கூத்து!

உரசலாவது கேட்கட்டும்!

Tuesday, September 19, 2006

என் பின்னூட்டம்.

ரவி ஸ்ரீனிவாஸின் பதிவில் நான் எழுதிய ஒரு பின்னூட்டம் வெளிவரவில்லை. எழுதி ஒருநாள் ஆகி, ஒரு மணி நேரம் முன்பு மற்ற பின்னூட்டங்கள் வெளிவந்து விட்டதால், அவர் அதை வெளியிடவில்லை என்றே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. என் பின்னூட்டத்தில் தனிப்பட்ட தாக்குதல் என்று எதுவும் இருப்பதாக நான் நினைக்காவிட்டாலும், இதில் வருத்தமோ, அவர் மீது குற்றம் சாட்டவோ எனக்கு எதுவும் இல்லை. இன்று இணையத்தில் - குறிப்பாய் வலைப்பதிவுகளில் - யாருடைய கருத்தையும் தடை செய்து, யாரும் யாருக்கும் ஜனநாயக மறுப்பை செய்ய முடியாது. தங்களுக்கு உவப்பான கருத்துக்களை மட்டும் ஒருவர் தன் வலைப்பதிவில் வைத்து கொள்வதால் ஜனநாயகத்திற்கு எந்த கேடும் இல்லை. மாற்று கருத்துக்களை -வசைகள் உட்பட்ட கடுமையானவற்றை - தனது சொந்த பதிவில் மற்றவர்கள் எழுதிகொள்ளலாம்.என் பதிவுகளில் என்னை பற்றி என்ன திட்டிவந்தாலும், எந்தவகை மாற்றுக் கருத்தாக இருந்தாலும், அது எந்த மாற்றமும் இன்றி வெளிவரும். மற்றவர்களை திட்டி வந்தால் அது குறித்து யோசிக்க வேண்டிவரும். போலிப் பின்னூட்டங்கள் மட்டும் எந்த சமரசமும் இன்றி நீக்கப்படும். அந்த வகையில், என்னைவிட வாசிப்பிலும் (அதாவது ரவி புத்தகம் புரட்டுவதை எல்லாம் வாசிப்பு என்பதாக நாம் எடுத்துகொள்ள வேண்டுமென்றால்) வயதிலும் மூத்தவரான அவரைவிட, நான் பரந்த மனம் கொண்டிருப்பதில் மகிழ்சியே. அதே நேரம் ஒரு பின்னூட்டத்தை வெளியிடாதன் மூலம் அதற்கு அதிக விளம்பரம் மட்டுமே கிடைக்கும் என்று அவர் அறிவிற்கு எட்டாதது வருத்தமே.மேலே இரண்டு பத்திகளுக்கு வூடு கட்டியிருப்பதற்கு ஏற்ப என் பின்னூட்டத்தில் விஷயம் எதுவுமில்லை. ரவி எழுதியதும் விஷய கனம், அறிவு என்று எதுவுமில்லாமல், அவர் மனத்திலிருந்து விழுந்த ஒட்டடை மட்டுமே. நான் எழுதியதும் வெறும் குப்பை மட்டுமே. தங்கமணி, திரு போல சுட்டிக்கு நன்றி மட்டும் சொல்லும் விவேகம் இல்லாததால், குப்பைக்கு குப்பையை மட்டுமே என்னால் காணிக்கையாக்க முடிந்தது. ஒரு பதிவிற்காக மட்டும் எனது பின்னூட்டம் இதாலிக்கில் கீழே.ரவி சீனிவாஸு,

என்ன திட்டினாலும் உமக்கு உறைக்காது, எவ்வளவு விளக்கினாலும் உம் மண்டையில் ஏறாது என்று தெரியும் என்றாலும், நரம்பில் இன்னும் உணர்வு இருப்பதால் இதை ஏனோ எழுதாமல் தாண்டிப் போக முடியவில்லை. பிரேம் சாரு எழுதியதை படித்து சிரிக்க வேண்டுமா? உம்மையும், உம் எழுத்தையும் பார்த்து இன்று சிரிக்கும் அளவிற்கு கூட யாரும் மரியாதை தராமல், பலரும் துப்பிக் கொண்டிருப்பதும், உம்மோடு பல வருடங்களுக்கு முன்னால் வைத்திருந்த நட்பு குறித்து உமது பல நண்பர்கள் வெட்கப்படுவதும் உமக்கு தெரியுமா? இன்னும் உம் எழுத்தை முழுமையாக படிக்காத உமது சில முன்னாள் நண்பர்கள், கேள்விபட்டதை வைத்து, வெறும் வருத்தம் மட்டும் கொண்டிருக்கிறார்கள். நான் நேரடியாய் உம் பதிவு ஒன்றை வாசித்து காட்டியதை கேட்க நேர்ந்த உம் நண்பர் ஒருவர் (நான் அடிக்கடி சொல்லும் குமட்டலை விட அதிகமான) குமட்டலை அடைந்தார். இதுவரை ஒரு பதிவு, ஒரே ஒரு பதிவு, அறிவுபூர்வமாகவும், ஆழமான அலசலுடன், வெட்டி தீர்ப்புகள் இல்லாமல் எழுத முடியாத உமக்கு மற்ற எழுத்தை பார்த்து சிரிப்பு வருகிறதா? வாழ்க்கையில் இப்படியும் வெட்கமற்ற உதாரணங்கள் உண்டா என்று வியந்து கொண்டிருக்கிறேன்.

Site Meter