கூத்து!

உரசலாவது கேட்கட்டும்!

Monday, March 27, 2006

'வேதம் பற்றி' பின்னூட்டங்கள்!

இந்த வலைப்பதிவின் பின்னூட்டங்கள் பற்றிய தகவல், தமிழ்மணத்தில் வருவதில்லை. அதனால் சென்ற பதிவில் வந்த பின்னூட்டங்களில், விவாதத்திற்குரியதாய், என் பார்வையில் தெரிவதை, இங்கே தொகுக்கிறேன். எனது கருத்துக்கள் மிக மேலோட்டமாய் இருப்பதாலும், இன்னும் நிறைய படிக்க வேண்டிய தேவை இருப்பதாலும், இப்போது சொல்ல உருப்படியாய் எதுவும் இல்லை. பின்னர் கணக்கில் கொள்ளும் வசதிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது, முற்றிலும் என் தனிப்பட்ட தேர்வு என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. முழுமையாய் படிக்க சென்ற பதிவின் பின்னூட்டங்களை பார்க்கவும். பின்னூட்டமிட்ட அனைவருக்கும் என் நன்றி.


Geetha Sambasivam: Without knowing Sanskrit you cannot understand Vedas and their correct meanings. For one word there are so many meanings. The hidden meaning is not known by you or me unless we are sanscrit scholars.

paarvai: வேதம் பற்றி எதுவுமே தெரியாது,அதனால் என் வாழ்க்கையில் நான் தடம் புரளவில்லை. ஆனாலும் ஆர்வமிகுதியால் ,ஏதோதெல்லாம் சொல்லியிருக்காமே ,அது என்னனுன்னு நாமும் அறிவோமே என்று யாராவது அது பற்றி எழுதினால் படிக்கும் பழக்கம் உண்டு. அவ்வகையின் துக்ளக் சோ; நக்கீரனில் ஒரு வைஸ்ணவ ஆச்சாரியார், இப்போ சாரு நிவேதிதா இவர்கள் ஓரளவுக்கு என் சிற்றறிவுக்குப் புரியும் படி எழுதுகிறார்கள். அதனல் படித்தேன். அந்த வைஸ்ணவ ஆச்சாரியார்; பிராமணராக இருந்த பொழுதும்;வேதங்கள் பற்றி பெரிய அபிப்பிராயம் உள்ளவர் போல் எழுத்தில், தெரியவில்லை.அதே சமயம் தன் கருத்துக்களை ,சொல்லும் விதம்;அவர் புலமையைப் புடம் போட்டுக்காட்டுகிறது.சங்கரராமன் போல் அவரை இதுவரை போட்டுத்தள்ளாமல் விட்டுவைத்துள்ளதே, எனக்கு பெரிய ஆச்சரியம்.

தங்கமணி: வசந்த்:நானும் இராகுல சாங்கிருத்தியாயன் எழுதியவற்றில் சிலவற்றைப் படித்திருக்கிறேன். தவிர ஆங்காங்கே படித்தது கொஞ்சம். வேதத்தைப் பற்றி பேசும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவையாக சில தோன்றுகிறது.

1. உபநிடத்தையும் வேதங்களையும் ஒரே அடைப்புக்குறிக்குள் போட முடியாது. நான் பல உபநிடதங்களைப் படித்தவரையில் அவற்றுள் பல அற்புதமானவை. உண்மையான ஞானத்தேடலும், அபரிமிதமான நுட்பமும் கொண்டவை. அதன் பொருட்செறிவு, தத்துவம் குறித்து அறிவாய் சேகரிப்பதைவிட (ஆனால் பலர் இதையே செய்யமுனைகின்றனர்) ஏற்கனவே அறிந்திருப்பதைக் கட்டுடைக்க, உதிர்க்க உபநிடதங்களின் பல பயன்படும்.

2. உபநிடதங்களின் விளக்க உரைகளுடன் கூடிய மொழிபெயர்ப்புகள் பெரும்பாலும் உதவாதவை. நான் நேரடியான ஒவ்வொரு சொல்லுக்கான மொழிபெயர்பையும் கொண்ட உரைகளில் இருந்து என்னுடைய புரிதலைப் பெறுவதை விரும்புவேன். பல இடங்களில் சொற்கள் பின்னாளைய சமயச் சார்புகள், கண்ணோட்டங்களில் புரண்டெழுந்து வந்தவையாக இருப்பதால் அதைக்கூட கவனமாக கண்டுகொள்ள கொஞ்சமேனும் சம்ஸ்கிருத அறிவும், சொந்த அனுபவமும் அவசியம். (கர்மா என்பதை செயல் என்று சாதரணமாக பெயர்க்க மட்டார்கள், அதனோடு கூடிய அத்தனை சமயச் சாயத்திலும் புரட்டி உரை எழுதி இருப்பது சாதரணமாக நடகும் விபத்து) பாராயணம் தான் நோக்கமெனில் இது எதுவும் தேவையில்லை.(- உபரியான தகவல், கண்ணனின் பதிவில் http://emadal.blogspot.com/2006/03/blog-post_22.html திருலோக சீத்தாராம் பற்றிய மோகனraங்கனின் ஒலிப்பதிவு ஒன்று இருக்கிறது. நேரங்கிடைக்கும் போது கேட்கவும். சொற்கள்/ கவிதகள் குறித்த அவரது அணுகுமுறை நான் பலகாலமாக பின்பற்றி வருவது. அது மிகச்சரியானதும், பயனளிக்கக்கூடியதும் என்பது என் அனுபவம்.)

3. வேதங்கள் என்ற வகையில் சாரு குறிப்பிடுகிற மாதிரி பல இடங்கள்ல் நல்ல கவிதை உள்ளன. சில கவிதைகளை நான் படித்து மகிழ்ந்துள்ளேன்.

4. சாரு குறிப்பிடுகிற மாதிரியான வசைகள், அச்சங்களினால் விளைந்த வேண்டல்கள் மிகுதியாக இருப்பதாய் நானும் அறிந்தவரையில் நினைக்கிறேன். அப்படித்தான் இருக்கமுடியும் என்பதற்கு , கர்மகாண்டங்களின் நோக்கத்தைப் பார்த்தாலும் புரிந்துகொள்ளமுடியும். உபநிடதங்கள் இதனின்று பிரிந்து கிளைத்ததற்கு அதுவும் ஒரு காரணம் என்பதையும் நினைவில் கொள்ளலாம்.

5. வேத பாராயணம் செய்தவர்கள், செய்கிறவர்கள் எல்லோரும் வேதத்தை ஆராய்ந்தவர்கள் கிடையாது. பலர் தொழிலுக்காகச் செய்வது.

6. ஆனால் காலங்காலமாக வேதத்தின் பெயரால் பல மோசடிகள் செய்யபப்டுகிறது; அதற்காக அது கேள்வி எழுப்பமுடியாத உயரத்தில் வைக்கப்பட்டுள்ளது.இன்றைக்கு சாதாரண கணக்கு முதல் சட்டினி/ துவையல் வரை வேதக்கலர் கொடுக்க, சம்பாதிக்க எந்த வேதத்தையும் படித்திருக்க வேண்டாம். எவரும் கேள்வி கேட்காமல் (வேதத்தைப் புறக்கணிக்கிறேன் என்று ஸ்டேட்மெண்ட் விடுபவர்கள் கூட) ஒத்துக்கொள்வார்கள். :)

7. இப்படி ஒத்துக்கொள்பவர்கள் தான் காலங்காலமாக வேதத்தை யாரும் குறை சொல்லாமல் பார்த்துகொள்கிறவர்கள் என்பதும், அதை காப்பாற்ற வேண்டும் என்று சொல்பவர்களுமாக இருப்பது ஒரு சுவையான விதயம். :)

என்னுடைய பதிவை ( வேதத்தில் சாதி...) நீங்கள் படிக்கவேண்டும். புருஷ சூக்தத்தில் சாதி பற்றிய (வருணாசிரமம்) பற்றிய முதல் அறிவுறுத்தல் இருப்பது பலர் அறிந்ததே., ஆனால் 'பெரியவா' ஆடுதுறையில் நள்ளிரவில் வருணாசிரமத்தை சுதந்திர இந்தியாவில் சட்டப்பூர்வமாக் பாதுகாக்க எடுத்த முயற்சிகளை அறிந்துகொள்ள நீங்கள் அவசியம் படிக்கவேண்டும். அதாவது அவரது சாதி உணர்வு எல்லோரும் அறிந்தது தான் என்றாலும், வேதம் போல பவித்திரப்படுத்தப்படுகிற அவரது தோற்றத்துக்குப் பின் வருணாசிரமத்தை நிலைநிறுத்த அவர் எடுத்த முயற்சிகளை மறுக்கமுடியாத ஒருவர் சொல்லித் தெரிந்துகொள்வது முக்கியமானது என்று நினைக்கிறேன்.


நியோ: சாரு அவர்கள் பல Sources மூலமாக வேதத்தைப் படித்திருக்கலாம். முக்கியமாக Indologists, இந்தியவியல் மற்றும் மொழியியல் ஆய்வாளர்கள் (அதாவது அந்தத் துறையில் 'உலக அறிஞர்களால் மதிக்கப்படுபவர்கள்) எழுதியவற்றையும் அவர் படித்திருக்கக் கூடும்.

இருந்தாலும் இந்தச் சுட்டி தருகிறேன் :

http://www.people.fas.harvard.edu/~witzel/mwpage.htm

இந்தியவியல், வேத, சமஸ்கிருத அறிஞர் - பேராசிரியர் மைக்கேல் விட்சலினுடைய வலைமனை அது.

அதில் பல கட்டுரைகள் 'வேத' காலம் குறித்தும், ஆரியரின் சிந்துவெளி 'வருகை' குறித்தும், 'ரிக்' முதலான வேத நூல் தொகுப்புகள் குறித்தும் பல ஆய்வுக் கட்டுரைகளில் அலசுகிறார்.

முக்கியமாக அவரின் "Autochthonous Aryans?" ( "ஆரியர்கள் (இந்தியத் துணைக்கண்டத்தின்) பூர்வ குடிகளா?) என்கிற கட்டுரை வாசித்தே தீர வேண்டியது.

அதில் - ஆரியர்களின் 'படையெடுப்பு' என்பது நிகழாமல் போயிருக்கலாம்; ஆனால் ஆரியர்கள் குடியேறிகளே எனத் தெளிவாகக் காட்டுகிறார் (மிக நுட்பமாக); சில இடங்களில் Politically Correct speech உள்ளது; ஆனாலும் முழுவதுமாகப் படிப்பவருக்கு அவர் என்ன சொல்கிறார் என்பது புரியும் :)

கீதா சாம்பசிவம் போன்றவர்கள் (பொதுவாக பார்ப்பனர்கள்) - "தேவ பாஷை" என்கிற மாயையை விடாப்பிடியாக கட்டமைக்கப் பார்ப்பதுதான் சிரிப்பை வரவழைக்கிறது!இவர்கள் வேண்டுமென்றால் - 'ரிக்'-இல் இருக்கும் ஒவ்வொரு 'சொல்லுக்கும்' அதன் பொருள் இன்னின்ன என்று ஒரு அகரமுதலி போடட்டும்!Linguists, Indologists ஆகியோரை வேண்டுமென்றே புறக்கணிக்கிற பார்ர்ப்பனிய, சமஸ்கிருத - இந்துத்துவ "ஆராய்ச்சியாளர்கள்" செய்யும் காமடிக்கு அளவில்லாமல் போகிறது நாளுக்கு நாள்!

10 Comments:

Blogger Muthu said...

ரோசா,

இந்த சமாச்சாரங்களையெல்லாம் படிக்காமலே தூக்கி நிறுத்தறவங்களும் தூற்றுபவர்களும் தான் அதிகம்.

நானும் இரண்டு புத்தகம் வாங்கிட்டேன்.ஒரு புத்தகம் மார்க்சிய பார்வையிலும் இன்னொரு புத்தகம் அதற்கு எதிர்பார்வையிலும் அமைந்த அறிமுக புத்தகங்கள்..இந்திய தத்துவ ஞானம் என்பதாக தலைப்பு..

ஏதாவது என் சிறுமூளைக்கு புரிஞ்சதுன்னா மே மாதம் தொடராக எழுதுகிறேன்.

12:03 AM  
Blogger கருப்பு said...

மிகவும் நல்ல அலசல் ரோசா.

1:55 AM  
Blogger ROSAVASANTH said...

முத்து, விடாது கருப்பு நன்றி. ஆனால் இதில் நான் எதையுமே எழுதவில்லை. சாரு மற்றும் குறிப்பாய் தங்கமணியின் கருத்துக்களை விவாதிக்கத் தருவதே இந்த பதிவின் நோக்கம்.

2:03 AM  
Blogger ROSAVASANTH said...

http://manikoondu.blogspot.com/2006/03/blog-post_30.html

ரவிக்குமார் பற்றி எனக்கு நிச்சயம் பலத்த விமர்சனம் உண்டு. ஆனால் அவரை போன்ற அரசியல் விழிப்புணர்வும், தலித் அரசியல் சார்பும், பல தார்மீக கோபங்களும்
கொண்ட ஒருவர் சட்டசபைக்கு செல்வது, தமிழக அரசியலில் மிகச் சிறந்த விஷயம். அதற்காக சில சமரசங்கள் நேர்ந்தால் தவறில்லை என்றே தோன்றுகிறது. தகவலுக்கு நன்றி

1:50 AM  
Blogger ROSAVASANTH said...

http://muthuvintamil.blogspot.com/2006/03/blog-post_29.html

3:06 AM  
Blogger ROSAVASANTH said...

http://santhipu.blogspot.com/2006/03/blog-post_28.html

3:17 AM  
Blogger ROSAVASANTH said...

http://muthuvintamil.blogspot.com/2006/03/blog-post_29.html

அனந்தமூர்த்தியின் பல பேச்சுக்கள் அப்பட்டமான கன்னட தேசிய அரசியலுக்கு ஆதரவானது. காவேரி பிரச்சனையில், தமிழ்நாட்டில் மக்கள் எலி தின்று கொண்டிருக்கும் நேரத்தில், உச்ச நீதிமன்றம் கர்நாடகாவை நேரடியாக கண்டித்த பின்னும், பிடிவாதமாய் தண்ணீர் தர மறுத்து, கிருஷ்ணா தலமையில் நடந்த பாதயாத்திரையில், மற்ற கன்னட தேசிய அரசியல்வாதிகளுடன் சேர்ந்து இவரும் கலந்துகொண்டார். அதுமட்டுமில்லாமல், ஒரு எழுத்தாளனுக்கு இருக்கவேண்டிய, அடுத்தவர் பிர்ச்சனை குறித்த குறைந்த பட்ச கரிசனம் கூட இல்லாமல் பேட்டியும் அளித்தவர்.

இவருடய தமிழை முன்வைத்த அவதூறு கருத்துக்களை அதன் பிண்ணணியை வைத்து புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் மற்றும் இந்திய இலக்கிய சூழலிலும் அளவுக்கு மீறிய ஒரு முக்கியத்துவம் இவரது எழுத்துக்களுக்கு கொடுக்கப் பட்டுள்ளது. சில மங்களூர் பார்பனர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியதை தாண்டி, எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத இவரது சம்ஸ்காரா என்ற மிக சாதாரணமான, நாவல் இன்றுவரையிலும் தமிழ்/இந்திய இலக்கிய சூழலில் அளவுக்கு மீறி கொண்டாடப்படுகிறது. அமைப்பியலை தான்தான் கண்டு பிடித்தது போல பாவனை செய்யும் நகைச்சுவை மிகுந்த தமிழவன் போன்றவர்கள், இவர் சம்ஸ்காரா எழுதியதை, பெரியாரின் செயல்பாடுகளுடன் ஒப்பிட்டு, ஜல்லியடித்திருப்பதை 'அவஸ்தை' நாவலின் முன்னுரையில் பார்க்கலாம். (அதாவது சம்ஸ்காரா ஏதோ கர்நாடகா சமூகத்தில் பூகம்பத்தையே உருவாக்கியது போலவும், பெரியாரால் ஏன் அப்படி செய்ய முடியவில்லை என்று). தமிழவன் போன்றவர்கள் அனந்தமூர்த்தியின் நெருங்கிய நண்பர்கள். தனது அசட்டு நம்பிக்கைகள் ஏமாந்ததால் ஏற்பட்ட, திராவிட இயக்கத்தின் மீதுள்ள கோபத்தால் (தமிழ்நாட்டில் தனக்கு வேலை கிடைக்காத அரசியல் கூட அதற்கு இன்னொரு காரணமாய் இருக்கலாம்), திராவிட அரசியல் மீது (முட்டாள்தனமான)தீரா வெறுப்பு கொண்டிருக்கும் தமிழவனின் தொடர்பினாலாயே, தனக்கு சரியாய் தெரியாத தமிழ் சார்ந்த பிரச்சனைகள் பற்றியெல்லாம் அனந்தமூர்த்தியை கருத்து கூற வைக்கிறது.

கன்னடம் செம்மொழி என்பதை போல இந்த நூற்றாண்டின் மிக பெரிய கேனத்தனமான ஜோக் இருக்க ஒன்று முடியாது. பத்ரி கூட அப்படி எதோ அப்படி ஒரு ஒப்பீடு செய்து ஒளரிகொண்டிருந்தார். தமிழ் வேர் சார்ந்த சொற்கள், மற்றும் சமஸ்கிருதம் இவற்றை நீக்கினால் கன்னடத்தில் ஒரு வாக்கியம் கூட அமைக்க முடியாது. ஆனால் தமிழ் சமாச்சாரம் அப்படி அல்ல. இதை நன்கு அறிந்த தமிழவன் போன்றவர்கள், இந்த விஷயத்தில் அனந்த மூர்த்திக்கு அறிவுரை சொல்ல மாட்டார்கள். அல்லது அனந்த மூர்த்திக்கு அது நினைவில் இருக்காது.

முத்து இப்படி மீண்டும் சொல்வதை பற்றி கிண்டலாய் நினைத்து கொண்டால் அதில் தப்பில்லை. எழுத நினைத்தவற்றை எல்லாம் எழுதும் காலம் வரும்போது, 'சம்ஸ்காரா' பற்றி விரிவாய் எழுதும் நோக்கம் உள்ளது.

10:06 AM  
Blogger Muthu said...

ரோசா,


reg - ananthamoorthi


நீங்கள் பின்னால் எழுத நினைப்பதைப்பற்றிய என் கிண்டலுக்கு பின்னால் ஆதங்கமே நிறைந்துள்ளது.
விஷயத்திற்கு வந்தோம் என்றால்,சம்ஸ்காராவை நான் படிக்கவில்லை.பிறப்பு என்ற அவருடைய இன்னொரு நாவலை படித்துள்ளேன்.அவ்வளவாக கவரவில்லை.சில சிறுகதைகளை படித்துள்ளேன்.சிறுகதைகள் அளவிற்கு நாவல் இல்லை.ஆனால் இன்னும் படிக்கவேண்டும்.
இலக்கிய உலகில் அளவிற்கு மீறிய முக்கியத்துவம் என்பதை அவர் பெயருக்கு கீழே எப்போதும் "ஞானபீட விருது பெற்ற" என்று மீடியா போடும் அடைமொழியுடன் தொடர்புப்படுத்தியே புரிந்துக்கொள்கிறேன்.

மங்களூர் பார்பனர் என்று நீங்கள் கூறியது நேட்டிவ் பார்பனர்களா இல்லை கொங்கணி பார்ப்பனர்களா?
திராவிட அரசியல் மேல் உள்ள கோபத்தால் பலபேர் நிலைதடுமாறி இருப்பதே திராவிட அரசியலை எனக்கு மிகவும் விரும்ப வைக்கிறது.

கன்னடர்கள் மனதளவிலும் சம்ஸ்கிருதத்திற்கு அடிமையாகி கிடப்பதையே நான் இங்கு கர்நாடகத்தில் மங்களூரில் அமர்ந்து பார்க்கிறேன்.ஆகவே கன்னடத்தின் செம்மொழி தகுதிப்பற்றி நீங்கள் கூறி இருப்பதும் சரியே...

2:26 AM  
Blogger நியோ / neo said...

இங்கே உங்கள் 'இலங்கைக் கடற்படையின் வெறியாட்டம்' பற்றிய 'இன்னும்' பதிவுக்கு ஒரு பின்னூட்ட இடம் தரவில்லையா?

சரி - நான் அங்கே போட்டதை இங்கே இடுகிறேன் - பிறகு நீங்கள் ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள்

----------------

ரோசா அவர்களே

இந்தப் பிரச்சனை குறித்து மறவன்புலவு சச்சிதானந்தன் என்பவரும் இங்கே எழுதியிருக்கிறார்:

சிங்கள மீனவர்கள் நமது கடல் எல்லையில் எத்தனை வேண்டுமானாலும் நுழையலாம்; அவர்களைக் கைது செய்தாலும் உடனே காப்பாற்றுவதற்கு இந்திய வெளியுறவுத்துறை இருக்கிறது!

இது வடவர்களின், இந்தியப் பார்ப்பனீய 'அரசாங்க இயந்திரத்தின்' ஆதிக்க மனோபாவத்தையும் தமிழைனத்தின் மீதான வெறுப்பின் இன்னொரு வெளிப்பாடாகவும் கொள்ளத்தான் வேண்டும்.

சேதுக்கால்வாய்த் திட்டம் முடிவடைந்து செயல்படத் துவங்கி விட்டால், இந்தியத் தென் எல்லையில் இலங்கைக் கடற்படையினரை உள்ளே வரவிடாமல் செய்ய இந்தியக் கடற்படை செயலாற்றும் என்று சொல்லப்பட்டாலும், அதில் அரசியல் முன்னெடுப்புகளும் அவசியம் எனத் தோன்றுகிறது.

செய்யக் கூடிய சில விசயங்கள்:

1. தமிழக மீனவர்கள் செத்தால் கூடப் பரவாயில்லை என வேண்டுமென்றே இந்திய கடற்படை மற்றும் இந்திய வெளியுறவுத்துறை செயல்படுகிறது எனவும், இந்த நிலை நீடித்தால் அது உள்நாட்டுக் குழப்பத்தை உண்டாக்கிவிடும் என்பதையும் வலியுறுத்தி இந்திய நாடாளுமறத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரவேண்டும்

2. இலங்கைக் கடற்படைக் காடையர்களுக்கு எதிராக தமிழக மீனவர்கள் பாதுகாப்புப் படை என்று ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதற்கு ஆயுதம் வழங்கி - (இந்திய அரசை செயல்படத் தூண்ட ) ஒரு அச்சுறுத்தல் போலச் செய்யலாம்!

3. முக்கியமாக - 1970-களில் கச்சத்தீவை இலங்கை அரசின் வசம் ஒப்படைத்ததை நிராகரித்து மீண்டும் இந்திய நாட்டினோடு கச்சத்தீவையும் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - இது தமிழக தென் கரையோர மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கை.

4. சேதுக் கால்வாய் நிறைவேறியபின் - கொழும்புவின் வர்த்தகத்தை முற்றாக ஒழித்துக் கட்ட எல்லாவிதமான நடவடிக்கைகளையும் எடுத்து - இலங்கை அரசை இந்த மீனவர் - மீன்பிடி விஷயத்தில் பணியச் செய்யுமாறு Strategy வகுக்க வேண்டும்.

5. தமிழக மினவர்கள் விடுதலைப்புலிகளுக்கு உதவுபவர்கள், எண்ணையும், டீசலும் கடத்தித் தருபவர்கள் - ஆகவேதான் இலங்கைக் கடற்படை அவர்களைக் குறிவைக்கிறது - என்பது போன்ற எச்சித்தனமான அயோக்கிய வாதங்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் செய்திபோலவும் , செய்தி அலசல் போலவும் போடுகிற தமிழக-இந்திய கோயபல்ஸ் இதழ்களை/இதழாளர்களை நடுத்தெருவில் வைத்து செருப்பால் அடித்துத் திருத்துவது! ( வேறென்ன செய்ய அதுகளை?!) :)

11:56 AM  
Blogger ROSAVASANTH said...

http://penathal.blogspot.com/2006/04/13-apr-06.html

மிகவும் ஒப்புக் கொள்ள வேண்டிய பதிவு.

92 காவேரி 'கலவரம்', வீரப்பன் கடத்தல், மற்றும் மழை தன் கொடையை குறைத்துகொண்ட நேரமெல்லாம் வரும் காவேரி பிரச்சனை என்று பல நெருக்கடிகளின் போதும் பெங்களூரில் இந்த கொடுமைகளை கண்டதுண்டு. ஆனால் ராஜ்குமாரின் இயற்கை மரணமும் கூட மற்ற மொழியினருக்கு (குறிப்பாய் தமிழர்களுக்கு) நெருக்கடி ஏற்படுத்துவது அதிகப்படியாய் தெரியலாம். இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி மீண்டும் சில நாட்களுக்கு தமிழ் சினிமாக்களை தமிழ் சேனல்களை தடை செய்தல் என்று எதுவும் தொடராமல் இருந்தாலே நாம் நன்றி சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது.

11:43 PM  

Post a Comment

<< Home

Site Meter