புதிய பதிவு.
எனது மெயின் பதிவில் எழுதிய புதிய பதிவை, தமிழ் மணத்தில் சேர்க்க முடியவில்லை. ஏதோ RSS பிரச்சனை என்கிறது. எனக்கு புரிபடக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தெரியாததால், இங்கே அறிவிக்கிறேன். நண்பர்கள் யாராவது தமிழ்மணத்தில் சேர்த்துவிடக்கூடும் எனில், (அரசியல்/சமூகம் பிரிவிலோ, அல்லது குசும்பு செய்ய நினைத்தால் நகைச்சுவை/நையாண்டி பகுதியிலோ அவர்கள் விருப்பப்படி) சேர்த்துவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
67 Comments:
நான் முயற்சி செய்தபோது பின்வரும் செய்தி கிடைத்தது...

மன்னிக்கவும்! உங்கள் பதிவை புதுப்பிக்க இயலவில்லை.
உங்கள் செய்தியோடையில் பிழையிருக்க வாய்ப்புள்ளது.
உங்கள் செய்தியோடையைச் சோதிக்கவும்
பிழையிருப்பின் அதை சரி செய்தபின் அளிக்கவும்
குழலி, நன்றி! அதே செய்திதான் எனக்கும் கிடைத்தது. எனக்கு எதை சரி செய்யவேண்டும் என்பது தெரியாததால் இந்த பதிவு.
ரோசா உங்களது xml கோப்பை சோதித்தபோது xml புரிந்து கொள்ள இயலாத characters உள்ளது, line no 28ல் உள்ளது, உங்கள் பதிவில் மேற்கோள் குறி, மற்றும் தடித்த எழுத்துகள், முக்கியமாக .

இருக்கும் எழுத்துகளை நீக்கவும், இவைகளை நீக்க சரி பார்த்த போது வேலை செய்கிறது, ப்ளாக்கரின் WYSWYGல் edit html சென்று இதை நீக்கவும்
எனக்கும் அதே செய்தி தான் கிடைக்கிறது....
///ஏதோ RSS பிரச்சனை என்கிறது. //
ஒருவேளை பஜ்ரங்தள்ளை கேட்டுப்ப்பாப்போமாங்க ??
அது என்னங்க உள்குத்தில்லாம ஒரு எழுத்து கூட போட மாட்டேன்றீங்க

நான் நீக்கி சோதித்த எழுத்துகள், இரண்டு தடித்த வரிகளுக்கு இடையில் இருக்கும் வரிகள்
நரேந்திர மோடியையும் தூக்கில் போடவேண்டியதுதானே என்பதற்கு மேல் அவர்களிடமும் வேறு வாதங்கள் இல்லை. வேறு யாரிடமிருந்தும் எந்த வகை குரலும் ஒலித்ததாக எனக்கு கேட்கவில்லை.

வழக்கம் போல மிக முட்டாள்தனமான,

தீர்ப்பளிக்கப் பட்ட நபருக்கு ஆதாரவாக குரல் கொடுத்தால், வசையும் தேசத்துரோகி பட்டமும்

ன்பதற்கான உதாரணம் இது.

இந்த விஷயத்தில் தெளி

கேள்வி இருக்கும்.

ராஜிவ்காந்தி

குழலி, மீண்டும் உங்கள் கருத்துக்கு நன்றி. இப்போது இங்கிருந்து கிளம்ப வேண்டிய கட்டாயம் இருப்பதால் இதை செய்ய இயலும் என்று தோன்றவில்லை.மேலும் எனக்கிருக்கும் அறிவிற்கு நீங்கள் சொல்லியுள்ளது முழுவதும் விளங்கவில்லை. இரவு மீண்டும் வந்து அல்லது நாளை முயற்சிக்கிறேன். நன்றி!
//மன்னிக்கவும்! உங்கள் பதிவை புதுப்பிக்க இயலவில்லை.
உங்கள் செய்தியோடையில் பிழையிருக்க வாய்ப்புள்ளது.
உங்கள் செய்தியோடையைச் சோதிக்கவும்
பிழையிருப்பின் அதை சரி செய்தபின் அளிக்கவும்//
ரோசா, எனக்கும் அதே பிரச்சனைதான். 3 நாட்களாகத் தலையப் பிய்த்தும் ஒன்றும் பிடிபடவில்லை. இப்போது முத்து (தமிழினி) எனக்காக மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறார்.
(நான் பீட்டாவிற்கு மாறிவிட்டதால் இப்பிரச்சனை என்கிறார்கள்.)
சரி, உங்கள் பதிவில் "வசையும்" என்ற வார்த்தைக்கும் "தேசத்துரோகி பட்டமும்" என்ற வார்த்தைகளுக்கும் xml syntax illegal character ஒன்று உள்ளது அந்த character ; --- 3க்கும் ; க்கும் இடையில் இங்கே இடைவெளி விட்டுள்ளேன், ஆனால் உங்கள் பதிவில் இந்த இடைவெளி இருக்காது, இதை மட்டும் நீக்கிவிடுங்கள் வேலை செய்யும், இதற்கு முந்தைய பின்னூட்டத்தில் சோதனை முறையில் செய்து பார்த்தேன், பிரச்சினை இந்த ஒரு இடத்தில் மட்டுமே...
குழலில், மேலோட்டமாக முயன்றவரையில் என்னால் முடியவில்லை, தங்கவேல் சொல்வதுபோல் வேறு பிரச்சனையாக இருக்குமோ என்று நினைக்கிறேன். மிக்க நன்றி!
அய்யய்யோ அந்த பிரச்சினைக்குறிய character ஒவ்வொரு எழுத்திற்கும் இடைவெளி விடுகிறேன், முந்தைய பின்னூட்டத்தில் அதை செய்த போது வேறு ஏதோ காண்பிக்கின்றது.
& # 3 ;
சரி இதை நான் முயற்சிக்கிறேன் என் பதிவில்
நேற்று இந்த பதிவை இட்டுவிட்டு, என்ன முயன்றும் கிளம்புவதற்கு முன் தமிழ்மணத்தில் சேர்க்க முடியவில்லை. நான் கிளம்பிய பின், தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தன் கணிணியில் மணிநேரத்திற்கு உட்கார்ந்து, தவறுகளை திருத்தி இந்த பதிவை தமிழ்மணத்தில் பிரகாஷ் வரச்செய்தார். அவருக்கு எனது மிக மிக மனம் நிறைந்த நன்றிகள். குழலிலியும் இதற்காக முயற்சு செய்தார் என்று அறிகிறேன். அவரது அன்பிற்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்.
கருத்து எழுதிய அனைவருக்கும் நன்றி. மேலும் எழுத கருத்து இருந்தால் திங்கள் வந்து எழுதுகிறேன். நன்றி!
http://akaraa.blogspot.com/2006/10/blog-post_30.html
நான் புலிகளின் படுகொலைகளை கண்டித்ததில்லை என்று எப்படி அய்யா அறிவை பெற்றீர்கள்? அதுசரி, நீங்கள் என்ன உலகில் நடக்கும் எல்லா மனித உரிமை மீறல்கள், கொலைகளை பற்றிய உங்கள் கண்டனத்தை தெரிவித்துவிட்டு (குறைந்த பட்சம் அதை பற்றி தெரிந்து கொண்டு) கீ போர்டை தொடுகிறீர்களா?
/உங்களது மௌனமும் பல நேரங்களில் உங்களைப்பற்றி சொல்கிறது//
அது சரி, உலகில் நடக்கும் வன்முறைகளில், உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓரிரு விஷயங்கள் தவிர, மற்ற எல்லாவற்றிலும் மௌனமாகத்தானே இருக்கிறீர்கள்! அதை வைத்து நீங்களே உங்களை பற்றி சொல்லிக் கொள்ள வேண்டியதுதானே!
(மேலும் நான் தேவையான சந்தர்ப்பம் என்று நினைத்த இடங்களில், எதிர்குரல் கொடுக்க வாய்ப்பு இருந்த இடத்தில்(புலிகள் பற்றி) மௌனமாய் இருந்ததில்லை என்பது என் எழுத்தை தொடர்ந்து படிக்கும் எவருக்கும் தெரியும்.)
ுலிகள் இஸ்லாமியர்கள் மீது நடத்தும் தாக்குதல்களை கண்டிக்காமலிருக்க என்ன எழவு காரணம் இருக்கிறது!! கண்டிக்க வேண்டிய விஷயம்தான். என் பதிவில் முன்பே எழுதியிருகிறேன். பல பின்னூட்ட சண்டைகளில் எழுதியிருக்கிறேன். நீங்கள் எல்லாம் படிக்கவில்லையே என்று, எல்லா இடத்திலும் 'கண்டிக்கிறேன்' என்று ஆஜர் போட எனக்கு எழுத்து முழு நேரத்தொழில் அல்ல. உதாரணமாக இஸ்ரேலின் எல்ல அராஜகங்களை எதிர்தாலும், உலகின் மிக பெரிய வக்ரமாக இஸ்ரேலை நினைத்தாலும், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலின் போது, ஒரு பதிவு கூட நான் போட்டதில்லை. பதிவு போடுவதற்கும், குரலை ஒலிப்பதற்கும் நான் வைத்திருக்கும் சமன்பாடுகளும், என் வாழ்க்கையில் சாத்தியமாகும் கணங்களை பற்றியும் யாருக்கும் விளக்க முடியாது. அதற்கான அவசியமும் இல்லை. யாருக்காவது என் கருத்தை அறிய விரும்பானால் என்னிடம் வந்து கருத்து கேட்பதை தவிர வேறு என்ன வழி இருக்கிரது? அதை விடுத்து, 'இதை பற்றி ஏன் பேசவில்லை', 'உன் மௌனம உன்னை பற்றி சொல்கிறது' என்று முட்டாள்தனமாய் பேசினால் என்ன பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியும?
புலிகள் என்ற வலதுசாரி பாசிஸ இயக்கத்தை எதிர்த்து ஒரு குரலை அகரா ஒலித்துக் கொண்டிருக்கிறார். அதானால் அவர் எழுதியதற்கு மதிப்பு கொடுத்து இங்கே எழுத வேண்டி வந்தது.
மற்ற படி பாலா, உங்கள் அறிவு சற்று வளர்துள்ளதாக தோன்றும் போது (உதாரணமாக முந்தய பின்னூட்டாத்தில் போல்பாட்டை வைத்து கேட்டது போல் அல்லாமல் இருந்தால்) நிச்சயம் என்னால் பேச முடியும்.
http://ravisrinivas.blogspot.com/2006/11/blog-post_05.html
முதலில் பதிவை படிக்கத் துவங்கும்போது எஸ்.வி.ராஜதுரையின் கட்டுரைக்கு ரவி பதில் தருகிறார் என்று நினைத்து விட்டேன். ஆனால் கட்டுரையில் உள்ள கருத்துக்கள் மட்டுமின்றி, எழுத்து நடை, தெளிவான வாக்கியங்கள், ஆழமான விவரங்கள், அழுத்தமாக சொல்லும் முறை, இதை எல்லாம் பார்த்தால் ரவியிடம் இப்படி எதுவும் சாத்தியமில்லையே என்று குழப்பம் வந்து விட்டது. கடைசில் எஸ்,வி.ஆர் எழுதியதுதான், ரவி வெட்டி ஒட்டியிருக்கிறார் என்று புரிந்தது.
எதற்காக ஒட்டியுள்ளார் என்று சரியாக புரியாவிட்டாலும் - நன்றி!
http://kuzhali.blogspot.com/2006/11/blog-post.html
//உன் இருப்பே
சிலருக்கு எரிச்சல்
நீ இருக்கவேண்டும்
சிலரின் எரிச்சலுக்காகவேனும்//
குழலி, இந்த வரியை படித்த உடனேயே மிகுந்த உணர்ச்சி மேலிட்டுவிட்டது. தமிழகத்து பெரும் அரசியலின் சாரம்சத்தை ஒருவரியில் சொல்லியிருக்கிறீர்கள். எல்லா ஏமாற்றங்களையும் மீறி இன்னும் ஆதரிப்பது இதற்காகத்தான். தேர்தல் முடிந்த பின்பு எழுதிய என் பதிவில் இதை சொல்லியிருப்பேன். நன்றி!
http://bhaarathi.net/sundara/?p=293
சுந்தரவடிவேல், உங்கள் தந்தையின் மறைவிற்கும், அதைவிட அதிகமாக இந்த சடங்கில் நீங்கள் அனுபவித்த வலிக்கும் எனது அனுதாபங்களும் வருத்தங்களும்.
இந்த பதிவை தவற விட்டிருக்கிறேன். ‘விடாது கருப்பு’வின் பதிவின் தலைப்பில் உங்கள் பெயரை பார்த்து படிக்கத் தொடங்கி இங்கே வந்தேன். தங்கமணி சொல்வது போல், சடங்கின் போது அந்த பாப்பான் நடந்து கொண்டவிதத்தை விட, இங்கே வந்துள்ள பின்னூட்டங்கள் இன்னும் அதிக புரிதலை தருகின்றன.பார்பனிய எதிர்ப்பு என்பதையும், மற்றவன் சுயமரியாதை பற்றி பேசுவதையுமே ‘பிராமண துவேஷம்’ என்பதாக திரித்து கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் சில நேரத்தில் பார்பன எதிர்ப்பு என்பது வெறுப்பு என்ற கட்டத்தை (எல்லா எதிர்ப்புகளை போலவும்) அடையக் கூடும் என்பது நிதர்சனமானாலும், ‘பிராமண துவேஷம்’ என்று ஒன்று இருப்பதன் - இருக்க வேண்டியதன்- நியாயத்தை இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் புரிந்து கொள்ளலாம்.
http://naagariika-naadoodi.blogspot.com/2006/11/real-estate-booming.html
IT மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது மிக மேலோட்டமான ஒரு self centered சிந்தனை மட்டுமே. (மற்ற துறைகளுடன் ஒப்பிடும்போது, மிக குறைந்த அறிவு மூலதனத்தோடு, அல்லது அது இல்லாமலேயே லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் இவர்களை ஏமாற்றினால் அது ஒரு பெரிய சமூக பிரச்சனையும் அல்ல. ஆனால் பிரச்சனை அத்தனை எளிதானது அல்ல). இந்த IT boom என்பது வந்து, அதன் காரணமாய் இந்த ITகாரன்கள் எல்லாவற்றுக்கும் எந்த விலையும் தர தயாராய் இருப்பதால், அதாவது demand இருப்பதால்தான் விலை ஏறியுள்ளது. இதில் அடிப்படை பிரச்சனை IT என்ற துறையில்தான் உள்ளது. இதன் காரணாமாய் IT காரர்களை தவிர வேறு யாரும் வாழமுடியாத ஒருய் சூழ்நிலையை உருவாகிக் கொண்டிருக்கிறது. என்ன அளவிற்கு உழைத்தாலும், அறிவை பயன்படுத்தினாலும் ஐடி துறையில் இருப்பது போல் சம்பாதிக்க முடியாத யதார்தம், (அதே நேரம் முட்டாள்கள் கூட லட்சக்கணக்கில் IT துறையில் சம்பாதிக்கலாம் என்ற யதார்தம்) மற்ற துறைகளை பாதித்து கொண்டிருக்கிறது. இவர்கள் அதிக விலை தர தயாரக் இருப்பதாலேயெ விலை ஏறுகிரது, அது மற்றவர்களை பாதிக்கிறது. ஆகையால் இது ஒரு கூட்டுகொள்ளை! இதில் பாதிப்படைபவர்கள் ITயுடன் எந்த தொடர்பும் இல்லாதவர்களே!
http://madippakkam.blogspot.com/2006/11/blog-post_116428259752683243.html
எனது கமெண்ட்!
இந்த இரண்டு விஷயத்தையும் மீண்டும், மீண்டும் பிரச்சாரம் செய்தும், அதை முற்றிலும் புறக்கணித்து, தமிழக மக்கள் இரண்டு முறை ஜெயலலிதாவை முதல்வராக்கினார்கள். இந்த ஒரு காரணத்திற்காக தமிழ்நாட்டில் இருப்பதை பெருமையாக கருதுகிறேன். ( ஒருவேளை கிண்டலாக எடுத்துகொள்வார்களோ என்ற சந்தேகத்தில் சொல்கிறேன். மேலே ரொம்ப சீரியசாக சொல்லியிருக்கிறேன் - ஏற்கனவே என் பதிவில் சொன்ன விஷயம்தான்.!)
http://poonspakkangkal.blogspot.com/2006/11/blog-post_116471531788220397.html
பெரியாரின் மிக முக்கியமான எழுத்துகுறித்து எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்! பெண்கள் விஷயத்தில் அந்த காலகட்டத்தில் யாருமே (மேற்கில் கூட) சிந்தித்திராத விஷயங்களை, ஸிக்ஸர் அடிக்கும் லாவகத்துடன் சொல்லியிருக்கிறார். அவரை பின்பற்றும் சிலர், கண்ணகி பற்றியும், குஷ்பு விஷயத்திலும் சிவசேனாக்காரர்கள் போல சிந்திக்க நேர்வதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை இதனால்தானோ எத்தனை பெரியார் வந்தாலும் விடிவு வராமல் இருக்கிறதோ?!
http://pitchaipathiram.blogspot.com/2006/12/blog-post.html
இந்த பதிவை (மற்றும் பின்னூட்டத்தை) படிக்கும் போது வரும் பெரிய எரிச்சல், பல இடங்களில் 'கீழ்சாதி' 'தாழ்ந்த ஜாதி' 'உயர்ஜாதி' என்று எழுதியிருப்பது. இன்று இவ்வாறு எழுதுவது அரசியல் ரீதியாக தவறானது என்பதை பல பழமைவாதிகளும் (சொல்லப்போனால் பல இந்துத்வவாதிகளும்) கூட ஒப்புகொள்ளும் நேரத்தில், இது ஏதோ வேண்டுமென்றே எழுதியதாக படுகிறது. 'ஒடுக்கப்பட்ட ஜாதி' ஆதிக்க ஜாதி என்றெல்லாம் எழுதுவது ஒருவேளை போலித்தனமாகவும், அவ்வாறு எழுதுவதற்கான தேவையில்லாமலும் உங்களுக்கு தோன்றலாம். அப்படி தோன்றுவதை நேர்மை என்று கூட நினைக்கலாம். தமிழ் சூழலில் இலக்கியத்தையும் கலையையும் தேடுகிறேன் என்ற பெயரில் நடக்கும் அமைச்சூர் முயற்சிகள் எந்த அளவு அரசியல்ரீதியாய் சுரணையில்லாமல் இருக்கிறது என்று நான் புரிந்து வைத்திருப்பதற்கு உதாரணமாய் இதை எடுத்துக்கொள்கிறேன்.
(சில ஆண்டுகளுக்கு முன்னால் என்றால், இதையெல்லாம் மென்மையாக சுட்டிக்காட்டி பேசலாம்; அசிரத்தை என்று எடுத்துக் கொண்டு சுட்டலாம். இப்போது இந்த பிரச்சனைகள் பல இடங்களில் பேசப்பட்டு, எல்லோரும் அறிந்த ஒன்றாகவும், பலரால் ஒப்புகொள்ளப்பட்டதாக இருக்கும் நேரத்தில் மென்மையாக சொல்ல அவசியம் இருப்பதாக தெரியவில்லை.)
http://ayanulagam.wordpress.com/2007/05/09/பெரியார்-செய்தது-நியாயம்/#comment-134
சைமன் கமிஷன் இந்தியர்களுக்கு தங்களை தாங்களே நிர்வகித்து கொள்ளும் தகுதி இருக்கிறதா என்று ஆராய வந்தது. அவ்வாறு ஆராய்வதே, ஒரு ஆராய்தலை பிரிடீஷ் மேற்கொள்வதே தவறானது என்று காங்கிரஸ் உட்பட்டவர்கள் எதிர்த்தார்கள். நியாயமாய் பெரியாரும், அவரது சுயமரியாதை கொள்கைபடி இதை எதிர்த்திருக்கத்தான் வேண்டும். ஆனால் தங்களை தங்களே ஆள்வது என்பது, இந்தியாவில் அப்போதிருந்த நிலவரப்படி, காங்கிரஸ் கையிலும்-குறிப்பாக பார்பனர்கள் கையிலும் கேள்வி கேட்க இயலாத வகையில் அதிகாரம் சென்று அடைவதற்கே வழி வகுக்கும் என்ற வகையில் இருந்தது. அதை தடுப்பதற்கான ஒரே வழியாக பிரிடீஷ் ஆட்சி தொடர்வதும், சைமன் கமிஷனை ஆதரிப்பதுமாக பெரியாருக்கு இருந்திருக்கிறது. மேலும், தங்களை தாங்களே ஆட்சி செய்வதற்கான தகுதி என்பதை, இங்குள்ள மக்கள் பார்பன அடிமைத்தனத்திலிருந்து தங்களை விடுவித்து கொள்வதிலிருந்தும், அது குறித்து விழிப்புணர்வு பெறுவதும் என்பதாக எடுத்துக் கொண்டால், அத்தகைய (தங்களை தாங்களே நிர்வகித்து கொள்ளும்) தகுதியை இந்தியா பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த பார்வையில் பெரியார் சைமன் கமிஷனை ஆதரித்தார். இன்னும் விவரமாக பெரியாரின் அந்த காலக் கட்ட பேசுக்களையும் எழுத்துக்களையும் படித்தால் புரியலாம்.
http://sugunadiwakar.blogspot.com/2007/05/blog-post.html
சுகுணா, இன்னும் படத்தை பார்க்கவில்லை. ஆனால் உங்கள் விமர்சநத்துடன் ஒத்துப் போவேன் என்று நினைக்கிறேன். ஞானராஜசேகரன் என்ற மிக மோசமான திரை இயக்குனரை ஏன் பலர் கொண்டாடுகிறார்கள் என்று புரியவில்லை. மோகமுள் மகா மட்டமான முறையில், மூல நாவலுக்கு நன்றியில்லாமல் எடுக்கப் பட்ட திரைப்படம். பாரதி திரைப்படம் அதைவிட கோராமை. பெரியார் படம் போன்றே எகப்பட்ட தகவல் பிழைகள் ஒவ்வாத காட்சிகள் . எனக்கு ஞானம் இத்தனை ஆரவாரத்துடன் பெரியார் படம் எடுப்பதும், அதற்கு இத்தனை விளம்பரம் வருவதும், பலர் பாராட்டி தொலைப்பதும் கவலை குரியதாக இருந்தது என்பதற்கு, பெரியார் குறித்த ஒரு நேர்மையான, இயல்பான திரைப்படம் இனி எதிர்காலத்தில் வர இயலாமல் தடுத்துவிடும் என்பதை தவிர வேறு காரணமில்லை. காந்தி மாதிரி பெரியாருக்கு ஒரு `அட்டன்பரோ' வந்து ஒரு நாளும் படம் எடுக்க போவதில்லை என்ற யதார்ர்த்தம் தெரியுமென்றாலும் ஞானராஜ சேகரனை வைத்து சமாதானம் அடைய முடியவில்லை.
http://vilambi.blogspot.com/2007/10/blog-post_1713.html
(பாலாவின் பதிவில் எழுதிய பின்னூட்டம்)
இந்த கி அ அ அனானி, பாலா இவர்களின் அரசியல் மற்றும் நோக்கங்களுடன் எனக்கு எந்த பகிர்தலும் இல்லை. நேற்று வா.மணிகண்டனின் பதிவில் இந்த கண்டன கூட்டக் கண்ராவி பற்றி (பாராட்டி எழுதிய) பதிவை படித்தேன். வேறு யார் யார் பாராட்டி செய்தி தந்திருக்கிறார்கள் என்றும் தெரியாது. எங்காவது ஒரு இந்த கண்றாவி கேலிக்கூத்து பற்றி எழுத வேண்டும் என்று நினைப்பதால் (இது குறித்தெல்லாம் பதிவு எழுதக் கூடாது என்று உறுதிமொழி கொண்டிருப்பதால்) இங்கே எழுதுகிறேன்.
ஞாநி எழுதியதை இன்னும் படிக்கவில்லை என்றாலும், இங்கே கேள்விப்பட்டவரையில் அது மோசமானதுதான்; மேலும் ஞாநியின் பல அண்மைக்கால கருத்துக்களை உளரல் என்ற அளவில் பார்கிறேன். (சுகுணாவின் பதிவில் நான் சொன்ன கருத்துக்களிலும் மாற்றமில்லை.) ஆனால் இந்த விஷயத்திற்காக ஞாநி மீது இது வரை நிகழ்ந்த தாக்குதல் போன்று நோய்கூறு கொண்ட கும்பல் தாக்குதலை சமீபத்தில் வேறு காணவில்லை. வயோதிகம் காரணமாக கலைஞர் பதவி விலகி ஸ்டாலின் பதவிக்கு வரவேண்டும் என்று சொல்ல ஞாநிக்கு எல்லா உரிமையும் உண்டு. அதை விமர்சிக்கலாம்; ஆனால் சொன்ன ஒரு கருத்திற்கான இந்த தாக்குதலின் தன்மை ஜனநாயகதன்மை சற்றும் இல்லாத பாசிச கூறு கொண்டது. இதில் ஞாநியின் பார்பனியம் எதுவும் வெளிப்படவில்லை. இதை பார்பனியம் என்று சொல்வது போன்ற நோய்கூறு கொண்ட நகைச்சுவையும் வேறு கிடையாது. இதையெல்லாம் பார்பனியம் என்று உளரத் துவங்கினால் உண்மையிலேயே இந்த சமூகத்தில் கான்சர் செல்களாக வியாபித்திருக்கும் பார்ப்பனியதை எப்படி ஞாநியின் ஒண்ணரையணா கருத்திலிருந்து வேறுபடுத்தி அடையாளம் காணப்போகிறார்கள்? இந்த ஓண்ணரையணா பிரச்சனைக்கு வாணிமகாலில் (இந்த கண்ராவிக்கெல்லாம் யாரய்யா நிதி உதவி செய்கிறார்கள்?) ஆம்வேகாரன்கள் கணக்காய் காசு கட்டி கூட்டம் போடுவது போன்ற கேவலம் வேறு கிடையாது. குட்டி ரேவதியின் அழுகுணி ஆட்டத்திற்கு பிறகு நடந்திருக்கும் அடுத்த கேலிக்கூத்து இது. மார்கஸ், பிரபஞ்சன், ரவிக்குமார் போன்றவர்கள் கொஞ்சம் கூட விமர்சனமின்றி கும்பல் மனநிலையுடன் சேர்ந்து கோஷ்டி கானம் பாடுவது இன்றய சூழல் மீது எந்த நம்பிக்கையும் ஏற்படுத்த மாட்டேன் என்கிறது. எதையாவது எங்காவது சொல்லி ஆகாவேண்டும் என்பதற்காக இங்கே எனது இந்த பின்னூட்டம்.
பாலா, நான் எழுதிய டிஸ்கி எனக்கு, என்னையும் சீரியசாக படிப்பவர்களுக்கும் ஆனது. இந்த குறிப்பிட்ட பதிவில் திமுக எதிர்ப்பு அரசியல் என்ற வகையில், உங்களுக்கும், பதிவை எழுதிய அனானிக்கும் சில அரசியல் நோக்கங்கள் இருக்கலாம். அந்த நோக்கத்துடன் எனக்கு எந்த பகிர்தலும் இல்லை என்றே சொன்னேன். மற்றபடி வேறு பல விஷயங்களில் பகிர ஏதாவது இருக்கலாம். நீங்கள் செய்யும் நல்ல காரியங்களுக்கு என் ஆதரவு உண்டு என்பது உங்களுக்கு தெரியும். அதை சொல்வதிலும் எனக்கு தயக்கமில்லை.
சுகுணாவின் பதிவில் எழுதியதை இங்கே போட்டு, என்ன முரண்பாட்டை அனானி சுட்டி காட்டுகிறார் என்று கேட்டு தலை சொறிந்து கொள்ள விரும்பாவிட்டாலும், தெளிவிற்காக சில விஷயங்கள். சுகுணா திவாகரின் பதிவை படித்த போது யாரும் ஞாநியை இந்த அளவு திட்டித் தீர்த்திருக்கவில்லை. (அல்லது நான் அதை படித்திருக்கவில்லை). சுகுணாவும் ஞாநியின் கலைஞர் மீதான போலியான அக்கறையை விமர்சித்திருந்தாரே அன்றி (அவருடைய விமர்சனத்தில் எனக்கு பிரச்சனையும் இல்லை) பாப்பான் என்று திட்டவில்லை. சோவையும் ஞாநியையும் ஒரே தட்டில் வைத்து பார்க்க முடியாது என்றுதான் எழுதியிருந்தார். நான் ஞாநியை பற்றி சொன்னதும் பல காலமாக என் பதிவில் ஞாநி பற்றி எழுத நேரும் போதெல்லாம் சொன்ன ஒரு கருத்து தான். ஞாநியிடம் இருக்கும் ஒரு முரட்டுத்தனமாக மூர்க்க குணம் கொண்ட பார்வை, வீம்பாக அவரை பல நிலைபாடுகளை வேண்டுமென்றே எடுக்க வைக்கும் என்பதே. இன்றய அவரது கண்மூடித்தனமான திமுக எதிர்ப்பையும் அவ்வாறே பார்கிறேன். இது ஒரு புதை குழி, இதில் விழுந்து ஞாநி இன்னும் பாதாளத்தில் போக நேரிடும் என்பது என் கணிப்பு. மற்றபடி கருணாநிதி பற்றிய ஓ பக்கத்தில் பார்பனியம் வெளிபட்டதாக எதுவும் நான் சொல்லவில்லை. (கண்ணகி விஷயத்திலும் அவரிடம் பார்பனியம் எதுவும் வெளிப்படவில்லை என்பதையும், தேவர் ஜாதி வெறியர்களால் (குறிப்பிட்ட அளவிற்கேனும் தன் சொந்த ஜாதி பற்றி விமர்சனம் செய்துள்ள) ஞாநி `பாப்பான்' என்று தாக்கப் பட்ட அநியாயத்தையும் குறிப்பிட்டுள்ளேன்). இப்போதய தெளிவிற்கு இது போதும் என்று நம்புகிறேன்.
இது போன்ற விவத்தங்களில் ஈடுபடும் ஆர்வம் இல்லாமலேயே பதிவுகள் நான் எழுதுவதில்லை. (பார்பனிய எதிர்ப்பு அரசியல் பேசும்) யாருமே ஞாநி மீதான ஜனநாயக தன்மை சற்றும் இல்லாத தாக்குதலை கண்டிக்காத காரணத்தால் இதை சொல்ல வேண்டியது முக்கியம் என்பதால் எழுத வேண்டியிருந்தது. அதற்கு இங்கே இடமளித்ததற்கு நன்றி.
http://madippakkam.blogspot.com/2007/11/blog-post_12.html
மற்ற விஷயங்களில் ரொம்போ முற்போக்காக பேசுவதாக தோற்றமளிக்கும், அப்பப்போ தீவ்ரமாகவும், புரட்சிகரமாகவும் குரல்விடும் லக்கிலுக் உண்மையில் ஒரு மிடில் கிளாஸ் பொதுப்புத்தியை மீறி சிந்திக்க தெரிந்தவரல்ல எனபதற்கான உதாரணமாக இந்த பதிவை எடுத்துக் கொள்கிறேன். லக்கிலுக்கால் எதிர்க்கபடும் பல அம்பிகள் எழுதும் பதிவிலிருந்து எந்த விதத்தில் இந்த பதிவின் பார்வை மாறுபடுகிறது? ஆக தனக்கான சட்டகத்திலிருந்து வெளி வந்து பார்பது அவ்வளவு எளிதல்ல, தீவிரமாக பேசும் மற்ற விஷயங்களும் தனக்கான தற்சார்பு சார்ந்த சட்டகத்திலிருந்து வெளிவருவது மட்டுமே என்று புரிந்து கொள்ளலாம் என்பது என் கருத்து.
http://makkal-sattam.blogspot.com/2007/12/blog-post.html
//கருத்துரிமையை பறிக்கும் இது போன்ற சம்பவங்கள் இஸ்லாமிய நாடுகளில் மட்டுமே நடைபெறுவதாக ஒரு தவறான பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.//
எல்லா மதங்களும் அந்த மதத்திற்கு எதிரான கருத்துரிமைக்கு எதிரானதுதான். கிரிஸ்தவமும், இந்துமதம் சார்ந்த சட்டங்களும், பார்பனியமும் விளைவித்த வன்முறைக்கு அளவு கிடையாது. என்றாலும் சட்டபூர்வமாக, அரசு அங்கீகாரத்துடன், நீதிமன்றம் மூலமாக நியாயப்படுத்தப்படும் இந்த வகை வன்முறை, இன்றய காலகட்டத்தில், இஸ்லாமிய நாடுகளில் மட்டுமே இருக்கிறது. அது தவறான பிரச்சாரம் என்று சும்மானாச்சிக்கு சொல்லி (அதற்கு தவறான ஆதாரங்கள் அளித்து) உங்களையோ யாரையோ சமாதானப் படுத்திக் கொள்வதில் என்ன பயன் இருக்கிறது என்று புரியவில்லை.
அப்படி `சிந்திக்காமல்’ அன்புமணி என்ன தப்பாக பேசி விட்டார்? ஒரு குறிப்பிட்ட டாக்டரை பற்றி பேசும் போது அவர் பீஹாரை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டது தவறாக இருக்கலாம்; அதை விமர்சிக்கலாம். மற்றபடி ஒரு குறிப்பிட்ட பிஹாரை சேர்ந்த மருத்துவரை பற்றி பேசினால் அது எப்படி எல்லா பிஹாரி மருத்துவரகளை பற்றி குறிக்கும்? மேலே சுட்டி கொடுத்துள்ள செய்தியிலும், அதற்கு வந்த பின்னூட்டங்களிலும்தான் வட இந்திய வெறியும், அன்புமணி மீதான (அடையாலம் சார்ந்த) வெறுப்பும் தெரிகிறது.
http://satrumun.com/?p=4020#comment-3792
ாலுமகேந்திராவின் கருத்து மிக முட்டாள்தனமாக எனக்கு படுகிறது. கலை, இலக்கியம் குறித்த எந்த நவீன புரிதலும் இல்லாமல், இன்னும் பழைய ஸ்டீரியோபாணி (முற்போக்காக தோற்றமளிக்கும்) கருத்துக்களை சொல்லிக்கொண்டிருக்கிறார். அவர் பார்வையில் ரீன்னும் நீட்டிப் பார்த்தால் தருமபுரி நிகழ்சியை பத்திரிகையில் ரிப்போர்ட் செய்வது கூட ஒரு வியாபார உத்தி மட்டுமே. பாலாஜி சக்திவேலின் கல்லூரி, மிக நேர்மையான முறையில் சம்பவத்தை காட்சியாக்கி, பிண்ணணி கதை மூலம் அதை கலையாக்கியிருக்கிறது. இன்னும் இது பற்றிய என் பல கருத்துக்களை சொல்ல இந்த பின்னூட்டம் காண்து; ஒரு பதிவு தேவைப்படும். பாலு போன்ற தனது பழமைவாத குருவின் சிந்தனைகளை தாண்டி பாலாஜி தன்னை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
http://xavi.wordpress.com/2008/01/07/charu/#comment-1344
http://senthilapi.wordpress.com/2008/01/07/திருமா-குஷ்பு-சமாதானம்-க/
//எந்த கட்டத்திலும் குஷ்புவுக்கு எதிராக தானோ தனது அமைப்பினரோ போராவில்லை என்றும் விதிவிலக்காக சென்னையில் அப்போது குஷ்புவுக்கு எதிராக நடந்த ஒரு தன்னெழுச்சியான போராட்டத்தையும் தான் ஏற்வில்லை என்பதையும் வெளிப்படுத்தினார். மீடியாவும் குஷ்புவின் எதிரிகளும் தான் இந்த பிரச்னையை பெரிதாக்கினார்களே ஒழிய, தாங்கள் அல்ல என்றார். இந்த பிரச்னையை குஷ்பு கையாண்ட விதமும் அதற்கு ஒரு காரணம் என்பதை அவர் தன் பேச்சினூடாக புரியவைக்க முயன்றார். பெண்ணுரிமை, கற்பு குறித்த கருத்துகளில் தான் குஷ்புவின் நிலைப்பாட்டிலிருந்து பெரிதும் முரண்பட்டு நிற்கவில்லை என்று பேசிய திருமா தனக்கும் குஷ்புவுக்கும் இடையிலான முரண்பாடு நட்பு முரண்பாடுதானே ஒழிய பகைமுரண்பாடு அல்ல என்று கூறினார். //
இதெல்லாம் ரொம்ப ஓவராக இருக்கிறது. “சுகாசினியை நடமாட விடக்கூடாது; குஷ்பு பேசியது ஒரு அத்து மீறல்” என்றெல்லாம் கருத்துக்களை விட்டவர் திருமா; குறிப்பாக சன் நியூஸில் நடந்த ஒரு விவாதத்தில் திருமா பேசி பதிவாகிய கருத்துக்கள், திருமாவின் மேலே உள்ள கருத்துக்கள் பொய்யானவை என்பதை உறுதிப்படுத்தும். திருமா தாராளாமாய் தனது கருத்தை மாற்றிகொள்ளலாம். அது வரவேற்க தக்கது; அதற்கு முன் கடந்த காலத்தில் குஷ்பு மீது தொடுத்த ஒரு அராஜக தாக்குதலுக்கு மன்னிப்பு, குறைந்த பட்சம் வருத்தமாவது தெரிவித்த பிறகு மாறினால் நன்மை பயக்கும். மற்றபடி இது போன்ற பீலாக்களால் எந்த நண்மையும் இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. இதன் பிண்ணணி என்னவென்று ஆராய்வது மட்டுமே அறிவுடமை என்று தோன்றுகிறது.
http://valaipadhivan.blogspot.com/2008/01/blog-post_23.html
சுகுணாவின் பதிவை படிக்காமல் இந்த பதிவை படித்து, மேலே உள்ள ஆங்கில கருத்து ஓஷோவினுடையதாக நீங்கள் சொல்லி விமர்சிக்கிறீர்களோ என்று குழம்பி, தெளிவு வேண்டி பின்னூட்டம் இடப்போய், நல்ல வேளையாய் எழுதும் முன் சுகுணா பதிவிற்கு சென்று படித்ததால் இப்போது புரிகிறது.
மனித வரலாற்றில் பேசிய சமத்துவம், மேலும் மற்ற எல்லா வகை விடுதலை கருத்துக்களுமே ஒரு வகையில் இயற்கையானது என்று அந்தந்த காலகட்டத்தில் கற்பித்து கொண்ட விஷயங்களுக்கு எதிரானதாகவே இருந்திருக்கிறது. ஒரு வகையில் தேனிக்களும், எறும்பு சமுதாயமும் இயற்கையானது என்றால், அடிமை வழக்கம் கூட இயற்கையானது என்று வாதிட முடியும். இந்த வகை இயற்கையாக இருந்த அடிமை வழக்கத்தை விட்டுதான் நாம் இந்த கட்டத்தை அடைந்திருக்கிறோம். ஆகையால் என்னத்திற்காக இயற்கையாகவும், இயல்பான பகுத்தறிவு என்று தட்டையாய் தெரிவதையும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுப் பார்கலாம். அடுத்து சற்று யோசித்து பார்த்தோமானால் இயற்கைக்கு எதிரானது என்று கருத்துவதும் (உதாரணமாக இனவிருத்தி தவிர்த்த பாலின்பம்) ஒரு வகையில் இயற்கைக்கான சட்டகத்திற்கு உள்ளேயே மேற்கொள்ளப்படும் முயற்சியே. அந்த வகையில் இயற்கையானது அல்லாதது என்று எதுவும் இல்லை என்றும் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
அது சரி, விலங்குகள் `இயற்கையாக அமைந்த' உணர்வுகளின் போக்கில் செயல்படுவதை முன்வைத்து, மனிதன் தன் அறிவு கொண்டு யோசித்து பாலின்பம் மட்டும் போதும்,
வாரிசு வேண்டாம் என்று முடிவு செய்வது irrationalஆ?
http://idlyvadai.blogspot.com/2008/01/blog-post_28.html
பாமரன் (சோவைவிட) சில (சில மட்டும்தான்) கேவலமான சிந்தனைகளை கொண்டவர் என்பதை அவரது அண்மைக்கால எழுத்துக்களை படித்து தெரிந்து கொண்டேன். இவருடைய எழுத்து, தீவிரமான சிந்தனைகள் கொண்ட இளைஞர்களை கவருவது(இளைஞிகளை கவரும் வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை), தமிழ் சூழலில் நிகழும் பல ஆபத்தான நிகழ்வுகளில் ஒன்றாக நினைத்திருந்தேன். அவரது எழுத்து திறமையும் நடையும் கூட இத்தனை கேவலமானது என்பதை இந்த பதிவை படித்துத்தான் அறிந்தேன். அத்தனை ஆபத்தானவர் இல்லை என்றுதான் இப்போது தோன்றுகிறது.
http://anathai.blogspot.com/2008/02/blog-post.html
சுகுணா திவாகர் சற்று முன் போன் செய்து, நீங்கள்தான் `அந்த' அனாதை ஆனந்தனா என்று கேட்டு பேசிய பிறகு, இந்த பதிவை படித்தேன்; அதன் மூலம் வெங்கட் சுவாமிநாதனின் கட்டுரையையும் படித்தேன். உங்கள் கோபத்தின் பின்னுள்ள அத்தனை நியாயங்களையும் நானும் ஏற்றுகொள்கிறேன். கலைஞர் மீதான் இவர்கள் அத்தனை பேரின் ஒட்டு மொத்த தாக்குதலின் பிண்ணணியை புரிந்து கொண்டு, கலைஞரின் வறலாற்று முக்கியத்துவத்தை நீங்களும் உணர்வீர்கள் என்று நம்புகிறேன். கலைஞர் இல்லாத தமிழகத்தை கொஞ்சம் கற்பனை செய்து பார்க்கவேண்டும்.
அடுத்து மோடியின் வெற்றியை பார்பன புழுக்களும் (பல பார்பனராய் பிறக்காத மலபுழுக்களும்) கொண்டாடியதையும், கலைஞரை பற்றிய அவர்களது காழ்புடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
உங்கள் பழைய பதிவையும் பார்த்தேன். ஜெமோ சிவாஜி பற்றி எழுதியதை படிக்கவில்லை; ஆனால் எம்ஜியார் பற்றி எழுதியதை படித்தேன்.அதுவே ஜெயமோகனின் தமிழ் மற்றும் தமிழகம் மீதான குரோதம், காழ்ப்பு, கீழான பார்வைக்கான உதாரணமாக நினைக்கிறேன். அதில் அங்கதம் என்று ஒரு கண்ராவி வேறு இருக்கிறதாம். இதையெல்லாம் ரசித்து வயிறு வலிக்க (ரசித்து)சிரிக்கும் ஆட்களை பற்றி என்ன சொல்லலாம் என்பதை இந்த பதிவின் வரிகளிடையே தேடிக் கொள்ளலாம்.
// தமிழ் நாட்டு இளைஞன் என்னவென்றால் உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு என்கிறான்.. விஜயகாந்துக்கு என்கிறார். என்ன அயோக்கியத்தனம் இது.//
இதில் அயோக்கியத்தனம் என்ன இருக்கிறது என்று ரத்தம் வரும்வரை சொரிந்து யோசித்தும் புரியவில்லை.
http://masivakumar.blogspot.com/2008/03/blog-post_04.html
இந்த மாதிரி ஆவேசங்கள் முதலில் தமிழ்நாட்டு சூழலில் தேவையில்லை; அப்படி ஆவேசப்படுவது வெட்டியானது. இவை எல்லாமல் இல்லாமல் ரஜினிக்காகவும், விஜயகாந்துக்காகவும் உயிர் கொடுக்கப் போவதாக சொல்லி இந்த ஆவேசத்துக்கு மாற்று ego satisfier வைத்து கொள்வது எவ்வளவோ மேல். இத்தனை ரத்தக் களரி நடந்த பின்பும் தங்கள் சூழல் மீது சின்ன விமரசனம் கூட இல்லாமல், அதை glorify செய்து பேசும் டொமினிக் ஜீவாதான் ிந்திக்க வேண்டிய தேவை நிறைய இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.
http://pesalaam.blogspot.com/2008/03/ii.html
வா.மணிகண்டன்,
இந்த பதிவை படிக்க நேர்ந்து எனக்கு வந்த `உலகம் எவ்வளவு விநோதமனது' என்ற ஆச்சரியக்குறியுடனான புன்சிரிப்பிற்கு உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த பதிவின் நேர்மையின்மை கலந்த சந்தர்ப்பவாதம் (அதாவது ஹிப்பாக்கரசி)பற்றி பேசும் அளவிற்கு எனக்கு சக்தியும் பொறுமையும் இல்லை. ஒருவேளை உங்களுக்கு அல்லது மற்ற யாருக்க்காவது விளங்கினால் பயனளிக்க கூடும் என்பதற்காக ஒரே ஒரு பாயிண்ட்.
(சுஜாதா மீதான சுகுணாவின் தாக்குதல் எனக்கு ஒப்புதலில்லை என்பது வேறு விஷயம்).
தங்கள் அடையாளத்தை விமர்சித்து கொள்ளாத, ஒருவகையில் பார்பனிய எதிர்ப்பு அரசியலை மறுக்கும்/எதிர்க்கும் சுஜாதா போன்றவர்களை தூக்கி பிடிக்கும் நீங்கள், எந்த தகுதியின் அடிப்படையில் தன் பார்பன அடையாளத்தை வெகுவாக சுய விமர்சனம் செய்துகொண்ட, பார்பனிய அரசியலை (தனது பாணியில்) எதிர்த்து வரும் ஞாநியை மிக கேவலமான முறையில் திட்டி எழுதினீர்கள் என்பது கேள்வி. மீண்டும் சொல்வதானால் சுஜாதா, சுராவுக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள், எந்த அடிப்படையில் ஞாநியை `கடைந்தெடுத்த சாதி வெறியர்' என்றீர்கள் என்பது கேள்வி. சுகுணாவின் பதிவில் உள்ளடக்கமாக இந்த கேள்வி உள்ளது. அதற்கு பதில் சொல்லாமல், எதோ எலக்கியவாதி ஆகிவிட்டது போன்ற, மேலோட்டமான வாசிப்பு கொண்டவர்களிடன் செல்லுபடியாகும் பாவனையை விட்டுவிட்டு, முடிந்தால் இந்த ஒற்றை கேள்விக்கு பதில் சொல்லுங்கள் - ஏற்கனவே இந்த பதிவில் சுகுணாவின் வசைகளை கண்டிக்கும் பாவனையில் நாகரீகமான பதில் வசைகளை வைத்தது போல் அன்றி, ஒரு தர்க்கரீதியான வரிகளில்.
http://nattunadappu.blogspot.com/2008/04/blog-post.html
அரவிந்தன்,
கலைஞரின் திடீர் பல்டி மிக மோசமான செயல்பாடு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை; கர்நாடக காங்கிரஸ் நலன் என்ற பிண்ணணியில் உள்ள தனது அரசியல் சார்ந்த சுய நலன் மட்டுமே இதில் உள்ளது என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை; கலைஞர் விளக்கமாக அளித்தது எல்லாம் அபத்தம்; மற்றும் இந்த ராஜதந்திரம் என்பதெல்லாம் கழக கண்மணிகளின் (மற்றவர்களை விட) தங்களையே ஏமாற்றிக் கொள்ள சொல்லும் ஒரு அல்ப சால்ஜாப்பு என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால், தமிழுக்கும் தமிழர்களுக்கும் எல்லா தளங்களும் எதிராகவே நிலைபாடு கொள்வதையே தங்கள் பிழைப்பு என்று நம்பிக்கொண்டிருக்கும், தமிழ் நாட்டில் உடம்பு வளர்த்த உயிரினங்களும், ஏதோ தமிழ்நாட்டு நலன் மீது அக்கறை உள்ளதுபோன்ற நடிப்புடன் கலைஞரை திட்டிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் (மேலும் ஊடகத்தின் வெளிப்படையான பாரபட்சங்களை கவனிக்கவும்), நாம் (அதாவது அடிப்படையில் கலைஞர்/திமுக வெறுப்பு என்பதை ரத்தத்தில் கலந்து கொள்ளாதவர்கள்) கலைஞர் இந்த முடிவு எடுப்பதற்கான அரசியல் நியாயங்களை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டாமா என்று எனக்கு எண்ணத் தோன்றுகிறது.
கர்நாடகத்தில் இந்த அல்ப பிரச்சனையை வைத்து அரசியல் செய்து லாபம் சம்பாதிக்க முடியும். தமிழகத்தில் நிலமை அப்படி இல்லை. கலைஞர் தீவிரமான நிலைபாடு எடுப்பதன் மூலம் பெறக்கூடிய அரசியல் லாபம் எதுவும் இருப்பதாக தோன்றவில்லை. மாறாக காங்கிரஸின் தயவு இல்லாமல் கலைஞர் மீண்டும் வருவதோ, தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பதோ கூட சாதியமில்லை. அதனால் காங்கிரசிற்கு உதவுவது , குறைந்த பட்சம் காங்கிரசிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தாமல் இருப்பதுதான் அரசியல்ரீதியாய் திமுகவிற்கு பயனளிக்க கூடியதாக இருக்கும் வாய்ப்பு. அந்த நிலைப்பாட்டை அவர் எடுத்திருக்கிறார்.
மேலும் தமிழகத்தில் முதல் முறையாக பெரும் எதிர்ப்பு வந்ததாக சொல்கிறீர்கள். இதற்கு முந்தய கட்டங்களிலும் தமிழகத்தில் சத்தத்திற்கும், கோஷங்களுக்கும் எந்த பஞ்சமும் இருந்ததில்லை. ஆனால் அப்போதும் பாதிக்கப்பட்டது தமிழர்கள்தான்.
புதிதாய் என்ன அதிக எதிர்ப்பு இங்கே வந்தது என்று எனக்கு சரியாக விளங்கவில்லை. நாரயண கௌடா போன்றவர்கள் பலம் பெற்ற பிறகு நிலமை இன்னும் மோசம். கர்நாடகத்தில் மிக திட்டமிட்டு, மிக நூதனமாக, தெளிவான விளைவுகளை ஏற்படுத்தும் கன்னட ரக்ஷக வேதிகேயின் நடவடிக்கைகள் போல எதுவும் இங்கே இல்லை. கர்நாடகத்திற்கு எந்த வித பதிலடியும் கொடுக்க கூடிய நிலையில், அதை தமிழ்நாட்டு பொது மனம் ஆதரிக்கும் நிலை இங்கே இருப்பதாக தெரியவில்லை. அதனால் இந்த பிரச்சனையில் வெற்றி பெறக்கூட்டிய ஒரு நிலை யில் கலைஞர் கவிழ்த்து விட்டதாக எனக்கு தோன்றவில்லை. இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் இந்த பிரச்சனையை துவக்காமல் இருக்க முடியாது.
ஒரு வகுப்பில் நாற்பது பேர் இருக்கிறார்கள். "நாற்பது பேரும் தேர்வானார்கள்" என்கிற ஒரு வாக்கியத்துக்கான எதிர்வாக்கியம், "நாற்பது பேரும் தேர்வாகவில்லை" என்பது. உதாரணமாய் 39 பேர்கள் தேர்வானாலும், அது முதலில் சொன்ன வாக்கியத்தின் எதிர் வாக்கியமான `49 பேரும் தேர்வாகவில்லை' என்பதை குறிக்கும்.
"... ஆகிய மூன்று இயக்கங்களுமே 1947மூக்குப் பின் கைவிட்டு விடாமல் இருந்திருந்தால், " என்பது `மூன்று இயங்கங்களும் அந்த கொள்கையை கொண்டிருப்பது" என்கிற நிலைக்கு எதிரானது. உதாரணமாய் மூன்று இயக்கங்களில் ஒரு இயக்கம் கைவிட்டால் கூட மேலே சொன்ன வாக்கியம் உண்மையானது.
ஒரு பாப்பாக்கு கூட தெரிந்த ஒரு விஷயமான திராவிட இயக்கம் பிரிவினை கொள்கையை 60கள் வரை கொண்டிருந்தது, பெரியார் கடைசி வரை கொண்டிருந்தார் என்கிற உண்மையை மறைத்து எழுதும் அளவிற்கு ஞாநி முட்டாள் அல்ல என்கிற குறைந்த பட்ச யதார்த்ததை கூட புரிந்து கொள்ளாமல் வசையை மட்டும் வைக்கும் கூமுட்டையான உங்களுக்கு சொல்லி புரிய வைக்க எதுவும் இல்லை என்றாலும், இங்கே வாசிப்பவர்களை மனதில் வைத்து இதை எழுதுவது என் கடமையாகிறது.
http://thozharperiyar.blogspot.com/2008/04/blog-post_12.html
http://sangappalagai.blogspot.com/2008/04/52.html
கர்நாடகத்தில்ருந்து ஒரே ஒரு ஆசாமி, மொழி வெறி பிடித்து முட்டாளதனாமாக கூச்சலிடாத காரணத்திற்காக அவர் (அதிலும் நேர்மையின்றி) சொன்னதை தெளிவான குரல் என்பதெல்லாம் மகா அபத்தமாக மட்டுமில்லாமல் அநியாயமாகவும் தெரிகிறது.
கலைஞர் அப்படி என்ன ஆத்திரமூட்டும் வகையில் சொன்னார்? தங்களுக்கு உரிமையுள்ள விஷயத்தை, மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாத விஷயத்தை எப்பாடு பட்டாவது நிறைவேற்றுவோம் என்று பேசுவது எப்படி ஆத்திரமூட்டுவது ஆகும். மேலும் முதலில் பிரச்சனையை துவக்கியது யார்? கர்நாடகத்தில் இதை வைத்து முட்டாளதனமான வாதங்களுடம் அரசியல் செய்ய முனைந்த போது பதில் தராமல் வேறு என்ன செய்ய வேண்டுமாம்?
தங்கள் மாநிலம் பிரச்சனையை அபத்தமாகவும் அயோகியத்தனமாகவும் துவங்கியிருக்க, மொழி வெறியுடன் தமிழர்களை தாக்கி, சேனல்களை தடை செய்திருக்க, இந்த நஞ்சு கௌடா கருணாநிதி பிரச்சனையை துவக்கியதாக பொய் சொல்கிறார்; தங்கள் ஊர் மொழி வெறியர்களை புரிதல் இல்லாமல் செய்வதாக செல்லமாக தட்டி கொடுக்கிறார். இந்த நேர்மையற்ற பேட்டியை பாராட்ட, தமிழர்களுக்கு எதிரான மிக பாரபட்சமான ஊடகத்திற்கு காரணங்கள் இருக்கலாம். உங்களுக்கு எல்லாம் என்ன வந்தது?
‘தமிழ்’அகத்தின் இடஒதுக்கீட்டில் இந்தி தான் முன்னுரிமை

தற்போதைய தமிழக அரசின் இடஒதுக்கீடு கொள்கை தமிழ் என்கிற அடிப்படையில் அல்லாம வெறும் ஜாதி என்கிற அடிப்படையில் உள்ளது.
நீங்கள் பிற்பட்டோர் பட்டியலை பார்த்தால் தமிழ் தவிற்று பிறமொழிகள் பேசும் ஜாதிகள் உள்ளன.
இதில் இந்தி பேசும் முஸ்லிம்கள், ஸவுராஷ்டிரியர்கள்; தெலுங்கு பேசும் ரெட்டியார்கள்,நாயுடுகள், கன்னடம் பேசும் கவுண்டர்கள் ஆகியோர்க்கெல்லாம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
தமிழ் பிராமிணர்களை அயோக்கியர்கள் என கருதும் தி மு க இந்தி பேசும் வடக்கர்கள் வாக்குகளை பெற இந்தி மொழி தேர்தல் பிரசுரங்களை வெளியிட்டது.
தமிழகத்தில் தமிழ் பிராமணர்கள் தமிழர்கள் அல்ல என பிரச்சாரம் செய்கின்றன ப ம க, தி மு க ஆகியோர்.
கர்ணாநிதிக்கு தமிழ் பிராமணர்கள் வெறுப்பு இந்தி மொழிக்கு மேலானது போலுள்ளது.
எனது வகுப்பில் இந்தி பேசும் மாணாக்கர் விலைக்கொடுத்து OBC சான்றிதழ் வாங்கி அண்ணா பல்கலைக்கழகம் சேர்ந்தார். இந்தி/உருது மட்டும் பேசும் முஸ்லிம் தமிழகத்தில் ஜாதிகள் இடஒதுக்கீடு பெறுகின்றனர்.
சென்னை விமானகத்தில் தமிழ் ஊழியர்கள் அவ்வளவு இல்லை. எல்லாமே இந்தி பேசுபவர்கள் தான்.
தமிழக CBSE பள்ளிகள் இந்தி திணிப்பு தான்.
இந்தி, கன்னடம், தெலுங்கு பேசும் ஜாதிகள் வருக; தமிழ் பிரமாணர் ஒழிக என கொள்கை வைத்துள்ளது தற்போதைய இடஒதுக்கீடு சட்டம்.
கீழ்க்காணும் பட்டியிலில் இந்தி, தெலுங்கு, கன்னட முன்னுரிமையை பார்க்கலாம்:
http://www.tn.gov.in/bcmbcmw/bclist.htm
கர்நாடகத்தில் கன்னடத்திற்கு பிரதானம் அளிக்கப்படுகிறது. கன்னட பிராமணர் கன்னடர் ஆவார். தமிழகத்தில் தமிழ் பிராமணர் வெளியாள் எனவு இந்தி, உருது, கன்னடம், தெலுங்கு ஜாதிகள் தமிழர்கள் என்கிற பெயரில் இடஒதுக்கீடு வாங்குகின்றனர்.
தமிழக தமிழர்களுக்கா வெறும் ஜாதி கணக்கில் உகுந்தவருக்கா?
போலி டோண்டு விவகாரத்தில் சுகுணா உதிர்த்த கருத்துக்கள் அளவுக்கு அபத்தமாக முட்டாள்தனமாக , அவர் இனி என்ன முயன்றாலும் உளர முடியாது. politically correctness சார்ந்து அவர் பல மேம்போக்கு அபத்தங்களை தன் எழுத்துக்களில் முன் வைத்திருந்தாலும், அவை எதிர்க்க வேண்டிய அளவிற்கு ஆபத்தானவை அல்ல என்று பல காரணங்களுக்காக நினைத்து வந்திருக்கிறேன். ̀போலி' விஷயத்தில் அவர் உதிர்த்த முத்துக்கள் மொண்ணையான வரட்டு பொலிடிகலி கரெக்ட்னெஸின் குரூரம் கலந்த வன்முறை. விஷயம் என்னவென்றால் அவர் அதை ரொம்ப நேர்மையாக, இந்த வன்முறை பற்றிய சுய உணர்வே இல்லாமல் எழுதினார் என்பது. (அவர் நேர்மை எந்த அளவிற்கு அபத்தமாக பயணித்தது என்று நான் உணர்ந்த சிலவற்றை வேறு காரணங்களுக்காக தவிர்கிறேன்.) எனது சுய சிந்தனைக்கும், கடந்து வந்தவைகள் பற்றிய விமர்சனத்திற்கும் இது ரொம்ப உதவியாய் இருந்தது என்பதையும் சொல்ல வேண்டும். இந்த கருத்தை எங்காவது பதிவு செய்ய வேண்டும் என்று ரொம்ப நாளாய் நினைத்தால் இங்கே எழுதுகிறேன். நன்றி. (அவரிடம் தனிப்பட்ட முறையில் இதை ஓரளவு பேசியிருக்கிறேன்.)
http://kuzhali.blogspot.com/2008/11/blog-post.html
சசி, இதை ஒரு பரிந்துரையாக உங்கள் முன்னும் மற்றவர்கள் முன்னும் வைக்கிறேன்.
மும்பை பற்றி பேசுவதை நாம் முதலில் நிறுத்த வேண்டும்; குறைந்த படசம் பேசமாட்டோம் என்று அறிவிக்கவாவது வேண்டும். கர்னாடகத்தில், இந்திய கடலெல்லைக்குள் தமிழ் கடற்கரையில், ஈழத்தில் தமிழர்கள் தாக்கப்படும்பொதெல்லாம் எந்த குரலையும் எழுப்பாத இந்திய சமூகத்திற்கு எதிராக இப்படி ஒரு முடிவை / எதிர்வினையாக அறிவிப்பையாவது நாம் செய்ய வேண்டும். அருள் சொன்ன மாதிரி, எங்கள் கவலைகள் வேறு என்று சொல்ல வேண்டும். இது சற்று வக்கிரமாக இருக்கலாம். ஆனால் ஒரு இனவாத முன்நம்பிக்கையயுடன் தமிழர்கள் இருப்பையே புறக்கணிக்கும் இந்திய சமூகத்தின் வக்கிரத்தை விட குறைவானதுதான்.
ஷோபாசத்தியின் பல கட்டுரைகளை போல மிக முக்கியமான தனித்துவமான கட்டுரை என்பதில் சந்தேகமில்லை. ஆங்காங்கே எனக்கு சில பிரச்சனைகள் இருந்தாலும், இறுதியில் வரும் 3வது பாயிண்டு மட்டும் இந்த பின்னூட்டத்தை எழுத வைக்கிறது -ராஜன் குறையும் பாராட்டி, அதை கவனிக்காமல் போகும் அபாயத்தையும் சுட்டிக்காட்டுவதால்.
ஷோபா://இந்த நிலையில்தான் நாம் தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் தீர்வை முன்வைக்குமாறு அரசிடம் உரத்துக் கேட்க வேண்டியிருக்கிறது. //
ராஜன்://இதன்படி ஷோபா சக்தி இலங்கை அரசை நோக்கி விடுக்கும் சவால், எல்.டி.டி.ஈ-யை அரசியல் ரீதியாக முறியடிக்கச் சொல்வது, மிக நுட்பமான அரசியல் கூற்றாகும். வெறும் யுத்த ரீதியான வெற்றி அரசியல் வெற்றியல்ல என்றும் எச்சரிக்கிறார். //
ரொம்ப ஆழமாய் யோசிக்காததால் எனக்கு எழும் சாதரணமான கேள்வி.
பதிவு முழுக்க இலங்கை இனவாத அரசு/புலிகள் இரண்டையுமே பயங்கரவாத பாசிச நிறுவனம் என்பதாக பார்க்கும் சோபாசக்தி, இறுதியில் இலங்கை அரசை மட்டும் எந்த விதத்தில் இப்படி கோரிக்கை வைக்கவும், எச்சரிக்கை விடவுமான லெஜிடிமேட் சக்தியாக கருதுகிறார் என்று புரியவில்லை. ஏன் புலிகளை பார்த்து ̀பிற்போக்கு அரசியலை விடுத்து, பாசிசத்தை விடுத்து வாருங்கள், மீண்டும் முனைந்து அரசியல்ரீதியாய் இலங்கை இனவாத அரசை தோற்கடியுங்கள் என்று வேண்டுகோள் வைக்கவில்லை? இன்றுவரை எந்த வித நியாயத்தையும் தமிழ் மக்களுக்கு தராத நிறுவனம், அதன் அல்ட்ரா தீவிர தலைமையில் இன்று அதை வழங்க வாய்ப்பு இருப்பதாகவும், புலிகளிடம் மாற்றத்திற்கு அப்படி ஒரு வாய்ப்பே இல்லை என்று ஏன் சோபா கருதுகிறார் என்று எளிமையாக யோசித்து புரியவில்லை. ஆழமாக யோசிக்க வேண்டுமோ?
http://www.countercurrents.org/bailey120209.htm
What a senseless horrible interview to read! The questions are scandalous and the answers are senseless. Consider one example: Eric asks about the trials against the war crimes of LTTE, but does n't mention anything about the war crimes of Sri lanka. There has been a huge cry over the ongoing humanitarian catastrophe, about what has been happening, and what is going to happen in a month. This person is talking about solutions, after the `war ends in few months'. Even if we forget about the catastrophe during the war, and assume most civilian do survive after the war, what compels the srilankan government to consider the rights of Tamils. When no one really learns a lesson from history, how would Srilanka government learn it and consider the appeals from tamil people? How can some one like Chomsk is so senseless about such questions! He talks about all problems in world to answer something about Srilanka. If he does not posses any knowledge about Srilankan crisis why should he be interviewed at all, and why is he answering these questions?
Personally, I lost all hopes regarding any ideas towards human liberation and on people talking about it. Sitting in india I hear people talking about Gaza and nothing about what is happening in few hundreds Kms. For example Arundati Roy has n't opened her mouth regarding this issue(may be it is better she doesn't open!). Chomsky has joined this list and with this I loose all my hopes.
http://jyovramsundar.blogspot.com/2009/07/blog-post_11.html
//நண்பர் ஒருவர், இவன்சிவன், சுரேஷ் கண்ணன், ரோசா வசந்த் மற்றும் இன்னும் சிலரின் டுவிட்டரின் திண்ணை அரட்டைப் பேச்சுகளின் இணைப்பைக் கொடுத்தார். //
எனக்கு தலையும் காலும் புரியவில்லையா அல்லது மற்றவர்களுக்கா என்று கூட விளங்கவில்லை. முதலில் சுரேஷ் கண்ணன், இவன் சிவன் மற்றவர்களுடன் நான் அரட்டை எதுவும் அடிக்கவில்லை; அடிக்காத அரட்டையில் கருத்து எதுவும் சொல்லவில்லை.
மேலே செந்தழல் சொன்னது போல் குஞ்சு என்று சொல்லலாம் புண்டை என்று சொல்லக்கூடாது என்று பொருள்படும் கருத்து எதுவும் எந்த இடத்திலும் இதுவரை என் வாழ்க்கையில் நான் சொல்லவில்லை; அப்படி ஒரு கருத்தும் கிடையாது. ஜ்யோவ்ராம் பற்றி சொன்ன கருத்து சாருவிற்கு பரிந்து அவர் எழுத்திய பதிவை பற்றியது-அதை பற்றி மட்டுமே. அவருடைய மற்ற பதிவுகளுக்கும் அந்த ஒருவரி விமரசனத்திற்கும் தொடர்பு கிடையாது -அதை படிக்கவும் இல்லை. ஒரு வரியில் சொன்ன விமர்சனத்திற்கு பின்னால் உள்ள என் நீண்ட கருத்துக்களை தேவை என்று தோன்றினால் எழுத நேரிடலாம். இப்போது இந்த பதிவை படிக்கும் போது தேவை என்றும், அதனால் பயன் இருக்கும் என்றும் தோன்றவில்லை.
சாருவை ஐஸ் வைக்கும் அவசியம் எனக்கு இருப்பதாக தெரியவில்லை. கவனமாகவே அவருடன் நான் நட்பு வைத்துக்கொள்ளவில்லை. ஆனால் ஜீரோ டிகிரி குறித்தும் (சாருவின் மற்ற எழுத்துக்கள் அல்ல) ஃபேன்ஸி பனியன் குறித்தும் அவை முக்கிய இலக்கிய ஆக்கங்கள் என்ற கருத்து உண்டு. ஆனால் அந்த கூட்டத்தில் அப்படி ஒரு கருத்தை கூட நான் சொல்லவில்லை. ஒருவர் சாரு தன் மனைவி குறித்து ஆபாசமாக எழுதவில்லையே என்பதாக முன்வைத்து பேசியதை, எம்.எஃப். ஹுஸைனின் ஓவியத்தை முன்வைத்து இந்துத்வாவின் ஒரு தர்கத்துடன் தொடர்பு படுத்தி ஒரு வரி பேசினேன். அது யாருக்கும் அங்கே புரிந்ததாக எனக்கு தோன்றவில்லை. அந்த ஒற்றை கருத்தை சாருவுக்கு நான் வைத்த ஐஸ் என்பதாக திரிக்கும் கென்னின் அறிவு மற்றும் நேர்மையுடன் உரையாடுவது எனக்கு சாத்தியமில்லை. பொதுவான தெளிவிற்காக இந்த பின்னூட்டம்.
(மேலும் கென்னிற்கான பதில்)
கென்,
̀நான் எல்லாரையும் தாண்டி சாருவிற்கு ஐஸ் வைத்தேன்' என்று அப்பட்டமாக நீங்கள் புளுகியதை பற்றி பேசுவது எனக்கு முக்கியமாக பட்டது. அந்த கூட்டத்தில் நான் பேசிய கருத்தை முக்கியமானதாக நினைக்கிறேன். அது எனக்கு நினைவும் இருக்கிறது என்பதால் அதை பற்றி பதில் சொன்னேன்.
கடற்கரை கூட்டத்தில் சாரு பற்றி உங்களிடம் என்ன பேசினேன் என்பது எனக்கு நினைவில்லை. தனிப்பட்ட முறையில் சொன்னதை என்னிடம் அனுமதி வாங்காமல், ஒன்றை சுமார் ஒன்றரை வருடம் கழித்து, உங்கள் நினைவில் இருந்து பதிவில் எழுதுவது அநாகரிகம் என்பது கூட புரியாத உங்களிடம் நான் என பேசமுடியும். நான் சொல்லயிருக்க கூடியது அரசியல்ரீதியான கருத்து அல்ல. கிண்டலாக சொல்லியிருக்கலாம், வேறு ஏதாவது சொல்லி உங்களுக்கு வேறுவிதமாக புரிந்து இருக்கலாம். நீங்கள் சொல்லுவது போல கூடவும் சொல்லியிருக்கலாம், அப்படியிருந்தாலும் ரொம்ப அநியாயமாக சொல்லிவிட்டதாக எனக்கு தோன்றவில்லை. இது குறித்து பேச எதுவும் இல்லாததால் அதை தொடவில்லை.
ஜ்யோவ்,
சுகுணாவுடன் உங்களை ஒப்பிட்டது மோசமானதாக உங்களூக்கு தோன்றுகிறதா என்று எனக்கு தெரியவில்லை; நான் அப்படி நினைக்கவில்லை. சுகுணாவின் அரசியல் கருத்துக்களையும் உங்கள் எழுத்துக்களையும் பொதிவானதாகவே பார்கிறேன்.
சாருவை ஆதரித்து நீங்கள் எழுதிய இரண்டு பதிவுளில் உள்ள ஒரு குறிப்பிட்ட தன்மை, சுகுணாவின் கெட்டவார்த்தை தொடர்பாக போலி டோண்டுவை ஆதரித்தது போன்றவற்றை ஒருவகையில் நினைவு படுத்தியது.
உங்கள் பதில் அளிக்கும் திறமைக்கு முன்னால் என்னால் நிற்க முடியாது.
மற்ற படி அநியாயமாக எதுவும் சொல்லாத நிலையில் எவரிடமும் நான் அனுமதி வாங்கத்தேவையில்லை.
விமர்சிக்கப்பட்டது குறித்தல்ல விமர்சனம் குறித்தே எழுதினேன். தனிப்பட்ட அனுமதி வாங்க எந்த தேவையும் இல்லை. உண்மையை ஒப்புக்கொள்ள மனம்தான் தேவை
இந்தக்கருத்தை சொன்னேன் சொல்லலை இதுதான் நான் கேட்கிறேன்
http://sugunadiwakar.blogspot.com/2009/07/blog-post.html
சுகுணா, படித்துவிட்டு உடனே எழுதுகிறேன். மிக நிதானமாக எந்த அரசியல் முடிச்சுக்களின் நிர்பந்தங்களிலும் மாட்டிகொள்ளாமல் நீங்கள் எழுதிய முக்கியமான பதிவாக இதை நினைக்கிறேன். புலிகள் செய்ததை (இறுதி நாட்களின் மிகப்பெரிய தொரோகத்தை) விமரசிப்பதன் தேவையை நானும் ஒப்புகொள்கிறேன். அதனால் வதை முகாம்களில் தமிழர்ளுக்கு பிரச்சனை எதுவும் இபபோது வரப்போவதாக தெரியவில்லை. அதே நேரம் (நான் மிகவும் நேசிக்கும்)சுகன் போன்றவர்களின் அரசியலை நீங்கள் (நட்பாகவேனும்) விமர்சிப்பதை வரவேற்கிறேன்.அவர் முன்வைக்கும் அரசியலின் ஆபத்தை நீங்கள் முழுவதுமாக புரிந்து கொண்டுள்ளதாக எனக்கு தோன்றவில்லை; (அவரே புரிந்து கொண்டுள்ளதாக எனக்கு தோன்றவில்லை.) என் கருத்துக்களை பதிவுகளாக எழுத உத்தேசமுள்ளது. உங்களை மேலும் விமர்சனபூர்வமான அணுகுமுறையுடன் எழுத தூண்டுவதே இந்த பின்னூட்டத்தின் நோக்கம்.
http://www.ularal.com/httpcablesankar-blogspot-com200908/
ஸாரி புருனோ, நீங்கள் இந்த 6 கருத்துக்களை ஆழ்ந்த ஆராய்ச்சி + நீண்ட பரிசீலனைக்கு பின் வந்தீர்கள் என்பதை என்னால் உணர இயலவில்லை. அப்படி இருக்க இதில் மேலும் நேரத்தை செலவிடாமல் இருப்பதுதான் உசிதமானது என்று தோன்றுகிறது. ஆனால் நீங்கள் அன்புடன் பதிலை எதிர்பார்க்கிறேன் என்று சொன்னதால் இந்த சிறிய பதில். ( ஏதாவது ஒரு கட்டத்தில் சில கருத்துக்களை சொல்லிவிட்டால் அதை மீண்டும் சொல்ல வேண்டி இருக்காது, அடுத்த கட்டத்திற்கு செல்லலாம் என்பதற்காகவும்)
என் கருத்துக்களை என் இரண்டு பதிவுகளில் சில வருடங்கள் முன்னால் எழுதி, நீங்களும் வாசித்து பின்னூட்டம் கூட இட்டிருந்தீர்கள்.
http://rozavasanth.blogspot.com/2006/05/1.html
http://rozavasanth.blogspot.com/2006/06/2.html
இந்தி பாடல்களை கேட்டுகொண்டிருந்த தமிழர்களை தமிழ் பாடல்களை ராஜா கேட்க வைத்தார் என்று சொல்லும் வாதத்தை சில ஆதாரத்துடன் வன்மையாக மறுத்திருந்தேன். உங்கள் பின்னூட்டத்தை பார்த்தால் அதை நீங்கள் ஏற்றுகொண்டதாக தோற்றமளிக்கிறது. இப்போது மீண்டும் கேட்ட 30 வருஷமாக அதே வாதத்தையே மீண்டும் சொல்கிறீர்கள். இந்தியில் இருந்து ராஜா தமிழை காப்பாற்றினார் என்பது போல எம்.எஸ்.வி போன்ற மேதைகளை கேவலப்படுத்தும் வாதம் வேறு கிடையாது. ராஜா என்று ஒருவர் பிறக்காமல் இருந்தால் கூட இந்திப்பாடல் ஆதிக்கத்திலிருந்து தமிழ் நிச்சயாமாய் தப்பியிருக்கும், நம்புங்கள்!
அடுத்து ஹிந்திக்காரர்கள் எல்லாம் இப்போது தமிழ் பாட்டு கேட்டுகொண்டிருக்கிறார்களா? அப்படியே இருந்தாலும் இதெல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்லை. அடிப்படையில் அடிமை மனநிலையை கொண்டிருப்பவர்களுக்குதான் இந்திக்காரர்கள் இசையை அங்கீகரிப்பது என்பது ஒரு பொருட்டாக இருக்க முடியும். ராஜா தமிழ் திரை உலகில் ஒரு பொற்காலத்தை உருவாக்கியிருந்த போது, இந்தியில் பப்பிலஹரி கொடிகட்டி பறந்தார். உங்கள் அளவுகோல் படி பப்பிலஹரி ஒரு மேதையாக தெரியலாம். நான் கட்டாயப்படுத்தி உங்கள் கருத்தை மாற்ற முடியாது.
சுமார் 40 ஆண்டுகளாக மிக வளமாக இருந்த ஹிந்தி திரை இசை, 70களிலேயே அலுப்பூட்டும் மோனொடோனஸ் இசையாக மாறி, 80 களில் குப்பையாகி, 80களின் இறுதியில் கழிவாக மாறியிருந்தது. இவைகளை உதாரணத்துடன் விளக்க முடியும். அந்த சூழலில் கூட ராஜாவால் இந்தியில் தடம் பதிக்க முடியவில்லை என்றால் அந்த வெகுரசனை கேவலமானதா அல்லது அது ராஜவின் குறையா?
நான் ரஹ்மான், ராஜா உட்பட யாரையும் ஒப்பிடுவதில்லை. ராஜாவின் இசை மட்டும் போதுமான ஒன்றாக எனக்கும் சமூகத்திற்கும் இல்லை என்றுதான் நினைக்கிறேன். ஆனால் ஜீனியஸ் என்ற வார்த்தைக்குள் ராஜாவை மட்டுமே என்னால் அடக்க முடியும். ஓரளவு இசை அறிவு கொண்டு மற்றவர்கள் அளித்த இசை பரிணமித்ததை பாதையை ஒரு சட்டகத்தில் புரிந்து கொள்ள முடியும். ரோஜா, ஜெண்டில்மேன் துவங்கி ̀மஸக்கலி ‘பாடல்வரை அது எவ்வாறு ஏற்கனவே இருந்த இசைகளை மிக திறமையான முறையில், நீண்ட உழைப்பிற்கு பின் manipulate செய்து உருவானது என்று புரிந்து கொள்ளமுடிகிறது. ராஜா அளித்தவைகள் இத்தகைய எந்த புரிதலுக்கும் அப்பாற்பட்டு இருப்பதாலேயே அவரை மட்டுமே நானும் பலரும் ஜீனியஸ் என்கிறோம். இதில் மாறுபடுவர்களுடன் சண்டை போடுவதில் எந்த அர்த்தமும் இல்லை -ஓரமாக இதை சொல்லிவிட்டு போவதை தவிர.
ராஜா செய்த அனைத்தும் அதிசயம்! ̀செந்தூரப்பூவே’யில் துவங்கி (நான் அன்னக்கிளியில் ராஜாவை துவக்க மாட்டேன்) ̀தென்றல் வந்து தீண்டும் போது’ வரை அனைத்தும் நமது புரிதல்களுக்கு அப்பாற்பட்டது. இதுவரை நாம் அறிந்த genreக்களில் அடங்காமல், அவைகளின் fusion என்றும் வகைப்படுத்த முடியாத ஒன்று. ராஜாவின் காலத்தில் இந்த அதிசயத்தை உணர்ந்தததாக சொல்ல முடியாது. அப்போது அது ஒரு ஹிட் இசை என்ற அளவில் மட்டுமே இருந்தது. 20 ஆண்டுகள் கழித்தே இதன் பல அறியாத நுட்பங்களை பேசிக்கொண்டிருக்கிறோம். இன்னமும் பிடிபட்டதாக சொல்ல முடியவில்லை. அதிசயிக்க மட்டுமே முடிகிறது.
ராஜாவையும் ரஹ்மானையும் ஒப்பிடுவது என்பது மிகவும் அபத்தம். நான் ஒரு அறிவுத்துறையில் ஆராய்ச்சி செய்யவேண்டும் என்றால் இதற்கு முன்னால் பங்களித்தவர்களை தாண்டித்தான் ஏதாவது செய்யவேண்டும். அவ்வாறு தாண்டி செய்துவிட்டதால் ஐன்ஸ்டீனை விட நான் பெரிய ஆளாகிவிட முடியாது. அந்த வகையில் ரஹ்மான் ராஜாவை தாண்டி சென்றவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இதை வேறு விதமாக பார்க்கலாம். (இதுவும் நேரடி ஒப்பிடல் இல்லை.)
76இல் இருந்து 92 வரை ராஜா, 92இல் இருந்து 2008வரை ரஹ்மான். இந்த 16 வருடங்களை ஒப்பிடுங்கள். புகழின் உச்சத்தில் இருந்தும் ரஹ்மான் இன்னும் 100 படங்களுக்கு கூட இசையமைக்கவில்லை. ராஜாவோ சுமார் 800 படங்கள், எல்லா படங்களிலும் இன்னும் 100 ஆண்டுகளுக்கு நாம் அலசவேண்டிய நுட்பம் கொண்ட பிண்ணணி இசை. அந்த கணத்தில் நிகழ்ந்த அதிசயம் போல பாடல்கல். இவை அத்தனையும் ராஜா என்ற தனி மனிதன் முழுமையாக எழுதிக்கொடுத்தது. ரஹ்மானைப்போல விக்கி விநாயக்ராமின் பையனை(பெயர் மறந்து விட்டது) பல வகை தாளங்களை தனித்தனியே போடச்சொல்லி, பதிவு செய்து, அவைகளின் பல கலவைகளை இரவு முழுக்க ஆராய்ந்து ̀அழகான ராட்சசி’யின் தாளமாக தருவது அல்ல. ரஹ்மான் செய்வது மீது எனக்கு எந்த விமர்சனமில்லை. ஆனால் அது நாம் புரிந்து கொள்ளும் சட்டகத்தில் அடக்கும் மிக திறமை + உழைப்புக்கு பின் விளையும் இசை. ராஜா, பலர் கவனித்திருக்க வாய்ப்பு குறைவாக உள்ள, ̀பகவதிபுரம் ரயில்வே கேட்’ என்ற படத்தில் ̀செவ்வரளி தோட்டத்திலே’ அளித்தது இந்த புரிதல்களுக்கு அப்பாற்பட்ட அதிசயம்.
இருந்தாலும் ராஜாவை சினிமாவிற்கு பொருத்தமானவராக இல்லை என்றுதான் என் பதிவில் கருத்து கூறியிருக்கிறேன். இதை இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதியிருக்கிறேன். “சினிமாப் பாடலிசையின் தேவைகளை மிக பொருத்தமாய் (ஒரு விஸ்வநாதனைப் போல, ரஹ்மானைப் போல) அவராய் திருப்தி செய்ய இயலவில்லை என்றும் தோன்றுகிறது” என்பதுதான் என் கருத்து.
இந்த வகையில் ராஜா குறித்தும் மற்றவர்கள் குறித்தும் பேசவும், உரையாடவும் நிறைய உள்ளது. (20 ஆண்டுகளாய் குப்பைகளை உற்பத்தி செய்த) ஹிந்தியில் வெற்றி பெற முடியவில்லை, வெள்ளைக்கார சினிமாக்காரன் ரஹ்மானை கூப்பிட்டான் ராஜாவை கூப்பிடவில்லை என்கிற வாதங்களை முன்வைத்து அல்ல. (உண்மையில் பல மேற்கின் இசை அறிஞர்கள் ராஜாவைத்தான் கொண்டாடுகிறார்கள், ரஹ்மானை அல்ல என்பதுதான் உண்மை. ஆதாரத்துடன் மேற்கோளுடன் சொல்ல முடியும்). மற்றபடி நீங்கள் கேள்வி கேட்டு பதில் சொல்லி விவாதிக்கும் விஷயம் இதுவல்ல. உங்கள் கருத்துக்களை மாற்றும் நோக்கமும் எனக்கில்லை. ராஜா மீதான் வெறுப்பு என்று காரணம் இல்லாம் பரவிகொண்டிருக்கும் அலையில் நீங்கள் விழக்கூடாது என்ற அக்கறையில் நீங்கள் கேட்டதன் பெயரில் இந்த சந்தர்ப்பத்தில் இந்த பதில். நன்றி
அ.மார்க்ஸ் எழுதியிருக்கும் இந்த போலமிக்ஸ் கட்டுரை உரையாடல் என்றால், வளர்மதி சுகுணாதிவாகர் மீது தொடுத்த தாக்குதலை கூட உரையாடல் என்றுதான் அழைக்க முடியும். அ.மார்க்ஸின் அரசியல் obsessionஇன் தீவிரத்திற்கு ஒரு உதாரணம் நாகார்ஜுனனை போய் புலிகளின் தீவிர ஆதரவாளர் என்று முத்திரை குத்துவது. நான் அறிந்தவரை ஒரு அறிவுஜீவி என்ற வகையில் சரியான வகையில் செயலாற்றியவராக நாகாஸ் தனித்து தெரிகிறார். மாறாக பேச்சுக்கு ஏதோ சொல்லிவிட்டு சிங்கள இனவெறி அரசியலுக்கு ஆதரவான போக்கைத்தான் அ.மா. போன்றவர்கள் முன்வைக்கிறார்கள். உதாரணமாய் ̀̀ ̀சிங்களர்கள்தான் உண்மையான மண்ணின் மைந்தர்கள், தமிழர்கள் வந்தேரிகள் மட்டுமே' என்று கூசாமல் சொல்லிவரும் சுகனுக்கு அவர் அளிக்கும் விமர்சனமற்ற ஆதரவு. (சுகுணா பாவம் பச்சை குழந்தை, சுகனின் கருத்துக்கள் என்ன வென்றே தெரியாதவர், சுகன் என்ன நினைக்கிறார் என்று சுகநிடம் போய்தான் கேட்கவேண்டும் என்று சொல்லும் அளவிற்கு அப்பாவி).
நான் இப்போதும் அ.மா. மீது முழுவதும் நம்பிக்கை இழக்கவில்லை எனினும், இன்றய சூழலில் (திருமா, நெடுமா, சீமான் போன்றவர்கள் ஒருவகை ஆபத்து என்றால், இன்னொருவகை ஆபத்தான) எழுத்தாகவே அ.மார்க்ஸை பார்கிறேன்.
http://suguna2896.blogspot.com/2009/08/blog-post.html
அனானி, திண்ணையை பற்றி அ.மார்க்ஸ் பொருந்தி வருவதாக ஒன்றை சொல்கிறார். ஆனால் அ.மா. வின் பிரச்சனை என்னவெனில் யோசித்து இப்படி ஒரு ̀தியரியை' உருவாக்கிய பின் அதற்கு மேல் யோசிக்க மாட்டார். அதே தியரியை நியாயமும், அறிவு விவாதத்திற்கான நெகிழ்ச்சியும் இல்லாமல் நாகாஸ் மீதும் பிரயோகிப்பதுதான். (நாகாஸை விமர்சிக்க இடமில்லை என்று சொல்லவில்லை, அ.மாவின் இந்த விமர்சனம் அநியாயம்!) அவருடைய பிரச்சனையே ஒரே கட்டுரையில் நெடுமாறன் துவங்கி, தமிழவன் நாகஸ் வரை எல்லோரியும் ஒரே சிமிழில் வைத்து அவசரமாய் கட்டுரை எழுதுவது. (வளர்மதியை கட்டுரையை பற்றியும் அவர் நியாயமான விமர்சனம் வைக்கவில்லை. வாசிக்காமல் ஒரே ஒரு தகவல் பிழையை முன்வைத்து எழுதியிருக்கிறார்.) இவ்வாறுதான் சில இடங்களில் தீப்பொறிகளையும் சில இடந்களில் தகரம் தேய்க்கும் சத்தத்த்தையும் அ.மா.வால் தரமுடிகிறது.
http://suguna2896.blogspot.com/2009/09/blog-post_01.html
மேலே ̀ரவி ஶ்ரீனிவாஸ்' எழுதியுள்ள பின்னூட்டத்தின் உள்ளடக்கம்+தொனி+பிண்ணணியுடன் எனக்கு ஒப்புதல் இல்லையெனினும், அதில் ஒரு கருத்துடன் வேறு பார்வையில் பகிர்வு உண்டு.
இந்த தீவிர புலி ஆதரவு கட்டுரை என்பது எந்த விமர்சனமும் இல்லாமல், புலிகளின் கொடூர கொலைகள் மற்றும் எல்லாவகை கொடூர மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்தி, அதை பற்றி பேசும் அனைத்தையும் துரோகத்தனம் என்று புள்ளிவைப்பது; அவ்வாறு இல்லாமல் இன்னொரு சாராரின் அரசியல் புலிகளின் பாசிசத்தை ஒப்புகொண்டு, ஆனால் அது பேச வேண்டிய முக்கிய விஷயமல்ல என்ற பார்வையில் மற்றவற்றை பேசுவது; (மார்க்ஸ் இந்த வகையினரையும், இந்த வகையில் கூட அடங்காதபோது, தன் தீவிர புலி எதிர்ப்பு பார்வைக்கு ஒத்து வராதவர்களையும் கூட தீவிர புலி ஆதரவாளர்கள் என்பார். ) மார்க்ஸ் இந்த இரண்டாவதாக நான் குறிப்பிட்ட வகையினரை போல இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஆதரிப்பவர். தீவிர இஸ்லாமிஸம், வஹாபிஸம் மற்றும் தஸ்லீம மீதான தாக்குதல் போன்ற சம்பவங்கள் மீது அவருக்கு நிச்சயம் விமர்சனம் இருக்கும். ஆனால் அது அவர் மனசுக்குள் மட்டும் இருக்கும். மிஞ்சி போனால் நண்பர்களுடன் அந்த விமர்சனத்தை தனிப்பட்டு பகிர்ந்து கொண்டு, ̀அதை விட மற்ற விஷயங்கள்தான் முக்கியமாக எதிர்க்கப்பட வேண்டியது' என்பார். ஆனால் எழுத்தில் வாஹாபிஸம் உட்பட்ட அனைத்தையும் நியாயப்படுத்தும் தர்க்கத்தை குழைத்து தருவார். அதன் பிண்ணணியில் இருப்பது -தேசியவாதத்திற்கு இணையான அடைப்படைவாதம் கொண்ட- அவரது கற்பிதவாத அரசியல். இதே அணுகுமுறையை தேசியத்தை பொதிவாக பார்ப்பவர்கள் கைக்கொள்ளும்போது அதற்கு பாசிசம், இந்துத்வம் இன்னும் தூர தேசியம் என்று பல முத்திரைகளை தருவார்.
சர்வதேச அழுத்தம் எதையும் ஏற்படுத்த முடியாது என்பதை இவ்வளவு வெறி நிறைந்த சந்தோஷத்தோடு சுகனால் எப்படி சொல்ல முடிகிறது என்று புரிந்துகொள்ள என்னாலான முயற்சி செய்தும் மனச்சோர்வுதான் மிஞ்சுகிறது. மகிந்த குரலில் கூட இந்த சந்தோஷத்தொனியை பார்க்க முடியாது. நான் இதையெல்லாம் politically correctnessஇன் கிறுக்குத்தனங்கள் என்று மட்டுமே நினைத்திருந்ததேன். சுகனை சிங்கள்க் கைக்கூலி, காசு வாங்கியவர் என்றெல்லாம் நினைக்க முடியாமல், அவர் நேர்மையை ஒப்புக்கொண்டு, உலகில் இதுவரை நாம் அடைந்த உளவியல், அரசியல் ஆன்மீக அறிவு கொண்டு கூட சுகன் போன்றவர்களை விளக்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. சரி, இதை பற்றியெல்லாம் சுகனுக்கு இல்லாத அக்கறையும், கழிவிரக்கமும் எனக்கு எதற்கு என்று தோன்றி எதையாவது சொன்னால், அதையும் கட்டுடைப்பார்கள். அதனால் வேற வேலை பாக்கலாம் வாங்க என்று சொல்வதை தவிர வேறு தெரியவில்லை. (வளரின் சுகன் மீதான் தாக்குதலை புரிந்து கொண்டாலும், இந்த இடத்திலும் அதை நான் ஆதரிக்கவில்லை.)
http://vinaiaanathogai.blogspot.com/2009/08/blog-post_26.html
வளர், சுகனின் பின்னூட்டத்தில் என்னை புண்படுத்தும்படி தாக்குதலாக எதுவும் இல்லை என்றே கருதுகிறேன். இருந்தும் என்னிடம் கேட்டுவிட்டு வெளியிட்ட உங்கள் கரிசனத்திற்கு மிகவும் நன்றி.
சுகன், என் பின்னூட்டம் உங்களை வேதனைப்படுத்தியிருந்தால் மிகவும் மன்னிக்கவும். உங்கள் பின்னூட்டங்களில் இருந்த மும்முரம் ஈழப்பிரச்சனை சார்ந்த என் கரிசனத்தினால் என்னை சங்கடப்படுத்தியது. மற்றபடி நான் சென்னையில் வசதியாக வாழும் ஒரு குட்டி பூர்ஷ்வா என்பது தெரியும்தானே! இங்கிருந்து தப்பிக்கும் அளவிற்கு புற வாழ்க்கை நெருக்கடி எனக்கு என்ன இருக்க போகிறது! இங்கே கிடைப்பதை விட உல்லாசம் வேண்டிதான் பாரிஸ் வரவேணும்.
இந்த பிரச்சனைகள் உங்களைவிடவா என்னை பாதிக்க முடியும்? நியாயமாய் என்னை விட உங்களுக்குத்தானே கோபமும், மன அழுத்தமும் இருக்க வேண்டும். இதை மீறி நான் ஏன் ஆத்திரப்படுகிறேன் என்றும், நீங்கள் ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்றும் முடிந்தவரை புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். இயலாமையைத்தான் தெரிவித்திருக்கிறேன்.
http://naayakan.blogspot.com/2009/12/blog-post_31.html
மிதக்கும்வெளி said...
முதலாவதாக நீங்கள்தான் கூட்டத்தில் நடந்ததைத் திரிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஞாநி பற்றி பேசும்போதுதான், ‘குமுதத்தில் அடுத்த வாரம் கச்சேரி இருக்கு’ என்றார் சாரு என்பதாக என் ஞாபகம். இரண்டாவதாக புத்தகத்தைக் கிழிப்பது என்பது ஒரு எதிர்ப்பின் வடிவம். இதைப் பாசிசம் என்பது அபத்தம். அப்படியானால் நிறப்பிரிகைத் தோழர்கள் இந்தியாடுடேயை மலந்துடைத்து வாசந்திக்கு அனுப்பியது பாசிசமா, அண்ணா ‘தீ பரவட்டும்’ என்று கம்பராமாயணத்தையும் பெரியபுராணத்தையும் கொளுத்த பரப்புரை செய்தது பாசிசமா? அம்பேத்கர் மனுதருமத்தைத் தீயிட்டுக் கொளுத்தியது பாசிசமா?
ஜெயமோகன் உயிர்மையில் எழுதுவது, எழுதாமலிருப்பது என்பதெல்லாம் நாம் கவலைப்பட வேண்டிய விஷயங்கள் அல்ல. மனுஷ்யபுத்திரனின் ஊனம் குறித்து ஜெமோ உளறியதற்கான சப்புக்கட்டலாகத்தான் நீங்கள் கொடுத்த சுட்டியைப் பார்க்கிறேன். கேட்டால் மேலைநாட்டில் இப்படித்தான் ஆய்கிறார்கள் என்கிற அபத்தமான சப்பைக்கட்டு. அது உளவியல் பகுப்பாய்வு. ஆனால் கமலாதாஸ் குறித்தும் ம.பு குறித்தும் ஜெமோ முன்வைப்பவை அதிமேதாவித்தனமாய் நினைத்துக்கொண்டு உளறிய உளறல்கள். ’ஜெயமோகன் கண்ணாடி அணிந்திருக்கிறார். அவர் ஒரு குருட்டுக்கபோதி, அதனால்தான் எல்லா பிரச்சினைகளையும் கண்மூடித்தனமாக அணுகுகிறார்’ என்று நான் ஒரு ‘ஆய்வு’ செய்தால் எவ்வளவு அபத்தமாகவும் முட்டாள்தனமாகவும் அயோக்கியத்தனமாகவும் இருக்குமோ அதுதான் ஜெயமோகன் மற்றவர்களுக்குச் செய்வது.
ஜனவரி 3, 2010 3:54 PM
மிதக்கும்வெளி said...
சாரு மீதுள்ள உங்கள் தனிப்பட்ட பிரச்சினைகள்தான் ஜெயமோகன் பக்கம் உங்களைச் சாயவைக்கிறது என்று கருதுகிறேன். இதில் எனக்கு உடன்பாடில்லை.
ஜனவரி 3, 2010 3:55 PM
ROSAVASANTH said...
1. ஞாநி பேசிய எதையும் சாரு திரிக்கவில்லை என்பது என் கருத்து. ஞாநியே சாருவை பற்றி அவ்வாறு சொல்லவில்லை என்பதும், மனுஷ்யபுத்திரன் சார்ந்த விவாகரம் குறித்து ஞாநி கவனமாக ஒரு மௌனத்தை கையாள்வதும் நான் இவ்வாறு நினைப்பதற்கு காரணம். ஞாநி vs சாரு விவகாரத்தில் நான் முழுக்க சாரு பக்கமே இருக்கிறேன். இது குறித்து என் பதிவின் பின்னூட்டத்தில் கருத்து சொல்ல நினைத்து, வேறு விவாகாரங்களில் திசை திருப்பப்பட்டு சொல்லவில்லை. இது குறித்து பின்னர், பரபரப்பு அடங்கிய பின், எழுதும் யோசனை உள்ளது.
2. சாரு மீதான தனிப்பட்ட பிரச்சனைகளால் சிவராமன் ஜெமோ பக்கம் சாய்வதாக சுகுணா சொல்கிறார். 'தனிப்பட்டு' சிவராமனுக்கு சாருவிடம் இருக்கும் பிரச்சனைகள் குறித்து எனக்கு தெரியாது. தெரிந்தாலும் அதை முன்வைத்து பேச மாட்டேன்.
ஆனால் இணையத்தில் நடந்த (சாரு vs பைத்தியக்காரன்) பிரச்சனைகளும், அதற்கு முன்னான தனிப்பட்ட பிரச்சனைகளால் நடந்தது என்று சுகுணா நினைக்கிறாரா? அல்லது அந்த பிரச்சனைகளைதான் தனிப்பட்ட பிரச்சனைகள் என்று சொல்கிறாரா என்று புரியவில்லை. அது எப்படி யிருந்தாலும் சுகுணா சாரு பக்கம் சாய்வதற்கு சுகுணாவின் அரசியல்ரீதியான பிரச்சனைகளும், சாய்வும்தான் காரணமாக எனக்கு தெரிகிறது.
அதன் காரணமாக ஜெமோ எழுதியதை திரிக்கிறார் அல்லது சரியாக புரிந்து கொள்ளாமல் பேசுகிறார், குறைந்த பட்சமாக அதை எளிமை படுத்துகிறார். சுகுணா "’ஜெயமோகன் கண்ணாடி அணிந்திருக்கிறார். அவர் ஒரு குருட்டுக்கபோதி, அதனால்தான் எல்லா பிரச்சினைகளையும் கண்மூடித்தனமாக அணுகுகிறார்’ என்று நான் ஒரு ‘ஆய்வு’ செய்தால் எவ்வளவு அபத்தமாகவும் முட்டாள்தனமாகவும் அயோக்கியத்தனமாகவும் இருக்குமோ அதுதான் ஜெயமோகன் மற்றவர்களுக்குச் செய்வது." என்று சொல்வது அதைதான் காட்டுகிறது.
ஜேமோ சொன்னது தான் முழுக்க முழுக்க பிரதி சார்ந்து, பிரதியில் வெளிப்படும் விஷயங்களை வைத்து விமர்சனம் வைத்துள்ளதாக சொல்லியுள்ளார். அதற்கு ஆதாரமாக மனுஷ்யபுத்திர்தனின் 'கால்களின் ஆல்பம்' உள்ளிட்ட கவிதைகளை கொண்டுதான் பேசியுள்ளார். அதில் எந்த இடத்திலும் உடல் ஊனத்தை முன்வைத்து மனுஷ்யபுத்திரனை இழிவு செய்யவில்லை என்பது அவர் வாதம். அது நியாயம் என்று கொள்ளும் வகையில்தான் எனக்கு தோன்றுகிறது (ஆனால் ஜேமோவின் கட்டுரைகளை மீண்டும் ஒரு முறை, இந்த பிரச்சனைகளுக்கு பின்னர், வாசிக்க வேண்டும்). நான் வாசித்தவரை ஜெமோ மனுஷை பாஸிட்டிவாக பார்த்து அவர் சுய பச்சாதாபம் போன்றவற்றை மீறி வெற்றி பெற்றுள்ளதாகவே சொல்கிறார். பிரமீள் போன்றவர்கள் இதைவிட காட்டமாக மனுஷ்யபுத்திரனஇன் கவிதைகளில்வெளிபடும் ' சுயபச்சாதாபத்தை' முன்வைத்து தாக்க்யிருக்கிறார்கள். ஜேமோ சொன்னதை எளிமை படுத்தி சாரு தன் வழக்கமான திருத்தல் வேலையை செய்கிறார். சுகுணா அதேபோல ஜெமோவின் வாதங்களை எளிமைபடுத்துகிறார். உடல் பிரச்சனை, அல்லது நிற, சாதி, பால் அடையாளங்களை முன்வைத்து பேசவே கூடாது என்பது அபத்தம் - குறிப்பாக கவிதையின் பேசு பொருளாக அது இருக்கும் போது. (என்ன பேசப்படுகிறது என்பதுதான் கேள்வி, அதை முன்வைத்துதான் விமர்சிக்க வேண்டும்) ஒருவர் தன் கறுப்பு அடையாளத்தை அல்லது தலித் அடையாளத்தை தன் எழுத்தில் முன்வைத்து பேசியிருந்தால், அந்த பிரதி சார்ந்து விமர்சனம் செய்வதில் எந்த அயோக்கியத்தனமும் இல்லை. நான் வாசித்தவரை, (சாரு அளவுக்கு கடவுள் என்று கோமாளித்தனமாக சொல்லவில்லையெனினும்), தன் புத்தகங்களை பதிப்பதற்கு நன்றிகடனாக மனுஷை தலைக்கு தூக்கி விமர்சனம் செய்துள்ளத்ஆக ஒருவேளை குற்றம் சாட்டினால் அதில் நியாயம் இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. இதில் ஞாநி பேசியது மோசமாக விஷயம். சாரு வேண்டுமென்றே எல்லாவற்றையும் திரித்து, ஜெமோக்கு எதிரான அரசியல் அலையையும், தன் வாசகர்களின் மொண்ணைத்தனத்தையும் சாதகமாக்கி கொண்டு நாடகம் ஒன்றை நிகழ்துகிறார் என்பதை தவிர வேறு எதுவும் எனக்கு தோன்றவில்லை. வழக்கம் போல அவர் அதில் ஜெயித்துவிட்டார் என்பது வேறு விஷயம். அரசியல்ரீதியான சாய்வைகொண்டு சாரு நடத்தும் நாடகங்களை ஆதரிக்கும் போக்கை (நானும் அதை செய்திருக்கிறேன்) அண்மைகாலமாக நான் எதிர்ப்பதன் போக்கில், சுகுணா எழுதியதற்கான எதிர்வினை மட்டுமே இந்த பின்னூட்டம்.
ஜனவரி 3, 2010 5:56 PM
ROSAVASANTH said...
ஜெயமோகனின் விமர்சனத்தின் உள்ளடக்கத்தை நேரடியாக எதிர்கொண்டு, அதை முன்வைத்து விமர்சிப்பத்ஹை நான் வரவேற்கிறேன். அது மிகவும் தேவை. இங்கே சாரு போன்றவர்கள் நடத்தும் உள்ளடக்க மற்ற வெற்று நாடகங்களையும், அதற்கான வரவேற்பையுமே நான் எதிர்கிறேன்.
ஜனவரி 3, 2010 6:00 PM
மிதக்கும்வெளி said...
முதலாவதாக ஜெமோ செய்வது ஒரு பிரதியியல் விமர்சனம் என்று நான் நினைக்கவில்லை. உடல் ஊனம் என்பது ஒரு பிரதியின் பாடுபொருளாக இருக்கும்போது அந்த பிரதியை விமர்சிப்பது அந்த பாடுபொருளைக் கொண்டதாக இருக்கலாம் என்பதில் எனக்கும் கருத்துமாறுபாடில்லை. ஆனால் ஜெமோ ‘பிரதியியல் விமர்சனம்’ என்ற போர்வையில் நுழைந்துகொண்டு தனிநபர் விமர்சனம் மட்டுமே வைக்கிறார். மனுஷ்யபுத்திரன் விவகாரத்தோடு சேர்ந்து கமலாதாஸ் விவகாரத்தையும் அவர் ’பிரதியியல் விமர்சனமாக’ சுருக்குவதே இதற்குச் சான்று. புரட்சிகர ஆற்றலுக்கும் ஊனத்திற்கும் உள்ள தொடர்பு என்றெல்லாம் ஜெமோ பேசுவது ஆகப்பெரிய அபத்தம். அப்படியானால் ஆண்டனிகிராம்ஷியை என்ன சொல்வது? ஜெயமோகனின் பல ‘அபிப்பிராயங்கள்’ மேலோட்டமானவை என்பதுதான் என் கருத்து. இதை ஜெயமோகன் மீதான அரசியல் வேறுபாட்டிலிருந்து நான் சொல்லவில்லை. ஆனால் நிச்சயமாக என்னுடைய அரசியல் சாய்விலிருந்துதான் நான் ஜெயமோகனை எதிர்க்கிறேன் என்று சொல்வதில் எனக்கு தயக்கங்கள் இல்லை. அதை ஒரு நேர்மையான கடப்பாடாகவே கருதுகிறேன்.
ஜனவரி 4, 2010 4:02 PM
மிதக்கும்வெளி said...
ஜெயமோகனை சாரு எதிர்ப்பதற்கும் நான் ஜெயமோகனை எதிர்ப்பத்ற்கும் வித்தியாசங்கள் உண்டு. அது முழுக்க அரசியல் சார்ந்தது. ஆனால் சாருவின் ஜெமோ எதிர்ப்பு அதுமட்டும் சார்ந்தது அல்ல.
ஜனவரி 4, 2010 4:05 PM
ROSAVASANTH said...
அன்புள்ள சுகுணா,
எதிராளி சொல்வதை நேரடியாக புரிந்துகொள்ளவும், நேரடியாக எடுத்து பதில் சொல்லவும் முயற்சி செய்தால்தான் உரையாடல் என்பது சாத்தியமாகும். உங்கள் அரசியல் சாய்விலிருந்துதான் ஜெமோவை நீங்கள் எதிர்ப்பதாக நான் குற்றம் சாட்டவே இல்லை. உங்கள் வசதிக்காக அவ்வாறு சொன்னதாக எடுத்துக்கொண்டு, அதை ஒப்புகொள்வதில் தயக்கங்கள் இல்லை என்று வேறு சொல்கிறீர்கள்.
நான் மட்டும் என்ன அழகியல் சாய்வு காரணமாகவா ஜெமோவை எதிர்த்து கொண்டிருக்கிறேன்? (நான் ஜெமோவை எதிர்க்கிறேன். அது முழுக்க அரசியல் சார்ந்ததுதான். ) அதை பற்றி இங்கே பேசவே இல்லை. ஜெமோ எதிர்ப்பு என்ற உங்கள் அரசியல் சாய்வு காரணமாக *மட்டும்* சாரு பக்கம் நீங்கள் சாய்வதாகத்தான் சொன்னேன். குறிப்பிட்ட அரசியல் சாய்வு காரணமாக ஒரு போலி நாடகத்தை ஆதரிக்கும் போக்கை பற்றிதான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். அடுத்து ஜெமோவை நீங்கள் எதிர்ப்பதற்கும், சாரு எதிர்ப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை பற்றியும் பேசுகிறீர்கள். வித்தியாசம் உள்ளதை நானும் ஒப்புகொள்கிறேன். ஆனால் எதற்காக இதை பேசுகிறீர்கள் என்றுதான் புரியவில்லை.
விஷயம் எளிமையானது. ஜெமோ உடல் ஊனத்தை முன்வைத்து ஒரு மோசமான கருத்தை எழுதியிருந்தால் அது என்னவென்று முதலில் எழுதுங்கள். அதை விடுத்து மற்றதை பேசுவது வீண்.
ஜெமோ உதிர்க்கும் பல அபிப்ராயங்கள் மேலோட்டமானவை என்று உங்களிடமே தனிப்பட்டு பேசும் போது சொன்ன நினைவு எனக்கு இருக்கிறது, ஆகையால் எனக்கும் அப்படி ஒரு கருத்து உண்டு. தனிப்பட்டு பேசும்போது நம் கருத்தை இப்படி பகிரலாம். ஆனால் அதை சும்மா எழுத்தில் செய்ய முடியாது. ஜெமோ சொன்ன பலவற்றை நேரடியாக அதன் எல்லா தர்க்கங்களுடன் எதிர்கொள்வதை தவிர வேறு வழியில்லை. அது மிகவும் உழைப்பை கோரக்கூடியதுதான். யாரும் அதை இன்னும் நிறைவான வகையில் செய்யவில்லை என்பதுதான் உண்மை. இந்த நிலமையில் அத்தகைய உழைப்பிற்கு தயராக இல்லாத நிலையில், மேலோட்டமாக வெற்று அபிப்பிராயங்களை ஜெமோ பற்றி வைப்பதில் அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை. (புரட்சிகர ஆற்றலுக்கும் ஊனத்திற்கும் தொடர்பு
உள்ளதாக ஜெமோ சொன்னதாக எனக்கு தெரியவில்லை. அவர் சொன்னது வேறு என்று நினைக்கிறேன். கிராம்ஷி பற்றி என்ன சொல்லியிருக்கிறீர்கள் என்றும் விளங்கவில்லை.)
இதில் ஆச்சரியம் என்னவென்றால் சாருவின் பல எழுத்துக்கள் மேலோட்டமான அபிப்ராயம் என்று கூட சொல்ல இயலாத தளத்தில், எந்த தர்க்க பிண்ணணியும் இல்லாமல் வெற்று கோமாளித்தனமான உதிர்த்தலாக இருக்கிறது. அதை நீங்கள் ஆதரித்துவிட்டு ஜெமோவை பற்றி சொல்வதுதான் முரண் நகை.
இறுதியாக ஜெமோ எதிர்ப்பை உங்கள் அரசியல் கடப்பாடு என்கிறீர்கள். அந்த கடப்பாடு சாருவின் வெத்து உதார்களை ஆதரிப்பதன் மூலம் நீர்த்துவிடக்கூடாது என்றுதான் நான் உங்களுக்கு எதிர்வினை வைத்தேன். ஜெமோவின் அரசியல் இன்னும் சரியாக எதிர்கொள்ளப்படவில்லை என்பதுதான் உண்மை. ஒருவேளை சும்மா கூட இருக்கலாம்,
வெத்து வசை, கோமாளி நாடகங்கள் மூலம் ஜெமோவின் அரசியலை எதிர்கொள்ள முடியாது. அது ஜெமோவின் தர்க்கங்களுக்கு இன்னும் உதவியாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
நட்சத்திர வாரத்தில் நிறைய எழுத வாழ்த்துக்கள்
http://sugunadiwakar.blogspot.com/2010/01/blog-post_04.html
ROSAVASANTH said...
கிட்டதட்ட இதே தலைப்பில் ஒரு பதிவு எழுத திட்டம் தீட்டியிருந்தேன். உங்கள் கருத்துக்கள், ஆதாரங்கள் எனக்கும் மிகவும் ஏற்புடையவை.
ஜெமோ ஒரு நவீன, பின்நவீன கருத்தாக்கங்களை உட்செரித்த ஒரு 'சோ' மாதிரி எனக்கு தெரிகிறார். நேரடியான ஒரு பார்பனிய, ஆணாதிக்க, பழைவாத கருத்தை ஜெமோவிடம் பார்க்க முடியாது. எதிரப்பதாகக் கூட தோற்றம் கொள்ளும். உள்ளே என்ன இருக்கிறது என்பது நீங்கள் இங்கே அளித்துள்ள சில மேற்கோள்களே விளக்கும்.
சமீபத்தில் நடந்த உயிர்மை 10 நூல் வெளியீட்டு விழாவில் பெரியாரிஸ்ட் என்ற பெயரில் செல்வபுவியரசன் என்ற இளைஞர் ஒருவரை பேச பேச வைத்திருந்தார். அவர் நேர்மையான வகையில் தன் கருத்தை பதிவு செய்தார். ஆனால் அவை மிக பலவீனமாக இருந்தது. மற்ற திறமையான பேச்சாளர்களும், கூட்டத்தின் பொதுமனப்பான்மையும் அவரை ஒரு எதோ முதிர்ச்சியற்ற கருத்து கோமாளியாக மற்றிவிட்டது; இன்னொரு புறத்தில் ஜெமோவை எதிர்வினைகளுக்கு இடமளிக்கும் ஜனநாயகவாதி போலவும் சித்தரித்து கொண்டது. துக்ளக் வாசகர் கூட்டம் என்ற பெயரில் வருடாவருடம் நடத்தும் ஏமாற்று வேலை போலவே இருந்தது. நீங்கள் மேலேitalicஇல் குறிப்பிட்டுள்ள மேற்கோளும் (தலித் வெறுப்பு vs 'பிராமண வெறுப்பு') துக்ளக் பாணியில் வந்த டயலாக்கே.
ஜெமோவின் பல கருத்துக்கள் மேலோட்டமாகவோ, பொத்தம் பொதுவாகவோ, பொய்யாகாவோ இருப்பதன் காரணம் அவர் நிறுவ முனையும் விஷயங்களுக்கு நிலவக்கூடிய தரவுகளூம் ஆதரங்களுமே காரணம். ஆழமான தர்க்கமும், ஆதரமும் இருந்தால் அதை அவர் முன்வைக்கும் அறிவும், திறமையும், உழைப்பும் அவரிடம் நிச்சயம் உண்டு. உதாரணமாக பெரியாரிஸ்டுகளுடன் தான் உரையாடுவதாக அவர் நிறுவ முயல்கிறார். ஆனால் யதார்த்தத்தில் அப்படி ஒன்றை அவரால் செய்ய முடியாது; முயற்சி கூட எடுக்கவில்லை. அதனால் வேறு வழியின்றி குமரி மைந்தனை பொய்யாக பெரியாரிஸ்டாக மாற்றுகிறார். பலவீனமான பெரியாரிஸ்டுகளிடன் தீவிர விவாதம் செய்கிறார். மூர்க்கமான சில உதாரணங்களை மட்டும் முன்வைத்து, ஒட்டுமொத்தமாக தூக்கி கடாச ஆதாரமாக கொள்கிறார்.
ஆனால் ̀சோ'வும் சரி, ஜெமோ வும் சரி நம் சமூகத்தின் பொதுக்கருத்தில், அக உலகில் பரவலலான பாதிப்புகளை செய்பவர்களாகவே தோன்றுகிறது. இந்த பாதிப்புகளை பற்றி கவலைப்பட்டால் ஜெமோவை பற்றியும் கவலைப்படத்தான் வேண்டும். அதே நேரம் ஜெமோ ஒரு இலக்கியவாதி என்ற வகையில், இந்த செயல் இன்னும் சிக்கலாகிறது.
'ஜெயமோகனோடு மல்லுக்கட்டும் கருமம் என்ன எழவிற்கு?' என்று கைவிடுவதில் பிரச்சனையில்லை. நமக்கு பல ஈடுபாடுகள் உள்ளன, மேலும் ஒரே ஒரு வாழ்க்கைதான் இருக்கிறது. ஆனால் யாராவது அந்த வேலையை எப்போதாவது செய்ய ஒரு சமூக தேவை இருப்பதாகத்தான் தோன்றுகிறது.
உண்ட மயக்கம் அழுத்த, ஆஃபிஸ் வேலை விழிக்க சொல்கிறது. வேறு கருத்துக்கள் எழுத தோன்றினால் பிறகு வந்து தட்டுகிறேன்.
http://chandanaar.blogspot.com/2010/01/blog-post_22.html#comments
பிரமாதம்! நான் எழுத நினைத்த பலதை நீங்கள் எழுதிவிட்டிர்கள். ராஜா பாப் மார்லேயை குப்பை என்று சொன்னதாக சொல்வதற்கு இவர்கள் காட்டும் ஆதாரம் அவுட்லுக்கில் சிறியவன் ஆனந்த் எழுதிய ஒரு சிறு குறிப்பு. அநத் கட்டுரையே ஒரு திரித்தல் கட்டுரை. அதில் ராஜாவிடம் என்ன கேள்வி கேட்கப்பட்டது என்பதே தெளிவில்லை. `I am beyond all these garbage' என்று ராஜா சொன்னதாக ஆனந்த் கட்டுரையை முடிக்கிறார். இதுதான் இவர்களின் ஆதாரம். இதில் இருக்கும் முக்கிய விஷயம் ராஜா பாப் மார்லேயை சொல்வதாக நாம் எடுத்துக் கொண்டால், பாவலர் வரதராஜனையும் குப்பை என்று சொன்னார் என்றுதான் அதிலிருந்து நாம் எடுக்க வேண்டும். ஆனால் பாவலர் மீதான ராஜாவின் அபிமானம் எல்லோருக்கும் தெரியும். ஆக ராஜா பாப்மார்லேயை குப்பை என்றார் என்பது திரித்தல், சாரு திரித்தல் செய்து கோயபல்ஸ்தனமாக பரப்பிய திரித்தல். பாப் டைலானை குப்பை என்றார் என்பது இப்போது ஷாஜி முன்வைக்கும் அப்பட்டமான பொய். அதற்கு இந்த முந்தயதை போன்ற அற்பமான அபத்தமான ஆதாரம் கூட கிடையாது. மற்ற திரித்தல்களை நீங்கள் விளக்கியுள்ளீர்கள்.
இதற்கெல்லாம் மௌனத்தையும், கருத்தை திரித்து வேறு கேள்விக்கு பதில் அளிப்பதையும், கருத்து சொன்னவனை கேவலப்படுத்தும் வேலையையுமே சாரு செய்வார். ஷாஜிக்கு எந்த அளவு நேர்மை உண்டு என்பதை இன்னும் கொஞ்ச நாட்களில் இந்த எதிர்வினைகளை அவர் எதிர்கொள்வதை வைத்து தெரிந்து கொள்ளலாம்
அன்புள்ள பைத்தியக்காரன்,
உறவும் பிரிவும் இன்றி ஏற்கனவே வாசித்திருக்கிறேன். உங்கள் பதிவு கண்ட பிறகு, மீண்டும் வாசித்து, பின் ̀தெரிந்தவர்களையும்' வாசித்தேன். 80களின் பல கதை சொல்லல்கள் நம் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை. வண்ண நிலவன், வண்ணதாசனை படித்து நெகிழ்ந்திருக்கிறோம். அந்தவகையில் எனக்கு வண்ண நிலவனின் கதை வாசிப்பனுபவம் போல இந்த இரண்டு கதைகளும் இருந்தன. (வண்ணதாசனின் தளம் வேறு.) ஆனால் நீங்கள் முன்வைக்கும் தன்மைகள் கதைக்கு இருக்கின்றனவா என்று எனக்கு மிகவும் சந்தேகமாக உள்ளது.
இரண்டு கதைகளும் தட்டையான மொழியில், ஒற்றை பரிமாணத்தில்தான் உள்ளன. அதை குறையாக நான் சொல்லவில்லை. ஆனால் நீங்கள் சொல்வது போல இரு சிறுகதைகளும் ஒரு நாவலை உள்ளடக்கியதாக எனக்கு தோன்றவில்லை. சிறுகதைகளை முன்வைத்து நீங்கள் உங்கள் வாசிப்பை விரிப்பது உங்கள் அக உலகம் சம்பந்தப்பட்டது. அதை நீங்கள் எழுதுவது சுவாரசியமாக இருக்கலாம். ஆனால் அது உங்கள் வாசிப்பு மட்டுமே. இது பல கதைகளுக்கு (வண்ண நிலவனின் கதைகளுக்கும்) சாத்தியமாகலாம். ஆனல் எஸ்ரா அப்படி பல நுட்பங்களை உள்ளடக்கி, மௌனத்தை கிளை கதைகளாக மாற்றியதாக, இந்த கதைகளில் எனக்கு தோன்றவில்லை.
̀கடன்' என்ற கருப்பொருளை புதுமைப்பித்தன் தொடங்கி பலர் கையாண்ட விதம் பற்றிய உங்கள் பார்வையை எழுதினால் சுவாரசியமாக இருக்கும்.
http://naayakan.blogspot.com/2010/01/blog-post.html
//“சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி, வெள்ளைக்காரனுக்கு எழுதி கொடுத்த மன்னிப்பு கடிதத்திற்கு உண்மையாக நடந்தகொண்ட பாரதி, ,பிராமண சங்க கூட்டங்களில் கலந்து கொண்டது.”) //
சந்தேகம் மட்டுமே. பாரதி காலத்தில் பிராமண சங்கம் என்று இருந்ததா? அல்லது வேறு அமைப்பு எதையாவது சொல்கிறீர்களா? என் தெளிவிற்காக கேட்கிறேன்.
http://mathimaran.wordpress.com/2010/03/17/article289-1/
Post a Comment
<< Home