்கத்தூண்கள் இருக்கின்றன; தாக்கத் தெருநாய்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு ரவி சீனிவாசினைத் தாங்கவுமில்லை; தாக்கவுமில்லை" என்று மாறுமிரட்சி தேய்சீய தீராவிட gangcross கட்சிகள் மாதிரி வக்கொழிந்த தமிழிலே நான் வசனம் பேசலாம்;-)

விசயத்துக்கு வருவோம். சீனிவாசு சொல்வதிலே சிலதை ஏற்றுக்கொள்ளமுடிகின்றது (சமக்கிருதம் குறித்த நகைச்சுவைப்பதிவினை; தலித்தினைப் பற்றித் தலித்தான் எழுதவேண்டுமென்ற படைப்புவெளிக்குறுக்கம் தேவையில்லை என்பதை); சிலவற்றினை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை (விபி சிங்-மண்டல் கமிஷன் குறித்த அவரின் கருத்தும் நிலைப்பாடும்; அருந்ததி ராய் சாகித்ய அகடமியினை நிராகரித்து குறித்த கருத்தினை).

அருந்ததி ராயின் புக்கர்பரிசு பெற்ற புதினம் பெரிதாக புதிதுமாதிரி தோன்றவில்லை. வாசகர்வட்டம் தமிழிலே தந்த மலையாளப்புதினங்கள் போலவும் நீல பத்மநாபன் எழுதிய புதினங்கள்போலவுமே ஓரளவுக்கு எனக்குப் பட்டது (98 இலே தமிழ்நெற்றிலே இது பற்றி ஒரு அஞ்சற்பதிவிட்டதாக ஞாபகம்). சொல்லப்போனால், ஈஎம்எஸ்ஸினைப் பகிடி பண்ணியிருக்கின்றாரென்று ஆத்திரம் கொஞ்சம் வந்ததுதான் மிச்சம். காலப்போக்கிலே அவருடைய 'பெயரை' எனக்கும் சரிதானெனத் தோன்றிய பக்கங்களிலே நின்றி சில விடயங்களிலே வாதிடப் பயன்படுத்தியது பிடித்துக்கொண்டது (நர்மதா அணை, 'பூகோளவடக்கு வாழ்கிறது-தெற்கு தேய்கிறது' விவகாரங்கள்). குறிப்பாக, சில ஆண்டுகளுக்கு முன்னால், பில் மோயரின் Now நிகழ்ச்சியிலே, துணிச்சலாக செப்ரெம்பர் 11 இன் பின்னான தன் கருத்துகளைத் தெளிவாகச் சொன்னது பிடித்திருந்தது. அந்தளவிலே அவரிலே மிக மதிப்புண்டு.

மற்றப்பக்கத்தாலே, சாகித்ய அகடமி எல்லா மொழிகளிலும் துக்கடா எழுத்தாளர்களுக்கும் 'துணை'யிருப்பின் வழங்கப்படும் 'ஆண்டுப்பெட்டி'யாகத்தான் எனக்குப் படுகிறது. (மகன் தந்தைக்காற்றும் உதவி முடுக்கப்பட்டும் கிடைக்காமலே செத்துப்போன மொழிவாரி எழுத்தாளர்களை இங்கே கவலையுடன் நினைவு கூர்வோமாக). இந்நிலையிலே கிடைத்தும் மறுத்த அருந்ததி ராய், சாத்தர் உச்சத்துக்கு சிந்தனாவாதியோ இலக்கியவாலியோ அண்ணல் பிரதிவாதி பயங்கரமோ இல்லாவிட்டாலும் பரவாயில்லை... அதனால், சாகித்ய அகடமி பரிசு புனிதமோ புதினமோ பட்டிருக்கின்றதென்று நினைத்துக்கொள்கிறேன். சொல்லப்போனால், சாத்தரிலும்விடச் சிறப்பாக, மார்லன் பிராண்டோ மாதிரியாக, அகடமி விழாவழங்குமேடையிலே ஏதாவது அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கலாமேயென்று தோன்றுகின்றது.

4:08 AM  
Blogger ROSAVASANTH said...

http://ravisrinivas.blogspot.com/2006/03/blog-post_05.html#comments
ஒரே இடத்தில் எத்தனை எச்சமய்யா? கொஞ்சம் மரத்துக்கு மரம் தாவி தாவி போடப்பிடாதா?

தன்னை 'தலித் எழுத்தாளனாக கருத வேண்டும்' என்று சுஜாதா சொன்னதற்கு எதிர்வினையாய் அழகிய பெரியவன் எழுதியிருக்கிறார். அவர் எங்கேயும் 'தலித் அல்லாதவர்கள் தலித் பற்றி எதுவும் எழுதக் கூடாது' என்று சொன்னதாகவும் தெரியவில்லை. தலித் வாழ்வை எழுத தேவையான தீவிரத்தை கோடிட்டு காட்டுவதாக மட்டுமே அவர் எழுதியது உள்ளது. அழகிய பெரியவன் சொன்னதை(சாரம்சவாதம் என்பதாக) முற்றிலும் திரித்து, தனக்கும் புரியாமல் யாருக்கும் புரியாமல் ஒட்டுமொத்தமாய் காக்காய் எச்சங்களை இங்கே போட்டு, இதனால் யாருக்கு என்ன அய்யா பயன்? Breathless உளறல் என்பதற்கு ஒரு உதாரணம் வேண்டுமென்றால் இதோ

"தலித் என்பதை எப்படி சுய வரையறை செய்து கொள்வது, தலித் என்றால் இப்படித்தான் என்று கருதிக்கொள்ள வேண்டுமா என்ற கேள்வியும் இருக்கிறது.என்னை முட்டாள் என்று பிறர் கூறினால் அல்லது வரையறை செய்தால் நான் அதை ஏற்க வேண்டுமா என்ன.தலித்கள் இன்று உயர்பதவிகளில்இருக்கிறார்கள், பேராசிரியர்களாவும், அறிவு ஜீவிகளாகவும் இருக்கிறார்கள். ஜாதிய அமைப்பில் சில வேலைகள் தலித்களுக்கென்று ஒதுக்கப்பட்டது என்றிருப்பதை எதிர்த்து நிராகரிக்க வேண்டும். அதுதான் முக்கியம்."

மீண்டும் இவர் எழுதுவதை எல்லாம் சீரியஸாய் எடுத்துகொண்டு, இவரை இடதுசாரி என்று சொல்லி மதிப்பளிப்பவர்ளின் கேனத்தனம்தாம் வேடிக்கையாய் இருக்கிறது.

4:09 AM  
Blogger ROSAVASANTH said...

http://ravisrinivas.blogspot.com/2006/03/blog-post_05.html#comments
ஒரே இடத்தில் எத்தனை எச்சமய்யா? கொஞ்சம் மரத்துக்கு மரம் தாவி தாவி போடப்பிடாதா?

தன்னை 'தலித் எழுத்தாளனாக கருத வேண்டும்' என்று சுஜாதா சொன்னதற்கு எதிர்வினையாய் அழகிய பெரியவன் எழுதியிருக்கிறார். அவர் எங்கேயும் 'தலித் அல்லாதவர்கள் தலித் பற்றி எதுவும் எழுதக் கூடாது' என்று சொன்னதாகவும் தெரியவில்லை. தலித் வாழ்வை எழுத தேவையான தீவிரத்தை கோடிட்டு காட்டுவதாக மட்டுமே அவர் எழுதியது உள்ளது. அழகிய பெரியவன் சொன்னதை(சாரம்சவாதம் என்பதாக) முற்றிலும் திரித்து, தனக்கும் புரியாமல் யாருக்கும் புரியாமல் ஒட்டுமொத்தமாய் காக்காய் எச்சங்களை இங்கே போட்டு, இதனால் யாருக்கு என்ன அய்யா பயன்? Breathless உளறல் என்பதற்கு ஒரு உதாரணம் வேண்டுமென்றால் இதோ

"தலித் என்பதை எப்படி சுய வரையறை செய்து கொள்வது, தலித் என்றால் இப்படித்தான் என்று கருதிக்கொள்ள வேண்டுமா என்ற கேள்வியும் இருக்கிறது.என்னை முட்டாள் என்று பிறர் கூறினால் அல்லது வரையறை செய்தால் நான் அதை ஏற்க வேண்டுமா என்ன.தலித்கள் இன்று உயர்பதவிகளில்இருக்கிறார்கள், பேராசிரியர்களாவும், அறிவு ஜீவிகளாகவும் இருக்கிறார்கள். ஜாதிய அமைப்பில் சில வேலைகள் தலித்களுக்கென்று ஒதுக்கப்பட்டது என்றிருப்பதை எதிர்த்து நிராகரிக்க வேண்டும். அதுதான் முக்கியம்."

மீண்டும் இவர் எழுதுவதை எல்லாம் சீரியஸாய் எடுத்துகொண்டு, இவரை இடதுசாரி என்று சொல்லி மதிப்பளிப்பவர்ளின் கேனத்தனம்தாம் வேடிக்கையாய் இருக்கிறது.

4:09 AM  
Blogger ROSAVASANTH said...

http://vasanthanin.blogspot.com/2006/03/blog-post.html

திருமாவின் பேட்டி அதிமுக கூட்டணியில் உள்ள, தேர்தலை சந்திக்கும் ஒரு அரசியல்வாதியினுடையதாகவே, இருந்தாலும், நினைவில் தென்படும் அத்தனை அரசியல்வாதிகளின் பேட்டிகளைவிட நேர்மையானதாக உள்ளது. தேர்தல் அரசியலில் இறக்கிவிட்டதென்றாகிய பின், எல்லாருக்கும் இருப்பது போன்ற, சந்தர்ப்பவாதத்தை கைகொள்ளும் உரிமை, தலித் அரசியல் பேசுவதால் மட்டும் அவருக்கு இல்லாமல் போய்விடாது. அவர் இன்னமும் மற்றவர்களை விட சந்த்ர்ப்பவாதத்திலும், அதை நியாயபடுத்துவதிலும் தேவைப்படும் நேர்மைகுறைவை குறைவாக கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. இத்தனை விவேகம் உள்ளவர் குஷ்பு பிரச்சனையில் போட்ட ஆட்டம் மட்டுமே இன்னமும் நெருடுகிறது.

பேட்டியை இங்கே தந்ததற்கு நன்றி.

4:10 AM  
Blogger ROSAVASANTH said...

தங்கமணியின் அண்மை செஞ்சுரி பதிவுகளை முன்வைத்து விரிவாய் எழுத நேரிடலாம் என்பதால் அங்கே நான் இட்ட எச்சங்களை இப்போது இங்கே இடவில்லை.

4:11 AM  
Blogger ROSAVASANTH said...

http://neposarakku.blogspot.com/2006/03/blog-post_21.html

அந்த பதிவில் (நீங்கள் லிங்க் கொடுத்திருக்கலாம்)எழுதியிருப்பதை போலவே, அப்படியே நான் பார்ப்பதில்லை என்றாலும், இந்தியாவின் எந்த பகுதியிலும் இல்லாதபடி தமிழ்நாட்டில் மட்டும், பார்பனர்கள் தங்களுக்கு என்று ஒரு தனித்துவமான (பல இடங்களில் சமஸ்கிருதமயப்படுத்தப்பட்ட, அந்த வட்டாரத்துடன் இயைந்து போகாமல், அதே நேரம் தமிழகம் முழுக்க ஒரு யூனிவர்சல்தன்மையுடன்) பாஷை வைத்திருப்பதன் பிண்ணணி என்ன என்பதை பற்றி கேட்பதிலும், விவாதிலும் என்ன நாற்றம் அடிக்கிறது என்று என் சிற்றறிவிற்கு புரியவில்லை. 'தண்ணி' என்று சொல்லக்கூடாது 'ஜலம், தீர்த்தம்' என்றுதான் சொல்லவேண்டும் என்று தங்கள் குழந்தைகளுக்கு புகட்டுவதை பற்றி பேசினால், புகட்டுவதில் உள்ள வெறுப்பு தெரியாமல், அதை பேசுவது இங்கே உள்ளவர்களுக்கு துவேஷமாய் தெரியும்.

இதே பிரச்சனை பற்றி உஷா போன்றவர்கள் (மேலோட்டமாக) எழுதினார்கள். அது முற்றிலும் பார்பன தன்னிலை சார்ந்து இருந்தது. மற்றவர்கள் வேறு மாதிரி பார்பதை வெளியிலிருந்து(உண்மையில் அதன் உண்மை நிலவரம் சரியாகக் கூட தெரியாமல்) அது குறித்து அதே மேலோட்டத்துடன் தங்கள் பார்வையில் கருத்துக்களை சொல்கிறார்கள். அதை விவதிப்பது என்பதே சாதிக்கு அப்பாற்பட்டவர்களாக பாவனை செய்யும் 'மஞ்சள் ரத்த' (நேரடி அருத்தத்தில் இல்லை) ஜெண்டில் மேன்களுக்கு பொத்து கொண்டுவருகிறது.

11:04 PM  
Blogger ROSAVASANTH said...

சென்ற எதிர்வினைக்கு வந்த இரு பதில்கள்.

அப்பாவிதமிழன் said...

ஐயா ரோசாவசந்த்,

தண்ணி என்று சொல்லக்கூடாது, 'ஜலம்' என்று சொல்ல வேண்டும் என்று யாரும் புகட்டுவது கிடையாது. வீட்டில் பேசும் மொழி எப்படி தானாகவே குழந்தைகளுக்கு வருகிறதோ, அதே போல்தான் இதுவும்.

பொட்டிக்கடையின் பதிவில் கேட்டதைத்தான் உங்களிடமும் கேட்கிறேன். உங்களுக்கு பிரச்சினை ஜலம் என்று சொல்லுவதிலா இல்லை 'தலித்' சமைத்தால் சாப்பிடமாட்டேன் என்று சொல்லுவதிலா?

(ஒரு லாரி அளவு கூட தேறாத - நன்றி வெங்காயம்) பார்ப்பனர்களை மட்டும் கட்டம் கட்டி அவர்கள்தான் இன்னும் குற்றம் செய்பவர்களாக குற்றம் சாட்டுவது பிரச்சினையை திசை திருப்பவா, இல்லை,
இரட்டை டம்ளர் முறையை கடைபிடிப்போர் மற்றும் 'தலித்' சமைத்தால் சாப்பிடமாட்டேன் என்று சொல்லுபவர்களிடம் இந்த பருப்பு வேகாது என்பதாலா?

Anonymous said...
As long as people like Teakadai Mattiyum & RosaVennai are there, People like MK ,Veeramani, Kuduthangi will prosper(Only family business).

Pathikkappatta Appavi Dalit.

10:34 PM  
Blogger ROSAVASANTH said...

http://theyn.blogspot.com/2006/03/blog-post_07.html

அன்புள்ள சிறில் அலெக்ஸ், உங்களூடைய இந்த பதிவை தவறவிட்டு, என் தளத்தில் நீங்கள் அளித்த பின்னூட்டத்தை தொடர்ந்து இங்கே வந்து இந்த பதிவை பார்த்தேன். உங்கள் பார்வையில் நேர்மை இருப்பதாக தோன்றியதால் இதை எழுதுகிறேன்.

முதலில் பார்பனர்களை மட்டும் திட்டுகிறார்கள் என்று நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையல்லாத ஒன்று. உண்மையை அறிய நீங்கள் முயற்சி எடுத்ததாகவும் தெரியவில்லை. பார்பன எதிர்ப்பு என்ற ஒற்றை பரிமாணத்திலிருந்து விலகி, வேள்ளாள ஆதிக்கம், தேவர் ஆதிக்கம் என்று பரவலாய் பேசத் தொடங்கி இப்போது ஒரு மாமாங்கம் ஆகிவிட்டது. (வலைப்பதிவில் நடக்கும் சண்டைகளில், கருத்துருவ அடைப்படையில் நேரடியாய் பார்பனியத்தை (நேரடியாகவோ மறைமுகமாகவோ) நியாயபடுத்தும் கருத்துக்கள் பல தளங்களில் வருவதால் அவை குறித்தே விவாதங்கள் செல்கின்றன.)

தலித் கட்சிகள், இயக்கங்கள், இதர அறிவுரீதியான செயல்பாடுகள் அனைத்தும் பார்பனரல்லாத சாதி ஆதிக்கத்தையே குறிவைத்தே பிரதானமாய் இயங்குகிறது. புதிய தமிழகம் கட்சி தென்மாவட்ட தேவர் ஆதிக்கத்தை எதிர்த்தே துவங்கப்பட்டது. அதன் இருப்பே தேவர் எதிர்ப்பில்தான் இருக்கிறது. சண்டியர் படம் குறித்து கிருஷ்ணசாமி முன்வைத்த எதிர்ப்பு, கமல் பார்பனர் என்பதை முன்வைத்து அல்ல, சண்டியர் என்ற பெயர் தேவர்களின் வன்முறையை லெஜிடிமைஸ் செய்வதாக இருப்பதால்தான். திருமாவளவனின் பிரதான எதிரியாக வன்னிய ஆதிக்கமும், பாட்டாளி மக்கள் கட்சியுமே பல காலத்திற்கு இருந்தது. இப்போது ஒன்றரை வருட இணைந்த செயல்பாடுகள், அதன் மூலம் ஏற்பட்ட பகையுணர்வை தணித்து, புதிதாய் உருவான அதிகார சூழலில் அதை பகிர்ந்துகொள்ளும் ஒரு முயற்சியாகவும் பார்கலாம். அல்லது அதில் உள்ள பிரச்சனைகளையும் பார்கலாம். எப்படியாயினும் பார்பன எதிர்ப்பு என்ற ஒற்றை பரிமாணத்திலிருந்து விலகி, ஏற்பட்ட நிகழ்வுகள்தான் இவை. தமிழ் நாட்டில் தென்மாவட்ட வடமாவட்ட சாதி பிரச்சனைகளை முன்வைத்து, குறிப்பாய் பிற்படுத்தப் பட்ட மக்களின் ஆதிக்கத்தை பற்றி பேசவே 97லிருந்து எண்ணற்ற கூட்டங்கள் நடந்துள்ளன. நானே (என் வெளிநாட்டு வாழ்க்கையை மீறி) இரண்டு கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளேன். இன்று பல அமைப்புகள் பார்பனர்ல்லாத ஜாதிகளின் ஆதிக்கம் பற்றியே அதிகம் பேசுகின்றன. இலக்கிய தளத்தில் வெள்ளாள ஆதிக்கத்தை விமர்சித்து வந்த திறனாய்வுகளுக்கு ஏராளமான உதாரணங்கள் தரமுடியும். இன்னும் சொல்லப் போனால் தலித்களினுள்ளேயும் ஒடுக்கப் படும் அருந்ததியினர், மற்ற தலித்கள் பற்றி தங்கள் விமர்ச்னனக்களையும் முன்வைக்கின்றனர். அயோத்திதாசரை விமர்சனமின்றி பீடத்தில் அமர்த்துவது பற்றி மதிவண்ணன் போன்றவர்கள் எழுதுவதை சொல்லலாம். இன்னொரு பக்கம் பெரியார்தான் தலித்களின் முக்கிய எதிரி என்பதாக ரவிக்குமார் தொடங்கி பலர் எழுதியுள்ள விமர்சனங்கள் இதன் இன்னொரு பரிமாணம். இது தவிர ஏகப்பட்ட அறிவு செயல்பாடுகளை உதாரணம் காட்டமுடியும். வலைப்பதிவில் 'காதல்' திரைப்படம் இன்ன பிறவற்றற முன்வைத்து நான் தேவர் ஆதிக்கம், சாதிவெறி பற்றிதான் அதிகம் எழுதியுள்ளேன். பாட்டளி மக்கள் கட்சி பற்றியும் விமர்சித்து எழுதியுள்ளேன். பாப்பாபட்டி கீரிபட்டி பிரச்சனையை முன்வைத்து பாலாஜி பாரி தொடங்கி பலரால் எழுதப்பட்டுள்ளது. ஆகையாய் பார்பன எதிர்ப்பு என்று மட்டும் பேசி ஜல்லியடித்துக் கொண்டிருப்பதாக சிலரை போல நீங்களும் சொல்வது அபத்தம். ஒரு சிலருக்கு அபடி சொல்வதும், விவாதத்தில் வெளிவரும் பல விஷனயங்களை கண்டுகொள்ளாமல் சில் தோற்றத்தை பயன்படுத்தி, தங்கள் அஜெண்டாவிற்கு ஏற்ப ஜல்லியடிப்பதும், அதை கொண்டாவும் தேவை இருக்கிறது. விவாதம் என்பது இதிலிருந்து விலகியே நடைபெறமுடியும். இன்னும் சொல்ல பல உண்டு. முடிந்தால் பிறகு.

11:43 PM  

Post a Comment

<< Home

Site Meter