கூத்து!

உரசலாவது கேட்கட்டும்!

Monday, April 10, 2006

இப்போதைக்கு!

இந்த விவாதத்தில் இப்போதைக்கு கடைசியாக கடமைக்காக எழுதிக்கொள்வது.

கருத்தளித்த எல்லா நண்பர்களுக்கும் நன்றி. ஸ்ரீகாந்த எழுதிய கடிதம் அவர் தன்னளவில் வைத்திருக்கும் நேர்மையை காட்டுகிறது. மற்ற கருத்துக்களுக்கும் நன்றி.

வந்தியத்தேவனின் மேலும் இரண்டு பதிவுகளையும் (பல்லை கடித்து கொண்டு) வாசித்தேன். மற்ற விஷயங்கள் போல அல்லாமல் இது குறித்து மீண்டும் பேசுவேன். என் கருத்துக்கள் கேள்விகள் ஏற்கனவே தெளிவாக சொல்லிவிட்டதாக நினைக்கிறேன். தீர்வு அல்லது தீர்வுகள் என்பதாக எதையும் பொதுவாக என் பதிவுகளில் நான் முன்வைப்பதில்லை.

சில தகவல்களை முன்வைத்து எழுதிய காரணத்தால் வந்தியத்தேவன் காட்டும் அசாத்திய திமிர்(உதாரணமாய் கச்சத்தீவு அருகில் மீன் பிடி உரிமை இருப்பதை அவர் பதிவில் படித்தே நான் தெரிந்து கொண்டதாக நினைப்பது), முதலில் இந்து பத்திரிகை பற்றி நான் பேசுவதாக திரித்துவிட்டு இப்போது டெகான் கிரோனிகிள் சுட்டி தராததை முன்வைத்து, நான் தனிப்பட்ட விளக்கமாய் தந்ததை முட்டாள்தனமாய் பற்றிக்கொண்டு உளருவது, விவாத நாகரீகம் பற்றி என்னை முன்வைத்து பேசிகொண்டே அதே வார்த்தைகளை மற்றவர்கள் மீது பிரயோகிக்கும் (பிரயோகிப்பதை நான் குற்றமாய் சொல்லவில்லை, நானும் செய்வதுதானே) அப்பட்டமான ஹிபாக்ரசி, என் கேள்விகளுக்கு பதில் தராமல் திசை திருப்புவதோடு தான் ஒரு முன்னாள் லெஃப்டிணண்ட் என்பதை நம்பகத்தன்மைக்கு ஆதரமாக தருவது என்ற அபத்தங்களை தாண்டி, எடுத்து கொள்ளவோ பதில் அளிக்கவோ எதுவும் இருப்பதாக தெரியவில்லை. என் பதிவுகள் எழுப்பிய கேள்விகளுக்கு எந்த பதிலும் அவர் எழுதியதில் இருப்பதாக தெரியவில்லை. மாறாக தர்க்க சுயமைதுனம் என்று நான் குறிப்பிடுவது மட்டுமே விலாவாரியாக உள்ளது. வாய்ஸ் ஆன் விங்க்ஸ் போல ஒராளவாயினும் சுய பிரஞ்ஞை உள்ள வாசகர்கள் தங்கள் அறிவு கொண்டு ஆராய்வதை தவிர, வேறு எதையும் நான் மேலே எழுதி சாதிக்க முடியும் என்று தெரியவில்லை. தங்களுக்கு உவப்பான சமாச்சாரங்களை வாசிக்கும் போதெல்லாம் அதை சோப்பு போல பவுடர் போல தேய்த்து மகிழ்பவர்களுக்கு எதையும் சொல்வதால் பயனில்லை. ஆனால் பிரச்சனை பற்றி எழுதுவதும், அது தொடர்பாக வந்தியத்தேவனை ஒரு உதாரணமாய் முன்வைத்து பேசுவதும் மிகவும் அத்தியவாசியமானது என்றாலும், அதை இப்போது அலுப்பான பொழுதில், கடந்த வாரம் செய்ய நேர்ந்தது போல் என் வேலையை பலியிட்டு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக தெரியவில்லை.

வாய்ஸ் ஆன் விங்க்ஸ் நான் எழுப்பிய கேள்விகளை தன் பார்வையில் எழுப்பி, தனக்கு பதில் வராததை மன்றாடி மறுபடி மறுபடி குறிப்பிட்டு, ஆனால் கடைசியில் விவாதத்தின் போக்கில் பணிவு, அலுப்பு, தான் வாழும் கதகதப்பான வாழ்க்கை பற்றிய உணர்வை முன்வைத்த வொயிட்மெயில் போன்ற காரணங்களால் சரணடைந்தது, விவாதம் பல நேரங்களில் எப்படி கடத்தப்படும் என்பதற்கான ஒரு உதாரணம்.

வாய்ஸ் ஆன் விங்க்ஸிற்கு ஒரு விஷயத்தை உதாரணமாக சொல்ல வேணும். வந்தியதேவன் தான் ஒரு முன்னாள் லெஃப்டிணண்ட் என்று சொன்னதை படிக்க தவறியதாகவும், அது குறித்து மதிப்பும் மரியாதையும் தெரிவித்து, வந்தியத்தேவன் சொல்வதற்கான நம்பகதன்மைக்கான ஆதாரமாக வாYஸ் ஏற்கிறார். பிரச்சனை என்னவெனில் அவர் முன்னாள் லெப்டிணண்ட் ஆக இருந்தது, அவர் அளித்த சில தகவல்களுக்கு நம்பகத்தனமையை ஏறபடுத்தக் கூடுமே ஒழிய அவரது வாதங்களுக்கு அது நம்பதகாத தன்மையையே ஏற்படுத்த முடியும். எனக்கு அவர் முன்பு ஈழத்தமிழர் விவகாரத்தில் வெறித்தனமாய் (ஆழ்ந்து போவதை குறிப்பிடும் வெறி அல்ல இது, மதவெறி, தேசிய வெறி போல தான் பற்றிகொண்ட விஷயத்தின் மீதான வெறி) விவாதித்ததை புரிந்துகொள்ள இந்தத் தகவல் உதவுகிறது. ரஜினி ராம்கி (ஒரு பேச்சுக்குத்தான், தொடர்பில்லாமல் அவர் பெயரை இழுப்பதற்கு மன்னிக்கவும், ஆனால் அதை தாராளமாய் தொங்கிகொண்டு யார் வேண்டுமானாலும் பேசலாம்) தான் ஒரு ரஜினி ரசிகன் என்பதை ரஜினி பற்றி அவர் எழுதிய புத்தகத்தின் நம்பகதன்மைக்கு ஆதாரமாக தந்தால் எப்படி இருக்குமோ அப்படி இது. எது ஆதாரம் எது எதிர் ஆதாரம் என்ற குழப்பதை சுட்ட இது.

வன்னியன் எழுதிய பதிவு குறித்து எதுவும் வேண்டுமென்றேதான் சொல்லவில்லை. வன்னியனின் கரிசனமும் அதன் நியாயமும் புரிகிறது. ஆனால் இந்த (ஈழமீனவர்கள் பாதிக்கப்படும்) பிரச்சனையை வலிந்து திசை திருப்பும் நோக்கில், அதிலேயே கவனம் குவித்து ஒருவர் எழுதும் போது, ஒரு தவறான சந்தர்பத்தில் வன்னியன் தன் பதிவை எழுதியதாகவே நினைக்கிறேன். மற்றபடி வன்னியன் எழுதிய பதிவின் கருத்துக்களை அப்படியே ஏற்கிறேன். வந்தியதேவன் 'கரிசனமாக' இந்த பிரச்சனையில் எழுப்பியவைகளை கூட(தீர்வுகள் தவிர்த்து) அப்படியே ஏற்கிறேன்.

மீண்டும் பிறகு பார்ப்போம்! எனக்கு தெரிந்து இதுவரை இந்த பிரச்சனை குறித்த சுட்டிகள் வரிசைப்படி கீழே.

இன்னும் எத்தனை காலம்தான்...??!! -1

இன்னும் எத்தனை காலம்தான்..! -2


வந்தியத்தேவனின் சில நேரங்களில் சில மனிதர்கள்-1

எனது எல்லா நேரங்களிலும் சில மனிதர்கள்!-1


வந்தியத்தேவனின் சில நேரங்களில் சில மனிதர்கள்-2

சில நேரங்களில் சில மனிதர்கள்-3

சில நேரங்களில் சில மனிதர்கள்-4

சில நேரங்களில் சில மனிதர்கள்-5

எனது எல்லா நேரங்களிலும் சில மனிதர்கள்-2.

வந்தியத்தேவனின் விவாதக் கூ(கு)த்துகள்-1

விவாதக் கூ(கு)த்துகள் - 2

வன்னியன் எழுதிய தமிழக - ஈழ மீனவர் பிரச்சினை பற்றிய பதிவு

4 Comments:

Blogger Voice on Wings said...

என்னைப் பற்றி ஒரிரு இடங்களில் குறிப்பிட்டதற்கு மட்டும் என் எதிர்வினை:

//ஆனால் கடைசியில் விவாதத்தின் போக்கில் பணிவு, அலுப்பு, தான் வாழும் கதகதப்பான வாழ்க்கை பற்றிய உணர்வை முன்வைத்த வொயிட்மெயில் போன்ற காரணங்களால் சரணடைந்தது, விவாதம் பல நேரங்களில் எப்படி கடத்தப்படும் என்பதற்கான ஒரு உதாரணம்.//

பணிவுடன் எனது வாதங்களை வைப்பதையே பெரும்பாலும் செய்து வந்திருக்கிறேன். வந்தியத்தேவனுடன் நான் செய்த விவாதமும் அதே வகையில் அமைந்தது. எந்த black / white mailலுக்கும் பயந்து நான் சரணடையவில்லை. ஒரு சில பரிமாற்றங்களுக்குப் பிறகு உடன்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்று தெரியவருமானால், agree to disagree என்ற அடிப்படையில் விவாதத்தை முடித்துக் கொள்வதையே இப்போதெல்லாம் கடைபிடித்து வருகிறேன். அதனால் இரு தரப்புக்கும் நேரம் மிச்சமாவது ஒரு முக்கிய காரணம்.

//வந்தியதேவன் தான் ஒரு முன்னாள் லெஃப்டிணண்ட் என்று சொன்னதை படிக்க தவறியதாகவும், அது குறித்து மதிப்பும் மரியாதையும் தெரிவித்து, வந்தியத்தேவன் சொல்வதற்கான நம்பகதன்மைக்கான ஆதாரமாக வாYஸ் ஏற்கிறார்.//

எனது முதல் பின்னூட்டத்தில் அவருக்கு இரு கேள்விகள் கேட்டிருந்தேன்். அவற்றில் ஒன்று, அவர் எதற்காக கடற்படையை நியாயப்படுத்தி ஐந்து பதிவுகள் எழுதினாரென்பதே. அதற்கு விடை அவரது பதிவிலேயே கிடைத்து விட்டதால் (அவர் அதன் முன்னாள் பணியாளர் என்ற தகவல்), அந்தக் கேள்வியை வாபஸ் பெறும் பொருட்டே அதைக் குறிப்பிட்டேன். அவர் முன்னாள் கடற்படை அதிகாரி என்பதனாலேயே அவர் கூறுவது நம்பகத்தனமானது என்றெல்லாம் நான் சான்றிதழ் வழங்கியதாக எனக்கு நினைவில்லை.

3:39 AM  
Blogger ROSAVASANTH said...

வாய்ஸ் ஆன் விங்க்ஸ, கருத்துக்கும்் தெளிவுபடுத்தியதற்கும் நன்றி. ்

'தான் வாழும் கதகதப்பான வாழ்க்கை பற்றிய உணர்வை முன்வைத்த வொயிட்மெயில' என்பது வந்தியதேவன் எழுதியதை குறிக்கிறது. அதனால் உங்கள் கருத்து பாதிக்கப் படவில்லை என்றூ சொல்வதானால் நல்லதே!

உங்கள் பதிலை (அந்தக் கேள்வியை வாபஸ் பெறும் பொருட்டே அதைக் குறிப்பிட்ட'தை) நான் தவறாக புரிந்துகொண்டதற்கு மன்னிக்கவும்.

4:29 AM  
Blogger SnackDragon said...

உங்கள் காழ்ப்பை எந்த அளவுக்கு காட்முடியும் என்பதற்கு உதாரணமாய் இந்தப்பதிவை எடுத்துக்கொள்கிறேன். வாசிக்கும் யாருக்கும் காழ்ப்பு யாருக்கு அக்கறை யாருக்கு என்று நன்றாக விளங்கக்கூடிய அளவுக்கு தெளிவாக எழுதியதற்கு கோடி நன்றிகள். என் மனைவியை உதாரணமாக பய்ன்படுத்தியதற்கு ஸ்பெசல் நன்றிகள். விவாதக்குடும்பி என்று மீண்டும் நிருப்பித்துள்ளீர்கள் லெப்டிநண்டு ;-).

வாசிப்பவர்களுக்காக மட்டும் இதை, என்னைத் திட்டி தீர்ந்தபின்னாவது முதலில் எழுதுய 5 பதிவுகளில் எங்கே கண்டித்துள்ளீர்கள் என்று காப்பி பேஸ்ட் செய்திருக்கலாம். முடியாதா? ;-)
மிக்க நன்றி , மண்டூகத்துக்கு புரிந்தது. கடற்படைக்கு ஜே போட்டு விடுகிறேன்.

நான் கேட்பது நடந்து கொண்டிருக்கும்போது ஒரு சூறையாடலை கண்ணால் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களா என்ற கேள்வியையும் , அதில் உள்ள நியாயத்தையும் வழக்கம் போலவே, வன்புணர்ச்சி நடந்த பிறகு என்ற மாதிரி "கம்ப்ளையிண்டு எழுதிக் கொடு" என்று நக்கல்டித்து திரித்தற்கும் ரொம்ப டேங்க்ஸ். வேறூ என்ன எல்லோருக்கும் மனைவிகள் இருக்கின்றார்கள். புத்திசாலி வந்தியத்தேவன் சொல்வது போல் இருந்தால் சமூகத்தில் எல்லோரும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டியதுதான் என்று ஆகிறது. அவர் சொல்வது போல கம்பிளையின்டு எழுதிகொடுக்கிற வரைக்கும் பார்த்துக்கொன்டு சும்மா ருக்கவேண்டியதுதான். லெப்டிநண்டும் அப்படி இருப்பாரென நம்புகிறேன். (இதாவது புரியுதா?)
நன்றி. மண்டூகத்தையும் ஒரு பொர்ட்டாய் எண்ணி பதிலளித்தமைக்கு.

1:09 PM  
Blogger SnackDragon said...

மேலே எழுதியது வந்துயத்தேவனின் பதிவில் எழுதிய பின்னூட்டம் ஒரு வசதிக்காக இங்கேயும் இடுகிறேன்.

1:13 PM  

Post a Comment

<< Home

Site Meter