கூத்து!

உரசலாவது கேட்கட்டும்!

Wednesday, October 27, 2010

நோய் காமெடியன்கள்.

என்னாதான் உள்ளடக்கச் சரக்கே இல்லாவிட்டாலும், என் பதிவிற்கு பதிலாக இரண்டு பதிவு போட்டதற்கு, நாம் ஒரு குட்டிபதிவாவது பதில் போடாவேண்டாமா? மற்றபடி ஏதாவாது திடுக்கிடும் ஆதாரங்கள் (அப்படி எதுவும் யதார்த்தத்தில் இல்லாத காரணத்தால் பொய்கள்) வந்தால் ஒழிய இனி இதை நான் எதிர்கொண்டு எழுத மாட்டேன்.

நாம் இயல்பான சிந்தனை என்று நினைப்பதற்கு நேரெதிர் விநோதமாக, எப்படி வேறு சிலர் அதே இயல்பாக யோசிக்க கூடும் என்று சும்மா சம்பந்தமில்லாமல் யோசித்த போது தோன்றியதை நேற்று பின்னூட்டமாக எழுதியிருந்தேன். சுரேஷ் கண்ணனை நான் முதலில் திட்டவில்லை. அவர்தான் மோசமாக திட்டினார். நான் பதிலுக்கு நிதானம் காத்து அவர் என்னை பற்றி சொன்னதற்கு விளக்கத்துடன் எழுதுமாறு கேட்டேன். அவர் நேர்மையான பதிலை நிச்சயம் தரப்போவதில்லை என்று தெரிந்த பிறகு என் காட்டமான பதிலை எழுதினேன். மிக தெளிவாக நான் சீண்டியதாக, அவரை திட்டியதாக, பொது சந்திப்பில் அவரிடம் அநாகரிகாமாக நடந்ததாக சொல்லியதெல்லாம் அப்பட்டமான பொய் என்று மறுத்து, அதற்கு ஆதாரம் இல்லை என்று சொல்லி ஆதாரம் தரசொல்லி கேட்டு எழுதியிருக்கிறேன். இன்னமும் வேறு எதையோ ஜல்லியடிக்கிறாரே ஒழிய, நான் எங்கே சீண்டினேன், அவரை பற்றி இது வரை என்ன ஆபாசமாக எழுதினேன், பொது சந்திப்பில் என்ன அநாகரிகமாக நடந்தேன் என்பதற்கு பதில் இல்லை. இவ்வளவு எழுதும் ஆசாமிக்கு இதை ஒரு நாலுவரி எழுத, இவ்வளவு உதார் விட்ட பிறகும் செய்யவேண்டுமே என்கிற துப்பில்லை. அட, ஆதாரமும், பதிலும் இருந்தால்தானே சொல்லமுடியும். இவ்வாறு அவர் பதில் சொல்லாமல் வெட்டியாக வேறு எதையோ எழுதுவதையும், மேலும் மேலும் என்னை பற்றி ஆதாரமில்லாமல் மோசமாக எழுதுவது பற்றியும் நான் கவலைப்படமுடியாது. வாசிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று (அவர்களை போல் வாய்பேச்சில் இல்லாமல் உண்மையாக) புறக்கணிப்பதுதான் நான் செய்யகூடியது.

ஆனால் இப்போது பல யோக்கியசிகாமணிகள் இதில் செட்டு சேர்ந்து போகிற போக்கில் கருத்து சொல்லிவிட்டு போகிறார்கள். நான் வலைப்பதிவை விட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாக விலகியிருக்கிறேன். சு.க. தொடர்ந்து எழுதுவதால், நாலுபேர் 'தல, வாங்க ஒரு கை பாத்துரலாம்' என்று, சுரேஷ் ரொம்ப வெறுக்கும் சில்லூண்டித்தனமாக எழுதுவது ஒகே. பொதுபுத்தியில இதெல்லாம் சகஜம். தர்க்கரீதியாய் எதுவுமின்றி சல்லித்தனமாக சொல்லிவிட்டு ஓடுபவர்கள் பற்றி என்றைக்கும் கவலையில்லை. அல்லது ரொம்ப நாளாய் 'சீரியசான' சமாச்சாரங்கள் பற்றி சு.க. எழுதிவருவதால், 'கவலை விடுங்கள், தொடர்ந்து எழுதுங்கள்' என்று மொட்டையாக அவருக்கு 'தார்மீக ஆதாரவு' தெரிவித்து வரும் பின்னூட்டமும் ஒகே. இப்போது அதை தாண்டி உளவியல் நிபுணர்களும், வேறு சில யோக்கிய சிகாமணிகளும் கிளம்பியிருக்கிறார்கள். சமூகத்தின் புற்று நோயே இவர்கள்தான்.

பொதுவில் கருத்து சொல்லும் தைரியம் இல்லாத ஒரு பேர்வழி, பெயர் சொல்லாமல் கருத்து மட்டும் சொல்லியிருக்கிறது. அந்தாள் பேர் வராவிட்டாலும், கடிதத்தில் வெற்றாக விடப்பட்ட மற்ற பெயர்கள் யாருடையன என்பதை ஊகிக்க முடியும். அது கருத்து அல்ல கழிவு என்றால், திட்டுகிறான் என்று திசை திருப்பிவிடுவார்கள். ஆனால் என்ன பிரச்சனை என்று கூட புரியாமல், அல்லது புரிந்து கொண்டு பொய்யாக போகிற போக்கில் மற்றவர்கள் பாதிக்கப்படுவது பற்றி கவலையின்றி, எதோ அறிவுஜீவி போல நடித்து கருத்து சொல்வதற்கு வேறு என்ன அர்த்தம்? சுரேஷ் தனியாக 'சீண்டினான் ..தாக்கினான்' என்று ஆதாரம் தராமல் புலம்பினால் பரிதாபம் கூட கொள்ளலாம். ஆனால் போகிற போக்கில் கல்லெறிந்து, மேதாவித்தனம் காட்டும் இந்த பேர்வழிகளின் நோய் உளவியல்தான் சுவாரசியமானது. அதிலும் நோய் உளவியல் உளவிலாராய்ச்சி செய்வதுதான் இன்னும் சுவாரசியம். இதில் மாதவ்ராஜும் சேர்ந்திருக்கிறார்.

இந்த மாதவ்ராஜ் எழுதிய அப்பட்டமான அரசியல் ஹிபாக்ரசி பதிவுகளாக, இலங்கை பிரச்சனை பற்றியும், தோழார் வரதராஜன் மரணத்தை பற்றியும் வாசித்திருக்கிறேன். அதெல்லாம் அவர் கோளாறு மட்டுமில்லை. அவர் சார்ந்திருக்கும் கட்சியின் கோளாறு. மற்றபடி நான் அவரை வாசித்ததில்லை, வாசிப்பதில்லை. ஆனால் இப்போது அவர் செய்திருப்பதற்கு அவரது இயல்பு கோளாறு மட்டுமே காரணம்.


அய்யா..மாதவராஜ்.. இந்த நாட்டாமை வேலை ரொம்ப அயோக்கியத்தனம் அல்லவா? நடந்தது என்னவென்றாவது தெரியுமா? அந்தாள் என்னை பற்றி அபாண்டமாகவும், மோசமாகவும் திட்டிவிட்டு, நான் இவ்வளவு provoke செய்தபிறகும் எந்த யோக்கியமான பதிலும் ஆதாரமும் தராமல் எழுதுவதை எல்லாவற்றையும் வாசித்து பார்த்தீர்களா? உங்களுக்கு அதில் ஆர்வம் இல்லையெனில் விட்டுவிடலாம்; மௌனமாக இருக்கலாம். போகிற போக்கில் அடித்தவனுக்கு ஆதரவாகவும், பாதிக்கப்பட்டவனை தாக்கும்விதாமாக எழுதுவது என்ன வகை முற்போக்குத்தனம்? நாட்டமையாக எதுவும் சொல்லவில்லையே என்று சமாளிக்க முடியாது. உங்கள் பின்னூட்டம் யாரை மதிக்கிறது, யாரை சீண்டல்பேர்வழி, அரட்டை பேர்வழி என்கிறது என்பது தெளிவு.

பொதுபுத்தி எவ்வளவு லூஸுத்தனமாக வேண்டுமானாலும் சிந்திக்கும் என்று தெரியும். அது யோக்கிய வேஷம் போடுவதும் சகஜம்தான். ஆனால் அறிவுபோலவும், விவேகம் போலவும் வேஷம் போடுவதை இங்கேதான் பார்க்கிறேன்.

(இதை சுனா கானாவின் பதிவில் பின்னூட்டமாக எழுதினால் வராது என்று தெரியும். மேலும் எனக்கு விருப்பமில்லை. அதனால் இங்கே போட்டிருக்கிறேன். இதற்கான பதிலை யோக்கிய சிகாமணிகள் இங்கே எழுதலாம். எழுத வரவேற்கிறேன். ஆனால் எச்சரிக்கை: பிரித்து மேயப்படும். ஆனால் ஏற்கனவே ட்விட்டரில் நான் அறிவித்தபடி புதன் வந்துதான் பின்னூட்டங்களை அனுமதித்து தேவையானால் பிரித்து மேயமுடியும்)

14 Comments:

ROSAVASANTH said...
சுரேஷ் கண்ணனுக்கு தன் பக்கம் நியாயம் எதுவும் கிடையாது என்று நன்றாக தெரியும். அதனால் தன் யோக்கியவாதி இமேஜை சாமாளித்து நிறுத்துவதற்காக தொடர்ந்து இப்படி எதையாவது எழுதிக்கொண்டே இருக்கவேண்டும். மற்றவர்கள் எதற்காக புறக்கணிக்க வேண்டும், புறக்கணியுங்கள் என்று சொல்லியபடி சுனா கானாவின் அதே காமெடி சீனை தாங்களும் மறு ஆக்கம் செய்கிறார்கள்?

10/15/2010 2:01 PM
மணிகண்டன் said...
ரோசா, சென்றமுறை பொது புத்தியில் உங்களை அனைவரும் தாக்கியபோது நீங்கள் ப்ளாக் செய்தவரில் நானும் ஒருவன். சுந்தரின் பதிவில் நான் உங்களுக்கு எதிராக எதுவும் எழுதவில்லை. நீங்கள் ட்விட்டரில் வந்து தற்செயலாக கேபிள் சங்கரின் குறும்படத்தை பார்த்ததாகவும், தமிழ்மணத்தை சுற்றி வந்தபோது நர்சிம்மின் பதிவை பார்த்ததாகவும் எழுதினீர்கள். அப்பொழுது உங்களிடம் அடுத்தது யார் தற்செயலாக "சுரேஷ் கண்ணனா" என்றேன். உடனடியாக ப்ளாக் செய்தீர்கள். நல்லது தான். ஏனென்றால் கோபத்தை கட்டுபடுத்தமுடியாமல் அடிப்பதை விட, இது போன்ற கேள்வி கேட்பவர்களை ப்ளாக் செய்வது சரியானது தான். நல்ல பாடம் கற்று கொண்டீர்கள் என்று தான் நினைத்தேன்.


ஆனால் நான் கேட்ட கேள்வியான அடுத்தது சுரேஷ் கண்ணனா என்பதற்கு அவரே ஒரு சரியான சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். விடாமல் தர்க்கரீதியாக அருமையாக அடித்துள்ளீர்கள். நல்லது.


சுந்தரை குறித்தும் சிவராமன் /வினவு பதிவின் போது மறுபடியும் ஆரம்பித்தீர்கள். யாரும் கண்டுக்கொள்ளவில்லை. கவலைப்படாதீர்கள். அவரும் ஏதாவது தவறு செய்வார். அப்பொழுது அடிக்கலாம். காத்திருப்போம்.

10/15/2010 2:31 PM
ROSAVASANTH said...
மணிகண்டன்,

நீங்கள் என்னை பற்றி காட்டமாக ஏதோ சொன்னதால் நான் ப்ளாக் செய்யவில்லை. ரொம்ப அதிபுத்திசாலித்தனமாக கேள்வி கேட்டுதொந்தரவு செய்தீர்கள். தொந்தரவு தாங்காமல்தான் செய்தேன். (பிறகு வேறொரு சந்தர்ப்பத்தில் நீக்கி விட்டேன்.) இன்னும் அதே அளவு புத்திசாலித்துடன் நீங்கள் தொடர்வது குறித்து ரொம்ப மகிழ்ச்சி.

தற்செயலாகத்தான் கேபிள் சங்கரின் படத்தை அன்று பார்த்தேன். நான் பொதுவாக பதிவுகளை படிப்பதில்லை. வேறு எதையோ தேடியபோது அந்த குறும்படம் பார்த்தேன். சுஜாதா கதையின் காப்பி, ஆனால் பெயர் போடவில்லை என்பதால் அதை சொன்னேன். பின்னரே பரிசல்காரன் எழுத்யிருந்ததை (ட்விட்டரில் ஒருவர் சொல்லி) வாசித்தேன். நர்சிம்மின் பதிவு மிக போலியானது. அதை குறிப்பிட்டேன். இது தவிர எத்தனையோ பேர்களை விமர்சித்தும் எழுதியிருக்கிறேனே. விமர்சனத்தில் என்ன பிரச்சனை என்று சொல்வதுதான் நேர்மையும் அறிவுடமையும் ஆகும். நான் சொன்ன விஷயத்தில் என்ன பிரச்சனை, அல்லது பிழை. விமர்சிக்க கூடாது, உனக்கு உள்நோக்கம் இருக்கிறது என்பது அழுகுணித்தனம். ஜ்யோவ் பற்றி நான் எழுதியதும் எனக்கு இருந்த உண்மையான விமரசனம்தான். என்னிடம் பகைமை இருக்கிறது, உங்களை மாதிரி ஆசாமிகள் அதை திரிப்பார்கள் என்பதால் என் மனதில் பட்டதை சொல்லாமல் இருக்க முடியாது..

அப்புறம் நீங்கள் என்ன ஒரு தீர்க்கதரிசி. உங்கள் தீர்க்க தரிசனம் ஓராண்டு கழித்தாவது நடப்பதற்கு பாராட்டுக்கள். தர்க்கத்தால் அடித்திருக்கிறேனா? ஏதோ கம்பை வைத்து அடித்தது போல குற்றம் சொல்கிறீர்கள். தர்க்கத்தில் என்ன பிரச்சனை என்று சொல்வதுதானே நேர்மையும், அறிவும் என்று கேட்டால் நீங்கள் புரிந்து கொள்ளப்போகிறீர்களா? உங்களிடம் எதுவும் பேசமுடியாது என்று உடனடியாக, லூஸுத்தனமான உங்கள் கேள்விகளை பார்க்க விரும்பாமல்தான் ப்ளாக் செய்தேன் என்பதையும் உங்களுக்கு விளக்க முடியயுமா?

10/15/2010 3:18 PM
ROSAVASANTH said...
மணிகண்டன்,

நீங்கள் என்னை பற்றி காட்டமாக ஏதோ சொன்னதால் நான் ப்ளாக் செய்யவில்லை. ரொம்ப அதிபுத்திசாலித்தனமாக கேள்வி கேட்டுதொந்தரவு செய்தீர்கள். தொந்தரவு தாங்காமல்தான் செய்தேன். (பிறகு வேறொரு சந்தர்ப்பத்தில் நீக்கி விட்டேன்.) இன்னும் அதே அளவு புத்திசாலித்துடன் நீங்கள் தொடர்வது குறித்து ரொம்ப மகிழ்ச்சி.

தற்செயலாகத்தான் கேபிள் சங்கரின் படத்தை அன்று பார்த்தேன். நான் பொதுவாக பதிவுகளை படிப்பதில்லை. வேறு எதையோ தேடியபோது அந்த குறும்படம் பார்த்தேன். சுஜாதா கதையின் காப்பி, ஆனால் பெயர் போடவில்லை என்பதால் அதை சொன்னேன். பின்னரே பரிசல்காரன் எழுத்யிருந்ததை (ட்விட்டரில் ஒருவர் சொல்லி) வாசித்தேன். நர்சிம்மின் பதிவு மிக போலியானது. அதை குறிப்பிட்டேன். இது தவிர எத்தனையோ பேர்களை விமர்சித்தும் எழுதியிருக்கிறேனே. விமர்சனத்தில் என்ன பிரச்சனை என்று சொல்வதுதான் நேர்மையும் அறிவுடமையும் ஆகும். நான் சொன்ன விஷயத்தில் என்ன பிரச்சனை, அல்லது பிழை. விமர்சிக்க கூடாது, உனக்கு உள்நோக்கம் இருக்கிறது என்பது அழுகுணித்தனம். ஜ்யோவ் பற்றி நான் எழுதியதும் எனக்கு இருந்த உண்மையான விமரசனம்தான். என்னிடம் பகைமை இருக்கிறது, உங்களை மாதிரி ஆசாமிகள் அதை திரிப்பார்கள் என்பதால் என் மனதில் பட்டதை சொல்லாமல் இருக்க முடியாது..

அப்புறம் நீங்கள் என்ன ஒரு தீர்க்கதரிசி. உங்கள் தீர்க்க தரிசனம் ஓராண்டு கழித்தாவது நடப்பதற்கு பாராட்டுக்கள். தர்க்கத்தால் அடித்திருக்கிறேனா? ஏதோ கம்பை வைத்து அடித்தது போல குற்றம் சொல்கிறீர்கள். தர்க்கத்தில் என்ன பிரச்சனை என்று சொல்வதுதானே நேர்மையும், அறிவும் என்று கேட்டால் நீங்கள் புரிந்து கொள்ளப்போகிறீர்களா? உங்களிடம் எதுவும் பேசமுடியாது என்று உடனடியாக, லூஸுத்தனமான உங்கள் கேள்விகளை பார்க்க விரும்பாமல்தான் ப்ளாக் செய்தேன் என்பதையும் உங்களுக்கு விளக்க முடியயுமா?

10/15/2010 3:18 PM
ROSAVASANTH said...
கோவி.கண்ணன் said...
//'இதிலிருந்து வெளியே வந்து விடுங்கள். இது ஒரு விஷவட்டம். இன்றைக்கு இவர், நாளைக்கு இன்னொருவர் என்று இணையப் பெருவெளியில் இவர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதை தடுத்து நிறுத்தவே முடியாது. இதற்கெல்லாம் தொடர்ந்து மல்லுக் கட்டுக் கொண்டிருந்தால் உங்களின் எழுத்துத் திறன் பாதிக்கப்படலாம்' //

வழிமொழிகிறேன்.

Kaarthik said...
நான் எண்ணியதையே தங்கள் நண்பரும் கூறியுள்ளார், சற்று அருமையான நடையில். தாங்கள் இதுபோன்ற வம்புச் சண்டைகளிலிருந்து விலகி தங்களுக்கே உரித்தான அற்புத பதிவுகளை என்னைபோன்ற விசிரிகளுக்காக மீண்டும் எழுதத் துவங்க வேண்டுகிறேன். Ignore them and pls come back to your form.

வடகரை வேலன் said...
சுரேஷ் கண்ணன்,

சில மாதங்களுக்கு முன்பே இதை நான் தங்களுக்குத் தனி மடலில் எழுதி இருந்தேன். இது ஒரு மாயச் சுழல் மாட்டிக் கொண்டால் பாழாவது உங்கள் படைப்புத் திறன் என்று.

அதுவேதான் இப்பொழுது நடந்திருக்கிறது.

விரைவில் வெளியே வந்து விடுங்கள்.


எப்படிப்பா இதெல்லாம்? நீங்கள்ளாம் தமிழ் படிக்க தெரிந்தவர்கள்தானே. எதோ பத்தாங்கிளாஸ் வரை படிச்சிருக்கீங்கதானே? (பத்தாங்கிளாஸ் எனபது சும்ம உருவகம், ஏட்டு சுரிக்காய் கறிக்குதவாது என்று தெரியும்) போற போக்கில் இப்படி எல்லாம் சொல்ல வெக்கமாவே இல்லையா? சோத்துக்கு பதில் வேற எதையாவது தின்கிறீர்களா?
(ஊருக்கு கிளம்பும் அவசரத்தில் இந்த பின்னூட்டத்தை என் பதிவில் இடுவதற்கு பதில் சுரேஷ் கண்ணன் பதிவில் இட்டுவிட்டேன். அதுவும் நல்லதுதான். வெளிவந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி.)

10/15/2010 4:37 PM
மணிகண்டன் said...
ரோசா, நரசிம், கேபிள் சங்கர் மற்றும் சுரேஷ்கண்ணன் சுந்தர் விஷயத்திற்கு பிறகு உங்களை குறித்து பதிவோ / காட்டமாக பின்னூட்டமோ போட்டார்கள். நீங்கள் ட்விட்டரில் எழுத ஆரம்பித்தவுடன் அவர்கள் நரசிம் மற்றும் கேபிள் சங்கர் பதிவை தற்செயலாக பார்த்ததாக எழுதினீர்கள். அதற்கு நான் .அடுத்ததாக சுரேஷ் கண்ணன் தானே என்றேன். இதில் என்னளவில் எந்த அதிபுத்திசாலித்தனமும் இல்லை. அந்த சமயத்தில் உடனடியாக எழுதியதால் ஏற்பட்ட சந்தேகம். இப்பொழுதும் நீங்கள் சமயம் பார்த்து அடிக்கிறீர்கள் என்று தான் கூறுகிறேன். உங்கள் விமர்சனம் குறித்தான கருத்தையோ / நேர்மையோ குறித்தோ பேசவில்லை.

மற்றபடி நீங்கள் சுரேஷ்கண்ணன் குறித்து நீங்கள் எழுதிய விமர்சனங்களை நான் படித்ததில்லை. எனக்கு அவரின் பதிவுகள் சுவாரசியமாக பட்டதில்லை. அதனால் பதிவுகளையும் அதிகம் படித்ததில்லை.

இங்கு நான் திரித்ததாக கூறுவது எல்லாம் டுபாக்கூர். அடுத்ததாக சுரேஷ்கண்ணன் உங்களை சைக்கோ என்று அழைத்ததில் உடன்பாடில்லை.

10/15/2010 5:01 PM
ROSAVASANTH said...
'உலகம் உருண்டைன்னு இந்தாள் அநாகரிகமாக, வன்மத்துடன் பொய் சொல்றான்' என்கிறான் அவன். உலகம் உருண்டைக்கான என்பதற்கான ஆதாரங்களை அடுக்கி, அதில் அநாகரிகமும், வன்மமும் இல்லை என்கிறான் இவன். இந்த மாதிரி சொல்லி என்னை முதலிலிருந்தே சீண்டினான், நுள்ளினான், கிள்ளினான் என்று ஒப்பாரி வைக்கிறான் அவன். நண்பர்கள் 'சிலர் தாங்கள் புகழ் பெறுவதற்காக இவ்வாறு உலகம் உருண்டை என்று சிலர் சொல்கிறார்கள். நீங்கள் அவர்களை புறக்கணித்து விட்டு செல்ல வேண்டும்' என்கிறார்கள். ஆமாம், 'அதற்கெல்லாம் பதில் சொல்லாமல் புறக்கணித்து விட்டு செல்ல வேண்டும்' என்று வழிமொழிகிறார்கள். அவனுக்கு குஷி, இனி உலகம் தட்டை என்பதற்கு ஆதாரம் எதுவும் தரவேண்டாம். 'உங்களை எனக்கு தெரியும், உங்கள் மீது எனக்கு ரொம்ப மரியாதை' என்று வேறு சொல்கிறார்கள்.

இவ்வளவுதானப்பா உலகம். இதில் தர்க்கம் அறிவு எதுவும் தேவையில்லை. இந்த குருட்டுபயல்கள் உலகத்தில் நாம் சொல்வது எடுபடுவது எடுபடாதது குறித்து கவலைப்பட முடியுமா?

நண்பர்களே, ஒரு சமூகக் கூட்டம் அறிவும், நேர்மையும் குறைவாக இருப்பது பிறழ்வோ பெரிய பிரச்சனையோ அல்ல; அதை புத்திசாலித்தனமாகவும், யோக்கியமாகவும் கருதி, கும்பல் புத்தியாக பரிணமிப்பதுதான் விபரீதம்.

இவ்வளவுதான். நான் எழுத வேண்டியதை எழுதியாகிவிட்டதால் மன உளைச்சல் எல்லாம் எதுவும் இல்லை. மனம் விடுதலை அடைந்த உணர்வுதான். பை!

10/15/2010 5:07 PM
ROSAVASANTH said...
மணிகண்டன், சமயம் பார்த்து அடிக்க இவங்களை எல்லாம் நான் கவனிப்பதில்லை நண்பா. (ஆனால் நர்சிம், கேபிள் சங்கருடன் நேரில் நல்லபடியாக பேசியிருக்கிறேன்) மேலும் சமயம் பார்த்து நான் சொன்னாலும் சொன்ன விஷயத்தில் என்ன பிரச்சனை என்று பார்பதுதானே அறிவுடமை. நீங்கள் இப்படி எதையாவது சொல்வீர்கள் என்று நான் வாய்மூடி இருக்க முடியுமா? அதானால் உங்கள் வாதத்தில் சத்து இல்லை என்பது என் கருத்து. இருக்கிறது என்று நினைத்தால் சந்தோஷமாக் போங்கள்.

10/15/2010 5:17 PM
ROSAVASANTH said...
மணிகண்டன், சமயம் பார்த்து அடிக்க இவங்களை எல்லாம் நான் கவனிப்பதில்லை நண்பா. (ஆனால் நர்சிம், கேபிள் சங்கருடன் நேரில் நல்லபடியாக பேசியிருக்கிறேன்) மேலும் சமயம் பார்த்து நான் சொன்னாலும் சொன்ன விஷயத்தில் என்ன பிரச்சனை என்று பார்பதுதானே அறிவுடமை. நீங்கள் இப்படி எதையாவது சொல்வீர்கள் என்று நான் வாய்மூடி இருக்க முடியுமா? அதானால் உங்கள் வாதத்தில் சத்து இல்லை என்பது என் கருத்து. இருக்கிறது என்று நினைத்தால் சந்தோஷமாக் போங்கள்.

10/15/2010 5:17 PM
V.Radhakrishnan said...
பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை பார்வையாளர்கள் ஒருபோதும் புரிந்து கொள்ள இயல்வதில்லை.

பார்வையாளர்கள் கருத்து சொல்பவர்களாக மாறும்போது பிரச்சினையின் அனைத்து அம்சங்களையும் தெரிந்து கொள்வதுதான் சிறந்தது.

எடுத்தேன் கவிழ்த்தேன் எனும் நிலைப்பாடு அனைவரிடமும் இருக்கத்தான் செய்கிறது.

மிகவும் வருத்தம் தரும் செயல்கள் நடந்தேறிவிட்டது என்பதுதான் கொடுமை.

10/15/2010 7:13 PM
ROSAVASANTH said...
ராதா கிருஷ்ணன், நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று சரியாக புரியவில்லை. ஏனெனில் நீங்களும் சுரேஷ் கண்ணன் பதிவில் ஒழுங்காய் நடந்ததை புரிந்து கொள்ளாமல் ஒரு பின்னூட்டம் இட்டுருக்கிறீர்களோ என்று தோன்றுகிறது. எப்படி இருப்பினும் இந்த இடத்தில் உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி.

சுரேஷ் கண்ணன் பதிவில் எழுதப்பட்ட மற்றவைகளை பார்த்தேன். மனிதர்கள் எப்படி எல்லாம் கேவலமாக, புழுக்களின் ஓர்மை கூட இல்லாதவர்களாக எல்லாம் நடந்து கொள்வார்கள் என்று கண்டு கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக இதை எடுத்துக் கொள்கிறேன். அது தவிர ரொம்ப சீரியசாக தங்களை கருதிகொண்டு எப்படி எல்லாம் விநோதமாக யோசிப்பார்கள் என்றும் அறிந்து கொள்ள சுவாரசியமாக இருக்கிறது. உதாரணமாக மேலே மணிகண்டன் என்கிற அதி புத்திசாலி எழுதியிருப்பதை சொல்லலாம்.

5 நாட்களாக இணையத்திலிருந்து விலகியிருந்தது நல்ல ஆசுவாசமாக இருந்தது. நான் இந்த விஷ சூழலை விலகியிருந்து புரிந்து கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டதால் எந்த உணர்ச்சி கொந்தளிப்பும் இல்லை. இன்னொரு சந்தர்ப்பத்தில் இதை பற்றி எழுதுவேன். புழுக்கள் நெளியுமிடம் அழுகிபோனது என்று சொல்வது எழுத்தாளனின் கடமை அல்லவா?

10/20/2010 12:17 PM
ROSAVASANTH said...
இன்னமும் யோக்கியமாக எதையும் பேசாமல், பல பல நாடகங்கள் மட்டும் போடும் மலப்புழு, ட்விட்டரில் அடித்த கிண்டல் குறித்து எழுதியதை வாசித்தேன். அட, மலப்புழு முகம் சுளித்து 'மலநாற்றம்' என்று புகாரிட்டால், அது என்னவென்று முகரும் திறன் கொண்டவர்கள் அறிவார்களே; அது அற்றவர்கள்தான் பாவம்!

10/21/2010 5:21 PM
test said...
புழுக்கள் நெளியுமிடம் அழுகிபோனது என்று சொல்வது எழுத்தாளனின் கடமை அல்லவா?

- ennathu neer Ezhuthalara. Ithu eppothula irunthu ....

10/23/2010 4:19 AM
ROSAVASANTH said...
இந்த பதிவும், முந்தய பதிவும் நாளை இங்கிருந்து எனது 'கூத்து' வலைப்பதிவிற்கு மாற்றப்படும். வேறு தீவிர விஷயங்கள் பேசும்போது இந்த பதிவுகள் திசை திருப்பலாக இங்கே இருக்க வேண்டாமே என்று இந்த ஏற்பாடு. மற்றபடி பதிவுகள் நீக்கப்படவில்லை என்பதை அறிக.

10/27/2010 3:10 AM

சுரேஷ் கன்ணன் என்கிற மலப்புழு.

எனது மெயின் வலைப்பதிவில் Thursday, October 14, 2010 என்று எழுதிய பதிவு இங்கு (பின்னூட்டங்களுடன்) மாற்றப்பட்டுள்ளது.

'சைக்கோ' என்று சொன்னபோது கண்டித்தீர்களே, இப்போது மலப்புழு என்கிறபோது கள்ளமௌனம் சாதிப்பதாக, சுரேஷ் கண்ணன் சற்றும் விவஸ்தை இல்லாமல் லாஜிக் போடக்கூடும்தான். அதற்காக மலப்புழு என்று நன்கு தெரிந்த ஒருவரை வேறு மாதிரி அழைப்பதும், அதை எதிராளி தன் தர்க்கத்திற்கு சாதகமாக திரிப்பதை பற்றி கவலைப்படுவதும் என் இயல்புக்கு ஒவ்வாத சமாச்சாரம். ஆனால் நான் சும்மா திட்டமட்டும் செய்துவிட்டு ஓடமாட்டேன். சுரேஷ் ஒண்ணா நம்பர் ஹிப்போக்ரைட்டாக இருப்பதை கூட பொறுக்கலாம்; ஆனால் ஏதோ உலக மகா யோக்கியமும், சாந்தமும், அறிவும், ரசனையும் ஒன்றாய் கலந்தது குடிகொண்டது போல ஆக்டிங் குடுப்பதுதனால்தான், மலம் தின்னும் பன்னிக்கு கொடுக்கும் மரியாதையை கூட இந்த மலப்புழுவிற்கு கொடுக்க முடியாமல் போகிறது. (மலப்புழு என்பது, எந்த மலப்புழுவும் இந்த பதிவை வாசிக்காது என்ற தைரியத்தில் ஒரு உருவகம்தான். மற்றபடி ஒரு மலப்புழுவின் வாழ்க்கை எந்த வகையில் இழிந்தது?)

யாரையும் எந்த கட்டத்திலும் திட்டக்கூடாது என்று எனக்கு எந்த கொள்கையோ, நேர்த்தி கடனோ கிடையாது. அதை காரண காரியத்தோடு, நேர்மையாக, ஆதாரபூர்வமாக, அறிவுடமை கலந்து செய்யவேண்டும் என்பது மட்டுமே என் அக்கறை. சுரேஷ் கண்ணனின் நேர்மையான பதிலுக்கு காத்திருப்பதில், தேவைக்கு அதிகமாக நேரமும், பொறுமையும் விரயம் செய்தபின்புதான் இதை எழுதுகிறேன்.

என்னை பற்றி அநியாயமாக புழுகினார். அதை குறிப்பிட்டபோது மிக மோசமாக வன்மத்துடன் திட்டினார். நான் பொறுமையாக அவர் என் மீது சொன்ன பழிக்கு ஆதாரம் கேட்டேன். 'அக்கப்போர் மனநிலையில் இல்லை' என்று திமிருடன் பதில் சொன்னபோதும் பொறுமை காத்தேன். அதாவது என்னை பற்றி புளுகிவிட்டு, அதை சுட்டியதற்கு, மிக கேவலமாக திட்டி விட்டு, ஆதாரமும் பதிலும் கேட்டால் 'அக்கப்போர் மனநிலையில் இல்லை' என்பது என்ன ஒரு திமிர்தனம்! அறிவில், சமரசமில்லாத நேர்மையில் திமிர் ஏற்படலாம். ஏதாவது ஒருவகை அதிகாரத்தால் வரலாம். அது எதுவும் இல்லாத மலப்புழுவுக்கு எப்படி இவ்வளவு திமிர் என்பதுதான் புரியவில்லை? இந்த லட்சணத்தில் 'இது டெரெயிலர், இன்னும் மெயின் பிச்சர் இன்னும் பாக்கலை' என்று உதார் வேறு. பயந்தாங்கொள்ளியின் உதார்; வண்டி ஒட்டத்தெரியாதவன் நாராசமாக அடிக்கும் ஹார்ன் போல, ஆத்திரத்தின் பின்னுள்ள பயத்தினால் வரும் போலியான தோரணை இந்த திமிர்.

அல்ப விஷயத்திலிருந்து, அபாண்டம் வரை ஒருவனை பற்றி புளுகிவிட்டு இவர் இசைரசனை பற்றி எழுத போய்விட்டாராம். மீண்டும், மீண்டும் புளுகுவதையும், உதார்விடுவதையும், போலியான அறிவுபாவனை செய்வதை தவிர வேறு எதையும் இந்தாள் செய்யபோவதில்லை என்ற முடிவுக்கு வந்த பிறகு இந்த பதிவை எழுதுகிறேன். முதலில் பொது சந்திப்புகளில் அநாகரிகமாய் வன்மத்துடன் நான் நடந்ததாக சொன்னார். இப்போது வலைப்பதிவில் நான் சு.க.வை திட்டியிருக்கிறேன், காழ்ப்பை கக்கியிருக்கிறேன் என்று தொடர்சியாக புளுகுகிறார். சரி, ஆதாரமாக எதையாவது மேற்கோள் காட்டுவதில் என்ன பிரச்சனை? மற்ற சுட்டிகளை தருபவர், இந்த ஆதாரங்களுக்கு மட்டும் ஆயாசம், பாயாசம் என்று பாவனை செய்கிறார். விளக்கம் கேட்டு நிதானமாக காத்திருப்பதில் இனி பலனில்லை. அவர் செய்வது அத்தனையும் அயோக்கியத்தனம். இப்படி சும்மா சொல்லி விட்டு ஓடமாட்டேன். அதை பிரித்து மேய்வதுதான் இந்த பதிவின் நோக்கம்.

தொடர்வதற்கு முன், அன்பர்களே, இது அறிவு பூர்வமான விவாதம் இல்லை. இணையத்தில் 'Poincare conjecture', 'Perelman' என்று தேடுங்கள். கிடைக்கும் சுட்டிகளில் உள்ள விஷயங்கள் உங்களுக்கு எவ்வளவு புரிகிறதோ அவ்வளவு நன்று; இல்லையெனில் ஒரு மாதம் கழித்து என்னை நினைவு படுத்துங்கள். உங்களுக்கு இதை வைத்து ஒரு கட்டுரை எழுதி தருகிறேன். இந்த அறிவு டீலிங் ஒகேயே? மற்றபடி என்னை பற்றிய பொய்களுக்கான எதிர்வினை இது. இஷ்டமிருந்தால் வாசியுங்கள். ஆனால் இதில் அறிவுபூர்வமான விஷயங்களை எதிர்பார்த்து வாசிக்காதீர்கள். அத்தோடு அநியாயமாக பொய் சொல்பவனையும், அந்த பொய்யால் பாதிக்கப்படும் என்னையும் ஒரே தராசில் வைத்து, 'சண்டை வேண்டாமே' என்று அறிவுரை சொல்லாதீர்கள்.

முன் கதை சுருக்கம்:

நான் எழுதிய ட்வீட்கள் பற்றிய குறிப்புகள் கீழே உள்ள பதிவில் உள்ளன.

சுரேஷ் கண்ணன் என்னை பற்றி எழுதிய குறும்பதிவு.

அதற்கு நான் எழுதிய பதில்.

நாராயணின் பதிவு.

நாரயணன் பதிவு குறித்த என் கருத்து.

சுரேஷ் கண்ணன் நாராயணனுக்கு எழுதியது.



1. முதலில் அல்ப விஷயம். என் பதிவுகளை பொருட்படுத்தி வாசிப்பதில்லை என்கிறார். தொடர்ந்து இப்படி சொல்லிகொண்டே இருக்கிறார். அது மட்டுமல்ல அவர் என் எழுத்தை புறக்கணிக்கிறாராம். நான் அவரை புறக்கணிக்கவில்லையாம். ரொம்ப விசித்திரமான பொய் அல்லது அதிபயங்கரமான ஞாபக மறதி.

சுரேஷ் கண்ணன், நானாக அவரை block செய்யும்வரை, ட்விட்டரிலும், ப்ளாகரிலும் என்னை follow செய்துகொண்டிருந்தார். என்னை பொருட்படுத்தி வாசிக்கும் காரணமல்லாமல் வேறு எதற்காக என்னை follow செய்தார் என்று சொல்லமுடியுமா? அதிலும் ப்ளாகரில் எனக்கு இருந்த சொற்ப 10 followerகளில் சுரேஷ் கண்ணன் ஒருவர். என்னை பற்றிய பொய்யை அவர் சொன்னபிறகு, நான் அவரை ட்விட்டரில் block செய்தேன். அதற்கு பிறகு (நான் block செய்யும் முன்), அவசரமாக bloggerஇல் இருந்து என்னை unfollow செய்துகொண்டார். என்னை follow செய்ய, என்னை பொருட்படுத்தி வாசிப்பதை தவிர வேறு ஏதாவது காரணம் உண்டா? அவரை follow செய்யும் உத்தேசம் என்றுமே இருந்திராத நான், அவரை தேடி தேடி படிக்கிறேனாம். நான் block செய்யும் வரை என்னை ட்விட்டரிலும், ப்ளாகிலும் follow செய்த அவர் என்னை படிப்பதில்லையாம்! என்னய்யா விநோதமான லாஜிக்?

2. /இணையத்தில் நான் பதிவு எழுதத் துவங்கியதிலிருந்தே ரோசா, என் மீதுள்ள - இதுவரை என்னால் காரணமே அறிந்து கொள்ள முடியாத - காழ்ப்புடன் தொடர்ந்து என்னைச் சீண்டிக் கொண்டேயிருந்தார்./

இப்படி தொடர்ந்து திரும்ப திரும்ப சொல்லிகொண்டே இருக்கிறார். ஆனால் ஒருமுறை கூட சீண்டியதற்கான/ காழ்பிற்கான ஆதாரம் மேற்கோள், சந்தர்ப்பத்தை சுட்டுதல் என்று எதுவும் இல்லை. அவை அத்தனையும் முழு பொய் என்கிறேன். ஆதாரத்தை முன்வைக்க கேட்கிறேன். சுரேஷ் கண்ணன் எழுதியதை முன்வைத்து, கடந்த எழு வருடங்களில்,ஒட்டு மொத்தமாக 10 முறைகூட எதிர்கருத்து எழுதியிருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன். அதில் காழ்ப்பு, ஆபாசமான தாக்குதல் என்று ஒன்று கூட கிடையாது. எல்லாம் கருத்து ரீதியான எதிர்வினைகள் மட்டுமே. எனக்கு இருக்கும் எதிர்கருத்தை சொல்லிவிட்டு, சு.க. சொல்வதை அபத்தம் என்று நினைப்பதை அபத்தம் என்று சொல்லியிருக்கிறேன். அதை சொல்லக்கூடாதெனில் எதற்கு பின்னூட்டம் மற்றும் விவாதம்? நான் என்ன சு.கவிற்கு மட்டுமா எதிர்வினை வைத்திருக்கிறேன்? சுரேஷ் கண்ணன் தான் சொன்னதற்கான ஆதாரத்தை மேற்கோளாக தரவேண்டும் என்று, அவர் அதை செய்யமாட்டார் என்று நன்கு தெரிந்து, சும்மா இங்கே கேட்கிறேன்.


3. /நண்பர்களிடம் இது குறித்து விசாரித்த போது அவர் குறிப்பிடட சிலரிடம் இவ்வாறுதான் நடந்து கொள்வதாகவும் கடுமையான ஆபாசமான மொழியில் திட்டி விட்டு சமயங்களில் அதை அழித்துவிடுவதாகவும் சொன்னார்கள்./

அடுத்த அப்பட்டமான பொய். வசதியாக 'நண்பர்கள்' மீது பழி போடுகிறார். இந்த குற்றச்சாட்டு நான் தீவிரமாக ப்ளாகில் எழுதிய காலத்தில் வந்து, ஒருமுறைக்கு மேல் பதில் சொல்லியிருக்கிறேன். அவை என் பதிவுகளில், சேமிக்கப்பட்ட பின்னூட்டங்களில் உள்ளன. திருமலை, பிகே சிவகுமார் போன்றவர்கள் இதை சொன்னபோது, உதாரணம் காட்டச் சொல்லி சவால் விட்டிருக்கிறேன். பதில் வந்ததில்லை. நான் சிலரை திட்டியதுண்டு. அதற்கு பின்னான காரணமும் தர்க்கமும் உண்டு. அதை அழிக்கவில்லை. இன்னமும் உள்ளது. (ஜ்யோவராம் சுந்தர் சம்பவம் பிறகு எழுதியவைகளை என் மன அழுத்தம் காரணமாக நீக்கினேன். அதில் ஆபாச தாக்குதல் எதுவும் கிடையாது. மேலும் அவை எல்லாம் 11 மாதங்களாக இணையத்தில் உள்ளன. கூகுளில் தேடுபவர்களுக்கு கிடைக்கும். காட்டாயம் ஏற்பட்டால் அவைகளை முன்வைக்க முடியும்.)


4. மீண்டும் மீண்டும் நான் தொடர்ந்து, சுரேஷ் கண்ணனை தொடர்ந்து சீண்டி கொண்டே, இருந்ததாக சொல்லிகொண்டே இருக்கிறார். அட, நான் சுரேஷ் கண்ணனை தொடர்ந்து படித்தது கூட கிடையாது. எப்படி தொடர்ந்து சீண்ட முடியும்? அவர் எழுதிய ஏதாவது கண்ணில் படுகிற, மிக குறைவான சந்தர்ப்பங்களில், எதிர்கருத்து சொன்னது உண்டு. முன்பு சொன்னமாதிரி 10க்கும் குறைவான சந்தர்ப்பங்களில் சொல்லியிருப்பேன். சீண்டியதற்கான ஆதாரம் சு.க. தரவேண்டும், புத்திசாலித்தன,ம் என்று நினைத்து சீண்டாததற்கான ஆதரத்தை முட்டாள்தனமாக என்னிடம் கேட்ககூடாது. அடுத்தவனை பற்றி ஏதையாவது சும்மா சொல்லிவிட்டு ஓடுவது மொள்ளமாரித்தனம். இணையத்தில் ஆதாரங்கள் இருக்கும் போது, எடுத்து போடுவதில் என்ன பிரச்சனை? தொடர்ந்து சீண்டிக்கொண்டே இருந்ததற்கான ஆதரத்தை தருவதுதான் யோக்கியதனம்.


5. அவர் பதிவுகளை மொக்கை என்று சொன்னதால் மட்டும், என்னை பற்றி இப்படி மோசமான மொழியில் எழுதவில்லையாம். உண்மையான காரணம் எனக்கு தெரியும் என்கிறார். இல்லை, தெரியாது. வேறு காரணம் எதுவும் கிடையாது, நான் தொடர்ந்து சீண்டினேன் என்பது பொய் என்றுதான் நான் சொல்கிறேன்.


6. /என் பதிவுகள் மொக்கை எனத் தெரிந்தும் ஏன் வாசித்து துன்புறுகிறீர்கள், நான் உங்கள் பதிவுகளை புறக்கணித்து விட்டு செல்வதைப் போல் புறக்கணித்து செல்வதுதானே என்கிற என் கேள்விக்கு அவர் இதுவரை முறையான பதிலளித்தது போல் தெரியவில்லை./

என்னய்யா கேள்வி இதெல்லாம். நான் பொதுக்களத்தில் கருத்து சொல்பவன். தமிழ்மணத்தில் சு.க.வின் ஏதோ பதிவை பார்க்கிறேன், அல்லது யாரோ எழுதிய பதிவின் பின்னூட்டத்தில், அல்லது பலர் இருக்கும் ஒரு பொது சந்திப்பில் அவர் கருத்தை சொல்கிறார். அது அபத்தம் என்று நினைக்கும் போது, அதற்கு எதிராக என் நிலைபாடு இருக்கும் போது, மிக குறைவான விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய சந்தர்ப்பத்தில் எதிர் கருத்து சொல்கிறேன். இதில் துன்பம் நேர்கையில் புறக்கணிப்பை மீட்ட வேண்டியதுதானே என்றால் என்ன பதில் சொல்வது? டீவியில் மேயும்போது ஏதோ ஒரு சினிமா வருகிறது; அரையும் குறையுமாக பார்த்துவிட்டு, 'ரொம்ப மொக்கை' என்று சொன்னால், 'மொக்கை படத்தை நீ ஏன் தேடி தேடி பார்க்கிறாய்?' என்று ஒருவர் கேட்டால் என்ன பதில் சொல்வது?

இணையத்தில் நமக்கு பிடித்தவர், பிடிக்காதவர், அரசியல் ரீதியாக உவப்பானவர், பிரச்சனை உள்ளவர், ஆணாதிக்க வாதி, சாதிவெறியர், கம்யூனிஸ்டு, பெரியாரிஸ்ட், இந்துத்வவாதி என்று கிடைக்கும் அனைவரையும்தான் படிக்கிறேன். அந்த தருணத்தில் ஏதோ தோன்றினால் கருத்து சொல்கிறேன். இதில் நான் சுரேஷ் கண்ணனின் எழுத்துக்களை தேடி படிப்பதாக தானே கற்பித்து கொள்வது ரொம்ப ஓவர். உண்மையில் நான் அவரை வாசிப்பதேயில்லை. அப்படி நான் எத்தனை முறை அவர் பதிவுகளை பற்றி பேசியிருக்கிறேன்? இந்த சந்தர்பத்தில் ட்விட்டரில் அதிஷா லிங்க் கொடுத்திருந்தார்; பழக்கத்தில் சுட்டினேன். அதுவும் பாதி கூட வாசிக்கும் பொறுமை இல்லை. கடந்த 2 வருடத்தில் சுனாகானாவின் எழுத்தாக இந்த பாதி பதிவை மட்டும்தான் வாசித்தேன். 'மகாமொக்கை' என்று கருத்து சொன்னேன் (கவனிக்கவும் அதுவும் அதிஷாவிடம் கருத்து சொன்னேன்). வேறு எதையும் நான் வாசிக்கவில்லை, வாசித்ததில்லை. 'எந்திரன்' பற்றி அவர் இன்னும் நிறைய எழுதியிருப்பதாக (அதுவும் அதிஷாவின் ட்விட்கள் மூலமாக) கேள்விபட்டவைகளையும் நான் படிக்கவில்லை. (அதே நேரம் சுரேஷ் கண்ணன் என்னை படிக்காமல் புறக்கணித்ததாக பாவனை செய்வது பொய் என்று ஏற்கனவே சுட்டிக் காட்டியிருக்கிறேன்.)


7. /ஆரம்பத்திலிருந்தே பதிவுகளில், பின்னூட்டங்களில் என்னைச் சீண்டி வந்துக் கொண்டிருந்ததும். இதற்கெல்லாம் இணையத்திலிருந்தே என்னால் பல ஆதாரங்களை முன்வைக்க முடியும் என்றாலும் இதற்காக பழைய பதிவுகளை - குறிப்பாக ரோசா பதிவுகளை- தேடி வாசிக்க நேர்வது மிகுந்த அலுப்பையும் மனஉளைச்சலையும் தருவது. /

அய்யய்யோ.. அப்படி எல்லாம் சொல்லக்கூடாது. அலுப்பா இருந்தாலும் ஆதாரம் தரணும், அதுதான் முறை. இவர் பொய் சொல்வதை வாசித்து எனக்கு இல்லாத மன உளைச்சலா? ஒருவனை பற்றி அயோக்கியத்தனமாக பொய் சொல்லிவிட்டு, அதை பற்றி கேட்டால் பின் திட்டவும் செய்துவிட்டு, ஆதாரம் தர மெனக்கிடுவது மன உளைச்சலை தரும் என்பது என்ன ஒரு மொள்ளமாரித்தனம். அதை ஏதோ யோக்கிய சிகாமணியாய், அறிவு விவாதத்தில் மட்டுமே தனக்கு ஆர்வம், அக்கப்போர்களில் அல்ல என்று பாவனை செய்துகொண்டு சொல்வதை பார்த்து கொண்டிருக்க முடியுமா?

பின்னூட்டங்களில் மட்டுமில்லாது என் பதிவுகளிலும் அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் சீண்டியுள்ளதாக சொல்கிறார். ஒரு ஆதாரம் , ஒரே ஒரு ஆதாரம் என் பதிவுகளிலிருந்து, நான் சுரேஷ் கண்ணன் பற்றி ஆபாசமாகவோ, காழ்ப்புடனோ பேசியதற்கான ஆதாரத்தை தேடி கொடுக்க வேண்டும். மாறாக சொல்லிவிட்டு ஓடிப்போவது களவாணித்தனமன்றி வேறென்ன? என்னை யாராவது இப்படி சவால் விட்டு பேசியிருந்தால், நிறுவுவேன் அல்லது நாண்டுகொண்டிருப்பேன், குறைந்த பட்சம் என் தவறையாவது முழுமையாக ஒப்புக் கொண்டிருப்பேன்.


8. முதலில் பதிவர் கூட்டங்களில் அநாகரிகமாக, வன்மத்துடன் நடந்து கொள்பவர் என்றார். அதை பொய் என்றேன். சாந்தர்ப்பம் கிடைக்கும் போது அதை குறிப்பிட்டேன். மீண்டும் தன் வசைப்பதிவில் அதை வலியுறுத்தி சொன்னார். நான் நிதானமாக, அது குறித்து விரிவாக எங்கே , எப்போது, எந்த சந்திப்பில், யார் முன்னிலையில் அவ்வாறு நடந்தேன் என்று கேட்டேன். இன்னமும் அது குறித்து எதுவும் பேசாமல், வேறு எதை எதையோ குண்டக்க மண்டக்க பேசுகிறார்.


/அது முழுக்க முழுக்க (நண்பர்கள் சந்திப்பில்) ரோசாவால் சப்ஜெக்டிவ்வாக காயப்பட நேர்ந்த (கருத்து அல்லது விவாத ரீதியானது அல்ல) அனுபவங்க்ளின் எதிரொலியாக எழுதினது./


'நீங்க சொல்றது ரொம்ப தப்பு சுரேஷ்' என்று யாராவது மறுத்து சொன்னால் கூட, காயப்படக்கூடிய அழுகுண்ணி மனப்பான்மை கொண்ட சுரேஷ் கண்ணன், என் எதிர்கருத்தால், மறுப்பால், கிண்டலால் காயப்பட்டால் யாரும் எதுவும் செய்யமுடியாது. அப்படி காயப்பட்டால் என்னை தவிர்ப்பதும் தப்பிப்பதும் அவர் பிரச்சனை. ஆனால் பொதுக்களத்தில் அதை அநாகரிகம், வன்மம் என்றால் அதற்கு ஆதாரம் தரவேண்டும். குறைந்த பட்சம் என்ன சொன்னேன் என்ராவது சொல்லவேண்டும். முடிந்தால் அதில் என்ன வன்மம் அல்லது காழ்ப்பு அல்லது அநாகரிகம் அல்லது சீண்டல் என்று சொல்லவேண்டும். இதை இன்னும் எத்தனை முறை கேட்பது. அட, குண்டக்க மண்டக்க ஏதாவது கேள்வி கேட்டு தர்க்கம் செய்ய தெரிகிறது (கீழே). இதற்கு பதில் சொல்ல மட்டும் கைவராதது மீண்டும் களவாணித்தனம்தானே.

/ஆனால் இந்த பின்னூட்டத்திற்குப் பிறகு 'சுரேஷ் கண்ணன் என்னைப் பற்றி அபாண்டமாக புளுகி விட்டார்' என்று ரோசா தொடர்ந்து சொல்லி வருகிறார். மேலும் அதை மறுப்பதற்கான ஆதாரங்களையும் தன்னால் தர முடியும் என்றும் சுந்தர் தாக்குதல் தொடர்பான விளக்கப்பதிவில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்./ (

எனக்கும் சுந்தருக்கும் இடையில் நடந்தது இருவருக்கும் மட்டும் தெரிந்தது. அதில் ஆதாரபூர்வமாக பேச (அடுத்தவர் ஒத்துழைத்தால் ஒழிய) எதுவுமில்லை. ஆனால் சுரேஷ் கண்ணன் சொல்வது பலர் சாட்சியுள்ள ஒரு பொது சந்திப்பில் நடந்தது பற்றி. அதனால் அதற்கு ஆதாரம் உண்டு என்றேன். மற்றபடி என்ன நடந்தது என்று சொல்லாமல் நான் எதை மறுப்பது? சும்மா ஒவ்வொருவரையும் கூப்பிட்டு நான் அநாகரிகமாக் பேசவில்லை என்று மொட்டையாக சொல்லச் செய்ய வேண்டுமா? சரி. அந்த வகையிலும் நாராயணன் அந்த சந்திப்புகளில் கலந்து கொண்ட சாட்சிதான். (நான் கேட்காமல் )அவர் சொல்கிறாரே. ஓ.. அவர் என் நண்பர்! (அப்ப மற்றவர்கள் எல்லாம் என்ன எதிரியா?) அந்த சந்திப்பில் சுரேஷ் கண்ணனை கூட எதிரியாக கருதாத நான் எப்படி ஒரு ஒரு எதிரியை கண்டு பிடித்து சாட்சியாக இங்கே கொண்டு வர முடியும்?

நான் என் அந்த பதிவில் சொல்லியது 'ஆதாரம் தரமுடியும்' என்று சொன்னது, இப்போது நான் செய்து கொண்டிருப்பதைத்தான், செய்ய முடியும் என்றேன். என்ன நடந்தது என்று சுரேஷ் கண்ணனிடம் கேட்டு, அவர் என்ன நடந்தது என்று சொன்னால் அதை சாட்சிகளுடன் மறுக்க கூடியதைத்தான் சொன்னேன்.

//'என்ன வகையில் அநாகரிமாக நடந்து கொண்டேன்' என்று என்னிடம் ரோசா விளக்கம் கேட்பது போல, நான் அபாண்டமாக புளுகியதற்கு ஆதாரம் உண்டு என்று ரோசா எழுதியது தொடர்பாக விளக்கம் கேட்பதற்கு எனக்கும் உரிமையுண்டு. /

இருக்கட்டும்.. இருக்கட்டும். எல்லாருக்கும் என்னா வேணுமானாலும் குண்டக்க மண்டக்க கேட்க உரிமை உண்டுதான். அதற்குதான் மேலே பதில் சொல்லியுள்ளேன்.

//மேலும் என்னைக் குறித்தும் எழுதிய குறிப்புகள் அடங்கிய பதிவுகளை நீக்கி விட்ட ரோசாவிற்கு என்னிடம் விளக்கம் கேட்பதற்கு எந்த வகையான தார்மீக உரிமை இருக்கிறது என்பதும் எனக்குப் புரியவில்லை. /

சில நூறு வரிகள் கொண்ட அந்த பத்து பதிவுகளில், ஒரே ஒரு வரி சுரேஷ் கண்ணனை என்னை பற்றி சொன்ன பொய் பற்றியது. அந்த பதிவுகளை நீக்கிவிட்டால், என்னை பற்றி சொன்ன பொய் குறித்து கேள்வி கேட்க உரிமை இல்லையா? என்னய்யா லூசுத்தனமா இருக்கு? லூசுத்தனாமா இல்லையா என்று இந்த பதிவை வாசிக்கும் யாரவது ஒருவர் வந்து சொல்லட்டும் கேட்போம். சுரேஷ் கண்ணன் சொன்ன புளுகு இன்னும் இணையத்தில்தானே இருக்கிறது. அதை பற்றி கேள்வி கேட்க எப்படி நண்பா (அந்த பதிவுகளை நீக்கியதால்) உரிமை இல்லாமல் போகும்?

/ரோசா என்னைத் தொடர்ந்து சீண்டி வந்துக் கொண்டிருந்த மனநெருக்கடிகளின் போதே அவர் கேட்டிருந்த விளக்கப்பதிவை என்னால் எழுதியிருக்க முடியும். ஆனால் இதில் என்னையும் ரோசாவையும் தாண்டி சந்திப்பிற்கு அழைத்த பொதுவான நண்பர்களும் சம்பந்தப்பட்டிருப்பதால் அவர்களைச் சங்கடப்படுத்த வேண்டாமே என்று அமைதி காத்தேன். /

அதெல்லாம் சங்கடப்படாத யாரையாவது சாட்சிக்கு கூப்பிடலாம். இந்த அறிவு எல்லாம் பொய் சொல்வதற்கு முன்னால் இருக்க வேண்டும். பொய் சொன்னபிறகு, இன்னமும் விளக்கம் தராமல் இப்படி எல்லாம் யோக்கியமாக பேசும் நேரத்தில் அதை செய்யலாம். 




9. /ரோசாவை கடுமையான எழுதினது தொடர்பாக பல நண்பர்கள் என்னைத்தொடர்பு கொண்டு 'நீங்களா அதை எழுதினது' என்று ஆச்சரியத்துடனும் திகைப்புடனும் கேட்கிறார்கள். முன்னரே குறிப்பிட்டிரு்ப்பது போல இவ்வாறு எழுதுவது என்னுடைய இயல்பும் வழக்கமும் அல்ல என்பதை என் பதிவுகளை வாசிப்பவர்களே உணரக்கூடும். தவறு செய்தவனைக் காட்டிலும் அதைச் செய்யத் தூண்டியவனே பிரதான குற்றவாளி என்கிற முறையில் என்னை இந்த மனநெருக்கடிக்கு தள்ளின ரோசாவிற்கும் இந்த நிகழ்வில் பங்குண்டு என்பதையும் என் குறிப்பை வாசிப்பவர்கள் உணர வேண்டும் என நான் விரும்புகிறேன். /

என்ன திமிர்? என்ன அயோக்கியத்தனம்? அப்படி நான் என்னவகையில் provoke செய்தேன் என்பதுதான் என் கேள்வி. திரும்ப திரும்ப இத்தனை முறை கேட்டபின்பும், இன்னமும் அதற்கு மேலோட்டமாக பதில் கூட சொல்லமல், சும்மா சீண்டல், நோண்டல் என்று ஏதோ சொல்லிவிட்டு, இப்படியும் ஒரு பாயிண்ட் எடுத்துவிட எவ்வளவு கேவலமான மனசாட்சியே இல்லாத மனிதனாக இருக்க வேண்டும். அப்புறம் மன நெருக்கடிக்கு தூண்டிய நபர்தான் பிரதான குற்றவாளியா? சுந்தர் தாக்கப்பட்ட சமபவத்தில் இப்படி ஒரு லாஜிக் சுனாகானா போட்டாரா? அட, நான் ஒரு வார்த்தை கூட என் தரப்பில் இருந்து சொல்லாத நேரத்தில், ஒரிருவர் என் தரப்பையும் கேட்கவேண்டும் என்று குறைந்த பட்சமாக சொன்னவர்களை குதறியவர்தானே இந்த ஆசாமி. அப்படிப்பட்ட பதிவுகளில் போய், என் தரப்பை கேட்பதே அநியாயம் என்கிற கருத்துக்கு ஆதரவாக பின்னூட்டமிட்டவர், இப்போது இப்படி ஒரு லாஜிக் போட என்ன ஒரு விவஸ்தைகெட்ட ஹிப்பாக்கரசி தேவை. இலக்கியம் மண்ணங்கட்டி படித்து (ஒரு வேளை புரிந்தால்) அதெல்லாம் என்ன எழவுக்கு?


10. 
/இனி ரோசா என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளட்டும் என்றும் இதை இப்படியே தலைமுழுகித் தொலைப்பது என்றும் இப்போதைக்குத் தோன்றுகிறது./

நேர்மையும், சொல்வதற்கு தர்க்க பூர்வமான சரக்கும் இல்லாத ஆசாமி வேறு என்னப்பா செய்யமுடியும். ட்ரெயிலர், மெயின் பிக்சர் என்று உதார் விட்டு விட்டு இப்படி களவாணித்தனமாக ஓடுவதற்கும் இப்படி ஒரு தோரணையா?


/அப்போது நீங்கள் உள்ளிட்ட இணைய நண்பர்கள் இவ்வாறான 'பஞ்சாயத்து மற்றும் உபதேசப்' பதிவுகளை எழுதுவீர்களா அல்லது கள்ள மெளனம் சாதிப்பீர்களா என்பதை காத்திருந்து பார்க்க விரும்புகிறேன். /

என்ன சொல்லவருகிறார் என்று புரியவில்லை. எனக்கு பதில் சொல்லாமல் போனால் அது மொள்ளமாரித்தனம். அப்போது கள்ள மௌனம் சாதிப்பவர்களை (யாராக இருந்தாலும்) பார்த்து இவர் என்ன செய்ய போகிறார்?



என்னை மோசமாக வசைந்து எழுதிய பதிவில், நான் எதோ இவரை பற்றி எழுதியதற்கு, அவர் பதிலடி கொடுத்த பின் ஓடி வாலை சுருட்டிக்கொண்டேனாம். உலகில் எப்படி எல்லாம் விசித்திரமாக மனிதர்களால் யோசிக்க முடிகிறது, அதை தைரியமாக சஎப்படி சொல்லவும் முடிகிறது. அப்படி எதுவும் நடக்கவில்லை. சுனா கானா (சுயமௌதுனம் செய்வது போல) கற்பனைசெய்து, அப்படி நடந்ததாக தனக்கு தானே கற்பித்து கொண்டால் மட்டுமே உண்டு. மற்றபடி, எப்ப ஸார் அப்படி நடந்தது, அப்படி என்ன தடலடி லாஜிக்கில் என்னை மாட்டிவிட்டீர்கள், எடுத்து காட்டுங்கள் என்றெல்லாம் சுகவை கேட்பதில் எந்த பயனும் இருக்காது என்பதில் இன்னுமா சந்தேகிக்க முடியும்.


கடைசியாக சில வார்த்தைகள். சுரேஷ் கண்ணனிடம் எந்த முன்பகை, சொத்து தகறாரு, கொடுக்கல் வாங்கல், குடும்ப தகராறு, ஒரே பெண்ணை சைட் அடித்தது உட்பட எந்த பிரச்சனையும் ஆரம்பத்தில் இருந்து கிடையாது. ஆகையால் ஆரம்பத்தில் இருந்தே நான் காட்டுவதாக சொல்லும் காழ்ப்பிற்கு எந்த காரணமும் கிடையாது. அப்படி எதையும் காட்டியதில்லை. கருத்துரீதியான எதிர்ப்பை மட்டுமே, என் நிலைபாடு சார்ந்து செய்துள்ளேன். இணையத்தில் தேடி இதை விரும்புபவர்கள் தெளிவாக அறியலாம்.

ஆனால் நாகரீகம் என்று சிலர் கற்பிக்கும் சட்டகத்தில் அடங்காத விமர்சனங்களையும், தாக்குதல்களையும் நான் செய்ததுண்டுதான். ஆனால் சுரேஷ் கண்ணனை முன்வைத்து செய்ததாக அவர் சொன்னது அப்பட்டமான பொய் என்பதுதான் இதுவரை நான் சொல்லி வந்தது. ஆனால் கருத்து ரீதியான பின்புலம் இன்றி, வெறும் வசை தாக்குதல்களை மட்டும் நான் வைத்ததில்லை என்பதை விளக்க முடியும். இப்போது சுரேஷ் கண்ணனை இந்த பதிவில் திட்டியதை, தர்க்கரீதியான வாதங்களின் கான்க்ரீட் ஆதரவோடு செய்வது போலத்தான் இதற்கு முன்னாலும் செய்துள்ளேன். ஏதோ வகையில் பகைமை உணர்வு கொண்டவர்கள் மட்டுமின்றி நான் நட்பு பாராட்டும் அனாதை, பெயரிலி, டீஜே தமிழன், தங்கமணி, சுந்தர வடிவேல், லக்கி, வெங்கட், சங்கரபாண்டி, சுந்தர மூர்த்தி, சுமதி ரூபன் என்ற கறுப்பி, பத்ரி, ப்ரூனோ, என்றென்றும் அன்புடன் பாலா, இன்னும் டோண்டு என்று பலருடன் கிண்டலாகவும், கடுமையான வார்த்தைகள் கலந்தும் சண்டைகள் போட்டிருக்கிறேன். கருத்துரீதியான சண்டைகளே தவிர அதில் தனிப்பட்ட காழ்ப்பு கிடையாது. அவர்கள் யாராவது என்னை இப்படி குற்றம் சாட்டியது கிடையாது. ஆனால் அவர்கள் அப்படி சொன்னால் கூட பரவாயில்லை. அப்படிபட்ட சண்டைகள் கூட இல்லாத சுனா கானா சொல்வதுதான் வேடிக்கை. எது எப்படி இருந்தாலும் சண்டைகளுக்கு பிறகு என்னிடம் நட்பு பாராட்டும் அனைவருக்கு இந்த தருணத்தில் நன்றி சொல்கிறேன். அவர்களுக்கு என் அன்பும் நட்பும் (கருத்திரீதியாக சமரசம் இல்லாமல்) என்றும் தொடரும்.




11 Comments:

ராம்ஜி_யாஹூ said...
உங்கள் இருவரின் மீது உள்ள அன்பா, மரியாதையா எது காரணம் என்று தெரியவில்லை. எனக்கு நீங்கள் இருவரும் நடத்தும் எழுத்து யுத்தத்தின் மீது ஈர்ப்போ, தீவிரமோ வரவே இல்லை.

இந்த நிகழ்வுகளுக்கு முன்பு உங்கள் இருவர் மீதும் என்ன மதிப்பேடு,மரியாதை,பாசம் இருந்ததோ, அதே நிலைதான் இன்றும் தொடர்கிறது. (am i reading your posts with predetermined mind).

10/14/2010 11:50 AM
ROSAVASANTH said...
ராம்ஜி, என் மீதான உங்க மதிப்பு, மரியாதை, பாசம் குறித்து உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சி. (சு.க. மீது வைத்தித்க்கும் அதே மதிப்பைத்தான் என் மீதும் வைத்திருக்கிறீர்கள் என்கிறபோதும்). ரொம்ப நன்றி.

10/14/2010 12:11 PM
TiredRannaSuarus said...
Because this was related,
http://textbin.com/r5762

10/14/2010 1:03 PM
S.Ravi said...
Suresh Kanna is a jallra of jemo.

Ignore these மலப்புழு.

S.Ravi
Kuwait

10/14/2010 4:22 PM
தங்கமணி said...
நீண்ட நாளைக்குப் பிறகு தமிழ்மணம் வந்தேன். இதைப் படிக்க நேர்ந்தது. உங்களை உங்கள் நண்பர்கள் அறிவார்கள். பதிவுகளில் எழுதுவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும். உங்களுக்கு நேர்மை காரணமாக இருக்கும். ஆனால் அதை எல்லா இடங்களிலும் எதிர்பார்க்க முடியாது வசந்த்.

10/14/2010 8:18 PM
ROSAVASANTH said...
அன்புள்ல தங்கமணி, நலமா, நீண்..ட நாட்களுக்கு பிறகு இங்கே என்னை நீங்கள் வாசிக்க நேர்வதும், சந்திக்க எனக்கு நேர்வதும் துரதிர்ஷ்டமே. ஆனாலும் உங்கள் பின்னூட்டத்தை கண்டதில் மகிழ்ச்சி. எல்லாம் நலம் என்று நம்புகிறேன்.

(நீங்கள் தனிப்பட்ட முறையில் கூட எனக்கு இதை எழுதியிருக்கலாம். தேவையில்லாம் உங்களுக்கு பூசை விழுமோ என்று பயம்.)

10/14/2010 8:44 PM
ROSAVASANTH said...
//பொதுவெளிகளில் எங்காவது நான் தாக்கப்பட்டால் அதற்கு மேற்குறிப்பிட்ட ஆசாமிகளில் எவராவது காரணமாகயிருக்க்கூடும்// இது சுனாகானா

//இம்முறை பார்த்து கொண்டு இருக்காது!, திரும்ப கொடுக்கும்.// இது வால்பையனாம்.

//dont worry sir, என்ன கூப்பிடுங்க.. கும்மாங்குத்து குத்திடலாம்... 

அதுக்குன்னு நான் ரௌடியில்ல... ஆனா திருப்பி தாக்குவதுல... பிஸ்துதான் நாங்க :))//

அய்யோ.. ரோட்டில் யாரிடமாவது வம்பிழுத்து சுரேஷ் கண்ணன் அடிவாங்க கூடாது என்று நான் தினமும் பெருமாளிடம் பிரார்திக்க வேண்டுமா?

10/14/2010 8:52 PM
ROSAVASANTH said...
சுனாகானாவின் இரண்டாவது பதிவை ரசித்து படித்தேன். நானும் கூட ஏதாவது பதில் கிதில் சொல்லி, மீண்டும் பிரித்து மேயும் வேலையை இன்றைக்கும் எனக்கு வைத்துவிடுமோ என்று கொஞ்சம் பயந்தேன். நல்லவேளை 'பதில் சொல்லணும்..சொல்லபோறேன்... சொல்லித்தான் ஆகணும்... இதுக்குதானே ஆசைப்பாட்டாய் நான் சொல்கிறேன்..நான் மட்டும் இல்லை எல்லோரும் பதில் சொல்லணும்... ' என்றெல்லாம் மட்டுமே சொல்லியிருகிறார். அதனால் நான் என் வேலையை பார்க்கலாம்.

கையில் தயராக பதிலை வைத்து கொண்டு கண்ட கண்ட விஷயத்தை எல்லாம் நீட்டி முழக்கி எழுதும் சுனாகானா... நீங்கள் ஒரு புரியாத புதிர். ஆனால் ஆதரத்தை எல்லாம் இப்படி நீங்களே வைத்து கொண்டு, குற்றச்சாட்டுகளை மட்டும் வகைவகையாய் எடுத்து போட்டு எங்கள் அறிவு பசிக்கு தீனி போட மறுப்பது நியாயமா?

மொக்கையான நகைச்சுவை உணர்வு உள்ள ஒருவர் கூட, அவரது எழுதும் நோக்கத்தை தாண்டி, சிறந்த முறையில் காமெடி செய்ய முடியும் என்று சுனாகானாவின் இன்றய பதிவை வாசித்துதான் அறிந்தேன். சில நூறு இலக்கிய பிரதிகள் சொல்லித்தராத பாடத்தை எனக்கு அவர் சொல்லிதந்துள்ளார். மிக்க நன்றி சுனா கனா.

10/14/2010 9:03 PM
ROSAVASANTH said...
சில மாதங்கள் முன்பு சுபாவின் (90களின் இறுதியில் வந்த) பாக்கெட் நாவல் ஒன்று, பெங்களூர் நண்பர் வீட்டில் காணக் கிடைத்தது. அதில் வந்த பல 'பாராட்டுக் கடிதங்களில்' ஒரு கடிதத்தில் சுபாவிற்கு ஏன் சாகித்ய அகாடமி விருது தரவேண்டும் என்று நீளமாக் விளக்கப்பட்டிருந்தது. அது மட்டுமில்லாமல் சுபாவை கண்டுகொள்ளாத இலக்கிய விமர்சகர்களையும் கடிதம் விளாசி தள்ளியிருந்த்து. பதிலுக்கு சுபா இது போன்ற வாசகர்களின் கருத்துதான் தங்களுக்கு உண்மையான விருது என்று சொல்லியிருந்தார். சாகிதய அகாடமி விருது வாங்கியவர்கள் இலக்கியம் படைப்பதை நிறுத்தி பல காலம் ஆகிவிட்டதையும் சுட்டி காட்டி, தங்களை இயக்குவது இது போன்ற வாசக விருதுகளே என்று குறிப்பிட்டிருப்பார்.

பிரபஞ்சனுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கிய சந்தர்ப்பத்தில், சன் டீவியில் 'கவிஞர்' முத்துலிங்கம் நேர்காணல் வழங்க நேர்ந்தது. அதில் தரத்திற்கும் விருதுக்கும் தொடர்பு இருக்க வேண்டிய தேவையில்லை என்று விளக்கி கொண்டிருந்தார். அதை சொல்லிவிட்டு', உதாரணமாக இப்போது பிரபஞ்சன் என்று ஒரு எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கியுள்ளார்கள். அவரை நான் ஒரு மூன்றாம்தர எழுத்தாளர் என்று கூட நான் சொல்ல மாட்டேன். நான்காம் தரத்திற்கும் கீழான அவர் படைப்புக்கு விருது வழங்கியுள்ளார்கள்' என்று உதாரணபூர்வமாக விளக்கிக் கொண்டிருந்தார். அன்று இதை கேட்ட எனக்கு ஆத்திரம் தாங்காமல், பிரபஞ்சனை பாரட்டி நேர்காணல் ஒளிபரப்ப வேண்டிய சண்டீவி இப்படி செய்வது பற்றி தூத்துகுடியில் என் நண்பர்களிடம் புலம்பி தீர்த்தேன்.

ஆனால் இந்த முறை சுபாவிற்கான கடிதம் எனக்கு சுவாரசியமாக பட்டது. அந்த கடிதம் சுபாவே எழுதி சும்மா பதிப்பித்து கொண்டிருக்க மிகுந்த வாய்ப்புண்டு என்றாலும், உண்மையிலேயே சுபாவின் வாசகர் ஒருவர் அப்படி எழுதியிருக்கவும் சிறு வாய்ப்புண்டு. அந்த வாய்ப்பை கணக்கில் கொண்டு அதை புரிந்து கொள்ள முயன்றேன். அப்படி முயலும் போது 'கவிஞர்' முத்துலிங்கம் கூட உண்மையான தனது நம்பிக்கை சார்ந்த கருத்தை கூறியிருக்க முடியும் என்றும் தோன்றியது. இதயெல்லாம் இங்கே எதற்காக சொல்கிறேன் என்று புரியவில்லையா? அதனால் பரவாயில்லை

10/15/2010 2:50 AM
-/பெயரிலி. said...
ரோசாவசந்த், ஏற்கனவே கீச்சிலே சொன்னதுதான். என்றாலும் மீண்டும் வேறுவரிகளிலே; "எழுத்தென்பதும் இலக்கியமென்பதும் அரசியலோ விளையாட்டோ அல்ல, அவதானமாக எல்லோருக்கும் நல்லவராக ஜெமோ பாணியிலே களமாடிக்கொண்டிருக்க. சமகாலத்திலே இருபத்தாறு மைல்களுக்கு அப்பால் குழந்தைகள் கொல்லப்பட்டபோது அரசியலுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று நடவாததுபோல ஒதுக்கிவிட்டு, 1926 இலே அவுஸ்ரேலியாவிலே பிரிக்கப்பட்ட இரு குழந்தைகளின் சோகத்திரைப்படத்துக்காக உலக அழுகை மொட்டைமாடியிலே வடிப்பதுதான் எலக்கியம், ஒலக சினிமா என்றானது உங்களுக்குத் தேவையா என்பதை நீங்கள் தீர்மானித்துக்கொள்ளவேண்டும். ஒவ்வாதென்றால், விமர்சனம் தவிர்த்து ஒதுங்க வேண்டும். பட்டறிவு சொல்வது இதுவே. லோஸா இடதுசாரி என்பதாலேயே நோபல்_இலக்கியம் வழங்கப்படவில்லை என்று அரைகுறைச்செய்தியைத் துணிந்து தரும் இலக்கிய உலகிலே வாள் தூக்கி, வேல் எறிந்து எதையும் சாதிக்கப்போவதில்லை. அதனாலேயே, சில சமயங்களிலே ஒத்துக்கொள்ளமுடியாதபோதுங்கூட, வினவு போன்றவர்கள், தமிழ் இலக்கியபிம்பங்களைவிட எத்துணை மேலெனத் தெரிகின்றது. தொடர்ந்து வாதிப்பதால், ஆவதேதுமில்லை. "

10/15/2010 8:03 AM
ROSAVASANTH said...
பெயரிலி, பின்னூட்டத்திற்கு நன்றி. இதற்கு மேலை காமெடியக எடுப்பது என்றுதான் இருக்கிறேன். சும்மா ஜாலிக்காக இன்னொரு பதிவு எழுதினேன். அதில் சொல்லியபடி ஏதாவது திடுக்கிடும் ஆதாரம் (அதாவது மேலும் பொய்) வந்தால் மட்டுமே திரும்ப எழுதுவேன். 5 நாட்கள் இணையத்தில் இருக்க மாட்டேன் என்பதும் உற்சகமாக இருக்கிறது.

10/15/2010 2:04 PM

Site Meter