கேவலத்திலும் கேவலம்!
ஆழியூரான் பதிவில் (http://nadaivandi.blogspot.com/2006/08/blog-post_17.html) பின்னூட்டமாய் எழுதியது. அவர் பின்னூட்டங்களை நிறுத்தி வைத்திருப்பதனால் இங்கே பதிவாக இடவேண்டியத்காகிவிட்டது.
தற்சமயம் வலைப்பதிவுகளை நிறைவாக படிக்க இயலாததால் இது பற்றிய எல்லாவற்ரையும் படிக்க
இயலவில்லை. வித்யாவிற்கு கிடைத்த வரவேற்பின் காரணமாய், அழுக்காறினால் துவங்கிய
விவகாரமாகவே இதை என்னால் பார்க்க முடிகிறது. இது எப்படியென்றால் இட ஒதுகீட்டில் ஒரே ஒரே
(கவனிக்கவும் மொத்தமாய் ஒரே ஒரு) தலித் மேலே வரும்போது, அழுக்காறும் வயெற்றெரிச்சலும் கொண்டு
இந்திய ஆதிக்க சாதி கூட்டம் போடும் கூச்சலுக்கு ஒப்பானது இது. சற்று யோசித்துப்
பார்த்தால் மிக நேரடியாக இந்த ஒப்புமையை செய்ய முடியும். இதில் ஆச்சரியம் என்னவென்றால் பெரியார்
பெயரை சொல்லும், இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவான ஒரு கும்பலை சேர்ந்தவர்கள், குறுகிய புத்தி
சார்ந்து, இந்த கூச்சலை இட்டு உள்ளனர். அதிலும் வலைப்பதிவில் சாக்கடையை கொட்டிக் கொண்டிருக்கும் 'விடாது
கருப்பு' என்பவர் எழுதிய பின்னூட்டம், நமது சமூகத்தின் அழுகிய பகுதியிலிருந்து வரும் விஷம்
கலந்த குரல். ஏற்கனவே குஷ்பூவை பற்றி இவர் எழுதிய ஒரு சாக்கடை பதிவுடன் இதையும் ஒப்பிட்டு
பார்க்க வேண்டும். இவர் பார்பனர்களை திட்டுவது என்பது, எந்த வித சமூக நீதி சார்ந்த
குரலும் அல்ல. பாப்பானாக பிறக்காததன் ஆதங்கத்தில் ஏற்பட்ட கோபம் மட்டுமே. முதலில்
இவர்களிடமிருந்து பெரியாரை பாதுக்காக்க வேண்டும். அதற்கு முன் பரந்த மனப்பான்மைக்கான
மனதை திறாந்து வைக்க வேண்டும்.
வித்யா நாட்டு பற்றி எழுதியிருந்ததும் மிகுந்த பொறுப்புணர்வுடனும், முதிர்ச்சியுடனும் இருந்தது.
அதையும் பெரியார் பெயரை சொல்லும் கொழுந்துகள் தாக்கி எழுதுவதன் அசட்டு நகைச்சுவைக்கு
சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. பெரியார் 1947 சுதந்திர தினத்தையே துக்க நாளாக
அறிவித்தார். இறப்பதற்கு நான்கு நாட்கள் முந்தய பேச்சில் கூட தான் இந்திய இறையாண்மையை
ஏற்றுகொள்ளாததை கூட்டத்தில் அறிவித்தார். அவர் பெயரை சொல்லும் முட்டாள்கள், சொந்த பகை
காரணமாகவும், பொறாமையின் காரணமாகவும், நாட்டு பற்று பேசிய மிகவும் ஒடுக்கப் பட்ட
மக்கள் கூட்டத்தில் இருந்து வந்த, பல இடர்களை கடந்து முன்னேறி சாதனை படைத்த ஒருவரை
திட்டிகொண்டிருக்கின்றன. கேவலதிலும் கேவலம் இது!
இன்னும் இருக்கும் கருத்துக்களையும், பின்னுட்டங்கள் சார்ந்து மேலும் சொல்ல வேண்டிவனவற்றையும்
அடுத்த பதிவு எழுதும் கட்டாயத்தின் போது பார்கிறேன். இந்த வலைப்பதிவில் பின்னூட்டங்கள் பொதுவாய்
மட்டுறுத்தப் படுவது இல்லை. இந்த பதிவில் வித்யாவை தாக்கி மட்டமான பின்னூட்டங்கள் வரக்கூடும்
என்று எதிர்பார்ப்பதால் இந்த பதிவும் தற்போதைக்கு மட்டுறுத்தல் அமுலில் உள்ளது.
சுரதாவில் தட்டியதால் வரும் எழுத்துப் பிழைகளுக்கு மன்னிக்கவும்.

11 Comments:
முழுவதும் ஒத்துப்போகிறேன் .செந்தழல் ரவியென்றொருவர் அதீதமான வெறுப்பைக் கக்கியிருக்கிறார்.
அவரின் இந்த வரியை பாருங்கள்..
//இல்லை தேசபக்தியுள்ள எந்த ஆண்மகனால் / பெண்மகளால் மன்னிக்க முடியுமா ?//
இதில் "ஆண்மகனால் / பெண்மகளால்" என்று குறிப்பிடுவதில் இருக்கும் அவரின் அசிங்கம் பிடித்த மனம் வெளிப்படுகிறது .யாரும் அதை கண்டுகொள்ளாத போது ,அதனை நான் வன்மையாக கண்டித்து இட்ட பின்னூட்டத்தை அவர் வெளியிடாதது ,அவர் இதை தெரிந்தே செய்திருக்கிறார் என்பதை உறுதி செய்கிறது.
:)))
நான் போட்ட பின்னூட்டமும் வரவில்லை..ஆனால் நான் அதை சேமிக்க வில்லையே...எப்படி பதிவு எழுதுவது என்று தெரியவில்லை...ஆழியூரானை கேட்டு அந்த பின்னூட்டத்தை வாங்கி தான் பதிவாக்க வேண்டும்...
நீங்கள் சொல்லும் அனைத்து கருத்துக்களோடும் ஒத்துப்போக இயலவில்லை...
ரோசாவசந்த் sir,
அழகாக சொன்னிர்கள். இதை விட தெளிவாகவும், அருமையாகவும் சொல்ல முடியாது...
நன்றி
JOe, saravanan,
Thanks for the comments. I am not able to write in Tamil, and that is the only reason for being able to write in detail abt this. Typing in Suratha is really hell. After going thru the comments, I amy write again when I get to write in Tamil freely, thanks!
Ravi, thanks to you aswell, for writing a comment here.
//that is the only reason for being able to write in detail abt this.//
Should read like "that is the only reason forNOT being able to write in detail abt this".
//வித்யாவிற்கு கிடைத்த வரவேற்பின் காரணமாய்//
ரோசாவசந்த் அவர்களே முரண்படுகிறேன்... வித்யா அவர்களின் திமிர் தனத்திற்கு எதிராக நான் ஒரு பதிவு போட்டிருக்கிறேன். அது தான் பிள்ளையார் சுழி. எந்த ஒரு தகுந்த காரணமும் சொல்லாமல் என்னை விளம்பரவெறியன்/அரைவேக்காடு என்றெல்லாம் ஆணவமாக விமர்சித்தார். பிரச்சினை ஆரம்பம் ஆனது அங்கே தான். அவர் என்னை விமர்சித்ததற்கு நான் கொடுத்த விளக்கத்தையும் அவர் வெளியிட வில்லை. பிரச்சினையை பெரியதாக்கி விட்டவர் அவர் தான்.
இன்னொன்று சொல்ல மறந்து விட்டேனே... அவரைப் பற்றி இதுமாதிரி பதிவு போடப் போகிறேன் என்று வித்யாவிடம் முன்னமேயே தெரிவித்து விட்டேன்... அவரும் போடுவதாக இருந்தால் போட்டுக் கொள்ளுங்கள் என பெருந்தன்மையாகச் சொல்லி விட்டார்....
மற்றவர்கள் வித்யாவிடம் அனுமதி வாங்கி தான் அவர் பெயரை பயன்படுத்துகிறார்களா என்பது எனக்குத் தெரியாது...
ரோசாவசந்த்,
நான் எழுத நினைத்த பதிவு. அருமையாக சொன்னீர்கள்.
சுதந்திரதினத்தை எல்லோருமே ஆடுவோமே பள்ளுப்பாடுவோமெ என கொண்டாட என்னாவசியம் வந்துவிட்டது? நாட்டில் அனைவருக்கும் உண்மையான விடுதலை வந்து விட்டதா? எல்லோருக்கும் நீதியும், சம உரிமையும் இருக்கிறதா? இது தெரியாமல் கூப்பாடு போடுவதால் சுதந்திரம் என்பதன் பொருள் கூட விளங்காமல் போகும். தேசபற்று என்பது ஒருவகையில் ஒரு வெறி தான்!
லிவிங் ஸ்மைல் வித்தியாவின் சர்ச்சையான சுதந்திரம் பற்றிய கருத்தில் எனக்கும் 100 சதவிகிதம் உடன்பாடு உண்டு. வாதத்திற்கு வருபவர்கள் யாராக இருப்பினும் காரணங்களை சொல்லுங்கள். சேற்றை வாரி வீசி வசைமாரி பொழியாதீர். செந்தழல் ரவி & கோ நடத்துகிற இந்த செயல் கண்டிக்கப் பட வேண்டியது.
/வித்யா நாட்டு பற்றி எழுதியிருந்ததும் மிகுந்த பொறுப்புணர்வுடனும், முதிர்ச்சியுடனும் இருந்தது.
அதையும் பெரியார் பெயரை சொல்லும் கொழுந்துகள் தாக்கி எழுதுவதன் அசட்டு நகைச்சுவைக்கு
சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. பெரியார் 1947 சுதந்திர தினத்தையே துக்க நாளாக
அறிவித்தார். இறப்பதற்கு நான்கு நாட்கள் முந்தய பேச்சில் கூட தான் இந்திய இறையாண்மையை
ஏற்றுகொள்ளாததை கூட்டத்தில் அறிவித்தார். அவர் பெயரை சொல்லும் முட்டாள்கள், சொந்த பகை
காரணமாகவும், பொறாமையின் காரணமாகவும், நாட்டு பற்று பேசிய மிகவும் ஒடுக்கப் பட்ட
மக்கள் கூட்டத்தில் இருந்து வந்த, பல இடர்களை கடந்து முன்னேறி சாதனை படைத்த ஒருவரை
திட்டிகொண்டிருக்கின்றன. கேவலதிலும் கேவலம் இது!/
வச்ந்த், இதைத்தான் நானும் சொல்ல்விரும்புவது.
.....
லிவ்ங் ஸ்மைல் வித்யா வலைப்பதிவில் எழுத வந்த ஆரம்பத்தில் வலைப்பதிவர்கள் கொடுத்த பாராட்டுக்களைப் பார்த்தவுடன் எங்கள் தமிழ்ச்சமூகம் இவ்வளவு விரைவில் மாற்றமடைந்துவிட்டதா என்று ஒருவித வியப்புத்தான் வந்தது. இப்போது எழுதப்படுவதைப் பார்க்கும்போது...... :-(((. நமக்கான வீரமும் தீரமும் பெருமிதங்களும் விளிம்புநிலை மனித்ர்கள் மீது வன்முறைகளாகக் காட்டப்படுவதில்தான் என்பது.... மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
இங்கு வெளிப்பட்டிருப்பது ஒரு வகையான மத மனநிலை. விளிம்பு நிலையில் இருப்ப்பவர்கள், பெண்கள், ஏழைகள், நோயாளிகள் போன்றவர்கள் தங்கள் மேல் காண்பிக்கப்படும் அனுதாபத்துக்கு, அங்கீகாரத்துக்கு மாற்றாக நன்றிக்கடனை கொட்டிக்கொண்டே இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் அவர்கள் இயல்பாக, தங்கள் சுயமரியாதையை பாதுகாத்துகொண்டிருப்பது இம்மத மனநிலையில் மிகப்பெரும் குற்றமாகக் கருதப்படும்.
இத்தகைய மத அணுகுமுறை தலித்துகள், பெண்கள், சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் போன்றவர்களின் மேல் காட்டப்படுவதை சமீபத்தில் கூட
பார்த்தோம்.
அதிலும் இறையியல் கல்லூரியில் இருந்து கொடியேற்றக் கிடைத்த கெளரவத்துக்காக வித்யா கண்ணீர்விட்டு கதறி, நன்றி உணர்வால் உந்தப்பட்டு, இப்படியான ஒரு அங்கீகாரத்துக்கு தான் எவ்விதத்தகுதியும் இல்லாதவள் என்று அடக்கமாச் சொல்லி, அப்படியொரு வாய்பை வழங்கிய தேசத்துக்காக உயிரையும் வழங்கத் தயாராய் இருப்பதாக எழுதியிருந்தால் மத மனநிலையும், அதன் வேரிலேயே கிளைக்கும் தேசிய உணர்வும் மகிழ்ந்திருக்கும்.
பாவம் வித்யா, ஒரு வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டார்!!
விடாது கருப்பு போன்ற பதிவுகளைப் பற்றி நீங்கள் சொல்வதுடன் உடன்படுகிறேன்.
ராமன் ஸ்ரீநிவாசன் ஐயங்கார் என்கிற பொட்டி பூர்ஷ்வா அவர்களே,
லிவிங் ஸ்மைல் வித்யா பற்றி நான் எந்த பின்னூட்டமும் இதுவரை எந்த பதிவும் இட்டதில்லை. என் பெயரில் யாரோ ஒருவர் இட்டிருக்க வேண்டும்.
எலிக்குட்டி, பூனைக்குட்டி சோதனைகளை நடைமுறைப்படுத்தி சோதனை செய்துகொள்ளுங்கள்.
நீங்கள் இதுபோல புரட்டுத் தகவல்களை பேசியதற்காக ராயர் காபி கிளப் என்ற இடத்தில் திருமலைராஜன் என்பவன் உங்களை ஓடஓட விட்டு கட்டையை எடுத்து துரத்தியதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
உங்களைவிடவா நான் பார்ப்பனர்களையும் பார்ப்பனீயத்தையும் அதிகமாக எதிர்க்கிறேன்? சிம்புவின் குறையை அறுக்க வேண்டும் என கையில் வீச்சறுவாளோடு அலைந்த மிருகம் நானா?
Post a Comment
<< Home