கூத்து!

உரசலாவது கேட்கட்டும்!

Monday, August 21, 2006

கேவலங்களிலும் கேவலம்-3.

மீண்டும் இந்த விவகாரம் பற்றி எழுதுவது துன்பமாக இருந்தாலும், அவசரப்பட்டு நேற்றய பதிவில் கருப்புவை தவறாக கண்டனம் செய்துவிட்டதாக நினைத்து வருத்தம் தெரிவித்து விட்டேன். அதற்கான ஒரே காரணம் அந்த நேரத்தில் அவரது இன்னொரு சாக்கடை பதிவை படித்திருந்திருக்கவில்லை. லக்கிலுக் பதிவில் தன் பெயரில் வந்த பின்னூட்டங்களை தான் எழுதவில்லை என்றவர் தன் பதிவிலேயே எழுதியிருப்பது கீழே.

//
ஆண்குறியை அறுத்து அந்த இடத்தில் ஓட்டை ஒன்றை போட்டு, வெற்று மார்பைக் கிழித்து சிலிக்கான் ஜெல் வைத்து திணித்து தாய்லாந்தில் பாலின அறுவை சிகிச்சை செய்துகொண்டு மும்பைக்கு வந்து பிராத்தல் செய்வார்கள் என டாக்டர் அம்பேத்கருக்கு அப்போதே தெரியாமல் போய் விட்டது.


நான் எல்லாரையும் சொல்லவில்லை. ஆனால் பெரும்பாலான திருநங்கைகள் செய்யும் தொழிலை நம் வலைப்பதிவர்கள் அறிவார்கள். திருநங்கைகள் கும்பலாய் சென்னையில் கடைகடையாய் ஏறி காசு கேட்பதும் தரவில்லை என்றால் 'வாத்தா வம்மா' என்று ஏகத்துக்கும் திட்டுவார்கள். அதற்குப் பயந்தே பெரும்பாலும் எல்லா கடைமுதலாளிகளும் காசைக் கொடுத்து விடுவார்கள். சென்னையில் கடை நடத்திய நானே அனுபவப் பட்டவன் என்பதால் எனக்கும் தெரியும்.


ஐந்தாண்டுகளுக்கு முன்னர் சென்னையின் மெரினாவில் காற்றுவாங்க மாலை வேளையில் மணலில் அமர்ந்திருந்தேன். அருகில் வந்தமர்ந்த ஒருவர் 'சார் மணி என்ன?' என்று கேட்கவே திரும்பி முகம் பார்த்து ஏழரையாக இன்னும் ஒன்றரை நிமிடம் இருக்கு என்று சொல்லிக்கொண்டே முகம் பார்த்தால்.. 'அய்யோ.. இது அதுவாச்சே!'.. பயம் குடிகொண்டது மனதில்!

சொன்ன பிறகும் நகரவில்லை..

'சார் வேணுமா?'


'இன்னாது?'


'அக்காங்.. புரியாத மாதிரில்ல கேட்குறீக.. கைக்கு பத்து வாய்க்கு இருபது!'


பார்வையால் எரித்து விடுவதுபோல பார்த்து.. 'அடச்சீ.. தூரப்போ!' எனகோபமாகச் சொல்லி விட்டு வேறிடம் சென்றவன் நான் என்பதால் அவர்களைப் பற்றித் தெரிந்திருக்கிறது எனக்கு! இது அன்றாடம் மாலைவேளைகளில் நடக்குமாம் அங்கே. நிறைய திருநங்கைகள் தலைநிறைய மல்லிகையோடு வாசனைத் திரவியங்களை அள்ளித் தெளித்துக் கொண்டு மெரினாவை வலம் வந்தது ஒரு காலம்.

அடுத்த நிகழ்ச்சி ஒன்று. நானும் நண்பர் மகேந்திரனும் யமஹா வண்டியில் துறைமுகம் ஓரமாக உள்ள சாலையில் வேகமாகச் சென்று கொண்டிருக்க கும்மிருட்டில் கைகாட்டி நிறுத்தினார் ஒரு பெரியவர். உதவி என நினைத்து நிறுத்தி விஷயம் கேட்க, இருளில் இருந்து கும்பலாய் ஓடி வந்தனர் அவர்கள். விபச்சரமோ.. மிரட்டிப் பணம் பறித்தலோ எதுவாயினும் தப்பிப்பதே இப்போதைய குறிக்கோள் என்றெண்ணி அவசரம் அவசரமாக ஓட எத்தனித்து எனது குழாய்ச்சட்டை கிழிந்து போகும்வரை ஓடி வந்தவன் நான் என்பதால் எனக்கும் அவர்களைப் பற்றித் தெரியும்///


ஆக போலி பின்னூட்டம் என்பதாக அவர் சொல்வதில் உள்ள கருத்தைத்தான் மீண்டும் வலையுறுத்தி தன் பதிவில் சொல்லுகிறார். இந்த சமூகத்தால் மிகவும் ஒடுக்கப்படும் மக்களை பற்றி இத்தனை கேவலமான கருத்துக்களை வைத்திருக்கும், வைத்திருப்பதோடு மட்டுமில்லாமல் அதை இத்தனை வெளிப்படையாக வெட்கமின்றி சொல்லும் இந்த இழிந்த பிறவிதான் பெரியாரை முன்வைத்து எதை எதையோ பேசி வருகிறது. அதை வேறு (மீண்டும் பெரியார் பெயரை சொல்லிக்கொண்டிருக்கும்) வெட்கமற்ற கும்பல் கைதட்டி பாராட்டிக் கொண்டிருக்கிறது. (இதில் தங்கமணி போன்ற விதி விலக்கானவர்களை பற்றி நான் பேசவில்லை.) இதைவிட கேவலம் வேறு என்ன இருக்கிறது? பெரிய அளவில் இவர்களின் எழுத்து கண்டிக்க படாமல் இருப்பது அதைவிட கேவலம் இல்லையா?!

லக்கிலுக் மற்றும் விடாது கருப்பு (வேறு சிலரும் இருக்கலாம், நான் எல்லாவற்றையும் படிக்கவில்லை) போன்றவர்கள் கருத்தை போலவே, இதே போன்ற பார்வையிலேயே இந்த சமூகத்தில் தலித் பற்றியும் பெண்கள் பற்றியும், பாலியல் தொழிலாளர்கள் பற்றியும் சொல்லாடல்கள் கட்டமைக்கப் படுகின்றன. இந்த விவாகாரத்தின் தொடக்கத்தை கவனித்தால் அது, ஒதுக்கப் பட்ட மக்கள் கூட்டத்தை சேர்ந்த ஒருவர், மேலே வரும்போதும், அவருக்கு பாராட்டுக்களும், வரவேற்புகளும் வழக்கத்திற்கு அதிகமாக கிடைக்கும் போதும், ஒலிக்கும் ஆதிக்க குரலை போலவே இருப்பதை காணலாம். அதற்கு பதிலாக அவர்கள் சற்றே ஆனவம் ஒலிக்க பேசிவிட்டால் மிக மோசமான முறையில் சமூக மதிப்பீடுகளை வைத்து, அடிவயிற்றில் மிதிக்கும் ஆத்திரத்துடன் வசைகளை அவிழ்த்திவிடுவார்கள். அதுதான் இங்கேயும் நடந்துள்ளது.


மீண்டும் சொல்வதானால் இந்த கூட்டத்திற்கு (அதாவது விடாது கருப்பு, லக்கிலுக் சார்ந்து அவர்களை கைதட்டி பாராட்டும் கூட்டத்திற்கு) எந்த வித சமூக நீதி பற்றிய கரிசனையோ, சமூகத்தின் ஒதுக்குமுறைகள் பற்றிய அக்கறையோ எதுவும் கிடையாது. தன்னைவிட ஒருபடி மேலே பார்பனர் இருப்பதன் பொறாமை மட்டுமே. அதுவும் எலும்பு துண்டு ஒழுங்காய் கிடைத்திருந்தால் எழும்பியிருக்காது. உதாரணமாய் சங்கரமடத்து பள்ளியில் மிக மோசமாய் கேவலப்படுத்தாமல் ஆட்டத்துக்கு சேர்த்துக் கொண்டிருந்தால், அம்பி ஒருவன் எச்சிவிட்டதை லக்கிலுக் பொறுத்துகொண்டிருப்பார்.

வித்யா தன் தன்னிலையை உறுதிப்படுத்திக் கொள்ளும் ஆணவத்துடன் பதில் சொன்னதுதான் லக்கிலுக்கிற்கு பிரச்சனை. அதாவது லக்கிலுக் தான் படித்ததாக சொன்ன சங்கரமடத்து பள்ளியில் பவ்யமாக (அவர் அப்பாவை போன்ற மனநிலையில்) இருந்திருந்தால் மற்ற அம்பிகளுக்கும், வாத்தியார்களுக்கும் கோபம் வந்திருக்காது. அவர் கொஞ்சம் தன்மானத்துடன் இருந்ததுதான் பிரச்சனை. இப்போது வித்யாவும் அவ்வாறு ஒரு சகவலைப்பதிவாளராய் கோபமாய் பதில் அளித்ததுதான் பிரச்சனை. அந்த வகையில் ஒரு ஆதிக்க திமிர்தான் லக்கிலுக், விடாது கருப்பு மனநிலையில் வேலை செய்கிறது.

இந்த பிரச்சனை குறித்து இதற்கு மேல் பேசும் நோக்கம் இல்லை. விடாது கருப்பிடம் சில கேள்விகள் கேட்கலாம் என்று நினைத்தேன். உதாரணமாக திருமலையிடம் நான் ராகாகியில் பல புரட்டுக்களை முன்வைத்திருந்ததாகவும், திருமலை அதை வெளிபடுத்தி என்னை 'ஓடஓட விட்டு கட்டையை எடுத்து துரத்தியதாக' சொல்லியிருந்தார். (http://vivathakooththu.blogspot.com/2006/08/blog-post.html#c115594690242354990) அந்த ராகாகி விவாதத்தில் பெரியாரை இனவெறியர் என்பதாக திருமலையும், அதை எதிர்த்து நானும் நிலைப்பாட்டில் இருந்து பேசிக்கொண்டிருந்தோம். அதில் நான் என்ன புரட்டு வைத்தேன், திருமலை அதை எப்படி தகர்தார் என்று, விடாது கருப்பு சோறு போட்டு தின்றிருந்தால் விளக்க வேண்டும் என்று எழுத நினைத்தேன். அவர் பதிவை படித்த பிறகு அவர் சோறு தின்பவரல்ல என்று தெளிவாகவே தெரிந்து விட்டதால் இது போன்ற கேள்விகளுக்கு தேவையே இல்லை.

நான் வித்யா அவர்களின் பதிவில் தொடர்ந்து பின்னூட்டுபவனல்ல. அவர் எழுதத் தொடங்கிய கட்டத்தில் மட்டும் என் வரவேற்பை தெரிவித்திருந்தேன். அவரை போன்றவர்கள் எழுதுவது நம் சமூகத்தின் பண்மை தன்மையை வளர்ப்பதுடன், நமது சகிப்புத்ன்மை பரந்த மனப்பான்மைக்கான ஒரு அடித்தளமாக இருக்கும் என்பதை குறிப்பிட்டிருந்தேன். அவருக்கு பரவலாய் கிடைத்த வரவேற்பு மிகவும் மனநிறைவை அளித்தது. ஒருவர் வேலைக்கு போவதும் சமூகத்தில் ஒரு அங்கத்தினராய் இருப்பதும் வலைப்பதிவில் எழுத வருவதும் எந்த விதத்திலும் சாதனையும் அதிசயமும் அல்ல. ஆனால் சமூகத்தால், தான் பிறந்த குடும்பதால் ஒதுக்கி வைக்கப்பட்டு, குடியிருக்கும் இடம் தொடங்கி பார்க்கும் வேலை வரை வெளியேற இயலாத இறுக்கமான தன்மையுடன், தப்பமுடியாத 'விதிவசபட்ட நிலையில்' வைக்கப்பட்ட ஒருவர் அதை செய்வதாலேயே இவையெல்லாம் சாதனைகளாகிறது. வித்யா மேலும் சாதிக்க வேண்டும். தொடர்ந்து வலைப்பதிவில் எழுத வேண்டும். இது போன்ற இடர்களை, சமூக காட்டிமிராண்டித்தனங்களை ஏற்கனவே எதிர்கொண்ட அவர், தளராமல் தன் பயனத்தை தொடர நான் புதிதாய் எதுவும் சொல்ல வேண்டிய தேவையில்லை. ஒரு கடமையாக இங்கே சொல்லிவைக்கிறேன்.

9 Comments:

Blogger ROSAVASANTH said...

இந்த பிரச்சனை பற்றி இதுவரையிலான பின்னூட்டங்களில் சில அடுத்த பதிவாய் வரும்.

1:15 AM  
Blogger லக்கிலுக் said...

அய்யா ரோசா வசந்து!

அந்தத் திருமங்கையின் பிறப்பை பற்றியோ அல்லது அவரது குறைபாடு அல்லது வரம் பற்றியோ தவறாக நான் ஏதாவது சொல்லி இருக்கிறேனா?

உங்களைப் பார்த்து நான் இன்னமும் அரைவேக்காடு என்று சொல்லவில்லை.... இந்த நிலையிலேயே கோபம் கொழுந்துவிட்டு வருகிறதே.... என்னைப் பார்த்து அந்த அம்மையார் எந்தக் காரணமும் இன்றி "அரைவேக்காடு" என்று சொன்னால் அதை கேட்டு விட்டு என் பிருஷ்டங்களை மூடிக்கொண்டு போகுமளவிற்கு நான் ஒன்றும் சுயமரியாதை கெட்டவனில்லை.....

மற்றபடி என்னைப் பற்றி உங்கள் Blah. blah.... ... சிரிக்கத்தான் முடிகிறது.... முழுதாக வெந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும் அரைவேக்காடு நீங்கள் தான்..... :-)

4:51 AM  
Blogger ROSAVASANTH said...

லக்கி, நான் சில விஷயங்களை பேசி, உங்களுக்கு அது சிறிதளவாவது புரியக்கூடும் என்று தோன்றினால் மிக விளக்கமாக எழுதியிருப்பேன்.

உங்கள் புரிதலுக்கு ஒரு சாம்பிள். நீங்கள் என்னை பற்றி என்ன சொன்னீர்கள்? நான் படித்தவரை நீங்கள் என்னை பற்றி எதுவுமே பேசவில்லை. நான் 'கோபப்படுவதும்' என்னை பற்றி பேசிய எதற்கும் அல்ல. இது கூட புரியாத நிலையில் உங்களுடன் என்ன பேச முடியும்?!

11:10 PM  
Blogger லக்கிலுக் said...

ரோசா!

எனக்கு லிவிங் ஸ்மைல்லுக்குமான பிரச்சினை என் சுயமரியாதை காரணமாக எழுந்தது.... மற்றபடி இதில் எங்கிருந்து ஒடுக்கப்பட்ட மக்கள் பிரச்சினை எழுகிறது? லிவிங் ஸ்மைலையும் அவர் போராட்டங்களையும் பற்றி நான் ஏதாவது கொச்சைப் படுத்தி இருக்கிறேனா? என் வார்த்தைகளில் கவனம் செலுத்தியே பதிவிடுகிறேன்....

உங்களைப் பார்த்து அரைவேக்காடு என்று சொன்னாலும் உங்கள் சுயமரியாதையின் காரணமாக உங்களுக்கு கோபம் எழுவது இயல்பே....

பிரச்சினையைத் தெளிவாகச் சொல்லிவிடுகிறேனே?

நான் ஒரு விளம்பர நிறுவனத்தில் பணிபுரிகிறேன்... சில காலம் முன்பு ஒரு என்.ஜி.ஓ. அமைப்புக்கு நாங்கள் ஒரு Awareness Campaign செய்திருந்தோம்.... அதாவது அரவாணிகளை அவர்களது உடற்கூறு சம்பந்தமாக யாரும் கேலி பேசக்கூடாது என்பது தொடர்பாக.... மற்றவர்களுக்கு அதுபோல அறிவுரை கூறி வரும் வேளையில் லிவிங் ஸ்மைல் தன்னைத் தானே அலி என்று அவர் டெம்ப்ளேட்டில் அறிவித்துக் கொண்டு அவரைப் போன்றவர்களை "திருமங்கை" என்ற பதத்தில் குறிப்பிடுவதை என்னால் ஏற்க முடியாது... யாருக்காக நாங்கள் Campaign செய்கிறோமோ அவர்களே அந்த Conceptஐ புரிந்துக் கொள்ளவில்லை... இது தொடர்பான ஒரு கேள்வி கேட்டதற்கு என்னை அவர் அரைவேக்காடு என விமர்சித்திருந்தார்....

அதுதொடர்பான பிரச்சினை தான் அவருக்கும், எனக்கும்....

நீங்கள் இதுபற்றிய சரியான புரிதல் இல்லாமல் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டீர்கள் என நினைக்கிறேன்....

நன்றி!!!!

1:06 AM  
Blogger ROSAVASANTH said...

லக்கி, நிதானமான பதிலுக்கு நன்றி. வழக்கம் போல வேலைகள்; மற்றும் நமக்கெல்லாம் இணையத்தில் தெரிந்த நண்பர் ஒருவருடன் சுற்ற வேண்டியுள்ளது. வந்து சனி அல்லது திங்கள் உங்களுக்கான என் பதிலை நிதானமாக விரிவாக தருகிறேன். மீண்டும் நிதானமாக எதிர்கொண்டதற்கு நன்றி.

3:13 AM  
Blogger லக்கிலுக் said...

உங்களது மிக மிக நிதானமான பதிலுக்கு நன்றி ரோசா....

2 அல்லது 3 ஆண்டுகளுக்கு முன்னால் கூவாகம் விழா நடந்தபோது விழுப்புரம் மாவட்ட ஆட்சியாளர் அலி அல்லது ஒன்பது போன்ற பதங்களை இனி பயன்படுத்தக்கூடாது.... மூன்றாவது பாலினத்தாரை இனி அரவாணிகள் என்று அழைக்க வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.... மக்கள் அந்த வேண்டுகோளை ஏற்றார்களோ இல்லையோ லிவிங் ஸ்மைல் போன்றவர்கள் நிராகரித்திருக்கிறார்கள்.... இதன் அடிப்படையில் நீங்கள் பதிவு போட்டால் அதை ஆரோக்கியமாக விவாதிக்க நான் தயார்.....

மேலும் என் மீது தொடுக்கப்படும் தனிமனித தாக்குதல்கள் என் சுயமரியாதையை சீண்டிப் பார்க்கின்றன என்பதையும் இங்கே தெளிவாக குறிப்பிட்டு விடுகிறேன்.....

9:49 PM  
Blogger ROSAVASANTH said...

பதில் எழுத முனைந்தேன். இந்த வாரம் முடியவில்லை. இந்த வார இறுதியிலாவது பதில் எழுவித வேண்தும் என்று உறுதியாய் இருக்கிறேன். பார்கலாம். நன்றி!

4:06 AM  
Blogger ROSAVASANTH said...

http://thoughtsintamil.blogspot.com/2006/09/vs.html#comments

தமிழகத்தில் திருமா, கிருஷ்ணசாமி இருவருமே பிற்படுத்தப் பட்டவருக்கான இத ஒதுகீட்டை ஆதரிக்கவே செய்கின்றனர். கிருஷ்ணசாமியும் ஆதரித்து அறிக்கை விட்டது பத்திரிகைகளிலும் வந்தது. (என் நினைவு சரியானல் ஒதுக்கீட்டிற்கு ஆதரவான மனித சங்கிலியிலும் கிருஷ்ணசாமி கலந்து கொண்டார்.)

ஸெலக்டிவாக, சந்தரபான் பிரசாத் கருத்துக்களை பயன்படுத்த விழையும் அரசிலை(அதுவும் ரவி ஸ்ரீனிவாஸ் போன்றவர்கள் செய்வதை) புரிந்து கொள்ள பெரிய மேதவித்தனம் எதுவும் தேவையில்லை.

சந்திரபான் பிரசாத்தை எப்படி எடுத்துகொள்வது என்பது குழப்பமானது. அவரது பேட்டி ஒன்றில் அருந்ததியையும், மேதா பட்கரையும், மொத்த நர்மதாவிற்கான போராட்டத்தையும், இந்திய நடுத்தர வர்க்க பார்பன நலன்களுக்கானதாகவும், அதன் அழுகிய முகமாகவும் குறிப்பிட்டிருப்பார். தலித்துக்கள் தங்கள் நலன்களுக்கு பிராமணர்களுடன் கூட்டணி வைத்து கொள்ள வேண்டும் என்றும் பேசியிருப்பார். இப்படி ஒன்றை குறிப்பிட்ட சந்தர்ப்பம் சார்ந்த அணுகுமுறையாய் (வேறு வழியில்லாமல் பிற்படுத்தப் பட்டவர்களின் சாதி வெறியை எதிர்கொள்ள) செய்வது புரிந்து கொள்ள கூடியதே. ஆனால் அதை கொள்கைரீதியில் முன்வைப்பது மிகுந்த ஆபத்தானது. இதைத்தான் சிறியவன் ஆனந்த் போன்றவர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள். ரவிகுமார் 'மதம் மாறியபின்', இதற்கு ஒரு தார்மீக அடிப்படையையும் தந்துள்ளார். தமிழகத்தை தவிர மற்ற இடங்களில் இந்த பிரசாரம் ஓரளவு எடுபடும் என்றே தோன்றுகிறது. இந்த பிரசாரத்தின் மாயைதன்மையை தாண்டும் தெம்பு தமிழகத்தில் ஓரளவு இருக்கும் என்று தோன்றுகிறது. மற்றபடி காலம் பதில் சொல்லும்.

இந்த பின்னூட்டத்தை உள்ளிட்டுவிட்டு சுட்டிகளை படிக்க வேண்டும். சுட்டிகளுக்கு நன்றி.

12:35 AM  
Blogger ROSAVASANTH said...

http://ravisrinivas.blogspot.com/2006/09/blog-post_17.html


ரவி சீனிவாஸு,

என்ன திட்டினாலும் உமக்கு உறைக்காது, எவ்வளவு விளக்கினாலும் உம் மண்டையில் ஏறாது என்று தெரியும் என்றாலும், நரம்பில் இன்னும் உணர்வு இருப்பதால் இதை ஏனோ எழுதாமல் தாண்டிப் போக முடியவில்லை. பிரேம் சாரு எழுதியதை படித்து சிரிக்க வேண்டுமா? உம்மையும் உம் எழுத்தையும் பார்த்து இன்று சிரிக்கும் அளவிற்கு கூட மரியாதை தராமல் பலரும் துப்பிக் கொண்டிருப்பதும், உம்மோடு பல வருடங்களுக்கு முன்னால் வைத்திருந்த நட்பு குறித்து உமது பல நண்பர்கள் வெட்கப்படுவதும் உமக்கு தெரியுமா? இன்னும் உம் எழுத்தை முழுமையாக படிக்காத உமது சில முன்னாள் நண்பர்கள், கேள்விபட்டதை வைத்து வெறும் வருத்தம் மட்டும் கொண்டிருக்கிறார்கள். நான் நேரடியாய் உம் பதிவு ஒன்றை வாசித்து காட்டியதை கேட்க நேர்ந்த உம் நண்பர் ஒருவர் (நான் அடிக்கடி சொல்லும் குமட்டலை விட அதிகமான) குமட்டலை அடைந்தார். இதுவரை ஒரு பதிவு அறிவுபூர்வமாகவும், ஆழமான அலசலுடன், வெட்டி தீர்ப்புகள் இல்லாமல் எழுத முடியாத உமக்கு மற்ற எழுத்தை பார்த்து சிரிப்பு வருகிறதா? வாழ்க்கையில் இப்படியும் வெட்கமற்ற உ

2:48 AM  

Post a Comment

<< Home

Site Meter