கூத்து!

உரசலாவது கேட்கட்டும்!

Thursday, March 23, 2006

வேதம் பற்றி சாத்தான்!

சாரு ரொம்ப நாளாகவே வேதம் படித்து வருவதாகவும் (அதற்கு பணவுதவி தேவைபடுவதாகவும்) எழுதி வந்தார். இப்போது வேதம் பற்றி ஒரு கோணல் பக்க பதிவு எழுதியிருக்கிறார். ஏற்கனவே வேதத்தில் ஜாதி இருக்கிறதா என்று தங்கமணி நீண்ட பதிவு போட்டார். அதை நான் (தங்கமணி பதிவில் படிக்கும் பின்னூட்டங்கள், அதை முன்வவத்த விளங்கங்கள், இதனால் ஏற்படும் அலுப்பு காரணமாய்) முழுமையாய் படிக்க வில்லை. ஆனால் சாரு எழுதியதை முழுமையாய் ஒரே மூச்சில் படித்தேன்.

சாரு எழுதுவதில், அன்னத்தை விட எல்லாம் லாவகமாக, பால் தண்ணீர் கொழுப்பு, ப்ரோட்டீன் என்று தனித்தனியாக பிரித்து, சிலவற்றை மட்டும் சீரியசாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்பது என் அணுகுமுறை. அந்த வகையில் இந்த பதிவை சீரியசாய் எடுக்க லாவகம் மட்டும் காரணமில்லை. நான் வேதங்களை படித்ததில்லை, அது குறித்து பெரிய முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் ராகுல் சாங்கிருத்தியாயன் போன்றவர்கள் ரிக்வேதம் பற்றி எழுதியுள்ள எல்லாவற்றையுமே, பலகாலம் முன்பே படித்திருக்கிறேன். பிறகு அப்படி இப்படி பீராய்ந்திருக்கிறேன். அந்த வகையில் சாரு சொல்வது போல வேதத்தில் துவேஷமே மட்டுமே மிகுதியாய் உள்ளதாகாவே எனக்கும் தோன்றுகிறது. மாற்று கருத்தை நிறுவ நினைப்பவர்கள், கொஞ்சம் மாற்றிச் சொல்லி பார்கலாம். மீண்டும் ஒரு விவாததை தொடங்க தயக்கமாய்தான் இருக்கிறது. ஏனேனில் திறந்த விவாத மனப்பான்மையுடன், முன்முடிவை நிறுவ முயலாமல், அறியாத பக்கத்தை அறிய முயன்று தங்கமணியின் பதிவில் யாரும் எழுதியதாக எனக்கு தெரியவில்லை. ஆனால் இப்படிப்பட்ட அக்கப்போர்களை தாண்டாமல், தவிர்காமல், விவாதம் துளிர்க்க முடியாது என்றே தோன்றுகிறது.

பிகு: சாத்தான் என்று சொன்னதை சாரு பாராட்டாகவே எடுத்துகொள்வார் என்று திடமாய் நம்புகீறேன்.

10 Comments:

Blogger Geetha Sambasivam said...

Without knowing Sanskrit you cannot understand Vedas and their correct meanings. For one word there are so many meanings. The hidden meaning is not known by you or me unless we are sanscrit scholars.Why are you hating brahmins and their languages which are pure tamil and the vedas which is telling the right things, and are accepted by most of the scientists in India and abroad.Brahmins are calling their homes as "aththukku vaa" which means Agam in pure tamil. You can see malayalis. They used to say "Agathila iru", this comes from tamil only. They inheritted from tamil and using now-a-days, no matter any caste, community or religion. But in Tamilnadu only brahmins are using this. I have so many comparisons like this. But you will not agree. Your hatred will not allow you. I am not hurting by saying this. If it hurts please excuse me.

2:32 AM  
Blogger ROSAVASANTH said...

அன்புள்ளா கீதா சாம்பசிவம் அவர்களுக்கு,

தங்களின் மேலான பின்னூட்டம், நீங்கள் யூகித்ததுபோல் என்னை எந்த விதத்திலும் புண்படுத்தவில்லை. ஆனால் முற்றிலும் புரியவில்லை.

உங்களின் பின்னூட்டத்தில் இந்த பதிவுடன், சாரு வேதம் பற்றி எழுதியதுடன், ஒரே ஒரு விஷயம்தான் தொடர்பு இருப்பதாக எனக்கு படுகிறது. அது "Without knowing Sanskrit you cannot understand Vedas and their correct meanings. For one word there are so many meanings. The hidden meaning is not known by you or me unless we are sanscrit scholars."
ஒருவர் ஒன்றை படித்து, அது குறித்து கருத்து சொன்னால், அதை இன்னொருவர் படித்து அதன் அடைப்படையில் மறுக்கலாம். யாருக்குமே புரியாது, எனக்கும் புரியாது உனக்கும் புரியாது. என்று தேவ பாஷையின் அருமை பெருமைகளை அடுக்கினால் என்ன சொல்ல முடியும்!

சாரு என்ன படித்தார் என்பது எனக்கு சரியாக தெரியாது. ஆனால் நான் குறிப்பிட்ட ராகுல சாங்கிருத்தியாயன் சமஸ்கிருதத்தில் மிகவும் புலமையுடைய, அந்த 'பல பல அர்த்தங்களை' புரிந்துகொள்ள கூடிய அளவு புலமையுள்ளவர். அந்த அர்தங்களை புரிந்துகொள்ளாமல், சம்பந்தமில்லாமல் ஒளரும் உங்களை விட,அவரை சீரியசாய் எடுத்துகொள்வதுதானே அறிவுடமையாக இருக்க முடியும்?

உங்கள் கருத்துக்கு நன்றி. உங்களின் அறிய பல தகவல்களுக்கும் மிகவும் நன்றி. பார்பனர்கள் பற்றி ஒரு வார்த்தை எழுதாத பதிவில், ஏகப்பட்ட பிராமண வெறுப்பை கண்டறிந்த உங்கள் அறிவுக்கு தலை வணக்கம்.

2:44 AM  
Blogger Geetha Sambasivam said...

I saw your comment on Potteakadai's pathivu and wanted to reply to that. But I forgot to mention it in a hurry. I told about the Vedahs to take the correct meaning only. Not the meaning which are not telling in that.But I am not a scholar like you and do not want to quote from Rahul Sankiruthiyan.Anyway thank you for your majestic approach.I am also having so many scholars sayings in support of the Vedhas(including foreigners) But I am not going to argue with you.

3:33 AM  
Blogger ROSAVASANTH said...

நன்றி - கருத்துக்கும் மற்றும் என்னோடு ஆர்க்யூ செய்யாததற்கும்!

3:35 AM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

கீதா,
நீங்கள் 'அகம்' என்பதை 'Aham' என்றா 'Agam' என்றா உச்சரிக்கிறீர்கள்?

4:30 AM  
Blogger Thangamani said...

வசந்த்:

நானும் இராகுல சாங்கிருத்தியாயன் எழுதியவற்றில் சிலவற்றைப் படித்திருக்கிறேன். தவிர ஆங்காங்கே படித்தது கொஞ்சம். வேதத்தைப் பற்றி பேசும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவையாக சில தோன்றுகிறது.

1. உபநிடத்தையும் வேதங்களையும் ஒரே அடைப்புக்குறிக்குள் போட முடியாது. நான் பல உபநிடதங்களைப் படித்தவரையில் அவற்றுள் பல அற்புதமானவை. உண்மையான ஞானத்தேடலும், அபரிமிதமான நுட்பமும் கொண்டவை. அதன் பொருட்செறிவு, தத்துவம் குறித்து அறிவாய் சேகரிப்பதைவிட (ஆனால் பலர் இதையே செய்யமுனைகின்றனர்) ஏற்கனவே அறிந்திருப்பதைக் கட்டுடைக்க, உதிர்க்க உபநிடதங்களின் பல பயன்படும்.

2. உபநிடதங்களின் விளக்க உரைகளுடன் கூடிய மொழிபெயர்ப்புகள் பெரும்பாலும் உதவாதவை. நான் நேரடியான ஒவ்வொரு சொல்லுக்கான மொழிபெயர்பையும் கொண்ட உரைகளில் இருந்து என்னுடைய புரிதலைப் பெறுவதை விரும்புவேன். பல இடங்களில் சொற்கள் பின்னாளைய சமயச் சார்புகள், கண்ணோட்டங்களில் புரண்டெழுந்து வந்தவையாக இருப்பதால் அதைக்கூட கவனமாக கண்டுகொள்ள கொஞ்சமேனும் சம்ஸ்கிருத அறிவும், சொந்த அனுபவமும் அவசியம். (கர்மா என்பதை செயல் என்று சாதரணமாக பெயர்க்க மட்டார்கள், அதனோடு கூடிய அத்தனை சமயச் சாயத்திலும் புரட்டி உரை எழுதி இருப்பது சாதரணமாக நடகும் விபத்து) பாராயணம் தான் நோக்கமெனில் இது எதுவும் தேவையில்லை.
(- உபரியான தகவல், கண்ணனின் பதிவில் http://emadal.blogspot.com/2006/03/blog-post_22.html திருலோக சீத்தாராம் பற்றிய மோகனraங்கனின் ஒலிப்பதிவு ஒன்று இருக்கிறது. நேரங்கிடைக்கும் போது கேட்கவும். சொற்கள்/ கவிதகள் குறித்த அவரது அணுகுமுறை நான் பலகாலமாக பின்பற்றி வருவது. அது மிகச்சரியானதும், பயனளிக்கக்கூடியதும் என்பது என் அனுபவம்.)

3. வேதங்கள் என்ற வகையில் சாரு குறிப்பிடுகிற மாதிரி பல இடங்கள்ல் நல்ல கவிதை உள்ளன. சில கவிதைகளை நான் படித்து மகிழ்ந்துள்ளேன்.

4. சாரு குறிப்பிடுகிற மாதிரியான வசைகள், அச்சங்களினால் விளைந்த வேண்டல்கள் மிகுதியாக இருப்பதாய் நானும் அறிந்தவரையில் நினைக்கிறேன். அப்படித்தான் இருக்கமுடியும் என்பதற்கு , கர்மகாண்டங்களின் நோக்கத்தைப் பார்த்தாலும் புரிந்துகொள்ளமுடியும். உபநிடதங்கள் இதனின்று பிரிந்து கிளைத்ததற்கு அதுவும் ஒரு காரணம் என்பதையும் நினைவில் கொள்ளலாம்.

5. வேத பாராயணம் செய்தவர்கள், செய்கிறவர்கள் எல்லோரும் வேதத்தை ஆராய்ந்தவர்கள் கிடையாது. பலர் தொழிலுக்காகச் செய்வது.

6. ஆனால் காலங்காலமாக வேதத்தின் பெயரால் பல மோசடிகள் செய்யபப்டுகிறது; அதற்காக அது கேள்வி எழுப்பமுடியாத உயரத்தில் வைக்கப்பட்டுள்ளது.இன்றைக்கு சாதாரண கணக்கு முதல் சட்டினி/ துவையல் வரை வேதக்கலர் கொடுக்க, சம்பாதிக்க எந்த வேதத்தையும் படித்திருக்க வேண்டாம். எவரும் கேள்வி கேட்காமல் (வேதத்தைப் புறக்கணிக்கிறேன் என்று ஸ்டேட்மெண்ட் விடுபவர்கள் கூட) ஒத்துக்கொள்வார்கள். :)

7. இப்படி ஒத்துக்கொள்பவர்கள் தான் காலங்காலமாக வேதத்தை யாரும் குறை சொல்லாமல் பார்த்துகொள்கிறவர்கள் என்பதும், அதை காப்பாற்ற வேண்டும் என்று சொல்பவர்களுமாக இருப்பது ஒரு சுவையான விதயம். :)

3:37 PM  
Blogger Thangamani said...

என்னுடைய பதிவை ( வேதத்தில் சாதி...) நீங்கள் படிக்கவேண்டும். புருஷ சூக்தத்தில் சாதி பற்றிய (வருணாசிரமம்) பற்றிய முதல் அறிவுறுத்தல் இருப்பது பலர் அறிந்ததே., ஆனால் 'பெரியவா' ஆடுதுறையில் நள்ளிரவில் வருணாசிரமத்தை சுதந்திர இந்தியாவில் சட்டப்பூர்வமாக் பாதுகாக்க எடுத்த முயற்சிகளை அறிந்துகொள்ள நீங்கள் அவசியம் படிக்கவேண்டும். அதாவது அவரது சாதி உணர்வு எல்லோரும் அறிந்தது தான் என்றாலும், வேதம் போல பவித்திரப்படுத்தப்படுகிற அவரது தோற்றத்துக்குப் பின் வருணாசிரமத்தை நிலைநிறுத்த அவர் எடுத்த முயற்சிகளை மறுக்கமுடியாத ஒருவர் சொல்லித் தெரிந்துகொள்வது முக்கியமானது என்று நினைக்கிறேன்.

3:54 PM  
Blogger நியோ / neo said...

ரோசா வசந்த அவர்களே

சாரு அவர்கள் பல Sources மூலமாக வேதத்தைப் படித்திருக்கலாம். முக்கியமாக Indologists, இந்தியவியல் மற்றும் மொழியியல் ஆய்வாளர்கள் (அதாவது அந்தத் துறையில் 'உலக அறிஞர்களால் மதிக்கப்படுபவர்கள்) எழுதியவற்றையும் அவர் படித்திருக்கக் கூடும்.

இருந்தாலும் இந்தச் சுட்டி தருகிறேன் :

http://www.people.fas.harvard.edu/~witzel/mwpage.htm

இந்தியவியல், வேத, சமஸ்கிருத அறிஞர் - பேராசிரியர் மைக்கேல் விட்சலினுடைய வலைமனை அது.

அதில் பல கட்டுரைகள் 'வேத' காலம் குறித்தும், ஆரியரின் சிந்துவெளி 'வருகை' குறித்தும், 'ரிக்' முதலான வேத நூல் தொகுப்புகள் குறித்தும் பல ஆய்வுக் கட்டுரைகளில் அலசுகிறார்.

முக்கியமாக அவரின் "Autochthonous Aryans?" ( "ஆரியர்கள் (இந்தியத் துணைக்கண்டத்தின்) பூர்வ குடிகளா?) என்கிற கட்டுரை வாசித்தே தீர வேண்டியது.

அதில் - ஆரியர்களின் 'படையெடுப்பு' என்பது நிகழாமல் போயிருக்கலாம்; ஆனால் ஆரியர்கள் குடியேறிகளே எனத் தெளிவாகக் காட்டுகிறார் (மிக நுட்பமாக); சில இடங்களில் Politically Correct speech உள்ளது; ஆனாலும் முழுவதுமாகப் படிப்பவருக்கு அவர் என்ன சொல்கிறார் என்பது புரியும் :)

12:40 PM  
Blogger நியோ / neo said...

இங்கே ரோசா அவர்கள் சுட்ட்டிக் காட்டியது போல - கீதா சாம்பசிவம் போன்றவர்கள் (பொதுவாக பார்ப்பனர்கள்) - "தேவ பாஷை" என்கிற மாயையை விடாப்பிடியாக கட்டமைக்கப் பார்ப்பதுதான் சிரிப்பை வரவழைக்கிறது!

இவர்கள் வேண்டுமென்றால் - 'ரிக்'-இல் இருக்கும் ஒவ்வொரு 'சொல்லுக்கும்' அதன் பொருள் இன்னின்ன என்று ஒரு அகரமுதலி போடட்டும்!

Linguists, Indologists ஆகியோரை வேண்டுமென்றே புறக்கணிக்கிற பார்ர்ப்பனிய, சமஸ்கிருத - இந்துத்துவ "ஆராய்ச்சியாளர்கள்" செய்யும் காமடிக்கு அளவில்லாமல் போகிறது நாளுக்கு நாள்!

'ஏய்! இதை நான் விளக்க மாட்டேன்! நான் சொல்றத அப்பிடியே நம்பு - அப்போதான் உனக்கு மோட்சம் கிடைக்கும்' என்று கூமுட்டை வாதம் செய்வதைத் தவிர ஒன்றுக்கும் துப்புக் கெட்ட, திராணியற்ற, பேடித்தனமான அயோக்கியர்களிடம் - நியாயத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்?

12:51 PM  
Blogger கருப்பு said...

பார்ப்பனீயத்தினை மட்டுமே முன்னிறுத்திப் பேசும் கீதா சாம்பசிவம் அவர்களின் பதில்கள் நகைக்கத் தோன்றுகிறது. நியோ அவர்களின் விளக்கம் நன்று.

1:58 AM  

Post a Comment

<< Home

Site Meter